என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, April 25, 2013

4 ஆளுங்கட்சி-எதிர்கட்சி-மக்கள்.....
ஆளுங்கட்சி......

முதல் இரண்டு வருடம் எல்லா பழிகளையும் முந்தைய ஆளுங்கட்சி மீது போடவேண்டும். முந்தைய ஆட்சியில் பதவியில் இருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டும்.

அடுத்த இரண்டு வருடம் ஏதுமே செய்யாமல் காலத்தை ஓட்டவேண்டும்.

அடுத்த ஒரு வருடம்.....மக்கள் நினைப்பு வந்து ஏதாவது செய்ய வேண்டும்.

எதிர்க்கட்சிகள்......

முதல் இரண்டு வருடம் ஆளுங்கட்சிகள் போடும் வழக்கை எதிர்கொள்ள வேண்டும்.

அடுத்த இரண்டு வருடம் ஏதுமே செய்யாமல் காலத்தை ஓட்டவேண்டும்.

கடைசி ஒரு வருடம் மக்கள் நினைப்பு வந்து போராட்டம், ஆர்ப்பார்ட்டம் என்று செய்ய வேண்டும்.....ஆளுங்கட்சிகளின் தவறை சந்துக்கு சந்து மேடை போட்டு தோலுறிக்க வேண்டும்.

மக்கள்...........

முதல் ஒரு வருடம் ஆளுங்கட்சி தேர்தல் வாக்குறுதியில் சொன்ன சலுகைகள் கிடைக்குதா என்று எதிர்பாத்து ஏமாற வேண்டும்.

அடுத்த நான்கு வருடம் நம் பிழைப்பை பார்க்க வேண்டும்......

அடுத்த தேர்தலில் வாக்களிக்கவேண்டும்.

=====================இந்த வார பாக்யா வார இதழில் மக்கள் மனசு பகுதியில் நானும், தம்பி ஹாஜாவும். நன்றி பாக்யா ஆசிரியர் குழுவினருக்கும், நண்பர் எஸ்.எஸ்.பூங்கதிர் அவர்களுக்கும்..............

=====================
என் ஃபேஸ்புக்கிலிருந்து........

கடந்த தேர்தலில் ஊற்றிக்கொடுத்தவரோடு கூட்டணி போட்டு வந்தவர், வரும் தேர்தலில் மண்டபத்தை இடித்தவரோடு கூட்டணி போட்டு வருவார் போல. அரசியலில் யாருக்கும் வெட்கமில்லை.

==================

கலைஞர் சட்டசபைக்கு செல்வதில்லை என்று குற்றம் சொல்பவர்கள், ஜெயலலிதா, கடந்த ஆட்சியில் எத்தனை முறை சட்டசபைக்கு போனார் என்று சொல்லமுடியுமா?

சும்மா கேட்கனும்னு தோணுச்சி.

===================

எத்தனையோ பெரிய பெரிய ஜாம்பவான்களை எதிர்த்தும் ஆதரித்தும் அரசியல் செய்த கலைஞருக்கு இப்போது விஜயகாந்தின் தயவு தேவைப்படுகிறது, பாவம்.

==================

'தம்பி' விஜயகாந்த் கட்சியை அழிக்கப்பார்க்கிறார் ஜெயலலிதா-கலைஞர் இன்று#

விஜயகாந்த் நிதானமிழந்து பேசுகிறார்- கலைஞர் அன்று.

==================

நேற்று இங்கே ஒரு கதை படித்தேன். அதன் சாரம்சம் இதுதான்.
ஒரு பையன் படித்துக்கொண்டிருந்தான். அவன் பெற்றோர் அருகில் இருந்தார்கள். ஒரு காகம் அங்கே வந்தமர்ந்தது. அதை பார்த்த அந்த பையனின் அப்பா தன் மகனிடம் இது என்ன என்று கேட்டார். பையன் காகம் என்று பதில் அளித்தான். சில நிமிடத்திற்கு பின் மீண்டும் அதே கேள்வியை கேட்டார் தந்தை. மகனும் காகம் என்றான். மீண்டும் அதே கேள்வியை கேட்டார் தந்தை. மகன் இந்த முறை சற்று எரிச்சலுடன் காகம் என்று பதிலளித்தான். மீண்டும் அதே கேள்வி. இந்த முறை கோபத்துடன். உங்களுக்கு காது கேட்கவில்லையா எத்தனை முறைதான் சொல்வது அது காகம் என்று கத்தினான். இவர்களை கவனித்த அவன் அம்மா ஒரு.டைரியை எடுத்து வந்தார். அதில் அவன் அப்பா
என் மகன் காகத்தை காட்டி இது என்ன என்றான். நானும் காகம் என்றேன். இப்படியே இருபது முறை கேட்டான். நானும் இருபது முறை பதில் சொன்னேன் இது காகம் என்று. எனக்கு என் மகன் மேல் கோபமோ எரிச்சலோ வரவில்லை. மாறாக என் மகனை நினைத்து பெருமையாக இருந்தது என்று எழுதியிருந்தார்.
இதைப்படித்த மகன் கண்கலங்கி அவன் அப்பாவிடம் மன்னிப்பு கேட்டானாம்.

