என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, January 03, 2013

18 விஸ்வரூப வில்லங்கங்கள்-ஒரு அலசல்சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிலேயே முதலீடு செய்யக்கூடாது என்பார்கள். ஆனால், இந்த வார்த்தை கமலுக்கு பொருந்தாது. ஒவ்வொரு முறையும் தன் வருமானத்தை சினிமாவிலேயே கொட்டும் பிறவிக்கலைஞன் கமல்தான் என்பதில் சந்தேகமில்லை.

புதிது புதிதாக சிந்திப்பதிலும், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதிலும் இந்தியாவிற்கே முன்னோடி கமல்தான் என்பது மிகையில்லை.

கமல் போடும் புதிய பாதைகள் ஆரம்பத்தில் கடும் விமர்சனத்திற்குள்ளாகி, பின்னர் வேறு வழியின்றி விமர்சித்தவர்களும் அவர் போட்ட பாதையிலேயே நடக்க ஆரம்பித்து விடுவார்கள் என்பது கடந்தகால சான்றுகள்.

இப்போதும் அப்படித்தான், தான் நடித்து, இயக்கி, தயாரித்த விஸ்வரூபம் படத்தை DTH எனப்படும் சேட்டிலைட் சானல்களுக்கு விற்று மிகப்பெரிய சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார் கமல். ஒரு படம் வெள்ளித்திரைக்கு வரும் முன்பே இல்லத்திரைக்கு வருவது இந்தியாவிலேயே உலகிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கும்.

கமலின் இந்த முடிவால் தியேட்டர்களை நம்பி பிழைப்பு நடத்தும் நாங்கள் தெருவிற்கு வந்துவிடுவோம் என்று தியேட்டர் அதிபர்களும், அப்படியெல்லாம் நடக்காது என்று கமலும் வாத பிரதி வாதங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு பொருளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்காவிட்டால் எங்கு கூடுதல் லாபம் கிடைக்கிறதோ அங்கு தானே விற்பார்கள். இதுதானே முறை. வியாபார உத்தி. இதைத்தானே கமலும் செய்திருக்கிறார்.இந்த படத்தை டிவிக்கு விற்றால் தியேட்டர்காரர்கள் தெருவிற்கு வந்துவிடுவதாக சொல்கிறீர்களே, பல கோடிகளை சிலவு செய்து எடுக்கப்பட்ட படம் எதிர்பார்த்த அளவிற்கு விற்க முடியாமல் போனால் கமலும் தெருவிற்கு வந்துவிடுவாரே அதுமட்டும் நியாயமாகுமா?

ஒரு படம், அதுவும் விஸ்வரூபம் போன்ற பிரமாண்டமான படங்கள் முதலில் சின்னத்திரைக்கு வருவதால் தியேட்டர்களுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்பது என் கருத்து.

விஸ்வரூபத்தின் பிரமாண்டத்திற்காகவும், அதில் அறிமுகப்படுத்தப்படும் டால்பி அட் மோஸ் எனப்படும் புதிய தொழில்நுட்பங்களுக்காகவும் தியேட்டருக்குத்தான் அதிகம் கூட்டம் வரும். தியேட்டரில் படம் பார்க்கும் போது கிடைக்கும் அனுபவம் கட்டாயம் வீட்டில் கிடைக்கப்போவதில்லை. கிடைக்கவும் கிடைக்காது. தியேட்டரை விரும்புபவர்கள் தியேட்டருக்குத்தான் வருவார்கள்.
தியேட்டர் பிசினெஸ் பாதிக்கப்படும் என்பதே அபத்தம்.

இன்று ஒரு படம் வெளியான அன்றே அந்தப்படத்தின் DVD பைரட்டாக வெளிவந்து விடுகிறது. நெட்டிலும் சுடச்சுட அப்லோட் செய்யப்பட்டு விடுகிறது. இதனால், இருக்கும் இடத்திலேயே ஒரு படத்தை பார்க்கும் சாத்தியம் அதிகமாக இருந்தாலும் தியேட்டரில் கூட்டம் குறைந்த பாடில்லை. வெற்றிகரமாக தியேட்டரிலும் ஓடத்தான் செய்கிறது. பைரட் DVD-யால் அழிக்க முடியாத தியேட்டர் பிசினசை DTH வந்தா அழித்து விடப்போகிறது?

