என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, January 28, 2013

29 விஸ்வரூபம் அப்டேட்ஸ்...........
என் முகப்புத்தகத்திலிருந்து.....

நான் விஸ்வரூபத்திற்கு எதிராக ஏதாவது எழுதினால் மற்றவர்களிடமிருந்து நான் அன்னியப்படுத்த படுவேன். மதவாதியாக பார்க்கப்படுவேன். 

நான் எழுதும் ஒரு கருத்தாலேயே மற்றவர்கள் என் மீது வைத்திருக்கும் பார்வை மாறும் போது, கோடிக்கணக்கான பேர் பார்க்கும் ஒரு சினிமா எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று சொல்வது அபத்தமாக இருக்கிறது.


---------------------


கருத்து சுதந்திரம் பற்றி கூவும் ராமதாஸ், முதலில் அவர்கள் சாதியில் காதல் சுதந்திரம் கொடுக்கட்டும்.

-----------------------

சமூகத்தின் அமைதியை கெடுக்காத கருத்துரிமைக்குத்தான் ஒரு அரசும் படைப்பாளியும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

------------------------

சினிமாவை சினிமாவாக எடுக்காதவரை இங்கே யாரும் சினிமாவை சினிமாவாக பார்க்க தயாராக இல்லை.

-----------------------

இது சினிமாதானே இதற்கு ஏன் இத்தனை ஆர்பார்ட்டம் என்று கேட்பவர்களுக்காக...
ஆம் இது சினிமாதான். ஆனால் இதன் தாக்கம் மிகப்பெரிது, வீரியமானது. எப்படி என்றால் இந்த சினிமாவிலிருந்து தான் கடந்த ஐம்பது வருடங்களாக தம்மை ஆள்வதற்கு ஆள் பிடித்து வருகிறான் தமிழன்.

-------------------------

நூறு கோடி ரூபாய் சிலவு செய்து படமெடுத்து ஒரு சமுதாயத்தை புண்படுத்துவதை விட, இரண்டு கோடி ரூபாய் சிலவு செய்து பவர் ஸ்டாரை வைத்து படமெடுப்பது எவ்வளவோ மேல்.

----------------------------

ஒரு படத்திற்கு சென்ஸார் போர்டு கொடுக்கும் சான்றிதழ் சரியானதாக இருந்தால் அலக்ஸ் பாண்டியனை கொண்டாடாமல், அபத்த களஞ்சியம் என்று தூற்றுவது ஏன்? 
சென்ஸார் போர்டு என்ற அமைப்பே தேவையில்லை. எதை பார்ப்பது, எதை விடுவது என்று இப்போதைய ரசிகர்களுக்கு நன்றாக தெரியும் என்று ஒருகாலத்தில் சொன்னவர் கமல்தான்.

-----------------------------

எல்லா விஷயங்களையும் அறிவுப்பூர்வமாக அணுக முடியாது. சில விஷயங்களை உணர்வு பூர்வமாகவும் அணுக வேண்டும்.

--------------------------------

இஸ்லாமியர்கள் எல்லா திரைப்படங்களையும் எதிர்ப்பதில்லை. இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து சமூகத்திற்கும், மத நல்லிணக்கத்திற்கும் கேடு விளைவிக்கும் படங்களை மட்டும்தான் எதிர்க்கிறார்கள். எதிர்ப்பதில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டால் போதும். சினிமா எடுக்கிறேன் பேர்வழி என்று இஸ்லாத்தை மட்டுமல்ல எந்த ஒரு மதத்தையும், சாதியையும் சமூதாயத்தையும் இழிவு படுத்த யாருக்கும் உரிமையில்லை. விலங்குகளை துன்புறுத்தினால் கூட தட்டிக்கேட்க இந்த நாட்டில் ப்ளுக்ராஸ் இருக்கு. ஆனால் மனித மனங்களை துன்புறுத்துவதை கேட்க எந்த அமைப்புமே இல்லை என்பதுதான் நம் நாட்டில் வேடிக்கையான முரண்.

-----------------------------------

இது பொதுவான ஸ்டேட்டஸ்.....

பிரிந்தவர்கள் ஏற்படுத்திய வலியை விட, புரிந்தவர்கள் ஏற்படுத்தும் வலியே கடுமையானது.
Post Comment

இதையும் படிக்கலாமே:


29 comments:

 1. கஸாலி..

  இன்னும் கொஞ்சம் சேர்த்துக்க...

