என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, May 20, 2014

2 ஜெயலலிதா இதை செய்வாரா? செய்வாரா?

தமிழ்நாட்டிற்கு நிறைய நன்மைகள் கிடைக்கனும்ன்னா அண்ணா.தி.மு.க. அங்கம் வகிக்கும் ஆட்சி மத்தியில் வரவேண்டும் என்று சொல்லித்தான் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். ஆனால், யாரும் எதிர்பாராத வண்ணம் தமிழகத்தின் ஆதரவே தேவையில்லை என்று சொல்லுமளவுக்கு மிருக பலத்துடன் பா.ஜ.க., ஆட்சியமைக்கிறது.

தமிழகத்தில் 37 எம்.பி.க்களை ஒட்டு மொத்தமாக அண்ணா.தி.மு.க. பெற்றிருந்தாலும் இனி அடுத்த ஐந்து வருடத்திற்கு மத்தியில் அங்கம் வகிக்கும் ஆட்சி என்பது கனவுதான். ஜெயலலிதாவே சொன்னது போல், தமிழகத்திற்கு நன்மைகள் கிடைக்காமல் போய்விடுமா என்றால்... அது ஜெயலலிதா கையில்தான் இருக்கிறது.

நேற்றுவரை மின்சாரத்திலிருந்து மண்ணெண்ணை வரை எல்லாவற்றிக்கும் மத்திய அரசையே குறை சொல்லிக்கொண்டிருந்தார் ஜெ. அப்போது ஜெயலலிதாவின் எதிரியான காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அதனால், மோதல் போக்கை கடைபிடித்தார். ஆனால், இப்போதோ நிலைமையே வேறு. ஜெயலலிதாவின் நீண்ட கால நண்பரான மோடிதான் இனி பிரதமர். ஜெயலலிதாவுக்கும் இணக்கமானவர்தான். இவரிடம் ஜெயலலிதா தமிழ்நாட்டிற்கான கோரிக்கையை முன் வைக்கலாம். அரசில் அங்கம் வகிக்காவிட்டாலும் கூட, தனது எம்.பி.க்களை வைத்து அழுத்தமாவது கொடுக்கலாம். அதற்காகவாவது அவரின் எம்.பி.க்கள் உதவலாம்.

மத்திய அரசோடு மோதல் போக்கை கைவிட்டு விட்டு தமிழக நலனுக்காக இந்த எம்.பி.க்களை பயன்படுத்தலாம் ஜெயலலிதா. ஜெயலலிதா மேடம் இதை செய்வாரா? செய்வாரா?

--------------

ஹலோ மேடம்.....உங்க கட்சி எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் சுழற்சி முறையில் மந்திரியாகிட்டு வாறாங்க...ஆனா, எங்க தொகுதி எம்.எல்.ஏ., மட்டும் இன்னும் மந்திரியாகல.....எப்ப மேடம் அவரை மந்திரியாக்குவீங்க?....

-------------------


ஜனநாயகம், மயிரு, மட்டைன்னு பேசுறதை விட்டுட்டு ஜெயலலிதா பாணி அரசியலை கையில் எடுத்தால்தான் திமுக.வை காப்பாற்றலாம். அண்ணா.திமுக.வில் ஜெயலலிதாவுக்கு எதிரா யாராவது மூச்சு விட முடியுமா?, ஜெயலலிதாவுக்கு மலைச்சாமியும் ஒண்ணுதான். ஜெயக்குமாரும் ஒண்ணுதான். சாதாரண தொண்டனும் ஒண்ணுதான். தவறு என்று தெரிந்தால் சாட்டையை சுழட்ட ஆரம்பித்துவிடுவார்.
அந்த கட்டுப்பாட்டால்தான் ஒரு பெண்ணாக இருந்தாலும் அந்த கட்சியை திறம்பட வழி நடத்துகிறார். ஆனால் திமுக.வில் மட்டும்தான் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன். அழகிரிக்கு ஆதரவாக செயல்பட்ட நெப்போலியனும், கே.பி.ராமலிங்கமும் இன்னமும் கட்சியில்தான் இருக்கிறார்கள்.கூட இருந்து குழி பறிக்கறவனை முதலில் களை எடுக்காதவரை திமுக.விற்கு தொடர் தோல்விதான்.

-----------

ஜெயலலிதாவின் சட்டசபை நாடாளுமன்ற வெற்றிக்கு என்ன காரணம்?

சட்டசபை தேர்தலில் கச்சிதமான கூட்டணி அமைத்து, அப்போதைய ஆளுங்கட்சி எதிர்ப்பு ஓட்டுக்கள் சிதறாமல் பார்த்துக்கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகள் கூட்டணி அமைக்க விடாமல், இப்போதைய ஆளுங்கட்சி எதிர்ப்பு ஓட்டுக்கள் சிதறும்படி பார்த்துக்கொண்டார்.

