என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, April 22, 2014

5 கருத்துக்கணிப்புகளும், ஊடக குழப்பங்களும்.........


மக்களின் மனநிலை என்ற பெயரில் ஊடகங்கள் தங்கள் கட்சி விசுவாசத்தை காட்ட ஆரம்பித்து விட்டன. கீழே இருக்கும் பட்டியலை பார்த்துவிட்டு  இன்னும் கீழே தொடர்ந்து படிங்க......


ஊடகங்கள்அ.தி.மு.க.தி.மு.க.பா.ஜ.க.காங்க்இழுபறி
ஜூனியர் விகடன்15141010
 நக்கீரன்1521211
குமுதம் ரிப்போர்ட்டர்225409
தந்தி டி.வி188509
CNN-IBN15-2110-166-1000
NDTV2214300
TIMES NOW276312


இன்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் முன்னணி இதழ்களிலும் ஊடகங்களிலும் வெளிவந்த கருத்து திணிப்புகள்தான் மேலே பார்த்தது. 

அதில்  இந்த கட்சிக்கு இத்தனை சீட் கிடைக்கும், அந்த கட்சிக்கு இத்தனை சீட் கிடைக்கும் என்று ஆளாளுக்கு அடித்து விடுகிறார்கள். தி.மு.க-வை பிடிக்காத ஊடகங்கள் அண்ணா. தி.மு.க. அதிக இடங்கள் வருமென்றும், அண்ணா.தி.மு.க-வை பிடிக்காத ஊடகங்கள் தி.மு.க அதிக இடங்கள் வருமென்றும் எழுதி தங்கள் விசுவாசத்தை காட்டி கொள்கிறார்கள்.


சரி...இந்த கருத்துக்கணிப்பெல்லாம் எடுபடுமான்னு பார்த்தால்....
முந்தைய தேர்தல்களில் கருத்து கணிப்புகள் பொய்த்து போய் இருக்கிறது. 
எப்படி எடுக்கப்படுகிறது இந்த கருத்துகணிப்புகள்?

ஒரு நாடாளுமன்றத்தொகுதியில் குறைந்த பட்சமாக பத்து லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட அவ்வளவு பேரிடமும் எடுக்கப்படுவதில்லை. அது சாத்தியமும் இல்லை.

ஒரு தொகுதியில் அதிக பட்சம் ஆயிரம் பேரிடம் மட்டுமே எடுக்கப்படுகிறது. கருத்துக்கனிப்புகளுக்காக ஊடகங்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் போகும்போது...வாக்காளர்கள் தி.மு.க அபிமானிஎன்றோ....அண்ணா தி.மு.க அபிமானிஎன்றோ அறிந்திருக்க வாய்ப்பில்லை. தி.மு.க வின் ஆதரவாளரிடம் கேட்கப்பட்டால் அவர் தி.மு.க-தான் அதிக இடம்  வருமென்றும், அண்ணா.தி.மு.க-ஆதரவாளரிடம் கேட்கப்பட்டால்  அண்ணா.தி.மு.க  அதிக இடங்கள் வரும் என்றும் சொல்வார்கள்.

அப்படி எடுக்கப்பட்ட கணிப்பை இவர்களும் தத்தம் பத்திரிகைகளில் வெளியிட்டு விடுவார்கள்.தங்களுக்கு பிடித்த கட்சிகளுக்கு சாதகமாக கூட ஊடங்கங்கள் கணிப்பை மாற்றி விடுவார்கள்.  

இது சரிதானா?

பத்து லட்சம் வாக்காளர்களின் மனநிலையை வெறும் ஆயிரம் பேர் மட்டும் எப்படி தீர்மானிக்க முடியும்? அல்லது பிரதிபலிக்க முடியும்? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வார்த்தை பிரயோகத்தை நாம் இங்கே பயன்படுத்த முடியாது. சோறு என்பது ஒரே தண்ணீரில் ஒரே வெப்பத்தில், ஒரே கொதிநிலையில் சீராக வேகக்கூடியது.

ஆனால் மக்கள்?
ஒரே தெருவில் இருக்கும் ஒவ்வொருவரின் மனநிலையை கூட நம்மால் கணிக்க முடியாது.  வேட்பாளர், ஜாதி, இலவசங்கள், பணம், கடைசி நேர பிரச்சார வியூகங்கள் மூலம் கூட மக்களின் மன நிலை மாறிவிடும்.    முன்பு ஊடகங்களில்  இந்த கட்சிக்குத்தான் என் வாக்கு என்று சொன்னவர்கள் கூட மாற்றி வாக்களித்து விடுவார்கள். எனவே, இதையெல்லாம் கணக்கில் வைத்துக்கொள்ள கூடாது. 

