என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, January 02, 2013

8 பொதுக்குழுவில் ஜெயலலிதா சொன்ன பொய்...(கஸாலி கஃபே-02/01/2013)கடந்த திங்களன்று கூடிய அண்ணா.தி.மு.க., பொதுக்குழுவில் ஜெயலலிதா பேசும் போது, நான் அண்ணா.தி.மு.க.,பொதுச்செயலாளராக பொறுப்பேற்று 25 வருடங்கள் முடிந்துவிட்டது என்றார். இது ஒரு தவறான கணக்காகும்.

2012-ஆம் ஆண்டுடன் 25 வருடங்கள் ஆகிவிட்டதாக வைத்துக்கொண்டால், 1987-ஆம் ஆண்டிலிருந்து ஜெயலலிதா அந்தக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்திருக்க வேண்டும். ஆனால், நடந்ததோ வேறு.

எம்.ஜி.ஆர் 1987 டிசம்பர் மாதம் இறந்த பிறகு, அந்தக்கட்சியின் 98 எம்.எல்.ஏ.க்கள் எம்.ஜி.ஆரின் மனைவியான ஜானகி அம்மாளை ஆதரித்தனர். மீதமுள்ள 33 எம்.எல்.ஏ.,க்கள் ஜெயலலிதாவை ஆதரித்தனர். ஜெயலலிதா வார்த்தையில் சொல்வதாக இருந்தால் மைனாரிட்டி ஜெயா அணி அது.

அப்போது ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக முன்னிறுத்தியது திருநாவுக்கரசர், சாத்தூர் ராமச்சந்திரன், பண்ரூட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம் போன்ற முன்னாள் அமைச்சர்களும், கருப்புசாமி பாண்டியன் போன்ற மாவட்ட செயலாளர்களும். தனக்கு முதல்வர் பதவி கிடைக்க வில்லை என்ற அதிருப்தியில் நாவலர் நெடுஞ்செழியனும் ஜெயா பின்னாள் அணி வகுத்தார். ஆனால், இந்த நியமனத்தை ஜானகி அம்மாளும், ஆர்.எம்.வீரப்பனும் ஏற்றுக்கொள்ளாததால் அண்ணா.திமு.க., இரண்டாக உடைந்தது. கட்சியும், இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது.


ஜானகி அணி, ஜெயலலிதா அணி இயங்கியது. 1989- ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் வரை தனித்தனி அணியாகத்தான் செயல்பட்டார்கள் இருவரும்.
1989 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும், ஜானகி அணிக்கு இரட்டைப்புறா சின்னமும் ஒதுக்கப்பட்டது. அந்த தேர்தலில் ஜெ அணி சார்பில் 27 இடமும், ஜானகி அணி சார்பில் 1 இடமும் கிடைத்தது.

ஜானகி அணியின் படுதோல்விக்கு பொறுப்பேற்ற ஜானகி, தன் அணியை ஜெயலலிதா அணியுடன் இணைத்து விட்டு அரசியலிலிருந்தே ஒதுங்கி கொண்டார். அதன்படி 1989- ஆம் ஆண்டிலிருந்துதான் ஒருங்கிணைந்த அண்ணா.தி.மு.க.,வின் பொதுச்செயலாளர் ஆனார் ஜெயலலிதா. இரட்டை இலை சின்னமும் மீண்டும் கிடைத்தது. அதன் படி பார்த்தால் 23 வருடம்தான் ஆகிறது ஜெயலலிதா பொ.செ. வாக பொறுப்பேற்று. அப்படியானால் ஜெ பொய் சொல்லியதாகத்தானே அர்த்தம். 

-----


கோயிலுக்கு அருகில் இருக்கும் ஹோட்டலில் இட்லி சாப்பிடுகையில், அளவில்லாமல் ஊற்றப்படும் தேங்காய் சட்னியை பார்க்கும் போது கோயிலில் உடைக்கும் சிதறு தேங்காய் உங்கள் நினைவிற்கு வந்தால் நீங்களும் என் தோழர்களே...

