என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, January 10, 2013

7 மீண்டும் கஸாலி கஃபே (10-01-2013)
இந்த பொங்கலுக்கு வில்லங்கமில்லாமல் அலெக்ஸ் பாண்டியன் மட்டுமே வரும் போல. ஏற்கனவே, விஸ்வரூபம், சமர் போன்ற படங்கள் வில்லங்கத்தில் சிக்கி தவிக்கிறது. இதில், லேட்டஸ்டாக சேர்ந்திருக்கும் படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா?

இன்று போய் நாளை வா படத்தின் அப்பட்டமான காப்பி இந்த படம் என்று இயக்குநர் பாக்யராஜும், இது என் கதை என்று ஒரு உதவி இயக்குநரும் வழக்கு போட்டிருக்கிறார்கள். இது பாக்யராஜின் கதை என்று அவர் நம்பிக்கையாக சொல்லும் போது அந்த உதவி இயக்குநரும் அதையே சொல்லியிருப்பதுதான் குழப்பம். ஒருவேளை பாக்யராஜின் கதையைத்தான் உ.இ.வும் காப்பியடித்திருப்பாரோ என்ன எழவோ? ஒரு லட்டை எத்தனை பேர்தான் தின்ன ஆசைப்படுவது?

---

இது உண்மையிலேயே, ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் செயல். நடுத்தர மக்களை வஞ்சிக்கும் இந்த ரயில்வே கட்டண உயர்வை நான் வண்மையாக கண்டிக்கிறேன். நாட்டின் முன்னேற்றத்தையும், மக்களின் நிலமையையும் கருத்தில் கொண்டு விஷம் போல் உயர்ந்து கொண்டேயிருக்கும் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும். உற்பத்தியை பெருக்க வேண்டும், வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்திக்கொண்டிருக்கும் இவ்வேளையில் மக்கள் கருத்திற்கு மதிப்பளிக்காமல், மக்கள் நலனுக்கு எதிரான விஷயங்களை மத்திய அரசு எடுத்து வருவது வருந்தத்தக்கது -
இப்படி சொல்வது வேறு யாருமல்ல.. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிளேயே பால் விலை, பஸ் கட்டணம், மின்சார கட்டணம் என்று அதிரடியாய் கசப்பு மருந்து கொடுத்த ஜெயலலிதாதான். நான் இந்த கட்டண உயர்வை நியாயப்படுத்த வில்லை. அதேநேரம் தான் கொடுத்தால் கசப்பு மருந்து அதையே மற்றவர்கள் கொடுத்தால் விஷம் என்றுதான் பேச வேண்டாம் என்று சொல்கிறேன். யார் கொடுத்தாலும் விஷம் விஷம்தான்.

----

ஹைதராபாத்தில் இருக்கும், சார்மினார் அருகில் முளைத்த கோவில் விவகாரம் சம்பந்தமாக  கடந்த மாதம் அங்கு பேசிய பிரவீன் தொகாடியா கோவிலுக்குள் பூஜை செய்ய அனுமதிக்காவிட்டால் ஹைதராபாத் இன்னொரு அயோத்தியாக மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். அப்போது அங்குள்ள இஸ்லாமியர்களுக்கு மறக்க முடியாத அளவிற்கு பாடம் புகட்டுவோம் என்று கலவர விதை தூவியுள்ளார். அவரின் பேச்சிற்கு பதிலடி கொடுத்த அக்பர்தீன் ஒவைசி என்பவர் கால் மணி நேரம் போலீஸ் ஒதுங்கி கொண்டால் போதும் எல்லோரையும் காலி செய்துவிடுவோம் என்று பேசி தொகாடியா போட்ட விதைக்கு உரமிட்டிருக்கிறார். இப்படியே போனால் இருவரும் மனித உயிர்களை அறுவடை செய்து விடுவார்கள் போல. நாட்டின் ஒற்றுமைக்கும் இறையான்மைக்கும் எதிராக பிரவின் தொகாடியாவாகட்டும், அக்பர்தீன் ஒவைசியாகட்டும் யார் பேசினாலும் கண்டனத்துக்குரியதுதான் இதில் மாற்றுக்கருத்தில்லை. இதில் ஒவேசியையும் மட்டும் கைது செய்துவிட்டு, தொகாடியாவை ஒன்றும் செய்யாமல் விட்டதுதான் கொஞ்சம் நெருடுகிறது.

----

மானங்கெட்டவனே யாரைப்பார்த்து கேட்கிறாய் வரி என்று கட்டபொம்மன் போல வசனம் பேசாததுதான் பாக்கி இந்த நடிகர்கள்.

