என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, October 10, 2012

19 என்னவோ சொல்லனும்னு தோணுச்சு.,மின்சாரம் என்ற பெயரை பேசாமல் மின்னல் என்று மாற்றிவிடலாம் போல. அந்த அளவுக்கு மின்சாரம் மின்னலைப்போல் வந்துவிட்டு போய்விடுகிறது.
காலை 6 மணியிலிருந்து 9 மணி வரை இருக்கும் மின்சாரம் அடுத்து 12 மணி வரை இருப்பதில்லை.அதன் பின் மதியம் 3 மணிக்கு போகும் மின்சாரம் அடுத்த 3 மணி நேரம் கழித்து 6 மணிக்குத்தான் வருது. அதன் பின் 7 டூ 8, 9 டூ 10, 11 டூ 12 என்று அதிகாலை 6 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு தடவை கரெக்டாக முறைவைத்து பிடுங்கி விடுகிறார்கள். நம்முடைய தூக்கத்தையும் கெடுப்பதற்காக, மின்சார வாரிய ஊழியர்களும் தூங்காமல் இருந்து பிடுங்குகிறார்கள்.

3 மணி நேர மின்தடை என்னும் சட்டிக்கு பயந்து இப்போது நேரடியாக அடுப்பிலேயே விழுந்துவிட்டார்களே தமிழக மக்கள் என்று ஆதங்கத்தில் பேசிக்கொண்டிருந்த போது பட்டென்று ஒரு ரத்தத்தின் ரத்தத்திற்கு கோபம் வந்து, ஏப்பா..நத்தம் விஸ்வநாதன் மின்சாரத்தை அவருடைய ட்ராயரிலா மறைத்து வைத்திருக்கார் என்று கேட்டுவிட்டார். 16 மணி நேரம் வராத மின்சாரத்தை நத்தம் அவர் ட்ராயரில் மறைத்து வைத்திருக்கவில்லை என்பது நியாயம் தான். அப்புறம் எதுக்கு கடந்த ஆட்சியில் 3 மணி நேரம் வராத மின்சாரத்தை ஆற்காட்டாரின் இதுக்குள்ள தேடினீங்க....

-------------


வதந்தியை விட வேகமாக பரவுகிறது டெங்கு. சமீபத்தில் டெங்கு வந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த என் மனைவியை பார்க்க சென்றிருந்த போது, அந்த மருத்துவமனையே டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்தவர்களின் சங்கமமாக இருந்தது.
இதில் இன்னொரு கொடுமை என்னன்னா... அவர்களை அனுமதிக்க வார்டும் இல்லை. பெட்டும் இல்லை. எல்லா வார்டிலும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே படுத்திருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் அங்கிருக்கும் நர்சுகளே வேறு மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள்... இல்லை இல்லை விரட்டுகிறார்கள்.
ஆனால், பேஷண்ட்  வந்தவண்ணமிருக்கிறார்கள்.

இதற்கு அரசும் பொதுமக்களும் தாண் காரணம். நாம் இருக்கும் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருந்தாலே கொசுவை ஒழித்து விடலாம். அரசாங்ககம் என்னதான் சட்டம் போட்டாலும் அதை நிறைவேற்ற வேண்டியது மக்கள்தான்.
அதேநேரம் அரசாங்கமும் தன் கடமையிலிருந்து நழுவக்கூடாது. ஆரம்பத்தில் டெங்கு என்று சொன்னபோதே அதன் தடுப்பு முறைகளை முடக்காமல் முடுக்கி விட்டிருக்கவேண்டும். இனி அப்படி செய்வதென்பது தும்பை விட்டு வாலை பிடிக்கும் வேலைதான்.இருந்தாலும் பரவாயில்லை இனிமேலாவது தியேட்டர், டி.வி,க்களில் டெங்கு விழிப்புணர்வு படங்களை போடச்சொல்லி கட்டாயப்படுத்தலாம் அரசு.

-----------

கேபிளின் கொத்துபரோட்டா, செங்கோவியின் நானா யோசிச்சேன், சிவக்குமாரின் ஸ்பெஷல் மீல்ஸ் போல நானும் ஏதாவது ஒரு தலைப்பில் எல்லாவற்றையும் கலந்து கட்டி எழுதுவோம் என்று நினைத்து வானவில் பக்கம், அரசியல் பக்கம், பொடிமாஸ் என்று புதுப்புது தலைப்பில் எழுதிப்பார்த்தேன்.