கொள்ளையடிக்கும் பார்க்கிங் கட்டணம், அதிகமான டிக்கெட் விலை, வெளியில் 10 ரூபாய்க்கு விற்கப்படும் தண்ணீர் பாட்டிலுக்கு மும்மடங்கு விலை(டாய்லெட்டிற்கு மட்டும் கட்டணமில்லை. இனி அதற்கும் ஐந்து ரூபாய் வசூலித்தாலும் ஆச்சர்யமில்லை) என்று ஏகபோக கொள்ளையடித்து தியேட்டர் பிசினெசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தியேட்டர்காரர்களையே மீறி கூட்டம் அலைமோதிக்கொண்டுதான் இருக்கிறது. அதிலெல்லாம் அழியாத பிசினெசா ஒரு தடவை DTH மூலம் ஒளிபரப்புவதால் அழியப்போகிறது?

இன்னும் சிலர் கிளம்பியுள்ளார்கள் விஸ்வரூபம் படத்தை தெருவுக்கு தெரு திரை கட்டி ஒளிபரப்புவோம் என்று....
விஸ்வரூபம் படத்தை கமல் டி.டி.ஹெச்சில் வெளியிடுவது என்பது அவர் இஷ்டம், உரிமை. அந்தப்படத்தை தயாரித்தவர் என்ற ரீதியில் கமல் அப்படி செய்ய முழு உரிமையையும் பெற்றவர். அவர் பொருளை அவர் எப்படி வேண்டுமானாலும் விற்றுக்கொள்ளலாம். ஆனால் கமல் அப்படி செய்தால் நாங்கள் பொது இடங்களில் அகன்ற திரையில் ஒளிபரப்புவோம் என்று சொல்வது உச்சக்கட்ட ரவுடியிசம். அவர்கள் அப்படி சொல்வது என்பது, ஒருவரின் பொருளை திருடி மற்றவர்களுக்கு கொடுப்பது போல் அயோக்கியத்தனமாகும்.

கமல் அவருக்கு சொந்தமான பொருளை இலவசமாக கூட கொடுக்கலாம். ஆனால் இவர்களோ அவரின் பொருளை திருடி இலவசமாக கொடுப்பேன் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?, கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதுபோல் இருக்கிறது இவர்களின் செயல்.

சில இடங்களில் வீட்டுக்கு வீடு 100 ரூபாய் வீதம் வசூல் செய்து கேபிள் மூலம் ஒளிபரப்பபோவதாகவும் சில ஆப்பரேட்டர்கள் சொல்லி வருகிறார்களாம் இதுவும் அப்பட்டமான திருட்டுதான். ஒரு உதாரணத்திற்காக,
ஒரு கேபிள் ஆப்பரேட்டரிடம் மாதச்சந்தாவாக ரூபாய் 100 செலுத்தி நான் ஒரு கனெக்சன் எடுத்து, அந்த ஒரு கனெக்சனை பத்து கனெக்சனாக பிரித்து பத்து வீடுகளுக்கு கொடுத்து ரூபாய் 1000 நான் சம்பாதித்தால் கேபிள் ஆப்பரேட்டர்கள் ஒத்துக்கொள்வார்களா என்ன?

இப்போது கமல் போட்டிருக்கும் இந்த பாதை முள் பாதையாக தெரியலாம். ஆனால், எதிர்காலத்தில் இதுவே மலர் பாதையாகலாம். இப்போது திட்டுபவர்கள் எல்லாம் அந்த பாதையில் நடக்கலாம். கமலை தலையில் தலையில் தூக்கி வைத்து கொண்டாடலாம். ஆனால் அப்போதும் கமல் அடுத்து என்னன்ன புதுமைகளை சினிமாவில் புகுத்தலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பார் இப்போது போலவே எந்தவித சலனமுமின்றி...ஏனென்றால் கமல் ஒரு சினிமா விஞ்ஞானி


Post Comment

இதையும் படிக்கலாமே:


18 comments:

 1. உங்க ஆளுங்களின் எதிர்ப்பால் மட்டுமே கம்மலு இந்தப் படத்தை டிடிஹெச்சில் வெளியிடுகின்றார்.

  தியேட்டருக்குப் போய் பைசா கிடைக்காவிட்டால்....எனவே அதற்கு முன்பாகவே போட்ட காசை எடுக்க நினைக்கின்றார்.

  குண்டுவைக்கும் தீவிரவாதிகளால் தனக்கு நஷ்டம் வரக்கூடாது என்று நினைத்தே அவர் எடுத்த இந்த முடிவு.

  நான் கம்மலுக்கு சப்போர்ட்டு...