-------------

ஒரு புத்தக வெளியீட்டில் கலைஞரோடு கமல் கலந்துகொண்டதை பார்க்கும்போது விஸ்வரூபத்திற்கு வில்லங்கம் வேறு ரூபத்தில் வரும் போல...

--------------

கலைஞர் சொன்னதுபோல் விரைவில் பிரதமாராவேன்-ப.சிதம்பரம்# கலைஞர் சொல்லித்தானே நீங்க எம்.பி.யாகவே ஆனீங்க?

---------------

ஒரு புத்தக வெளியீட்டில் கலைஞரோடு கமல் கலந்துகொண்டதை பார்க்கும்போது விஸ்வரூபத்திற்கு வில்லங்கம் வேறு ரூபத்தில் வரும் போல...


-------------------

ஃபேஸ்புக்கில் நாம் போடும் ஸ்டேட்டசுக்கு நாமே லைக் போடுவது என்பது, நாம் தேர்தலில் நிற்கும் போது நமகு நாமே ஓட்டுப்போட்டுக்கொள்வது போல்தான். இதில் ஏதும் அபத்தம் இருப்பதாக நான் கருதவில்லை.

----------------

பழைய காலண்டரை தூக்கி வீசிட்டு புதுக்காலண்டர் மாட்ட இத்தனை ஆர்பார்ட்டங்கள் எதற்கு?

--------------------

உலகம் முழுவதும் அடிமைப்படுத்தி வைத்திருந்த வெள்ளைக்காரர்கள் நாட்டை மீண்டும் அவரவர்களிடம் ஒப்படைத்து விட்டு போனதில் வேண்டுமானால் தோற்றுப்போயிருக்கலாம். ஆனால், கலாச்சாரத்தை விட்டுப்போவதில் என்னவோ ஜெயித்து விட்டார்கள் வெள்ளைக்காரர்கள் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது இப்போதைய கொண்டாட்டங்களையும் நிகழ்வுகளையும் பார்க்கும் போது....

------------------

அடக்குமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும் : அ.தி.மு.க.,# முதலில் உங்களிலிருந்தே ஆரம்பியுங்கள்....

=====================================================Post Comment

இதையும் படிக்கலாமே:


8 comments:

 1. // கோயிலுக்கு அருகில் இருக்கும் ஹோட்டலில் இட்லி சாப்பிடுகையில், அளவில்லாமல் ஊற்றப்படும் தேங்காய் சட்னியை பார்க்கும் போது கோயிலில் உடைக்கும் சிதறு தேங்காய் உங்கள் நினைவிற்கு வந்தால் நீங்களும் என் தோழர்களே... //

  பாவம் சேகுவாரா.... நம்மகிட்டயும், இந்தியாவில் இருக்கும் போலி கம்யூனிஸ்ட்டுகளிடமும் மாட்டிக்கொண்டு படாத பாடு பட்றார்....

  ReplyDelete
 2. தண்ணி அடித்துக்கொண்டே, ஏழைகளுக்கு உதவாமல் ஆனால் ஏழைகள் பற்றியே பேசிக்கொண்டு இருந்தால்...நீங்களும் என் தோழர்களே....

  ReplyDelete
  Replies
  1. உள்ளங்கள் கவலை அடையும் ஒவ்வொரு வேளையும், அடக்கமுடியாத ஆத்திரத்தினால்,உங்கள் கைகள் யூடுபில் T.R ரை தேடினால் " நாம் தோழர்களே "..!!!

   :-))

   Delete
 3. ஜெயலலிதா கணக்கு தப்புத்தான்! முகநூல் வரிகள் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 4. ஜெயாம்மாவுக்கு பொய் சரளமாக வருவதால் தான் "இந்துத்துவம்" அவரை இழுக்கப் பார்க்கிறது.

  ReplyDelete
 5. பெரும் புளுகன் கருணாநிதிக்கு முன்னால் இந்த சின்னப் பொய் பரவாயில்லை.

  ReplyDelete
 6. என் ஃபேஸ்புக்கிலிருந்து பகிர்வு நல்லா இருந்துச்சி.

  ReplyDelete
 7. அனைத்தும் மிக அருமை.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.