என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, October 31, 2012

29 ஜெயலலிதாவிற்கு கேப்டன் வைத்த அட்டகாசமான செக்....
தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது என்பார்களே அப்படித்தான் ஆகிவிட்டது விஜயகாந்தின் நிலைமையும். தன்னால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டவர்கள், தன்னால் எம்.எல்.ஏ. ஆக்கப்பட்டவர்கள் இப்போது அதுவும் இவ்வளவு சீக்கிரத்தில்  தனக்கெதிராக பேசுவார்கள், திரும்புவார்கள்  என்று ஒரு போதும் எதிர்பார்த்திருக்க மாட்டார் அவர்.
அரசியலில் இதெல்லாம் அவருக்கு புதுசு. அரசியல் என்பது சினிமா அல்ல. அது மூன்று பக்கம் நம்பிக்கை துரோகங்களாலும், ஒரு பக்கம் ஏமாற்றத்தாலும் சூழப்பட்ட மிகப்பெரிய நிலப்பரப்பு என்பது இப்போது புரிந்திருக்கும்.


நல்ல நண்பர்களைக்கூட  பிரித்துவிடும் வல்லமை கொண்டது இந்த அரசியல். அறிஞர் அண்ணா - ஈவிகே சம்பத்,  எம்.ஜி.ஆர்.- கலைஞர் என்று நல்ல நண்பர்களை பிரித்து அரசியல் ஆடிய சித்து விளையாட்டுக்கள் ஏராளம், ஏராளம்.இப்போதுதான் அந்த விளையாட்டுக்குள் வந்திருக்கிறார் கேப்டன்.


ஜெயலலிதா இந்த விளையாட்டை கேப்டனிடம் துவங்கிவைத்திருக்கிறார். இதை நானே முடித்துவைப்பேன் என்று விஜயகாந்தும் சொல்லியிருக்கிறார். சொன்னதோடு மட்டுமல்லாமல் அதை செயல்படுத்தவும் ஆரம்பித்திருக்கிறார்.ஆம்..தானும் தன் கட்சி எம்.எல்.ஏ.க்களில் சிலரும் ஜெயலலிதாவை சந்திக்க வேண்டுமென கேட்டு  சபாநாயகரிடம் மனு போட்டிருக்கிறார். இவ்வளவு நாட்களுக்கு பின் இவர் எதற்காக ஜெயலலிதாவை சந்திக்க மனு போடவேண்டும்?.  இதில்தான் விஜயகாந்தின் ராஜதந்திரம் அடங்கியுள்ளது. அது என்னவென்று பார்ப்பதற்கு முன் நேற்று நடந்த சில காமெடிகளை பார்த்துவிடுவோம்.


நேற்று பேசிய விஜயகாந்தின் முன்னாள் சகாவான மதுரை மத்தி எம்.எம்.ஏ.,சுந்தர்ராஜன் நாங்கள் ஜெயலலிதாவை சந்தித்தது நாடகம் என்று சொன்ன விஜயகாந்த் இப்போது அவரும் ஜெயலலிதாவை சந்திக்க மனு போட்டிருக்கார். நாங்கள் செய்தது நாடகம் என்றால் விஜயகாந்த் செய்வது கபட நாடகமா? என்று கேட்டுள்ளார். 

கேப்டன் ஜெயலலிதாவை சந்திப்பதற்கும் இவர்கள் சந்திப்பதற்கும் வித்தியாசம் இல்லையா? அவர் ஒரு கட்சித்தலைவராக சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறார். ஆனால், இவர்களோ கட்சித்தலைமை அனுமதியில்லாமல் சந்தித்திருக்கிறார்கள். உரிமைக்காக சந்திப்பதற்கும் சலுகைக்காக சந்திப்பதற்கும் வித்தியாசம் இருக்கே. விஜயகாந்த் சந்திப்பதாக சொன்னது உரிமைக்காக. நீங்கள் சந்தித்தது சலுகைக்காக.

இவரின் இன்னொரு சகா மைக்கேல் ராயப்பன் இவரை விட ஒரு படி மேலே போய் அண்ணா.தி.மு.க. தயவில் ஜெயித்த அனைத்து தே.மு.தி.க.எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ராஜினாமா செய்யத்தயாரா? என்று கேட்டிருக்கிறார். 
ஒரு கூட்டணி என்றால் அந்தக்கட்சியின் வாக்குகள் இந்தக்கட்சிக்கும், இந்தக்கட்சியின் வாக்குகள் அந்தக்கட்சிக்கும் பரஸ்பரம் கிடைக்கவே செய்யும். விஜயகாந்தின் தயவால் ஒரு சில இடங்களை அண்ணா.தி.மு.க,வும் பெற்றிருக்க கூடும். அதற்காக அவர்களும் ராஜினாமா செய்துவிட முடியுமா?,

திடீரென இவர்கள் மீது மீடியா வெளிச்சம் பட்டதும் என்ன பேசுவது என்று தெரிமாலேயே பேசுகிறார்கள். 