  ReplyDelete
  Replies
  1. உனண்மை அதுவல்ல.... எதிர்பார்த்த அளவுக்கு படம் வியாபாரமாகவில்லையாம்...அதான் எங்கு பனம் கிடைக்கிறதோ அங்கு விற்றுவிட்டார்

   Delete
  2. குஜினி கூட கொசுவாயனை DTHல் வெளியிட காத்திருக்கிறாராம்...ஆனால் எந்த பயலும் வாங்க மாட்டேன் என்கிறானாம்...

   Delete
 2. எது எப்படி இருந்தாலும் கமல் ஓர் உண்மையான கலைஞர்தான். மறுப்பதற்கில்லை.

  ReplyDelete
 3. நல்ல பதிவு, எவனோ நாதாரி மைனஸ் ஒட்டு போட்டு விட்டான், அதனால் நான் ஒட்டு போடாமலேயே போறேன், [ஏன் மேல டவுட்டு வரப்படாது பாருங்க அதான்.. ஹி ஹி ஹி ............

  ReplyDelete


 4. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
  கமல் ஒரு நல்ல கலைஞன்.மாற்று கருத்து இல்லை .அவர் எடுக்கும் இந்த படம் ,இஸ்லாமியர்களை தாக்கி உள்ளதா இல்லையா என்று பலரும் பலவித கருத்து சொல்லி வரும் இந்த சூழ்நிலையில்,படத்தை திரையிடும் உரிமையாளர்கள் திரையிட மாட்டோம் என்று சீரியசாக சொல்ல அதை காதில் வாங்கி கொள்ளாமல் அவர் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறார் .
  படம் என்ன கருத்தை கொண்டுள்ளது என்று தெரியாமல் இருக்கும் நிலையில் படத்தை எங்களுக்கு போட்டு காட்டிவிட்டு தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று காமெடி பண்ணி கொண்டு இருக்கிறார்கள்

  http://puduvalasainews.blogspot.sg/2013/01/blog-post_3038.html

  ReplyDelete
 5. ஒரு படம் வெள்ளித்திரைக்கு வரும் முன்பே இல்லத்திரைக்கு வருவது இந்தியாவிலேயே உலகிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கும்.
  pls read this
  http://www.techdirt.com/blog/casestudies/articles/20110629/04123714907/kevin-smith-continues-to-innovate-offering-vod-before-theatrical-release-also-offering-incentives-to-go-to-theater.shtml

  ReplyDelete
 6. அருமையான பதிவு, கலக்கல்.

  ReplyDelete
 7. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க..

  ReplyDelete
 8. //ஒரு கேபிள் ஆப்பரேட்டரிடம் மாதச்சந்தாவாக ரூபாய் 100 செலுத்தி நான் ஒரு கனெக்சன் எடுத்து, அந்த ஒரு கனெக்சனை பத்து கனெக்சனாக பிரித்து பத்து வீடுகளுக்கு கொடுத்து ரூபாய் 1000 நான் சம்பாதித்தால் கேபிள் ஆப்பரேட்டர்கள் ஒத்துக்கொள்வார்களா என்ன?//

  NALLA KOTHU - ITHARKKU PIRAKU CABLE OPERATOR ENNA SOLLA PORARKALO

  ReplyDelete
 9. நல்ல அலசல்! கமல் செய்வது சரியே!

  ReplyDelete
 10. What kamal is doing is the only right thing for cine industry.

  kannan

  ReplyDelete
 11. சில எதிர்ப்பு தொப்பையர்களை தொலைக்காட்சியில் காண நேர்ந்தது.கமலின் முயற்சியால் எதிர்காலத்தில் இந்த தொப்பையர்களின் வயிறு இன்னும் பெரிதாகத்தான் போகிறது.

  ReplyDelete
 12. @ஜாகிர் உசேன்! இஸ்லாமிய சகோதரர்களின் உணர்வுகளை புண்படுத்தவில்லையென கமல் சொல்லியிருக்கிறார்.ட்ரெயிலரை பார்க்கும் போது ஜார்ஜ் புஷ்சின் அமெரிக்க போரை விமர்சனம் செய்த மாதிரி தெரிகிறது.மேலும் துப்பாக்கி சண்டையெல்லாம் பார்த்து விட்டு யாராவது தலிபானிசத்துக்கு குரல் கொடுத்தால் கமல் பொறுப்பல்ல.

  ReplyDelete

 13. நல்ல அருமையான நடுநிலையான உண்மையான கருத்து ...

  ReplyDelete
 14. /ஆனால் கமல் அப்படி செய்தால் நாங்கள் பொது இடங்களில் அகன்ற திரையில் ஒளிபரப்புவோம் என்று சொல்வது உச்சக்கட்ட ரவுடியிசம்./ agreed..

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.