என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, August 17, 2012

19 கலைஞர் ஓய்வதில்லை ...............
கலைஞர் ஓய்வதில்லை. 

முகப்புத்தகம், ட்வீட்டர் கணக்குகளை தொடர்ந்து இப்போது புதிய இணையத்தளத்தினையும் திறந்துள்ளார் கலைஞர். 
ஆரம்பத்தில் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்தார். பிறகு வானொலி, அதைத்தொடர்ந்து தொலைக்காட்சி, அதன் பிறகு சொந்தமாக தொலைக்காட்சி. கடந்த நாட்களில் முகப்புத்தகம், ட்வீட்டர். இப்போது இணைய தளம். இதைத்தான் திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சி என்பதோ..... எப்படியோ இதிலாவது திராவிட இயக்கம் வளர்கிறதே என்று ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதான். 

அவரின் இணையத்தள முகவரி: 


=====================

விடாது ஈமு....தங்க முட்டையிடும் பொன் வாத்துக்களை போல் விளம்பரம் செய்யப்பட்ட ஈமுக்கோழிகள் நிலையும், அதை வாங்கிய மக்களின் நிலையும் பரிதாபமாக இருக்கிறது. கடந்த பத்து, பதினைந்து  வருடங்களுக்கு முன்பு சிட் ஃபண்ட்ஸ் எனப்படும் சீட்டுக்கம்பேனிகள் சீட்டிங் கம்பேனிகளாக மாறியது. இப்போது ஈமுக்கோழி நிறுவனங்கள். ஒரு கோழியை 16 மாதம் வளர்த்தால் 2500 ரூபாய் லாபம் கிடைக்குமாம். ஆனால், இதை மறைத்து ஏமாந்தவனின் தலையில் கட்டிய நிறுவனங்கள் இப்போது கம்பி நீட்டி விட்டது. பேராசை பிடித்த மக்கள் இப்போது குய்யோ முறையோ என்று கதறிக்கொண்டிருக்கிறார்கள். 
இதை புரமோட் செய்யும் விளம்பரங்களில் நடித்தது மக்கள் காசில் மஞ்சள் குளிக்கும் நடிகர்கள். அவர்களுக்கு காசு கிடைத்தால் போதும், எதில் வேண்டுமானாலும் நடிப்பார்கள் போல...கொஞ்சமாவது பொறுப்புணர்ச்சி வேண்டாம் இவர்களுக்கு? அவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் மக்களுக்கு நல்லதை கொடுக்கவேண்டாம். குறைந்த பட்சம் கெட்டதையாவது சிபாரிசு பண்ணாமல் இருக்கலாமே? ஆனால், ஈமுவை வளர்த்தால் லாபம் கிடைக்கும் என்று சொல்லி நடித்தவர்கள் வீட்டில் ஒரு ஈமுக்கோழிகூட இருக்காது... அட... கோழி இல்லேங்க கோழி இறகை கூட பார்க்கமுடியாது. என்ன செய்வது இவர்களைப்போல் நடிகர்களை வழிகாட்டியாக வைத்திருந்தால் இப்படித்தான் நட்டப்பட வேண்டியிருக்கும். 
ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.  

========================Post Comment

இதையும் படிக்கலாமே:


19 comments:

 1. முன்பு தேக்கு மரவளர்ப்பு திட்டம் என்று ஒரு கூட்டம் கொள்ளையடித்தது இப்போம் ஈமு கோழியா???

  ReplyDelete
 2. //ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.// நிச்சயமான உண்மை.. ஆனால் ஒரு சந்தேகம்... இந்தா வரிகள் ஈமு சம்மந்தப்பட்ட பதிவிற்கா இல்லை கலைஞர் சம்மந்தப்பட்ட பதிவிற்கா # டவுட்டு

  ReplyDelete
 3. நீங்களும் (உங்கள் அரசியல் பார்வையும் )

  ReplyDelete

 4. தங்கள் கூற்று முற்றிலும் உண்மையே!ஏமாறுபவன் உள்ளவரை இது நடந்து கொண்டுதான் இருக்கும்.

