என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, April 16, 2013

7 பவர் ஸ்டார் சரி...அதென்ன பவர் கட் ஸ்டார்....(அரசியல் நறுக்ஸ்)......

என் முகநூலிலிருந்து.......சீனிவாசன் பவர் ஸ்டாருன்னா
விஸ்வநாதன்(நத்தம்) பவர் கட் ஸ்டாரா?

சும்மா கேட்கனும்னு தோணுச்சு.

====================எனக்கு எதிராக தி.மு.க.,வும் காங்கிரசும் சதி செய்கின்றன-மு.களஞ்சியம்#
நான் சொல்லல...தம்பி பார்க்கத்தான் பொறி உருண்டை மாதிரி இருப்பாப்ல...ஆனா, கருத்தா பேசுவாப்லன்னு. அது இவருதான்.

===================முன்பெல்லாம் ஏப்ரல்-14 அன்று ஒரு டஜன் படங்கள் வெளிவரும். ஆனால் இந்த வருடமோ ஒரு படம் கூட வெளிவரவில்லை. ஒருவேளை தமிழ் புத்தாண்டு தைமாதம் ஒண்ணாம் தேதி தானேனு நினைச்சிட்டாங்க போல கோடம்பாக்கத்தில். இது மட்டும் ஜெயலலிதாவுக்கு தெரிந்தால் அவ்வளவுதான். இனி வரும் எல்லா படங்களுக்கும் வரிவிலக்கு கிடையாதுன்னு அறிவிப்பு வந்தாலும் ஆச்சர்யமில்லை. #
ஏதோ நம்மாள முடிஞ்சது. அது யாருப்பா அங்கே?,  பத்த வச்சிட்டியே பரட்டைனு கத்தறது?

===================

நல்லவேளையா ரொம்ப வருஷமா திமுக.வும் அண்ணா.திமுக.வும் மட்டுமே தமிழகத்தில் ஆளுங்கட்சியா இருந்திருச்சு. வேறொரு கட்சியும் ஆட்சியில் இருந்திருந்தா தை ஒண்ணு, சித்திரை ஒண்ணு போல இன்னொரு தேதியிலும் தமிழ் புத்தாண்டு கொண்டாடியிருப்பான் தமிழன்.

ஏதோ சொல்லனும்னு தோணுச்சி.

====================தை மாதம் முதல் தேதியை தமிழ்புத்தாண்டாக அறிவித்து விட்டு, இப்போது சித்திரை முதல் தேதிக்கும் கலைஞர் டி.வி.யில், சிறப்பு நிகழ்ச்சி போடுவதை பார்க்கும் போது, கலைஞர் பிறந்தநாளை விட்டுவிட்டு ஜெயலலிதா பிறந்தநாளை தி.மு.க.வினர் கொண்டாடினால் எப்படி காமெடியாக இருக்குமோ அப்படி இருக்கிறது இந்த சிறப்பு நிகழ்ச்சி கொண்டாட்டங்கள்.

====================

சித்திரை திங்கள் முதல் தேதி மட்டும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி பணம் சம்பாதிக்கும் கலைஞர் டி.வி., மற்ற தமிழ் மாதங்களான வைகாசி, ஆனி, ஆடி என்று எந்த மாதத்தின் முதல் தேதியையும் கண்டுகொள்ளாதது ஏன்? அதான் தமிழ் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றியாச்சே, அப்புறம் ஏன் இன்னும் சித்திரை கொண்டாட்டம்? ஒருவேளை சித்திரை முதல் தேதிதான் சிங்களர்களின் புத்தாண்டாம். அதைத்தான் இப்படி மறைமுகமாக கொண்டாடுகிறதோ கலைஞர் டி.வி.

சும்மா கேட்கணும்னு தோணுச்சு.

=======================

புத்தாண்டை சித்திரையிலிருந்து தை மாதத்திற்கு மாற்றியவரால், தன் டிவி.யில் சிறப்பு நிகழ்ச்சி போடுவதை மட்டும் மாற்ற முடியவில்லை போல. என்ன ஒரு வியாபார தந்திரம்?

