என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, November 02, 2012

27 நசுக்கப்படும் இணைய சுதந்திரம்.


இனையத்தில் இயங்கி வரும் எழுத்தாளர்களின் எழுத்து சுதந்திரம் சுத்தமாக பறிக்கப்படுகிறதோ என்று சந்தேகப்படும்  அளவிற்கு சம்பவங்கள் நடக்க ஆரம்பித்து விட்டது.

ட்வீட்டர் ராஜனை தொடர்ந்து சீனிவாசன் என்பவரும ராஜா வீட்டு கண்ணுக்குட்டி கார்த்தி சிதம்பரத்தை பற்றி கார்த்திக் சிதம்பரம் ராபர்ட் வாத்ராவை விட நிறைய சொத்து சேர்த்துட்டார் என்று செய்திகள் வருகின்றன என எழுதியதால்கைது செய்யபட்டுள்ளார். 

இவர்கள் மட்டும் ஏதாவது ஒரு எதிர்கட்சியினர் மீது ஊழல் புகார் சொல்வார்களாம். ஆனால், நாம் இவர்களை பற்றி ஏதும் சொல்லக்கூடாதாம்.

இப்படியே போனால் ஒரு சினிமா விமர்சனம் கூட எழுத முடியாது நம்மால். ஒரு படம் நொள்ளை நோட்டை என்று கூறினால் உடனே அந்தப்படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகரும் வழக்கு போட்டு நம்மை உள்ளே தள்ளினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பின்னே என்ன சார்? நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமே இப்படி நம் மீது இப்படி நவடிக்கை எடுக்கும்போது நமக்காக கோடிகளை கொட்டி படமெடுப்பவர்கள் எப்படி சும்மா இருப்பார்கள்?, இப்படியே போனால், வெறும் கவிதை, சிறுகதைன்னு எழுதி காலத்தை ஓட்டிட வேண்டியதுதான் போல..

================


அமெரிக்கர்களும் தேர்தல் முறையில் தமிழகத்தை பின்பற்ற ஆரம்பித்துளார்கள். ஆம் அமெரிக்காவிலும் வாக்களிக்கும் மக்களுக்கு இலவசங்கள் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
வாக்களித்த ஒப்புதல் சீட்டை காட்டினால் யோகா பயிற்சி இலவசமாம். பீட்சா பர்க்கர், விமானப்பயணம் என்று நிறைய இலவசங்களை வாரி இறைத்திருக்கிறார்கள். ஆனால், வாக்களிப்பதை ஊக்கப்படுத்த இப்படி கொடுக்கிறார்களா அல்லது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க இப்படி கொடுக்கிறார்களா என்பதுதான் தெரியவில்லை.

================

ஒரு நாட்டில் ஒரு ராஜா இருந்தானாம். அவன் ஆட்சியில் நடந்த சில குளறுபடியால் மக்கள் கொதித்தெழுந்து அவனை மாற்ற முடிவு செய்து குடவோலை முறையில் இன்னொரு ராஜாவை தேர்ந்தெடுத்தனர்.

அப்போது பழைய ராஜா புதிய ராஜாவிடம் ஒரு பெட்டியை கொடுத்து எப்போது உன்னால் இந்த மக்களை சமாளிக்க முடியவில்லையோ அப்போது இந்த பெட்டியை திறந்து பார். அதில் ஒரு ஓலைச்சுவடி இருக்கும்.அதில் என எழுதியிருக்கோ அதன்படி நடந்துகொள் என்று சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டான்.

சில நாட்கள் கடந்தது. பழைய ராஜாவே பரவாயில்லை என்று சொல்லும்படி புதிய ராஜாவின் நடவடிக்கைகள் இருந்தது.

மாற்றம் வேண்டி வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாளிக்க முடியாத புது ராஜாவிற்கு பழைய ராஜா கொடுத்து விட்டு போன பெட்டி நினைவில் வந்தது.

உடனே அந்தப்பெட்டியை திறந்து பார்த்தான் புது ராஜா. அதில் ஒரு ஓலைச்சுவடி இருந்தது. அதில் இப்போது நடக்கும் குழப்பம் எல்லாத்துக்கும் காரணம் இதற்கு முன் ஆட்சி செய்த பழைய ராஜாதான் என்று என் மேல் பழியை போட்டுவிடு என்று எழுதியிருந்தது. அதன்படியே இவனும் சொல்லி தப்பித்து விட்டான்.