  //நீங்கள் நடுநிலை முஸ்லிம் என்று அழைக்கப்பட வேண்டுமானால்.. தன் மதம் தாக்கப்படும் பொழுது தாக்குபவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.. இல்லை எனில் நீ மதவாதி என்று அழைக்கப்படுவாய்"

  ReplyDelete
  Replies
  1. என்னமா யோசிச்சிருக்கீங்க !!! (fact fact fact) :-))

   Delete
 2. கருத்து சுதந்திரம் யாதெனில்... டேம் 999 ஐ தடை செய்யச் சொல்வதும்... விஸ்வரூப தடைய எதிர்த்து போராடுவதும் ஆகும்..

  ReplyDelete
 3. சினிமா துறையின் கருத்து சுதந்திரம் என்பது யாதெனில்...

  "ஒரு நடிகையின் கதை என்ற தொடர் குமுதத்தில் வந்தால் அந்த ஆபிஸை அடித்து நொறுக்குவதும்... விஸ்வரூபம் என்றால் படைப்பு சுதந்திரம் பற்றி பேசுவதும் ஆகும்"

  ReplyDelete
 4. சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும்...

  ஆனால் சிங்களன் ஒருவன் தன் சினிமா வேலைகளுக்காக சென்னை வந்தால், அப்பொழுது மட்டும் அவனை சிங்களவனாக பார்த்துக்கொள்ளலாம்... தப்பில்லை

  ReplyDelete
 5. Siraj don't u know any other example than dam999 :) its boring. Try something new.

  ReplyDelete
  Replies
  1. வேற வேணுமா..? 1987 ஆண்டு "ஒரே ஒரு கிராமத்திலே " எனும் படம் சென்சார்போர்டு அனுமதிச்சும் திரையில் கொண்டுவரப்படவில்லை..!!!

   இது எப்படி இது புதுசூஊஊ !!!

   Delete
 6. இது போன்று இரட்டை வேடும் போடும் நரிகளின் பேச்சை கேட்டு நீ வருத்தம் அடைந்தால் உன்னை பார்த்து நான் வருத்தம் அடைகிறேன் கஸாலி....

  தூக்கி குப்பைல போடு..

  ReplyDelete
 7. கேரளக்காரன்..

  அதுக்கு தானே நீங்க பதில் சொல்ல முடியாது?? அதனால தான் அதயே சொல்றேன்...

  ReplyDelete
  Replies
  1. அதனால தான் அவரும் ஃபோர் அடிக்குது.சேனலை மாத்துன்னு சொல்லுராரோ? :)

   Delete
 8. ஒவ்வொரு கருத்தும் அருமை...

  ReplyDelete
 9. எல்லா விஷயங்களையும் அறிவுப்பூர்வமாக அணுக முடியாது சில விஷயங்களை உணர்வுப்பூர்வமாகத்தான் அணுக முடியும்.....

  நிச்சயமாக........

  ReplyDelete
 10. நல்ல பகிர்வு கஸாலி..

  ReplyDelete
 11. சகோ கேரளாக்காரன்...

  டேம் படம் பற்றி ரெண்டுநாள் தொடர்ந்து நான் பேசியதையே உங்களால் பொறுக்க முடியலியே,கோபம் வருதே........

  ஒரு சமுதாயத்தை தொடர்ந்து 20 வருடமா தீவிரவாதியாகவே சித்தரிக்கிறீர்களே .....அப்ப எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்?

  ReplyDelete
 12. சலாம் சகோ.

  உங்கள் ஸ்டேட்டஸ் அனைத்துமே இஸ்லாமிய மக்களின் ஒட்டு மொத்த குரலை பிரதிப‌லிக்கிறது. நியாயம், நீதி என்பது என்னவென்று புரிபவர்களுக்கு மட்டுமே இவையும் புரியும். என் தொகுப்பிலும் உங்க பதிவின் லிங்க் கொடுத்துள்ளேன்.

  ReplyDelete
 13. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் சகோ.பிஜே அவர்கள் விஸ்வரூபம் விஷரூபத்திற்கு பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண், கமலஹாசன்,
  விஷகருத்துகள் முறைதனா?

  மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக பரப்படும் நச்சு கருத்துகள் அனைத்திற்கும் பதிலடி கொடுக்க வகையில் உரை நிகழ்த்தினார்.


  இங்கே சொடுக்கவும் >>>>>
  விஷரூப கருத்தால் தோலுரிக்கப்படும் பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண் மற்றும் ... விஷ்வரூபம் கருத்து சுதந்திரமா?

