என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, February 05, 2014

12 பேய்க்கதை..........
”சிவா எங்கேருக்கே?”

”வீட்லதான்...ஏண்டா?”

“என்ன ஏன்டாவா? ..... நேத்து என்ன சொன்னேன்னு மறந்துட்டியா நீ. இன்னைக்கு எங்க கிராமத்துக்கு போகனும்ன்னு சொன்னேன்ல, ரெடியா இரு....டென் மினிட்ஸ்ல அங்கே வாறேன்”

“ஆமா சொன்னேல்ல....ஓகே ஓகே...ரெடியா இருக்கேன். வந்து பிக்கப் பண்ணிக்க...சரி, இப்ப ஏண்டா திடீர்னு?”

“போகும்போது சொல்றேன்”

சிவாவை வீட்டில் ஏற்றிக்கொண்டு கிளம்பினான் விக்னேஷ்.

“அப்படி என்னடா இப்ப அவசரம்?”

“எங்க கிராமத்துல எங்களுக்கு சொந்தமா ஒரு பிராப்பர்ட்டி இருக்குல்ல...அதை நல்ல விலைக்கு விற்கனும்ன்னு அப்பா சொல்லிக்கு இருந்தாரு”

“அதை விக்கற அளவுக்கு என்ன கஷ்டம் உங்களுக்கு?”

“கஷ்டமெல்லாம் இல்லேடா......எங்க ஃபேமிலி அந்த கிராமத்தை விட்டு ஷிஃப்ட் ஆகி சென்னைலேயே செட்டில் ஆகிட்டோம்.....இப்ப இருக்கறது அந்த லேண்டும், பூர்வீக வீடும் தான்...அதை மெயிண்டைன்
பண்ண சிரமமா இருக்கு, நல்ல ரேட் கிடைச்சா தள்ளிவிட்டுடனும்னு அப்பா வெயிட் பண்ணார், இப்ப நல்ல பார்ட்டி கிடைச்சிருக்கு. அதான். இன்னைக்கு அந்த லேண்டை பார்வையிட வருவதா சொல்லிருக்காங்க....இந்த நேரம் பார்த்து அப்பா வேற ஊரில் இல்லை. அப்ரோட். அதான் என்னை போயி காண்பிக்க சொன்னாரு”

“இப்ப எந்த இளிச்சவாயன்கிடைச்சான்?”

“ஷ்...அப்படி சொல்லாதே அவர் ஒரு மினிஸ்டர்”

“ஓ...மாண்புமிகு இளிச்சவாயனா? சரிதான்.... பொலிட்டீசியன்னா....பேமண்ட் சொன்ன மாதிரி வராதேடா?”

“அதெல்லாம் கன் பார்ட்டி.....எங்கப்பாவுக்கு தெரிஞ்சவருதான். அவரு பினாமி பேர்ல லேண்டை ரிஜிஸ்டர் பண்றாரு. அந்த லேண்டுக்கு கவர்மெண்ட் பிக்சடு ரேட்டே டூ க்ரோர் வரும்...அண்டர் வேல்யூவில் ரிஜிஸ்டர் பண்ணா எப்படியும் த்ரீ க்ரோர் வரும்”

“அவங்களுக்கு என்னடா மக்கள் பணம்.....க்ரோர்ஸ்லாம் தவுசண்ட் மாதிரி”

“நமக்கென்ண்டா அதைப்பத்தி?... நமக்கு கேஷ் வந்தா சரிதான்”

“கேஷ்னா ஓகே...கேஸ் வந்தா”

“அதெல்லாம் இப்ப உள்ள பொலிட்டீசியன்லாம் உஷாரா இருக்காங்க மச்சி.....அதான் பினாமி பேர்ல ரிஜிஸ்டர் செஞ்சுக்கறாங்க....”

“ஃபேக்டு..... ஃபேக்டு.... ஃபேக்டு....... ”

“வெளில சொல்லிட்டு இருக்காதே டாப் சீக்ரட் இது”

“சே....சே...எனக்கு ஏண்டா பெரிய இடத்து விஷயமெல்லாம். சரி வழக்கமா நீ மட்டும்தானே உங்க கிராமத்துக்கு போவே....இன்னைக்கு என்ன புதுசா என்னை கூப்பிட்டுருக்கே?”