இந்தக்கதை இப்ப எதுக்கா?.... ஏதோ சொல்லனும்ன்னு தோணுச்சு

=============


-


Post Comment

இதையும் படிக்கலாமே:


27 comments:

 1. அவ்வ்வ்வவ்வ்வ்வ் எனக்கு கதை எழுத தெரியாதே

  ReplyDelete
 2. இன்றைய அரசியல்வாதிகளின் நிலையை
  அப்படியேச் சொல்லிப்போகும் கவிதை அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. எல்லோரும் உஜ்ஜாலாவுக்கு மாறிட்டாங்க...நானும் மாறிக்கிட்டு இருக்கேன்...அப்ப நீங்க...?

  ReplyDelete
 4. இப்படியே போனா என்ன செய்வது? இதற்கு காரணம் அரசியல்வாதிகள்தான் என்றே தோன்றுகிறது. உங்களுடைய அருமையான கதைவிளக்கங்களுக்கு நன்றி!

  ReplyDelete
 5. நல்ல கதை... என்ன சொல்ல வர்றீங்க என்று எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்...

  நன்றி...
  tm8

  ReplyDelete
 6. என்னத்தச் சொல்ல... அரசியல். சினிமா எதையும் விமர்சிக்க பயமாத்தான் இருக்குது. கடைசில சொல்லியிருக்கற உருவகக் கதை அருமை.

  ReplyDelete
 7. என்ன ரஹீம் கதையெல்லாம் விட ஆரம்பிச்சுட்டீங்க...!

  ReplyDelete
 8. கதை சூப்பர்.என்னத்தச் சொல்ல.....கலக்கிறீங்க

  ReplyDelete
 9. நீங்கதான் கதையெழுத ஆரம்பிச்சிட்டீங்களே ..

  ReplyDelete
 10. ராஜா கதை சூப்பர்!

  ReplyDelete
 11. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

  http://otti.makkalsanthai.com/upcoming.php

  பயன்படுத்தி பாருங்கள் தமிழ் உறவுகளே,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

  ReplyDelete
 12. Replies
  1. த.ம.12 நீ போட்டது இல்லியே. அது சகோ ஆமினா போட்டதுல..

   Delete
 13. தம12

  ப்ரசன்ட் சார் :-)

  ReplyDelete
 14. இந்தக்கதை இப்ப எதுக்கா?.... ஏதோ சொல்லனும்ன்னு தோணுச்சு
  //

  நீங்க அவங்கள தானே சொன்னீங்க :-) :-)

  ReplyDelete
  Replies
  1. ஏங்க என்னை மாட்டிவிடாம தூங்க மாட்டீங்க போல...
   அதை விட முக்கியமான விஷயத்தை மேலே சொல்லிருக்கேன் அதை யாரும் கண்டுகொள்வது போல தெரியலியே?

   Delete
 15. நண்பரே! அடக்கு முறை தொடங்கும் அறிகுறியின் ஆரம்பம்தான் இது! கடந்த ஓராண்டு காலமாக இதைத்தான் நான் சொல்லியும், நமக்கொரு பாதுகாப்பு வேண்டாமா என எழுதியும் வருகிறேன், நமக்கொரு சங்கம் தேவை!சில சட்டதிட்டங்கள் தேவை! நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ளவும், நம்மைக் கட்டுப்படுத்த முனையும் அதிகார வர்கத்தின் அடக்குமுறையை எதிர்க்க, நாம் அனைவரும் ஒன்று பட்ட அமைப்பை உடனே உருவாக்கி பதிவு செய்ய வேண்டும்

  உங்களைப் போன்ற இளைஞர்கள் திரண்டு பதிவர் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தியதுபோல, இப்பணியையும் சூழ்நிலையின் அவசியம் கருதி ஆவன செய்ய நான் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறேன்.

  வயதின் காரணமாக என்னால் முன்னின்று செய்ய இயலாது என்றாலும் பின்னின்று வேண்டிய உதவிகளைச் செய்யக் காத்திருக்கிறேன நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் உங்களின் கருத்து ஏற்கக்கூடியதே... இதையும் இன்று எழுதலாம்னுதான் இருந்தேன். ஆனால், நேரமின்மை காரணமாக எழுதவில்லை.

   Delete
 16. எதுக்கும் கொஞ்சம் சாக்கிரதையா இருந்துக்குங்க!:)

  ReplyDelete
 17. நீங்க சொல்வது முற்றிலும் உண்மையாக உள்ளது அண்ணே ,...
  வாய் திறந்தால் போச்சு உடனே ஜெயில் தான் போல ..

  ReplyDelete
 18. ஒரு நாளைக்கு எத்தனை பேரை உள்ள தள்ள முடியும்

  ReplyDelete
 19. நாட்டு நடப்பை கதை சொல்லிவிட்டது.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.