என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, November 05, 2012

12 துப்பாக்கி பராக்.....பதிவர்களுக்கு எச்சரிக்கை....
ட்வீட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களில் நடிகர்களிலேயே அதிகம் பஞ்சராக்கப்பட்டது நடிகர் விஜய்தான். பவர் ஸ்டார் போன்றோரை ஓரளவு கரிசனத்துடன் எழுதுபவர்கள் கூட, விஜயை கண்ணாபிண்ணாவென்று எழுதுவார்கள். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விஜய் தரப்பு போய்கொண்டிருக்கும். ஆனால் அதெல்லாம் அப்போது. இப்போது தொட்டதுக்கெல்லாம் வழக்கு பாய்கிறது. 

ஃபேஸ்புக், ட்வீட்டரில் ஏதும் எழுதக்கூட வேண்டாம், ஏற்கனவே யாராவது எழுதியதை லைக், ரீட்வீட் செய்தாலே போதும். உடனே போலிஸார் நம் இல்லம்தேடி வந்து கதவை தட்டிவிடுவிடுவார்கள். ஒரு அமைச்சரை தொகுதிக்குள் காணவில்லை, எம்.பி.,தொகுதிப்பக்கமே வரவில்லை என்று கூட இனி யாரும் ட்வீட் போடமுடியாது போல....அந்த அளவிற்கு எழுத்து சுதந்திரம் கழுத்து நெரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது இணையத்தில். சரி விஷயத்திற்கு வருகிறேன். துப்பாக்கி படம் வெளிவருகிறது தீபாவளிக்கு. நமக்கு விஜய் படம் வெளிவந்தாலே தீபாவளிதான். அதிலும் தீபாவளிக்கே படம் வெளி வருதென்றால் சொல்லவே வேண்டாம்.....தவுசண்ட் வாலா பட்டாசுதான். ஆளாளுக்கு ஃபேஸ்புக்கில் உட்கார்ந்து விடுவார்கள் கிண்டல் செய்ய.... படத்தை பற்றியோ, விஜய் பற்றியோ யாரும் நெகட்டிவான கமெண்டை கொடுத்தால் ஒருவேளை கேஸ் போட்டாலும் போடலாம். எதற்கும் கொஞ்சம் அடக்கி வாசிங்க பதிவர்களே... 


==============

 ஏ.ஆர்.ரஹ்மான் - மணிரத்னம் - வைரமுத்து கூட்டணி என்றாலே மெஹா ஹிட்தான். இது கடந்த காலங்களில் நிருபிக்கப்பட்ட ஒரு விஷயம். இப்போது இவர்கள் கூட்டணியில் வெளிவர இருக்கும் கடல் திரைப்படத்தின் ஒரு பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். நல்லதொரு அருமையான மெலோடி எனலாம் இப்பாடலை..... நீங்களும் கேட்டுப்பாருங்களேன்.

 


Post Comment

இதையும் படிக்கலாமே:


12 comments:

 1. //அருமையான மெலோடி எனலாம் இப்பாடலை// மிக மிக மிக மிக மிக அருமையான பாட்டு ... கண்ணில் கண்ணீர் வரவளைக்குது ஒரு முறை ...
  காதல் சிறகு ஒரு முறை ... ஏக்கம் ஒரு முறை .. அருமை அருமை;

  ReplyDelete
 2. நண்பரே,

  தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
  http://www.tamilkalanchiyam.com

  - தமிழ் களஞ்சியம்

  ReplyDelete
 3. மிக அருமையான பதிவு
  வணக்கம்
  எமது சேவைகளின் சிறப்பு அம்சங்கள் வாரம் இரு நட்சத்திரபதிவர்கள்.
  தினபதிவு தளத்தின் முகப்பில் தெரியும் இது உங்களுக்கான வாசகர்களை அதிகரிக்கும்.
  தினபதிவு திரட்டி

  ReplyDelete
 4. டாகுடரின் தீவிர ரசிகரான கஸாலியின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்.

  ReplyDelete
 5. உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com/

  ReplyDelete
 6. விஜய் எவ்வளவு கலாயித்தாலும் கோபித்து கொள்ள மாட்டார்....அவர்தான் நண்பனாச்சே....

  ReplyDelete
 7. செம பாட்டு பாஸ்....நேத்து தான் கேட்டேன்..பாட்டு பெரிய ஹிட் ஆகும் பாருங்க...

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. எனக்கு இந்த பதிப்பு பிடுச்சு இருக்கு ஏனா ? நான் அஜித் பிரியன் ஆச்சே ஹ ஹ ஹ

  ReplyDelete
 10. வழக்கம்போல் ரகுமானின் உழைப்பு தெரிகிறது. பாடலில்

  ReplyDelete
 11. இதுக்கெல்லாம் அடங்கமாட்டோமெல்ல...ஆவ்வ்வ்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.