ஜெயலலிதாவை சந்திக்க விஜயகாந்த் மனு போட்டதில் பெரிய ராஜதந்திரம் அடங்கியிருப்பதாக சொன்னேன் அல்லவா. அது என்னவென்றால்... விஜயகாந்தை சந்திக்க ஜெயலலிதா ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் ஒரு பிரச்சினையும் இல்லை.ஆனால் அப்படி ஜெயலலிதா விஜயகாந்தை சந்திக்க மாட்டார் என்றே தெரிகிறது. அது தெரிந்தேதான் விஜயகாந்தும் மனு போட்டிருப்பதாக நினைக்கிறேன். அதாவது விஜயகாந்தை ஜெ சந்திக்க மறுத்துவிட்டால் ”இப்போது புரிகிறதா ஜெயலலிதாவின் சூழ்ச்சி. எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களில் சிலர் தொகுதி நலனுக்காகவெல்லாம் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை.தன் நலனுக்காதத்தான் சந்தித்திருக்கிறார்கள். தொகுதி நலனுக்காகவே ஜெயலலிதா இவர்களை சந்தித்திருந்தால் நாங்களும் தொகுதி நலனுக்காகத்தானே சந்திக்க மனு போட்டிருக்கோம். அப்புறம் ஏன் எங்களை மட்டும் ஜெ சந்திக்க மறுக்கிறார். இப்போது புரிகிறதா எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை என்னிடமிருந்து பிரிக்க ஜெயலலிதா செய்த சதியை” என்று விஜயகாந்த் கண்கள் சிவக்க குற்றம் சாட்டுவார். அப்போது தெரியும் எது நாடகம். எது கபட நாடகம் என்று....
எப்படியோ விஜயகாந்த் இதன்மூலம் ஜெயலலிதாவிற்கு செக் வைத்ததாகவே தெரிகிறது. Post Comment

இதையும் படிக்கலாமே:


29 comments:

 1. இந்த வாரம் விஜயகாந்த் வாரம்.! நமக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான் போங்க......விஜயகாந்த் வைத்தது நல்ல செக்..

  ReplyDelete
 2. எல்லாம் அரசியல்.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 3. விஜயகாந்த் நடிச்ச எங்கள் ஆசான் , மரியாதை,கஜேந்திரா படங்கள்னா இப்பதான் அந்த நான்கு எம்.எல் ஏ களும் பார்த்திருப்பாங்க போல ....நீண்ட நாள் நட்பையே கலைத்த மாபெரும் காவியங்கள் அவை..!!!

  ReplyDelete
 4. என்ன செக்கோ??? 2 MLA போனது தான் மிச்சம்.... கேடு கெட்ட அரசியல்..

  ReplyDelete
  Replies
  1. போனது ரெண்டு பேரில்ல. நாலு பேரா. நீ இன்னும் எல்.பி.யாவே இருக்கே. அப்டேட் ஆகு.

   Delete
  2. பாவம் அவருக்கு (சிராஜ்) அமிநீஷியா வந்திருச்சு போல அவர தூக்கத்துலேன்னு எழுப்பாதீங்க :)

   Delete
 5. ரைட்டு தலைவரே...

  பார்ப்போம் இன்னும் என்ன நடக்குன்னு

  ReplyDelete
 6. பகிரங்கமாக் கால்ல விழ பண்ணுற பம்மாத்து வேலைய்யா....

  ReplyDelete
 7. //வெளங்காதவன்™31-Oct-2012 4:30:00 PM

  பகிரங்கமாக் கால்ல விழ பண்ணுற பம்மாத்து வேலைய்யா....////

  இப்புடி உணர்ச்சிவசப் பட்டுக் கமெண்டு போட்டதால், ஆதாரம், அவதூறு இப்புடி அஞ்சாறு வழக்குல உள்ள போட்டுடுவாய்ங்களோ???

  அவ்வ்வ்வ்....

  ReplyDelete
  Replies
  1. கண்ஃபார்மா சொல்ல முடியாது. நடந்தாலும் நடக்கலாம்.

   Delete
 8. நடக்கட்டும்....

  "என்கிட்டே கேட்டிருந்தா கூண்டோட சேர்ந்திருப்பேனே" அப்படியும் கேப்டன் சொல்ல வாய்ப்பு இருக்கு.

  ReplyDelete
 9. பொறுத்தது போதும் பொங்கி எழுனு யாரோ சொல்லிட்டாய்ங்க போல. இந்த மாதிரி கட்சி மாறுற எம் எல் ஏவ தான் வலை வீசி நேர்முக தேர்வுலாம் வச்சு டெஸ்ட் பண்ணி சேர்த்தாராமாம்? கேப்டனுக்கு சுத்து வாத்து பத்தாது, கொஞ்சம் டிரையிநின்க் வேணும்.