  .
  .
  விஷரூப கருத்தால் தோலுரிக்கப்படும் பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண் மற்றும் ...

  ReplyDelete
 14. ராஜா சார் எங்க ஊர் பக்கம்தான், இந்த பக்கத்தில் அனைத்தும் அருமைன்னு சொல்றாரு ஆனா வேற பக்கத்தில் வேற மாதிரி கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார். முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சனை வரும்போதுதான் அனைவரின் சுயரூபம் வெளிவருகிறது ( ராஜா சார் ஐ மட்டும் குறிப்பிடவில்லை ).

  ReplyDelete
 15. இந்த இடுகைக்கு இங்கே லின்க் கொடுக்கப்பட்டிருக்கிறது:http://www.describia.com/Vishwaroopam

  ReplyDelete
 16. இதுவரைக்கும் நீங்க எழுதிய பதிவிலேயே இதுதான் பெஸ்ட் டு!!!

  சினிமாவை சினிமாவாப் பார்க்கணும்னா

  * என்ன மயிறுக்கு ரஜினி சினிமாவில் சிகரெட் குடிப்பது மக்களை கெட்டவழியில் செலுத்தும்னு சொல்றீங்க? அது சினிமா கேரக்டர்தானே??

  * சினிமாவை சினிமாக மக்கள் பார்க்கணும்னா இதே கமல் என்ன எழவுக்கு நான் சினிமாவில் புகைபிடிப்பதை மக்கள் நலனுக்காக விட்டுவிட்ட்டேன் என பெருமை பேச வேண்டிக்கிடக்கு? அப்போ மட்டும் சினிமாவை சினிமாவை பார்க்கலியா இதே பகுத்தற்வு-பிதற்ற-வாதி??

  இவனுகளும் இவனுக லாஜிக்கும்!

  ReplyDelete
 17. சகோ கஸ்ஸாலி ...என்ன சொல்லுறதுன்னு ஒண்ணுமே தெரியல ......ALL சூப்பர் QUOTES
  சகோ வருண் சொன்னது போல , " நீங்க எழுதியதுல இதுதான் பெஸ்ட் "

  ReplyDelete
 18. http://mudhanmudhalaga.blogspot.com/2013/01/blog-post.html

  ReplyDelete
 19. கஜாலி கருத்தையும் வருண் கருத்தையும் அப்படியே வழி மொழிகிறேன்.

  ReplyDelete
 20. Raheem, this post for you.

  http://reverienreality.blogspot.in/2013/01/blog-post_28.html

  ReplyDelete
 21. இன்னும் நிறைய சொல்லலாம். கஸாலிசினிமாவில் நடுநிலை வாதிகள் என்ற பெயரில் திரியும் அயோக்கியர்களின் முகத்திரையும் கிழிக்க பட்டிருக்கு.இதற்க்கு மத்தியிலும் உதட்டோடு மட்டுமில்லாமல் நம் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் மாற்று மத நண்பர்களும் இருக்கவே செய்கிறார்கள்.அவர்களுடைய நட்பு தொடரனும் என்ற அளப்பரிய ஆசையில் தான் இந்த படங்களை நாம் வெறுக்கிறோம்.இன்னும் நிறைய எதிர்பார்த்தேன் இரத்தின சுருக்கமாக முடிதுக்கொண்டாய்.

  ReplyDelete
 22. இது சினிமாதானே இதற்கு ஏன் இத்தனை ஆர்பார்ட்டம் என்று கேட்பவர்களுக்காக...
  ஆம் இது சினிமாதான். ஆனால் இதன் தாக்கம் மிகப்பெரிது, வீரியமானது. எப்படி என்றால் இந்த சினிமாவிலிருந்து தான் கடந்த ஐம்பது வருடங்களாக தம்மை ஆள்வதற்கு ஆள் பிடித்து வருகிறான் தமிழன். இதுவரைக்கும் சரி தான் தம்பி, இனிமே எந்த சினிமா நாயகனும் நாயகியும் தமிழ்நாட்டை ஆள இயலாது. சினிமா தாக்கம் பெரியதுதான், அது வெறும் சின்னபுள்ளதனமான தாக்கம் என்பதை ஏன் யாரும் புரிந்து கொள்ள முஅல வில்லை என்பதை வருத்தததோடு சொல்லிக்கொள்ள கடமைகொண்டுள்ளேன்.நான்.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.