என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, August 08, 2012

21 சிலைகளும், சில கொலைகளும்
நேற்று மதுரை பெருங்குடியில் அம்பேத்கர் சிலையும், இம்மானுவேல் பாண்டியன் சிலையும் உடைக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக கலவரங்கள் மூண்டுள்ளது. இந்த நேரத்தில் நான் ஏற்கனவே எழுதிய சிலை பற்றிய பதிவை மீண்டும் மீள்பதிவு செய்கிறேன். அதன் லிங்க் இதோ

எங்கெங்கு காணினும் சிலைகளடா என்று சொல்லுமளவிற்கு அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது சிலைகள்.
இன்றைய இந்தியாவில் கோவில், பள்ளிக்கூடம், டாஸ்மாக் இல்லாத ஊர்கள் கூட உண்டு.
ஆனால், சிலைகள் இல்லாத இடங்களே இல்லை.
அந்தகாலத்து மன்னர்களில் ஆரம்பித்து சுதந்திர போராட்ட வீரர்கள், தேசத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், ஜாதிக்கட்சி தலைவர்கள், மற்றும் சினிமா நடிகர்களுக்கு கூட சிலைகள் உண்டு.
நெஞ்சில் நிறுத்தவேண்டிய தலைவர்களை சிலைகளாக்கி நடுவீதியில் நிறுத்தி காக்கா
, குருவிகளுக்கு கக்கூசாக்கி இருக்கிறார்கள்.
இவர்களின் பிறந்தநாளுக்கு,இறந்தநாளுக்கு, இன்னபிற விசேஷ நாட்களில் ஒரு மாலை போடுவதுடன் சரி.அதன் பிறகு அந்த சிலைகளை கண்டுகொள்வதே இல்லை.
வேறு எதற்கு இந்த சிலைகளை இங்கு பயன் படுத்துகிறார்கள் என்று பார்த்தோமேயானால்....
ஒரு கட்சியினர்மீது இன்னொரு கட்சியினர் காழ்ப்புணர்ச்சியை காட்டுவதற்கும், ஒரு ஜாதியினர் இன்னொரு ஜாதியினர் மீது காட்டும் துவேஷங்களுக்காகவும் இன்று சிலைகள் பயன்படுத்தப்படுகிறது. இன்று தென் மாவட்டங்களில் நடக்கும் ஜாதிசண்டைகளுக்கு இந்த சிலைகள் பெரும் பங்களிப்பு ஆற்றுகிறது என்பது மறைக்க முடியாத, மறுக்க முடியாத உண்மை. இந்த ஜாதித்தலைவரின் சிலைக்கு செருப்புமாலை போட்டிருக்கிறார்கள், அந்தகட்சித்தலைவரின் சிலையை சேதப்படுத்தி இருக்கிறார்கள் என்று சொல்லாமல் பொழுது விடிவதேயில்லை. இதனால், பரஸ்பரம் ஒருவரையொருவர் வெட்டிக்கொண்டு சாவதும்,வீடு,கடை, பொது சொத்துக்களை நாசப்படுத்துவதும் நடக்கிறது.
ஏறக்குறைய பெருவாரியான நாடுகளில் சிலைகள் உண்டு. அங்கெல்லாம் ஒரு அடையாளமாகத்தான் சிலைகளை பயன்படுத்துகிறார்கள். இப்படியல்ல....
நான் சொல்வதெல்லாம்.....
இப்படி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இந்த சிலைகள் தேவையா?
ஆம்..தேவைதான் என்றால் இந்த சிலைகளுக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அப்போதுதான் நாடு அமைதியாக இருக்கும்.
அதற்கு என்ன செய்யவேண்டும்?....
சிலைகளுக்கு இரு காவல்காரர்களை நியமித்தால் காவல்காரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு அடுத்த நாட்டிடம் காவல்காரர்களை கடன் வாங்க வேண்டியிருக்கும்.
அந்தந்த ஊரிலிருக்கும் எல்லா சிலைகளையும் ஒரே இடத்தில் வைத்து, சுற்றிலும் சுவர் எழுப்பி அங்கு இரு போலீஸ்காரர்களை காவலுக்கு நியமிக்கலாம்.
அல்லது அனைத்து சிலைகளையும் கன்னியாகுமரியில் இருக்கும் திருவள்ளுவர் சிலை போல உயரமாக யார் கைக்கும் எட்டாதபடி வைக்கலாம்.
அல்லது, சிலைகளை கண்காணிக்க அந்த சிலைகளுக்கு எதிரில் ஒரு வீடியோ கேமரா வைத்துவிடலாம்.
இப்படி செய்வதன் மூலம் சிலைகளை சேதப்படுத்த முடியாமல் காக்கலாம். மனித உயிர்களையும், பொது சொத்துக்களையும் காக்கலாம்.
நான் சொல்வது அபத்தமாக இருந்தாலும்கூட நாடு அமைதியாக இருக்கவேண்டுமே...வேறு என்ன செய்வது?Post Comment

இதையும் படிக்கலாமே:


21 comments:

 1. அந்தந்த ஊரிலிருக்கும் எல்லா சிலைகளையும் ஒரே இடத்தில் வைத்து, சுற்றிலும் சுவர் எழுப்பி அங்கு இரு போலீஸ்காரர்களை காவலுக்கு நியமிக்கலாம்.
  அருமையான பதிவு. வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. சுடச்சுட வருகைக்கு நன்றி அய்யா

   Delete
 2. நிச்சயசயாக அபத்தமாக இல்லை
  நல்ல் யோசனை
  ப்கிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

   Delete
 3. நல்லதொரு யோசனை! வாழ்த்துக்கள்!
  இன்று என் தளத்தில்!
  சென்ரியுவாய் திருக்குறள்
  எம்புள்ளைய படிக்கவைங்க!
  உடைகிறது தே.மு.தி.க
  http://thalirssb.blogspot.in

  ReplyDelete
 4. போக்குவரத்து கழகங்களை திடிரென்று அரசு போக்குவரத்து கழகம் என்று தடாலடியாக மாற்றி அமைத்தது போல, எல்லா சிலைகளையும் அப்புறப்படுத்த அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஸலாம் சகோ.ஜபருல்லாஹ்...
   100% உங்கள் கருத்தை, கண்ணை காதை மூடிக்கொண்டு அறிவு மட்டும் திறந்த நிலையில் நான் கண்ணாபிண்ணா வென்று வழிமொழிகிறேன்..!

   பேருந்து பெயர் மட்டுமல்ல சகோ.ஜபருல்லாஹ்... அப்போது, மாவட்ட பெயரையும் தூக்கினார் கலைஞர்..! அதில் பெரியாரும் அண்ணாவும் கூட அவுட்..! அது மிகவும் சிறந்த நெஞ்சுரமிக்க நற்செயல்..! கருணாநிதியின் பெயரை கடைசி வரை சொல்லும்..!

   கருணாநிதியை பிடிக்காத ஜெ. இந்த பெயரை உடைக்க விரும்பினால்... இதில் அவரை ஓவர்டேக் செய்ய நினைத்தால்... அவர் தமிழ்நாடு பூராவும் எல்லா தலைவர்கள் சிலையையும் உடைக்க ஆணையிடட்டும்..! அதில் தன்னுடைய சிலை, எம்ஜியார் சிலை போவது பெரிதல்ல... 'மொத்த கலைஞர் சிலையும் காலி' என்பதை நினைத்தாவது(!? அவ்வ்வ்வ்வ்) இந்த செயலை செய்யட்டும்..!

   Delete
  2. அருமையான யோசனை ஜபருல்லாஹ் அண்ணே

   Delete
  3. சகோ.ஆஷிக்கின் யோசனையும் அருமையா இருக்கு

   Delete
 5. மனித மனங்கள் மாறுவது தான் இதற்கு ஒரே தீர்வு கஸாலி.. தலைவர்களை பிடிக்குதோ பிடிக்கலையோ... அதை சேதப்படுத்துவதால் எந்த நன்மையும் இல்லை என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்வதே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு....

  ReplyDelete
  Replies
  1. மனித மனங்கள் மாறுவதுதான் தீர்வு உண்மை....உண்மை

   Delete
 6. ஸலாம் சகோ.கஸாலி,

  நல்ல அவசியமான பதிவு. அவ்வப்போது இதை மீள் பதிவு போடுங்கள்..! தப்பில்லை..! ஆனால்... ஒரு திருத்தத்தோடு...! வேண்டுகோள் :-)

  ///இப்படி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இந்த சிலைகள் தேவையா?///---இந்த கேள்விக்கு "ஆம்" சாராருக்கான ஐடியாஸ் மட்டுமே இருக்கு..!

  அடுத்த சிலை உடைப்பு கலவரம் வரும்(வராமல் போகுமா என்ன?)போது, "தேவை இல்லை" என்ற சாராருக்காகவும் ஐடியாஸ் எழுதி மீள்பதிவு போடுங்கள்..!

  ReplyDelete
  Replies
  1. இந்த சிலைகள் தேவையா என்ற கேள்விதான் எனக்கும்.... ஆம் என்றுசொல்பவர்களுக்கே அடுத்த ஐடியாஸ் எல்லாம். இதை எந்தக்காலத்திலும் மீள்பதிவா போடலாம் போல...அவ்வளவு பிரச்சினைகள் இந்த சிலைகளால் நடக்கிறது அவ்வப்போது

   Delete
 7. Replies
  1. என்ன வணக்கம் மட்டும் வச்சிட்டு கிளம்பிடுறீங்க

   Delete
 8. வச்சாலும் பிரச்சனை.. எடுத்தாலும் பிரச்சனை.. எதுமில்லேன்னா உடச்சுவிட்டு பிரச்னை பண்றாங்க.. ஸ்ஸப்ப..

  ReplyDelete
 9. //சிலைகளை கண்காணிக்க அந்த சிலைகளுக்கு எதிரில் ஒரு வீடியோ கேமரா வைத்துவிடலாம்//
  (தலைவர்களின்)சிலையை திருடி விற்க முடியாது.ஆனால் கேமராவை?.சிலை உடைத்து தீரச் செயல் புரிந்தமைக்காக பரிசு பொருளாய் கொண்டு போய் விடுவர்.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.