கருத்து கணிப்பினால் சாதக பாதகங்களும் இருக்கத்தான் செய்கிறது. எப்படி என்று பார்த்தால்......

இந்த தொகுதியில் இந்த கட்சி ஜெயிக்கும் என்று ஒரு கருத்து கணிப்பு வந்தால்....கருத்துக்கணிப்புபடி ஜெயிப்பதாக கூறப்பட்ட  கட்சியினர்  நாம்தானே ஜெயிக்கப்போகிறோம் என்று களப்பணியில் மெத்தனமாக இருப்பதற்கும் வாய்ப்புண்டு.... தோற்க்கப்போவதாக கூறப்பட்ட கட்சியினர் சோர்ந்து போகவும் வாய்ப்புண்டு. 

அல்லது தோற்கப்போவதாக கூறப்பட்ட கட்சியினர் இன்னும் உத்வேகத்துடன் செயல்பட்டு களப்பணியாற்றி ஜெயிக்கவும் வாய்ப்புண்டு...

அடுத்து மக்கள்.....கருத்து கணிப்பை உண்மையென நம்பி மக்களும் மனசு மாறும் சாத்தியமுண்டு....நம்ம தொகுதியில் இந்த கட்சிதானே ஜெயிக்கும் என்று கருத்து கணிப்பு சொல்லியிருக்கிறது. நாமும் அந்த கட்சிக்கே வாக்களிப்போம்.எதற்காக தோற்கும் கட்சிக்கு வாக்களித்து நம் ஓட்டை வீணாக்குவானேன் என்று மாறவும் வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் கருத்து கணிப்பை நம்பாதீர்கள் என்று கட்சிகள் அலறுகிறது.

மக்களின் இந்த மனநிலையை கெட்டியாக பிடித்து கொண்ட ஊடகங்கள் தங்களுக்கு பிடித்த கட்சியினர் ஜெயிக்க கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பை செவ்வனே செய்து வருகிறார்கள். ஒருவேளை இவர்களின் கணிப்பு மாறிவிட்டால்....இலவசங்கள், பணம் அதிகமாக கொடுத்த கட்சி வென்று விட்டது. நாங்கள் வேட்பாளர், இலவசங்களை அறிவிக்கும்  முன்பே கருத்து கணிப்பு எடுத்து விட்டதால் எங்கள் கணிப்பு மாறிவிட்டது என்ற ரீதியில் ஒரு அறிக்கை விட்டு மீசையில் மண் ஒட்டாமல் பார்த்து கொள்வார்கள்...ஒருவேளை இவர்களின் கணிப்பு தப்பி தவறி சரியாக இருந்துவிட்டால்...சொல்லவே வேணாம் அடுத்த தேர்தல் வரை இந்த  விளம்பரத்தை வைத்தே ஓட்டிவிடுவார்கள்.

ஆகவே, கருத்து கணிப்பை நம்பாமல் நமக்கு நல்லது செய்பவர்கள் யாரென்று பார்த்து வாக்களிக்க வேண்டும்.அந்த வேட்பாளர் சுயேட்சையாக இருந்தாலும் கூட.....


Post Comment

இதையும் படிக்கலாமே:


5 comments:

 1. உண்மை ரஹீம், கருத்துக்கணிப்புகள் உண்மையை பிரதிபலிப்பதில்லை. இருந்தாலும் ஏதாவது ஒரு ஊடகம் உண்மை நிலைக்கு அருகில் வர வாய்ப்பு இருக்கும். இதுதான் ஒவ்வொரு முறையும் நடக்கிறது.

  ReplyDelete
 2. மிகவும் தெளிவான உண்மை.... ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறினால் அது எப்படி உண்மை என்று மக்கள் ஏற்கும் மனநிலையோ அதே நிலை தான் இதிலும்.... சுய சிந்தனை செய்வது சிறந்தது.... உங்கள் நடுநிலை மக்கள் பனி தொடறட்டும்!!!

  ReplyDelete
 3. மிகச்சரியாக சொன்னீர்கள்! கருத்துக் கணிப்புக்கள் எல்லாம் உண்மையாகிவிடாது!

  ReplyDelete
 4. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  ReplyDelete
 5. கருத்துக் கணிப்புகள் சுவாரசியமானவை . தற்காலிக மகிழ்ச்சி தரும் அவ்வளவே
  பலவித கணிப்புகளில் ஏதேனும் ஒன்று ஓரளவிற்கு ஒத்திருக்கக் கூடும். நான் அப்போதே சொன்னேனே பார் என்று பீற்றிக்கொள்வார்கள்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.