என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, May 29, 2014

3 அரசியல்வாதிகள் உங்கள் கனவில் வந்தால்.......இவர்கள் உங்கள் கனவில் வந்தால் அந்த கனவிற்கான பலன்கள்....... நாராயணசாமி வந்தால் 15 நாளில் ஏதோ ஒன்றை சந்திக்க போறீங்கன்னு அர்த்தம். அத்வானி வந்தால் பலநாளாக கண்வைத்த ஒன்று உங்களுக்கு கிடைக்காமல் போகப்போகிறது என்று அர்த்தம். ராஜபக்சே வந்தால் உங்கள் தவறுகள் மறக்கப்பட்டு உங்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு கிடைக்கப்போகுதுன்னு அர்த்தம். மன்மோகன் சிங் வந்தால் நீங்க வேலை பார்த்த கம்பேனியிலிருந்து விடுதலை கிடைக்க போகுதுன்னு அர்த்தம். அழகிரி வந்தால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகப்போகுதுன்னு அர்த்தம். ராகுல் காந்தி வந்தால் உங்கள் வீட்டிற்கு யாரோ கஞ்சி குடிக்க வரப்போறாங்கன்னு அர்த்தம் கலைஞர் வந்தால் கடைசி காலத்தில் கஷ்டப்பட போகிறீர்கள் என்று அர்த்தம் ஸ்டாலின் வந்தால் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை ராஜினாமா செய்து பின்னர் திரும்ப பெற போகிறீர் என்று அர்த்தம் மோடி வந்தால் பதினைந்து மாதத்தில் பதவி உயர்வு பெறப்போகிறீர் என்று அர்த்தம் ஜெயலலிதா வந்தால் ஏதோ ஒரு மலை வாசஸ்தலத்திற்கு சுற்றுலா போகப்போறீங்கன்னு அர்த்தம் வைகோ வந்தால் யாரிடமோ மன்றாடி கெஞ்சப்போகிறீர் என்று அர்த்தம் விஜயகாந்த் வந்தால் மச்சினன் மனைவியால் உங்களுக்கு தொல்லை என்று அர்த்தம் கெஜ்ரிவால் வந்தால் உங்கள் பதவி ஐம்பது நாளில் பறிபோகப்போகுதுன்னு அர்த்தம். சோனியா காந்தி வந்தால் நீங்கள் எங்கோ மரண அடி வாங்கப்போறீங்கன்னு அர்த்தம் சசிகலா வந்தால் எங்கோ கால் கடுக்க நிற்கப்போகிறீர் என்று அர்த்தம் அன்புமணி வந்தால் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் ஏமாற போகிறீர் என்று அர்த்தம். நாஞ்சில் சம்பத் வந்தால் புதிதாக கார் வாங்கப்போறீங்கன்னு அர்த்தம் தமிழக அமைச்சர்கள் வந்தால் உங்கள் வேலை எப்போது வேண்டுமானாலும் போகலாம் என்று அர்த்தம் ஓட்டுப்பதிவு மிசின் வந்தால் உங்களுக்கு பணம் வரப்போவதாக அர்த்தம்இதில் சில இன்றைய ஹிந்து நாளிதழிலும் வந்திருக்கிறது


Post Comment

இதையும் படிக்கலாமே:


3 comments:

  1. அருமையான கற்பனை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அருமையான கற்பனை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. இந்த கற்பனையை தேர்தல் முடிவுக்கு முன் தந்திருந்தீர்கள் பெரிய ஜோதிட நிபுணரா ஆகியிருப்பீர்கள் பாய்..காசை அள்ளியிருப்பீர்கள்..

    ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.