என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, April 02, 2014

5 ஆகவே உங்க பொன்னான வாக்குகளை.........'நம்ம வேட்பாளர் மாரிமுத்து அவர்கள் மிகவும் நல்லவர். அவருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று உங்க பொற்பாதங்களை தொட்டு கேட்டுக்கொள்கிறேன்' இப்படி ஓட்டுக்கேட்ட மாணிக்கத்தை எல்லோரும் ஒரு மாதிரியாக பார்த்தார்கள்.

அவர்கள் அப்படி பார்க்கவும் காரணம் இருந்தது.
நல்லவர் வல்லவர்னு மாணிக்கம் வாக்கு சேகரிக்கும் மாரிமுத்து மிகப்பிரபலமான ரவுடி, கந்துவட்டி, சாராயம்னு ஊரை கெடுத்து வைத்திருப்பவன். ஆனால் மாணிக்கமோ மிக நல்லவன். எல்லோருக்கும் உதவுபவன். சமூக ஆர்வலரும் கூட. அப்படிப்பட்டவன் இந்த ரவுடிக்கு ஓட்டு கேட்பதா?,
என்னாச்சு இவனுக்கு?

மாரிமுத்துவிடம் மாணிக்கம் காசு வாங்கிட்டான், மாணிக்கத்தை விலை கொடுத்து வாங்கிட்டான் மாரிமுத்து, இல்லை இல்லை மாணிக்கத்தை மிரட்டி பணிய வைத்திருக்கான் மாரிமுத்து என்று ஆளாளுக்கு தொகுதிக்குள் பேசிக்கொண்டார்கள். இதெல்லாம் மாணிக்கத்தின் காதுக்கு வந்தாலும் அதையெல்லாம் கண்டும் காணாதது போல் மாணிக்கம் இருந்தான். இது அவன் நண்பனான சிவாவுக்கு உறுத்தியது. நேரடியாக மாணிக்கத்திடமே கேட்டு விட்டான் சிவா. அதற்கு மாணிக்கம் சிரித்தவாறு

"அப்படில்லாம் ஏதுமில்லை. மாரி பெரிய ரவுடி. நம்ம ஏரியாவையே கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டி, கள்ள சாரயம்ன்னு கெடுத்து வச்சிருக்கான். இப்படிப்பட்டவனை நாம ஜெயிக்க வச்சுட்டோம்னா ஒரு அஞ்சு வருஷத்துக்கு நம்ம தொகுதிப்பக்கமே தலை வச்சு படுக்க மாட்டான். நம்ம தொகுதியும் நல்லாருக்கும். இப்பல்லாம் எந்த அரசியல்வாதி ஜெயிச்ச பின்னாடி தொகுதிப்பக்கம் வர்றாங்க. அதான், அவன் ஜெயிக்க போராடுறேன். நம்ம தொகுதிக்கு ஏதோ என்னாலான சின்ன உதவி"
என்றவனை வியப்பாய் பார்த்தான் சிவா.Post Comment

இதையும் படிக்கலாமே:


5 comments:

 1. அருமையான கதைதான் ஆனால் இந்த தேர்தலுக்கு ஒத்து வராது மக்கள் இப்போது தங்களின் உரிமைகளை அதாவது குடிநீர், கல்வி,சுகாதாரம்,வேலை வாய்ப்பு இன்னும் அடிப்படை உரிமைகளின் பக்கம் கவனம் செலுத்த தொடக்கி விட்டார்கள்

  ReplyDelete
 2. நல்லதொரு முடிவுதான்... ஜெயிக்கவச்சி அப்படி டெல்லி பக்கம் அனுப்பிட வேண்டியதுதான்....

  ReplyDelete
 3. அட அப்படியும் ஒரு வழி இருக்கா ?
  வித்தியாசமா அருமையா சிந்திக்கிறீங்க
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. மாணிக்கம் ஒரு புத்திசாலி???

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.