நாட்டில் எத்தனையோ பிரச்சினை வந்திருக்கிறது. அப்போதெல்லாம் திரையுலகம் இப்படி ஒரு எழுச்சிய கண்டதா என்று தெரியவில்லை. ஆனால், தன் பணத்திற்கு ஆப்பு என்றதும் எல்லோரும் ஆஜர்.

மூட்டை தூக்கி, ஆட்டோ ஓட்டி, வாய்க்கால், வயல், வரப்புகளில் வேலை செய்யும் மக்கள் மட்டும் அவர்கள் வாங்கும் சினிமா டிக்கெட்டிற்கு கேளிக்கை வரி கட்டணுமாம். ஆனால், கோடிகோடியாக பணம் வாங்கும் இவர்கள் சேவை வரி கட்ட மாட்டார்களாம். என்ன நியாயமோ போங்கப்பா.

சேவை வரி அதிகரித்தால் கருப்பு பணமும் அதிகரிக்குமாம் சில நடிகர்கள் சொல்கிறார்கள். இப்ப மட்டும் கருப்பு பணமே இல்லையா உங்களிடம்? ஒரு படத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்குகிறேன்். அது அத்தனையும் வெள்ளைதான் என்று மனசாட்சியை தொட்டு நெஞ்சை நிமிர்த்தி எத்தனை நடிகர்களால் பதில் சொல்ல முடியும்?. நாட்டில் வரி கட்டாமல் பணத்தை பதுக்க ஆரம்பித்தால், கருப்பு பணம் அதிகரித்தால் அது அந்த நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கும். அப்படி பொருளாதாரத்தை பாதித்தால் விலைவாசி உயரும், அப்படி விலைவாசி உயர்ந்தால் அது ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும். அப்படி மக்கள் மீது வரி சுமத்தினாலும் பரவாயில்லை. நாங்கள் வரி கட்ட மாட்டோம் என்று சொல்பவர்கள் பின்னாள் தான் மக்கள் அலைகிறார்கள் நாளைய முதல்வரே என்று கோஷம் போட்டுக்கொண்டு.

மக்களுக்காக சினிமாவில் மட்டும் பாடுபட்டால் போதாது, நிஜமாகவும் மக்களுக்காக பாடுபட வேண்டும். அப்படி பாடுபடுபவனே உண்மையான ஹீரோ. மற்றவர்கள் சினிமா வில்லனை விட கேவலமானவர்கள்தான்.

---

மதுக்கடைகளை எதிர்ப்பது மலிவான செயலாம் சொல்கிறார் அண்ணன் ச்சீமான்#
இப்ப நீங்க எதையும் எதிர்க்க முடியாத காகிதப்புலி, அட்டக்கத்திண்ணே. திமுக ஆட்சியில்தாண்ணே உங்க வீரமெல்லாம். இப்ப வீரத்தை காட்டினா புழல் உங்க இருப்பிடமாகிடும். அண்ணே ரொம்ப சத்தமா கூவாதீங்கண்ணே...அப்புறம் நாஞ்சில் சம்பத்திடமிருந்து பதவியை பிடுங்கி உங்க கிட்ட கொடுத்திட போறாங்க. பாவம் அவராவது பிழைத்து போகட்டும்.

---

சில விரும்பத்தகாத நிகழ்வுகளால் நான் பதிவுலகிலிருந்து சில காலம் விலகிவிடலாம் என்று நினைத்து ஒரு பதிவிட்டேன். உடனே அப்படியெல்லாம் செய்ய வேண்டாம் என்று பின்னூட்டங்கள் மூலமாகவும், மின்னஞ்சல், தொலைபேசி வாயிலாகவும் சில நண்பர்கள் கேட்டுக்கொண்டார்கள். அவர்கள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி. குறிப்பாக நண்பர் பிச்சைக்காரனுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. நள்ளிரவு நேரத்திலும் என்னை தொடர்பு் கொண்டு சில சாதக பாதகங்களை எடுத்து கூறி என் முடிவை மாற்றினார். இனி தீவிரமாக எழுதாவிட்டாலும் அவ்வப்போது தலை காட்டுவேன். நன்றி.
---

என் FACEBOOK  ஸ்டேட்டஸ்

மதுக்கடைகளை எதிர்ப்பது மலிவான அரசியல்- ச்சீமான்#
ஒரு வேளை திமுக ஆட்சியாக இருந்தால் என்ன சொல்லியிருப்பீர்?
மதுக்கடைகளை எதிர்ப்பது எங்கள் தார்மீக கடமை என்றா?

