என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, March 27, 2013

8 சுப்ரமண்யசாமியும் மகளிர் அணியும்....போன வருஷம்தான் கரண்டு பிரச்சினை பெருசா தெரிஞ்சிச்சு

இந்த வருசம்?

பழகிடுச்சு.

-----------------

தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்-சுப்ரமண்யம் சாமி#
யாரங்கே... மகளிர் அணி குத்தாட்டத்திற்கு தயாராகட்டும்.

-------------------

விவசாயிகளின் காவல் அரணாக விளங்கும் ஜெயலலிதாவுக்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்#
அண்ணா.தி.மு.க.,வின் கிளை நிறுவனமான ச.ம.க.வின் தலைவர் சரத்.

-----------------

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில் 6 தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் மீதான தண்டனை ஓராண்டிலிருந்து 6 மாதமாக குறைத்தார் சபாநாயகர் தனபால்.#

6 எம்.எல்.ஏ.,க்களும் தொகுதி வளர்ச்சிக்காக ஜெயலலிதாவை சந்தித்தால் இந்த 6 மாத தண்டனையும் ரத்து செய்யப்படும்

---------------

வரும் மாதத்திலிருந்து விலையில்லா மெழுகுவர்த்தி ஒரு டஜனும், கொசுவர்த்தி ஒரு பாக்கெட்டும் மாதந்தோறும் வழங்கப்படும். இரவில் வியர்த்தால் 1008-க்கு போன் செய்யவும். எங்கள் கட்சிக்காரர்கள் உங்கள் இல்லம் தேடி வந்து பனை ஓலை விசிறியால் விசிறி விடுவார்கள். இவையனைத்தும் ஜுன் மாதம் வரையே..அதன் பின்மின்வெட்டு படிப்படியாக குறைக்கப்படும். எந்த ஆண்டு ஜூன் மாதம் என்று குதர்க்கமாக கேள்வி கேட்பவர்களை குண்டாசில் அடைத்து விட உத்தரவிட்டுள்ளேன்.
இப்படிக்கு
யாரோ.

-----------------

குஜராத் மின் மிகை மாநிலமென்றால், தமிழ்நாடு மின் பகை மாநிலம் போல. தமிழ்நாட்டிற்கும் மின்சாரத்திற்கும் பகையாவே இருக்கிறதே?

--------------

பேய்க்கு அஞ்சுபவர்கள் மயானத்தில் வீடு கட்டமாட்டார்கள்- ராஜபக்சே.
நோய்க்கு அஞ்சுபவர்கள் மருத்துவமனையை வெறுக்க மாட்டார்கள்- ரஹீம் கஸாலி.

------------------

தீயா வேலை செய்றாங்கப்பா என்ற வார்த்தை மின்சார ஊழியர்களை தவிர வேறு யாருக்கும் பொருந்தாது.
நள்ளிரவில் கூட கரண்டை பிடுங்குவதில் என்ன ஒரு டைமிங்கு.

-----------------

எப்போதும் நேர்மையா இரு. களவில் வந்தால் எழவில் போகும்- அம்மா சொன்னது.
அட...எங்கம்மாங்க...

------------------

வலியவன் மேல் காட்டமுடியாத கோபத்தை சிலர் எளியவன் மேல் காட்டுகிறார்கள்.

--------------------

லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த ராஜபக்சே ஒருவன் தீக்குளிப்பதால் தான் மனம் திருந்திவிடப்போகிறார்.
அடப்போங்கப்பா... லட்சம் பிணத்தில் ஒன்று கூடுதல். அவ்வளவுதான் பக்சே கணக்கு. தயவு செய்து தீக்குளித்து தன் குடும்பத்தை தெருவில் நிறுத்தாதீர். முட்டாள்தனத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

---------------------

ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. சோதனையை அரசு செய்யவில்லை: மன்மோகன் சிங் #
ஒருவேளை ஆதிபகவன் படத்தில் வந்ததுபோல் தாய்லாந்திலிருந்து போலி சிபிஐ வந்திருப்பாங்களோ?

-------------------

முதல் வேளையாக, அடுத்த பட்ஜெட்டில் சட்டசபை மேஜையை மாற்ற சொல்லனும். தட்டி தட்டி ஆட்டம் கண்டிடுச்சு.

--------------------

பட்ஜெட் போட்டு வாழ்கிற குடும்பத்தலைவர் எல்லோராலும் நிதி அமைச்சர் ஆக முடியாது. ஆனால்,பட்ஜெட் போட்டு ஆள்கிற நிதி அமைச்சர் எல்லோராலும் குடும்பத்தலைவர் ஆக முடியும்.

-------------------

இதுவரை மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க., தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மின்சாரத்தை கொடுக்கவிடாமல் தடை போட்டுக்கொண்டிருந்தது. இப்போது தி.மு.க., விலகி விட்டதால் அந்த தடை நீங்கி விட்டது. ஆகவே நாளை முதல் மின்வெட்டே இல்லாமல், தங்குதடையின்றி மின்சாரம் கிடைத்து தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
-இப்படிக்கு-
யாரோ....

--------------

மாணவர்களே இன்று திமுக., வெளியேறியதற்கு காரண'மானவர்கள்'
இன்னும் பல புரட்சிகளுக்கு காரணமாகப்போகிறவர்கள்.

---------------

இலங்கை அரசை காப்பாற்றுவதில் மத்திய அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது- விஜயகாந்த்#
எல்லோரும் ஜோரா கை தட்டுங்கப்பா...தலைவரு தேசிய அரசியலுக்கு வந்துட்டாரு.

-----------------

தான் சொன்னால் மட்டும் பிடித்து மற்றவர்கள் சொன்னால் பிடிக்காதது-பொய்
யார் சொன்னாலும் பிடிக்காதது- உண்மை.

--------------------

என் பழைய ஆல்பத்திலிருந்து...............


நானும், என் நண்பன் சர்புதீனும் (1995-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட படம்)

==============================================


Post Comment

இதையும் படிக்கலாமே:


8 comments:

 1. நல்லாருந்திச்சு!

  ReplyDelete
 2. தல கலக்குங்க... :-) :-) :-)

  ReplyDelete
 3. ம்ம்ம் நடத்துங்க, நடத்துங்க.

  ReplyDelete
 4. அசத்திட்டீங்க எல்லாமே நல்லாயிருக்கு

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அலைக்கும்,

  :-) :-) :-)

  ReplyDelete
 6. படம் எடுத்த இடம் எது?
  சரி! அதை விடுங்க. அதைவிட முக்கியமான விஷயம்...
  சுனா சானா முன்னால் மகளிர் அணி குத்தாட்டம் போடும் நாளை, அந்த நல்ல நாளை, சொன்னீர்கள் என்றால் நான் உடனே புறப்பட்டு தமிழ்நாடு (எனக்கு தெரிந்த ஒரே நாடு அதான்) வருகிறேன்...

  இதைக் காண கண்கோடி வேண்டுமே...என்கிட்டே இரண்டு தான் இருக்கு...இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறேன்...!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.