ஆனால், எந்தத்தலைப்புமே கேட்சிங்காக இல்லை என்ற குறையிருந்தது. அந்த டைட்டில் குறையை போக்க இப்போது கிடைத்திருக்கும் தலைப்புதான் என்னவோ சொல்லனும்னு தோணுச்சு. இனி இந்த தலைப்பில் இடையிடையே ஏதாச்சும் வரும் என்று சொல்லிக்கொள்கிறேன். ---


Post Comment

இதையும் படிக்கலாமே:


19 comments:

 1. "என்னவோ சொல்லனும்னு தோணுச்சு.."
  தலைப்பு நல்லா இருக்கு கசாலி தொடர்ந்தும் இந்த தலைப்பில் எழுதுங்கோ.

  ReplyDelete
 2. அருமையான பதிவு.
  நன்றி.

  ReplyDelete
 3. "என்னவோ சொல்லனும்னு தோணுச்சு.." தலைப்பு நல்லாயிருக்கு.. மின்சாரம் மேட்டர்ல கொஞ்சம் கோபம் தூக்கலா இருக்குன்னு வார்த்தைகள் சொல்லுது.. தொடர்ந்து சொல்லுங்க..கேட்கிறேன்..

  ReplyDelete
 4. தலைப்பும் அதற்கேற்றார்போல
  சொல்லிப்போன விஷயங்களும்
  சொல்லவேண்டிய விஷயங்களாகத்தான்
  இருக்கின்றன.தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. ஆற்காட்டாரை கிழி கிழிவென கிழித்த பத்திரிக்கைகளும் இப்போது மௌனம் காப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.....

  ReplyDelete
 6. ஓ...தலைப்புலாம் மாத்தலாமா???

  நானும் ஊர்வம்பு, சொல்ல விரும்பினேன்னு தலைப்புல எழுதி பார்த்தேன்... நமக்கு செட் ஆகாது போலன்னு டச் பண்ணாமலெயே விட்டுட்டேன்... ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு தலைப்புல எழுதுனா ஒத்துப்பாங்களா :-)))))

  ------

  டெங்கு காய்ச்சல்... கேக்கவே பயமா இருக்கு... மச்சி இப்ப நலம் தானே?

  ________

  கரன்ட்......... வேணாம்.... நான் ஒன்னும் சொல்லல... செம கடுப்பாகுது! காலை 6 மணில இருந்து சாயங்காலம் ஆறூ மணி வரைக்கும் மொத்தமே 3 மணி நேரம் தான் கரன்ட் இருக்கு... சாயங்காலம் ஆறு முதல் விடியகாலை ஆறு மணி வரை ஒரு மணீ நேரத்திற்கு ஒருமுறைன்னு உயிர வாங்குறாங்க! இன்வெட்டர் யூஸ் பயமா இருக்கு... ட்ரை ஆச்சுன்னா சர்வீஸ் பண்ணிட்டு வர நாள் எடுக்கும்.. :(

  ReplyDelete
 7. //என்னவோ சொல்லனும்னு தோணுச்சு///

  எல்லாம் தலையெழுத்து'ன்னு வச்சுக்கய்யா...

  கேட்சிங்கா இருக்கும்...

  :-)

  ReplyDelete
 8. ம்ம்ம் ..நல்லா இருக்கு சகோ

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. அன்னைக்கு கூப்பாடு போட்ட பத்திரிக்கைகளும் , கட்சிகளும் இன்னைக்கு எந்த மரத்தில் தூக்கில் தொங்கி கிடக்கின்றன.. இன்று வாயே திறக்கவில்லை ... நல்ல தலைப்பு அண்ணே .. இனி அடிக்கடி பதிவிடுங்க

  ReplyDelete
 11. தலைப்பு கொஞ்சம் நீளமா இருக்கு. பொடிமாஸ் பெட்டர் ன்னு நினைக்கிறேன்.

  ReplyDelete
 12. என்னவோ சொல்லனும்னு தோணுச்சு.,.....  மறந்துட்டனே...

  ReplyDelete
 13. இளம்பெண் வலைப்பதிவர் சுடப்பட்டமைக்கு இஸ்லாம் காரணமா?

  http://arulgreen.blogspot.com/2012/10/malala-yousafzai-islam.html

  ReplyDelete
 14. என்னவோ சொல்லனும்னு தோணுது

  ReplyDelete
 15. புது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் கஸாலி.

  ReplyDelete
 16. என்னன்னெவோ சொல்லிங்கனு வந்தேன் அப்படியே சொன்னீங்க.

  ReplyDelete
 17. எழுதுங்க ,எழுதுங்க நாங்களும் என்னமோ படிக்கனும்னு தோனிச்சு என படித்துக்கொள்கிறோம்.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete
 18. ஆற்காடாரின் நிர்வாகத்தில் நமக்கு மின் தடை புதியது.ஆதலால் ஆத்திரம் வந்தது. இப்போது உண்மை நிலை புரிகிறது.நமக்கு பழகிவிட்டதுஅதுதான் காரணம்.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.