  ஒரு டேக்ல தப்பா பெர்பாமன்ஸ் பண்ணுனா அடுத்த டேக்ல சரி பண்ணலாம்னு நினைச்சிட்டார் போல. கேப்டன் அண்ணே, இது ரீல் இல்லை ரியல்லு :)

  ReplyDelete
 10. தொகுதி நலனுக்காக சிஎம்மை சந்தித்தோம் என்று சொல்வதெல்லாம் சும்மா கப்சா என்பது எல்லோருக்கும் தெரியும். இன்றைய அரசியல்வாதிகள் என்றுமே மக்கள் நலனை சிந்திப்பதில்லை. இருந்தாலும் விஜயகாந்தின் இந்த செக் வித்தியாசமானதுதான்.

  ReplyDelete
 11. மாற்று கட்சி வேண்டும் என்பதே என் கருத்து?

  ReplyDelete
  Replies
  1. மாற்றுக்கட்சியெல்லாம் வராது தம்பி எல்லாமே ஏமாற்றுக்கட்சிதான்.

   Delete
 12. ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து செக் வைக்கும் அண்ணன் கஸாலி வாழ்க.(ஆமா, ஏன் யாருமே இன்னும் உங்க மேல கம்ப்ளைண்ட் கொடுக்கலை? அவமானம்..அவமானம்!)

  ReplyDelete
  Replies
  1. யோவ்.. நீர் ஒரு ஆள் போதும்யா நம்மள கோர்த்து விட...

   Delete
  2. யோவ்.. நீர் ஒரு ஆள் போதும்யா நம்மள கோர்த்து விட...

   Delete
  3. அப்படி யாராவது என் மேல் கம்ப்ளைண்ட் கொடுத்தால்.... எனக்கு இப்படி எழுத பாய்ண்ட்ஸ் எடுத்து கொடுப்பதே செங்கோவிதான்னு சொல்லியே புடுவேன்ல....

   Delete
 13. அவருக்கே தெரியலன்னாலும் நீங்களா எடுத்து கொடுப்பிங்க போல...அவரு நிதானத்துல வரட்டும் ...அப்புறம் என்ன நடக்குதுன்னு பாப்போம்...கோவத்துல ஜெயாவை அடிச்சிட போறாரு..அடிக்கலனாலும் அடிச்சதா அந்தம்மா சொன்னாலும் ஆச்சரியமில்லை...செக்குகள் தொடரும்.....?

  ReplyDelete
 14. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

  ReplyDelete
 15. எப்பொழுது எதுவேண்டுமானாலும் நடக்கும்.. அதுதான் அரசியல்...

  சாதாரண நிலத்தகராறுக்கே ஒரு வயிற்றுப்பிள்ளைகளே அடி,தடி,வெட்டு,குத்து, கொலை என்று போகும்பொழுது...

  இதென்ன.. சாதாரண அரசியல்தானே..!

  இங்கே பாசத்திற்கும் இடமில்லை.. வேஷத்திற்கும் இடமில்லை.. சந்தர்ப்ப சூழ்நிலைகளே அரசியலை ஆட்சி செய்கின்றன.. தனிக்கட்சி என்று சொல்லி தம்பட்டம் அடித்த விஜயகாந்த்.. அ.தி.மு.க. வுடன் கூட்டு வைத்து அரசியல் செய்யவில்லையா என்ன?

  எல்லாமே நாட்டுக்கு நலம் செய்திடவா என்ன? சுயநல அரசியல்வாதிகளைத் தவிர வேறொருவரையும் இன்றைய இந்தியாவிலேயே காண முடியாது..


  நீங்களும் நானும் வேண்டுமானால் இப்படி மாற்றி பதிவெழுதி ஆறுதல்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்...!!

  ReplyDelete
 16. இப்படி செக் வைக்க்கும் ஐடியா எல்லாம் கேப்டனுக்கு தோணாதுங்க... இந்த ஐடியாவை தமிழக அரசியல் சாணக்கியர் என்று சொல்பவர் தளபதியிடம் சொல்லி அந்த தளபதி கேப்டனுக்கு சொல்லி கொடுத்து அதன் படிதான் கேபடன் செயல்படுத்தியுள்ளாருங்க......

  ReplyDelete
 17. கஸாலி,
  நீங்க செக் வைத்தார் என்கிறீர்கள்.
  ஆக்சுஅலா ஒரு செக் (cheque) கொடுத்தால் எல்லாம் கப்சிப் ஆகிடுவார்!

  ReplyDelete
 18. நானும் இதை தான் நினைத்தேன் .. அண்ணே .. ஆனால் மைக்கேல், சுந்தர் பேசிய பேச்சுக்கு உங்களின் கருத்து மிக சரியான வாய் அடைப்பு

  ReplyDelete
 19. அரசியல் எப்படி எல்லாம் யோசிக்க வைக்குது.

  ReplyDelete
 20. எனது இதயங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.