தியேட்டரில் வெளியாகி நான்கு நாட்களுக்கு பிறகுதான் டிடிஹெச்சில் ஒளிபரப்பப்படுமாம் விஸ்வரூபம்#
நாலு நாளுக்கு அப்புறம் பார்க்க ஏன் ஆயிறம் ரூபாய்.அதான் முப்பது ரூபாய் போதுமே பைரட் டிவிடி வாங்க.

தமிழகத்தின் அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் எங்கள் இலக்கு- வைகோ # 
இலக்கை நோக்கி இப்பவே 'நடக்க' ஆரம்பிச்சிடுங்க தலைவரே....

விஸ்வரூபம் டிடிஹெச்சில் ஒளிபரப்பில்லையாம். தியேட்டரில் நேரடியாக வருதாம். அதுகூட பொங்கலுக்கு இல்லையாம்
ஜனவரி-25 ஆம் தேதியாம். அய்யோ அய்யோ. அதுசரி, டிடிஹெச்சில் படம் பார்க்க பணம் கட்டியவர்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? அதற்கும், யாராவது கேஸ் போடாமல் இருந்தால் சரிதான்.

இனிமேல், அழகிரி மனம் திறக்கிறார், அழகிரி சீற்றம் என்று சஞ்சிகைகள் சொல்லும் பொய்களை எல்லாம் படித்து தொலைய வேண்டியிருக்கும்.

பெண்கள் வீட்டை கவனித்துக் கொள்ள வேண்டும்- மோகன் பகவத்# நல்லவேளையா இந்த வார்த்தைகளை வடநாட்டு பக்கம் சொன்னதால் தப்பிச்சீங்க. இதையே தமிழ்நாட்டில் சொல்லிருந்தா இந்நேரம் உங்கள் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்திருக்கும்.

வைகோ பிரதமராகும் வாய்ப்பு உருவாகுமானால் என் ஓட்டு அவருக்குத்தான்-ராம்ஜெத்மலானி# உங்க ஒரு ஓட்டினாலெல்லாம் அவர் பிரதமர் ஆகமுடியாது ஐயா.

என்னை மிரட்டுகிறார்கள் என்று டி.ஜி.பி.,யிடம் கமல் மனு # கற்பழித்தவர்களையே மன்னிக்க சொல்லும் மகான் நீங்க. இந்த மிரட்டலுக்கு போயி புகார் கொடுத்திருக்கிறீர்களே? 
மன்னித்து புகாரை வாபஸ் வாங்கிடுங்க சார். மிரட்டியவர்கள் உங்க சகோதரர்கள் தானே?

ஒரு கம்ப்யூட்டரும், இன்டர்நெட் கணெக்ஷனும், ஃபேஸ்புக் அக்கவுண்டும் இருந்தால் நீயும் தத்துவ ஞானியே

வீட்டை விட்டு வெளியே வரவே பயமாருக்கு- ஸ்ருதி ஹாசன் # நீங்க தைரியமா போங்க மேடம். இங்கே எல்லோரும் உங்கப்பாவின் சகோதரர்கள்தான்.
Post Comment

இதையும் படிக்கலாமே:


7 comments:

 1. அன்றாட நிகழ்வுகள் குறித்த அலசல் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. அட்டகாசம் அண்ணே

  ReplyDelete
 3. அட்டகாசம்,,, ஹைதராபாத் விவகாரத்தை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.. இது போன்ற சம கால செய்தி விமர்சனங்களை நடு நிலையுடன் தருவதை நிறுத்தி விடாதீர்கள் .தொடருங்கள்

  ReplyDelete
 4. தாங்கள் முடிவை மாற்றிக்கொண்டதற்கு மிக்க நன்றி.... அனைத்து தகவல்களும் அருமை நண்பரே.... வாழ்த்துகள்......

  ReplyDelete
 5. கஸாலி சார்!என் கேள்விக்குப் பதில் சொன்னாற் போல் மீளவும் 'அப்பப்ப' வாவது வர்றேன்னு சொன்னது சந்தோஷம்!காப்பி/டீ& ஸ்நாக்ஸ் அருமை!

  ReplyDelete
 6. ரயில்வே காரங்க சர்வீஸ்தான் மோசம்னு பாத்தா இப்பல்லாம் நாலு மாசம் முன்னயே முன் பதிவு செய்யணும்னு வேற சொல்லுராங்க. நாளைய தினத்தையே நம்மால தீர்மானிக்க முடியல்லே இதில் நாலு மாச முன்னேயே எங்க போகப்போறோம்னு எப்படி தீர்மானிக்க முடியும்?

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.