-------

மூன்று அமைச்சர்களை மந்திரி பதவிலிருந்து நீக்கினார் ஜெ- செய்தி#
நல்லவேளை நம்ம பதவி தப்பிச்சது- ,ஜெயிச்ச தொகுதிக்கு உட்பட்ட மந்திரிகள் மைன்ட் வாய்ஸ்.

-----------

ஏய்யா ஊடக நண்பர்களா? நீங்க வழக்கமா கலைஞரையோ ஸ்டாலினையோ பத்தி குத்துமதிப்பாத்தானேய்யா கற்பனையா எழுதுவீங்க?... அதுவும் கலைஞர் வீட்டுக்கு போகாமலேயே அவர் வீட்டு பாத்ரூம் வரைக்கும் எழுதுவீங்க. அந்த சனியனை உங்க உங்க பத்திரிகை ஆபீஸ்லே நாலு சுவத்துக்கு நடுவுல ஏசில உட்கார்ந்துக்கே எழுதி தொலைத்திருக்கலாமேய்யா...
இப்ப மட்டும் ஏன் இப்படி புதுசா தேவையில்லாம ஸ்டாலின் வீடு வரைக்கும் போயி அடி வாங்கிட்டு வந்தீங்க?

ஸ்டாலின் ராஜினாமா செய்யும் தபாலை கொடுத்தாரு.... அதை கேட்டு ராஜாத்தி அம்மாளும், கனிமொழியும் லட்டு கொடுத்து கொண்டாடினாங்க...கலைஞர் மயக்கமாகிட்டாரு, துரைமுருகன் கதறி அழுதாரு, துர்கா ஸ்டாலின் காலை பிடிச்சு மன்றாடினாங்கன்னு வழக்கமா ஏதாவது எழுதிட்டு போக வேண்டியதுதானே?

--------------

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் நாங்கள் எடுத்த சர்வேயின் படி, அண்ணா.திமுக., 37 தொகுதிகளிலும், பிஜேபி கூட்டணி 2 தொகுதிகளிலும் வெல்லும் என்று எங்களுக்கு திட்டவட்டமாக தெரிந்தது. ஆனாலும் இந்த கணிப்பை அப்படியே எழுதினால் அண்ணா.தி.மு.க.,விடம் பணம் வாங்கிக்கொடு எழுதினோம் என்று அவதூறு பேசிவிடுவார்கள் என்பதால் மனதை கல்லாக்கி கொண்டு தி.மு.க.,விற்கு சில இடங்கள் கிடைக்கும் என்று எழுதினோம். உண்மை நிலவரத்தை எழுதாததால் வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
(சர்வே எடுத்து தடுமாறிய தமிழக பத்திரிகைகள் இப்படியும் சொன்னாலும் சொல்வார்கள்)

-------------

மோடியும் பிரதமர் ஆகியாச்சு, இங்கே ஜெயலலிதாவும் ஜெயிச்சாச்சு. இனி அடுத்த தேர்தல் வரை பத்திரிகையை ஓட்டணுமே?

சரி சரி கலைஞரை திட்டி, கவர்ச்சி படத்தை போட்டு காலத்தை தள்ளிட வேண்டியதுதான். காலங்காலமா அதைத்தானே செய்றோம்?

---------------

என்னதான் இருந்தாலும் அவர்கள் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகத்தான் டெல்லிக்கு போறாங்க. முதல்ல அவங்களை வாழ்த்தி வழியனுப்புவோம். செயல்பாடுகளை வைத்து பின்னாளில் விமர்சிக்கலாம். தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.பி.க்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

--------

தமிழகத்தில் காங்கிரஸ் தோற்றாலும் சில தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்றுவிடும் என்றே நினைத்தேன். ராமநாதபுரத்தில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் தன் சொந்த செல்வாக்கில் டெபாசிட்டாவது பெற்று விடுவார் என்றும் நினைத்தேன். ஆனால், கன்யாகுமரியில் போட்டியிட்ட வசந்தகுமார் தவிர யாராலும் டெபாசிட் கூட வாங்கமுடியாமல் போய்விட்டது பரிதாபம்.

தமிழகத்தில் 17 லட்சத்துக்கு 49 ஆயிரத்துக்கு 718 வாக்குகள் காங்கிரஸுக்கு விழுந்துள்ளன. அதாவது பதிவான வாக்குகளில் 4.3% வாக்குகள். கழுதை தே..............ய்ந்து கட்டெறும்பாக இல்லை....இல்லை அமீபாவாக கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது.

