என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, November 06, 2012

12 கார்த்தி சிதம்பரமும், கருத்து சுதந்திரமும்
இந்திய அரசே,
தனிமனித உரிமைகளையே பறிக்கும். I-T ACT Section 66 A திருத்தப்பட வேண்டும். தனிமனித கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை வேண்டும்


 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 - http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும் (http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம்.
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம்.

நன்றி அஞ்சா சிங்கம்


Post Comment

இதையும் படிக்கலாமே:


12 comments:

 1. கருத்துப் பெட்டில எழுதலாமா?பயமா இருக்கு சகோ..

  ReplyDelete
 2. நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம்.
  இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம்.

  ReplyDelete
 3. நல்ல முயற்சி..நல்லதே நடக்கட்டும்..

  ReplyDelete
 4. நாம் ஒன்றிணைந்தால் மிக பெரிய பலம் பெறுவோம் ...........நன்றி

  ReplyDelete
 5. ithuveryaa nadaththuraanga....

  ReplyDelete
 6. செல்வின் சொன்னது போல ஒன்றிணைந்து நம் பலத்தைக் காட்ட வேண்டிய தருணம் இது. பகிர்விற்கு நன்றி தம்பி.

  ReplyDelete
 7. இன்றே அனைவரும் பதிவிட ஆரம்பித்து விட்டீர்களா? நல்லது ...ஒன்றுபட்டால் நமக்குண்டு எழுத்துரிமை, நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் சிறையே.

  ReplyDelete
 8. நண்பரே,

  தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
  http://www.tamilkalanchiyam.com

  - தமிழ் களஞ்சியம்

  ReplyDelete
 9. மறுபடியும் ஆலோசனைக் கூட்டம் நடத்த நேர்ரம் வந்துவிட்டது நண்பர்களே.சும்மா மனசுக்குள்ளேயே நினைச்சிட்டு இருக்காம வெளில வாங்க. கூடிப்பேசி சங்கத்தை பதிவு பண்ணிட்டு என்ன பிரச்சினைனாலும் ஒன்னா நிக்கலாம். இப்ப பாருங்க ஆளுக்கொரு மூலையில லைட்டா சவுண்ட் விட்டுட்டு, சாதாரண பின்னூட்டம் போடக் கூட ஆளைக்காணோம்.

  அம்புட்டு பயம் போல :-))))

  ReplyDelete
 10. கார்த்தி சிதம்பரம் புகாருக்கு கைதுனு ந்யூஸ் பார்த்து, பாவம் ரஹீம் கஸாலிதான் ஆடிப்போயி்ருப்பாப்ல..:-))))))))

  ReplyDelete
 11. நல்லதே நடக்கும் என நம்புவோம்!

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.