சரி இதையே சற்று மாற்றி யோசிப்போம். காகம் வந்து அமர்ந்து அவன் அப்பா திரும்ப திரும்ப கேட்டு, அந்த டைரியை படிப்பது வரை அப்படியே முந்தைய கதையையே வைத்துக்கொள்வோம். அந்த டைரியை படித்தது இந்த கால மகனென்றால் மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டான். மாறாக அவன் பதில் இப்படித்தான் இருக்கும்.
அப்பா. நான் உங்களிடம் காகம் பற்றி கேட்ட போது எனக்கு புரியாத வயசு. குழந்தையாக நான் இருந்தேன். ஒரு விஷயத்தை குழந்தைகள் திரும்ப திரும்ப கேட்கும். அதற்கு பதில் சொல்லி விளக்கமளிக்க வேண்டியது நீங்கதான். ஆனால், இப்ப நீங்க கேட்டது அது என்னவென்று தெரிந்து கொண்டே. காகம் என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியாதா? தெரிந்து கொண்டே ஒரு தடவை கேட்டீங்க சரி. பதில் சொன்னேன். ஒவ்வொரு தடவையும் அதை என்னன்னு கேட்டா முட்டாள் தனமா இல்லை. அப்பா உங்க மேல் எனக்கு பிரியம் இருக்கு. அதை வெளிப்படுத்த காகம்தான் கிடைத்ததா?
என்பான். என்ன சரியாத்தானே சொல்றேன் நான்.

================

காற்றாலைகளில் காற்றாடி சுற்றாவிட்டால் கரண்ட் கிடைக்காது. வீடுகளில் கரண்ட் இல்லாவிட்டால் காற்றாடி சுற்றாது.

அரிய மொக்கைத்துவம் 2013.

================

அரசியலில் பற்றற்ற துறவிபோல் வாழ்கிறேன் நான்-ஜெயலலிதா#
ஆமா எனக்கொரு சந்தேகம்? எந்த துறவி குளுகுளு கோடநாட்டில் வாழ்கிறார். எந்த துறவி மின்சாரமே போகாத போயஸ் தோட்டத்தில் வாழ்கிறார். எந்த துறவி முழுக்க முழுக்க ஏஸி செய்யப்பட்ட சிறுதாவூரில் வாழ்கிறார்?
நான் என்பது அழிந்தால்தான் உண்மையான துறவறமாக இருக்கும். இந்த நவீன துறவிக்கோ என் ஆட்சி, என் அரசாங்கம், என் ஆணை என்பதை தவிர வேறொன்றும் தெரியாதே?

==============

அதிமுக ஆட்சியில் ஆதாயக் கொலைகள் குறைந்துள்ளன : ஜெ.,#
ஆமா.....பிடிக்காதவங்களைத்தான் கொலை செய்றாங்க.....இதெப்படி ஆதாய கொலையாகும்.

=============

விஜயகாந்தை குடிகாரன் என்று ஜெயலலிதாவும், ஜெயலலிதாதான் எனக்கு ஊற்றிக்கொடுத்தாரா என்று விஜயகாந்தும் வார்த்தை போர் தொடுத்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் கூட்டணி சேர்ந்தார்கள். அப்போது விஜயகாந்த் கேட்ட தொகுதிகளை ஜெயலலிதா ஒதுக்காமல் விஜயகாந்த் கேட்ட தொகுதிக்கும் சேர்த்து வேட்பாளர்களை அறிவித்தார் என்பதால் மற்ற கூட்டணி கட்சியினரை தன் அலுவலகத்தில் கூட்டி மூன்றாவது அணி அமைக்க முயற்சித்தார்.

எனக்கு தெரிந்து ஜெயலலிதாவின் அரசியல் வரலாற்றிலேயே ஒருவருக்கு ஜெ பயந்தாரென்றால், அது விஜயகாந்திற்காகத்தான் இருக்கும். உடனே தான் அறிவித்த வேட்பாளர் பட்டியலை வாபஸ் வாங்கிக்கொண்டு, விஜயகாந்த் கேட்ட தொகுதிகளில் சிலவற்றை கொடுத்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்தார். யாருக்கும் வளையாத ஜெ.வை இறங்கிவர வைத்து, வேட்பாளர் பட்டியலையே மாற்ற வைத்தவர் விஜயகாந்த்.

சும்மா நினைச்சுப்பார்க்க தோணுச்சு.

===============

ஜெயலலிதாவை புகழ்வதற்காக இந்த அண்ணா.தி.மு.க.வினர் வெளியிடும் சக்தியை சேமித்தாலே 2000 மெகா வாட் மின்சாரம் தயாரித்து விடலாம் போல.

================

தூரத்தில் இருக்கும் விரோதியைவிட, பக்கத்தில் இருக்கும் துரோகி ஆபத்தானவன்.

சும்மா சொல்லனும்னு தோணுச்சு.

========================================Post Comment

இதையும் படிக்கலாமே:


4 comments:

 1. உண்மையான அலசல் மறுக்க முடியாதன! நாட்டின் இன்றைய நிலை இதுதானே!

  ReplyDelete
 2. இன்றைய உண்மையான நிலை...

  என்னே தத்துவம்...! ஹா... ஹா...

  ReplyDelete
 3. அப்பாடா,இன்றைக்கு எப்படியோ ஒரு பதிவை போட்டுவிட்டோம்
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.