=====================

ஸ்டாலின் கட்டிய மேம்பாலங்களால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது - சைதை துரைசாமி.#
எங்க ஊர்ல ஸ்டாலின் எந்தப்பாலமும் கட்டல ஆப்பீசர். ஆனா, கொசு ஒன்னொன்னும் குளவி சைஸ்ல இருக்கு ஆப்பீசர்

====================

ஸ்டாலின் கட்டிய மேம்பாலங்களால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது - சைதை துரைசாமி.#
மாநகராட்சி அலட்சியத்தால் குப்பைகள் சேர்ந்து கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது- பொதுமக்கள்....

=====================

இருந்தாலும் இந்த EB-காரங்களுக்கு இவ்வளவு சின்சியாரிட்டி இருக்க கூடாதுப்பா.

ஏன் இப்படி சொல்றே?

பின்னே என்னப்பா. மின்வெட்டு செய்யக்கூட மின்சாரம் இல்லேன்னு பக்கத்து மாநிலத்துல மின்சாரத்தை கடன் வாங்கி கொடுத்து மின்வெட்டு செய்றாங்கப்பா.

======================இந்திய ஊடகங்கள் எந்த செய்தியை வெளியிட வேண்டும் என்பதை விட, எதை வெளியிடக்கூடாது என்பதில் அதிக கவனமாக இருக்கின்றன.-
மனுஷ்யபுத்திரன்.#
நீங்க கூட அப்படித்தான் தலைவரே...டெல்லி பெண் கற்பழிப்பு, வினோதினி ஆசிட் வீச்சு என்று எல்லாவற்றிற்கும் எதிர்க்குரல் கொடுத்துவிட்டு, சன் நியூஸ் சானலை சேர்ந்த ராஜா மீது அகிலா என்ற பெண் செய்தி வாசிப்பாளர் கொடுத்த பாலியல் புகார் பற்றி வாயே திறக்கவில்லை. அப்படி திறந்திருந்தால், சன் டிவி தனக்கு வாய்ப்பு கொடுக்காது என்ற பயம்தானே காரணம்?

===================

மின்வெட்டு நேரம் அதிகரிக்கும்-மின்சார வாரியம்#
இனிமேலும் வெட்டறதுக்கு ஊர்ல இருக்க மின் ஒயர்தான் பாக்கி. அதையும் வெட்டி எடுத்துக்கு போயிடுங்கடா.

=================

ஒன்பது எம்பி, பத்து எம்பி வைத்திருப்பவர்களெல்லாம் பிரதமர் கனவில் இருக்கும் போது 8192 எம்பி அதாவது எட்டு ஜிபி(GB) வச்சிருக்க நான் ஏன் பிரதமராக கூடாது?

==================


Post Comment

இதையும் படிக்கலாமே:


7 comments:

 1. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு கடைசியா சொன்னிங்களே அது செம்ம சூப்பர் நானும் 8 gb வச்சுருக்கேன்

  ReplyDelete
 2. எந்த நாள் புத்தாண்டு என்று மனித குலத்திற்கே உதவும் ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன...!

  EB-காரங்களின் சின்சியாரிட்டி அதிகரித்துக் கொண்டே செல்கிறது...

  ஹா... ஹா... இப்படி சிரிச்சி மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான்...

  கலக்கல் தொடரட்டும்...

  ReplyDelete
 3. அந்த 8 ஜி.பி காமெடி செம கலக்கல்! அருமையான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 4. கொஞ்ச நாளா காணோமே ஒரு சிலர் facebook கு தாவிட்டீங்களோ

  அனைத்தும சிரிக்க வைத்தன.

  ReplyDelete
 5. அம்மா பத்தி எதுவும் எடக்கு,மொடக்கா fb-ல காமெண்டு போட்டீங்க,நடக்குறதே வேற,சொல்லிப்புட்டேன் ஆமா!

  ReplyDelete
 6. எல்லாமே ஹா... ஹா... போட வைத்தது...

  ReplyDelete
 7. அன்பு நண்பரே முதலில் தங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  இவ்வளவு நகைச்சுவை உணர்வை தங்களிடம் வைத்துக்கொண்டு ஏன் இப்படி பதிவு தர மாட்டேன் என்கிறீர்கள்.
  அதுவும் கடைசியில் அடித்தீர்கள் பாருங்கள் ஒரு சிக்சர் ஜோக்ஸ்.சூப்பர்ப்
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.