என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, October 12, 2012

13 அடுத்த தலைவர் யார்?- கலைஞர்
தி.மு.க-தலைவர் கலைஞர் தனது  முரசொலி நாளிதழில் எழுதாத டுபாக்கூர் கவிதை

 நான்தான் அடுத்த
தலைவரென்றான்
இளைய மகன்
இல்லை...இல்லை....
நீங்கள் இருக்கும் வரை
வேறுயாரும்
தலைவரில்லை என்றான்
மூத்தமகன்.
இந்த விளையாட்டில்
என் மகளையும்
சேர்த்துக்கொள்ளுங்கள் என்றார்
என் துணைவி...
மூத்தவனா...இளையவனா
என்று குழம்பி நின்றார்
என் மனைவி....
தியாகத்தில்
இளையவர்தானே
பெரியவர் என்றார்கள்
தொண்டர்கள்.
இளையவர்தான்
தலைவரென்றால்
கட்சி பிளவுபடும் என்று எச்சரித்தது.
தெற்கு.
கழகமே குடும்பமென்றார்
அண்ணா
அதை  சற்றுமாற்றி
குடும்பமே கழகமென்றேன்
நான்.
இப்போது என் குடும்பத்தினர்
கலகம் பார்த்து
வாயிருந்தும் ஊமையாய்....
வார்த்தையிருந்தும் மவுனமாய்...
இருந்தாலும் ஒரேயொரு
ஆறுதல் எனக்கு......
நல்லவேளையாக
மிச்சமிருக்கும்
இரண்டு மகன்களும்
 ஒரு மகளும் 
போட்டிக்கு வரவில்லை....  

எப்படி நம்ம கவிதை.....சொல்லிட்டுப்போங்கள்....ஹி...ஹி

இது ஒரு மீள்பதிவுPost Comment

இதையும் படிக்கலாமே:


13 comments:

 1. அடுத்த சி.எம். கனி அக்காதேன்...
  :-)

  ReplyDelete
 2. யோவ்... பழச போட்டுத் தொலையாதீரும் வோய்...
  எங்கனியோ படிச்சா மேரி நெனப்பு வந்துடுது!

  ReplyDelete
 3. ரைட்டு...

  போட்டுத்தாக்குங்க...

  ReplyDelete
 4. அடுத்த முதலமைச்சர் ..எங்க தலைவர் பவர் ஸ்டார் தான்

  ReplyDelete
 5. சூப்பர்....இதை முரசொலிக்கு கூட அனுப்பலாமே!

  ReplyDelete
 6. கவிதை! கவிதை!
  ஓ இதற்கு பெயர்தான் கவிதையா

  ReplyDelete
 7. // நல்லவேளையாக
  மிச்சமிருக்கும்
  இரண்டு மகன்களும்
  ஒரு மகளும்
  போட்டிக்கு வரவில்லை....
  //

  விரைவில் வந்தாலும் ஆச்சரியம் இல்லை...ஹி..ஹி..ஹி

  ReplyDelete
 8. //கழகமே குடும்பமென்றார்
  அண்ணா
  அதை சற்றுமாற்றி
  குடும்பமே கழகமென்றேன்
  நான//

  - சூப்பர் கவிதை சார்!

  ReplyDelete
 9. நல்லா இருக்கு சகோ.....நமது எம் ஜி ஆர் க்கு அனுப்புங்க சந்தோசமா பிரசுரிப்பாங்க....

  ReplyDelete
 10. “கலக”க்கவிதை அருமை!. :)))

  ReplyDelete
 11. உண்மையைத்தானே கவிதையாக எழுதி உள்ளீர்கள்.தலைவர் மனதில் கண்டிப்பாக இதுதான் ஓடிக்கொண்டிருக்கும்.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete
 12. அடுத்து திமுக ஆட்சி பிடிச்சா....திராவிடத்தின் திருவுருவம்....திராவிடத் தென்றல்... முற்போக்கு போர்க்குணத்தில் முன்னணியில் இருப்பவர்... தானைத்தலைவி... தங்கத்தரகை கலைஞரின் அரசியல் வாரிசு... குஸ்பு தான் முதல் அமைச்சர்....
  குடும்ப வாரிசுகள் அவர்களுக்குள் இருக்கும் போட்டியால் ஒருவரை ஒருவர் கிழே இழுத்துப் போட்டுகொண்டு..................

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.