-------------

நானும் சுத்தி சுத்தி பார்த்தேன். இந்த சன் டிவி காரங்க, அ.தி.மு.க., இந்த தொகுதியில் வெற்றி, அந்த தொகுதியில் முன்னிலைன்னுதான் மாத்தி மாத்தி தமிழ்நாட்டுல இருக்க 36 தொகுதியின் நிலவரத்தை போட்டாங்களே தவிர, கடைசி வரைக்கும் தயாநிதி மாறன் என்ன ஆனாருன்னு போடவே இல்லையே. என்னவோ இவங்க சொல்லாட்டி நமக்கெல்லாம் தெரியாது பாருங்க. என்னவோ போங்க. நாளைலேருந்து மோடிக்கு ஒத்து ஊத ஆரம்பிச்சுடுவாங்க. பின்னே, தொழில் நல்லா நடக்கணும்ல.

-----

அண்ணா திமுக.,வின் வெற்றியையும், திமுக.,வின் தோல்வியையும் ரெண்டே வரிகளில் ஒரு நண்பர் சொன்னார்......
"ஜெயலலிதா மக்களிடமிருந்து வேட்பாளரை தேர்வு செய்தார். திமுக.வோ பணக்காரர்களிடமிருந்து வேட்பாளரை தேர்வு செய்தது".

-------------

தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா சொன்ன ஒரு விஷயம் மட்டும் நடக்கவேயில்லை. அதாவது, அ.தி.மு.க,. அங்கம் வகிக்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும் என்று தன் ஆசையை தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கான தேவையே இல்லாமல் போய்விட்டது. ஆப்ரேஷன் சக்ஸஸ். பேஷண்ட் அவுட் நிலைதான் 39-க்கு 37 ஜெயித்த அண்ணா.தி.மு.க.,வின் நிலையும்.

---------------

மற்ற தொகுதிகளில் ஜெயித்து மதுரை, தேனி, ராம்நாட், விருதுநகர், நெல்லை போன்ற தென் மாவட்ட தொகுதிகளில் திமுக. தோற்றிருந்தால் அழகிரியின் கைங்கர்யம் இது என்று சொல்லிருக்கலாம். ஆனால், ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதிலும் திமுக., வாஷ் அவுட்டாகியிருக்கும் நிலையில் இதில் அழகிரிக்கு எந்த பங்கும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. வேண்டுமானால் இந்த தோல்வியில் அழகிரி சந்தோஷம் அடைந்து கொள்ளலாம். அதேநேரம் இந்த தோல்வி அழகிரியால் ஏற்பட்டதல்ல.

-------------

தமிழக நாடாளுமன்ற அரசியல் வரலாற்றில், ஒரு கட்சி மட்டும் 37 இடங்களை பிடிப்பது இதுதான் முதன்முறை. சில முறை சில கட்சிகள் 40 க்கு 40 கூட அப்படியே சிந்தாமல் சிதறாமல் பிடித்திருந்தாலும் அதெல்லாம் ஒரு கட்சிக்கு தனியாக கிடைத்ததில்லை. கூட்டணியாகத்தான் பிடித்து கட்சிகள் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். வெற்றிபெற்ற அண்ணா.தி.மு.க.,வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

-----------

எம்ஜிஆர்.காலத்தில் கூட தி.மு.க.,இவ்வளவு பெரிய பின்னடைவை சந்தித்ததில்லை. ஆனால், ஜெயலலிதா அண்ணா.தி.மு.க.,விற்கு தலைமையேற்ற பிறகு திமுக., சந்திக்கும் மிகப்பெரிய மூன்றாவது படுதோல்வி இது. ஏற்கனவே, 1989, 1991- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்களிலும் தி.மு.க., ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. இப்போதும் ஒரு இடம் கூட பெறாது என்பதாக தெரிகிறது. தி.மு.க., தன்னை சுயபரிசோதனை செய்யும் காலமிது.Post Comment

இதையும் படிக்கலாமே:


2 comments:

  1. ரொம்ப கருணானிதிக்கு ஜால்ரா அடித்து என்ன கண்டீர்கள்? அவர் கட்சிக்கு எம்.பிக்கள் கிடைத்திருந்தால் அவர்களுக்கு மட்டும்தான் உபயோகம். அவருடைய குடும்பத்துக்கு உபயோகம். ஆனால் ஜெயலலிதா கட்சில, நரி வலம் போகும் இடம் போகும் ஆனால் மக்களைக் கடிக்காது.

    ReplyDelete
  2. Hi...tsunami is going to come....I can not believe this......raheem is appreciating j.j......and criticising appropriately d.m.k.well done......my boy....

    ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.