“கொஞ்ச நாளா ஒரு கெட்ட கனவு...அந்த கிராமத்துல ஏதோ எனக்கு நடக்கப்போற மாதிரி வருதுன்னு உங்கிட்ட அன்னைக்கே சொன்னேன்ல”

“ஆமா சொன்னே, செத்துப்போன கிழவன் கனவுல வந்து பயமுறுத்தறாருன்னு”

“ஆமாடா. உனக்கு தெரியாததா மச்சி....எங்க லேண்டை ஒட்டி ஒரு குடிசை இருந்துச்சு, அந்த அந்த குடிசையை மட்டும் காலி பண்ணிட்டா எங்க லேண்ட் வேல்யூ கூடிடும்ன்னு எங்கப்பா ஆசைப்பட்டாரு  ”

“அதான் தெரியுமே...அங்கே தங்கியிருந்த கிழவன்கிட்ட அந்த குடிசை இருந்த இடத்தை விலைக்கு கேட்டே....அதை தர மாட்டேன்னு சொல்லிட்டாரு அந்த கிழவன்...ஆத்திரத்தில் அங்கே இருந்த கட்டையை எடுத்து நடு மண்டல அடிச்சிட்டே......அவரும் செத்துப்போயிட்டாரு...வேற வழியில்லாம பக்கத்திலேயே குழியை தோண்டி புதைச்சிட்டே...அவருக்குன்னு யாரும் இல்லாததால அவரை யாரும் தேடல...நீயும் அவரு இடத்தையும் சேர்த்து எடுத்துக்கிட்டே”

“ஆமாடா....இப்ப அந்த கிழவன்தான் என் கனவில் பேயா வந்து பயம் காட்டறாரு”

“போடா லூசு, கனவுல்லாம் நம்ம ஆழ் மனதில் வெளிப்பாடுன்னு நீ படிச்சதில்லையா? நீ எந்த நேரமும் அவரை பற்றியே நினைச்சுக்கு இருந்திருப்பே...அதான் கனவா வெளிப்பட்டுட்டுச்சு”

“அந்த கிழவன் மண்டையை போட்டு டூ இயர்ஸ் ஆச்சு....இன்னுமா அவரை நினைச்சுக்கு இருக்கப்போறேன்....அதெல்லாம் மறந்துட்டேண்டா.....பட், கொஞ்ச நாளாத்தான் இந்த கனவு. கனவுன்னும் சொல்ல முடியாதுடா...நேர்லேயே அந்த கிழவனை பார்த்தேண்டா நேத்து”

“அப்படியா...இந்த பேய், பிசாசு, ஆவில்லாம் பழி வாங்கும்ன்னு படிச்சிருக்கேண்டா. இப்ப எனக்கே பயமாருக்கு. உங்க அப்பாகிட்ட சொல்லிருக்கலாமே?"

“சொல்லிட்டேண்டா....நீ சொன்ன மாதிரிதான் அவரும் சொன்னாரு.....பேய் பிசாசுல்லாம் பழி வாங்குமாம். எதுக்கும் கொஞ்சம் எச்சரிக்கையா இருக்க சொல்லிருக்காரு”

“அப்படின்னா...இன்னும் கொஞ்சம் ஆளுங்கள துணைக்கு கூட்டிட்டு வந்திருக்கலாம்ல?”

“அது சரியா வராது.....விஷயம் ரொம்ப சிசீக்ரெட்.வெளில தெரிஞ்சா வாங்கப்போறவருக்கு மினிஸ்டர் பதவி அம்பேல்...அதான் உன்னை மட்டும் கூட்டிட்டு போறேன்.... நீ வாறது கூட அப்பாவுக்கு தெரியாது”

”அப்படின்னா உன்னோடு சேர்ந்து அந்த கிழட்டு ஆவிக்கு என்னையும் பழி கொடுக்கப்போறேன்னு சொல்லு”

“என்ன மச்சி நீ...எனக்கு ஆறுதலா நீ இருப்பேன்னு பார்த்தா நீயும் பயந்து சாகறே”

“பின்னே...பேய் பிசாசு கிட்டேல்லாம் விளையாடக்கூடாது மச்சி...அது நம்மளயும் அடிச்சு கொன்னுடும்னு எங்க பாட்டி சொல்லும்.....சரி...விடு, பார்த்துக்கலாம். காரை அப்படியே ஓரங்கட்டு யூரின் போகனும்”

கார் நிறுத்தப்பட்டது. சிவா கீழிறங்கினான்.....சற்று நேரத்தில் காரில் ஏறினான்....கார் புறப்பட்டது..... சிவா அமைதியாக வந்தான்.