  ReplyDelete
 5. சூப்பர் நல்ல இருக்கு பதிவு

  ReplyDelete
 6. தேக்கு மரம். ஈமு கோழிகள்... இப்படி மக்கள் ஏமாறும் விஷயங்கள் தொடர்ந்து கொண்டு தான் உள்ளன. என்ன செய்ய... ஆசை அதிகம் இருந்தால் இதைத் தவிர்க்க முடியாதுதான். மனம் கவர்ந்த பதிவு.

  ReplyDelete
 7. அடுத்ததா எதுல ஏமாத்தப்/ஏமாறப் போறாங்களோ தெரியலையே மக்கா....

  ReplyDelete
 8. ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்...

  எல்லாம் பேராசை தான்... (TM 10)

  ReplyDelete
 9. ஒரு வழியா தலைவரின் பேஸ் புக் அக்கவுன்ட் க்ளோஸ் பண்ணியாச்சு போல சார் ...
  நம்ம ஆளுங்க செம சுறுசுறுப்பு தான் ..

  இந்த ஈமு அழிச்சாட்டியம் தாங்க முடியாம இருந்துச்சி .. ஒன்னரை வருஷம் வளர்த்தா வெறும் ரெண்டாயிரத்து ஐநூறு தானா ?
  அதிக ஆசைபட்டா இப்படிதான் போல /./

  ReplyDelete
 10. சரியா சொன்னீங்க .
  பகிர்வுக்கு நன்றி .

  ReplyDelete
 11. கலைஞர் ஓய்வதில்லை......அவர் ஓயவே வேண்டாம்

  ReplyDelete
 12. அவர்கள் ஒரு ஏமாற்றுத் திட்டம் கண்டுபிடித்து
  வருவதற்குள் நாமும் கொஞ்சம்
  காசு பணம் சேர்த்துஏமாறுவதற்கு
  தயாராகிவிடுகிறோமே
  நல்ல விழிப்புணர்வுப்பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. ஏமாற்றுபவர்களையும் ஏமாறுபவர்களையும்தான் குறை சொல்ல வேண்டும். விளம்பரபடத்தில் நடிப்பவர்களை குறை சொல்லுவதில் அர்த்தம் இல்லை. என்னமோ இந்த நடிகர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் வந்து இந்த திட்டத்தில் வந்து சேருங்கள் என்று நேரிலா சொன்னார்கள். இந்த நடிகர்கள் என்ன மாமனா அல்லது மச்சான் களா அவர்கள் சொல்லுவதை அப்படியே நம்புவதற்கு. நம்முடைய முட்டாள் தனத்திற்கு இந்த விளம்பரபடத்தில் நடித்தவர்களை குறை கூறுவது தவறு.

  ReplyDelete
 14. கலைஞரை போலவே தான் இந்த ஏமாற்று கும்பல்களும்! ஓயமாட்டேன் என்று புதிது புதிதாக கிளம்புகிறார்கள்!

  இன்று என் தளத்தில்
  திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
  குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html
  ReplyDelete
 15. கலைஞர் ஓய்வதில்லை!///"அதை"யும் பாத்துடலாம்!

  ReplyDelete
 16. ஐயோ சாமி.இவங்க குசும்பு தாங்க முடியலயே!!!ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இவர்களும் இருப்பார்கள் சொந்தமே! இன்னும் சொல்லுவேன் சத்தமாய்! ..!!!!

  ReplyDelete
 17. தன்னுடைய வெப்சைட்டில் தன்னை தானே தமிழின தலைவர் என போட்டுக் கொள்ளும் தானை தலைவர் வாழ்க

  ReplyDelete
 18. நல்ல நக்கலான பதிவு
  நன்றி,
  ஜோசப்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.