“சிவா என்னாச்சு ஏன் அமைதியா வர்றே”

“சும்மாதான். லேசா தலை வலிக்குது”

“ஓகே...நோ ப்ராப்ளம்...இன்னும் கொஞ்ச தூரம்தான்..நீ வேணும்னா சீட்டை பேக்ல சாய்ச்சிட்டு ரெஸ்ட் எடு”

சிவா அமைதியாக கண்ணை மூடிட்டு வந்தான். கிராமம் வந்தது.....இருவரும் காரை விட்டு இறங்கினார்கள்.....இருவரும் அந்த வீட்டை நோக்கி நடந்தார்கள்......வீட்டின் கதவை திறந்து உள்ளே போனார்கள்....

“அருமையான வீடு இல்லே...இதை விற்க மனசில்லேதான்...என்ன செய்றது?” என்று சொல்லியபடி திரும்பினான்....அங்கு சிவா இல்லை.....எங்கே போனான் அதற்கிடையில் என்று முனுமுனுத்தான்.

மாடிப்படியில் டொம் டொம்ன்னு அதிரும் சப்தம். ஓ மாடிக்கு போயிட்டான் போலன்னு மீண்டும் முணுமுணுத்தான் விக்னேஷ். அப்போது அவன் போன் ரிங்கானது....அழைப்பை பார்த்தான் அது சிவா என்று காட்டியது..... குழப்பத்துடன் போனை எடுத்து........

“ஏண்டா பக்கத்தில் இருந்துக்கே போன் போடறே?”

“பக்கத்திலா....என்ன விளையாடறியா நீ.....என்னை யூரின் போக இறக்கிவிட்டுட்டு நீ பாட்டுக்கு காரை எடுத்துக்கு வந்துட்டே...கால் பண்ணலாம்னு பார்த்தா சிக்னெல் கூட இல்லே...அதான் அப்படியே
கொஞ்ச தூரம் நடந்து சிக்னல் கிடைச்ச இடத்திலேருந்து கால் பன்றேன்”

“சிவா பீ சிரியஸ்...நான் உன்னை ஏத்திக்குத்தான் அந்த இடத்திலேருந்தே கிளம்பினேன்....”

“நோ.....நெவர்....”

“நீ இல்லேன்னா அப்ப என்கூட வந்தது யாருடா” என்றவாரு திரும்பினான் விக்னேஷ்....அங்கே நடுமண்டையில் ரத்தம் வழிந்தபடி நின்றிருந்தார் அவனால் கொல்லப்பட்ட அந்த கிழவன்.......

அதிர்ச்சியில் வாயிலிருந்து ரத்தம் வந்தவனாய் செத்துப்போனான் விக்னேஷ்......

(தொடரும்)


Post Comment

இதையும் படிக்கலாமே:


12 comments:

 1. அருமையான பேய் கதை! அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்!

  த.ம.

  துளசிதரன், கீதா

  ReplyDelete
 2. அருமையான கதை! கடைசிவரைக்கும் செம இன்ட்ரஸ்டிங்கா இருந்தது! தொடருங்கள்! நன்றி!

  ReplyDelete
 3. தண்டனை சரி தான்...

  தொடருமா...? முடிந்து விட்டதா...?

  ReplyDelete
 4. திக் ....திக் ....
  எப்போ தொடரப்போரிங்க ?

  ReplyDelete
 5. விறுவிறுப்பான நடை + இயல்பான வசனங்களில் கலக்கிட்டீங்க. ஆனா என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலை.

  ReplyDelete
  Replies
  1. அடுத்த பாகத்தில் குழப்பம் தீர்ந்திடும்.....

   Delete
 6. என்னங்க 'பேய்க் கதை'ன்னே தலைப்பு வச்சிட்டீங்க???
  ஓ... பேய் எழுதற கதையா??? அப்ப சரி!!!!!! (சும்மா ஜோக்குக்குத்தான்.!)

  ReplyDelete
 7. தொடருமா?
  ஓ ஆமாம் சிவாவும் சாவனுமில்லே?
  அப்படி தொடரவேண்டியதுதான்...

  ReplyDelete
 8. ஆஹா உயிரை தானாக வந்து குடுக்க வாரானே சிவா, கேரளா கோடாங்கிய கூப்பிடுங்கப்பா.

  ReplyDelete
 9. பாஸ் ரொம்ப இன்ரெஸ்ட்டிங்கா இருக்கே
  தொடருங்க

  ReplyDelete
 10. #பேயித்த்துவம்

  ReplyDelete
 11. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-6-part-2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.