என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, August 10, 2012

21 டெசோ- அவசரப்பட்ட மத்திய அரசும், தடை போட்ட மாநில அரசும்...
தி.மு.க.,விற்கு எப்போது பின்னடைவு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினையை கையிலெடுத்து போராடும். அந்த வகையில் இப்போது கையில் எடுத்திருக்கும் போராட்டம்தான் டெசோ மாநாடு. ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு என்று சொன்னாலும் இதை காலம் கடந்த ஞானோதயமாகவே பார்க்கிறார்கள் உலகத்தமிழர்கள். இத்தனை நாளாக வாய்மூடி மவுனமாக இருந்துவிட்டு வாழ்வையும், உரிமையையும் இழந்துவிட்டு ஏறக்குறைய எல்லாம் முடிந்த நிலையில் இருக்கும்போது, இந்த வாழ்வுரிமை மாநாடு எதற்கு என்ற கேள்வியும் இப்போது தொக்கி நிற்கிறது.

ஆரம்பத்திலிருந்தே கலைஞர் இந்த விஷயத்தில் மாற்றி மாற்றியே பேசி வருகிறார். ஆரம்பத்தில் இது மத்திய அரசுக்கு எதிரான மாநாடு இல்லை என்றார்.  பிறகு இந்த மாநாட்டில் தமீழீழம் கோரும் தீர்மானம் இல்லை என்றார். பிறகு, தமீழீழத்திற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது என்றார்.
 இப்போது இலங்கை அரசுக்கு எதிரானது அல்ல டெசோ மாநாடு என்று சொல்லியிருக்கிறார். இன்னும் ராஜபக்‌ஷேவிற்கு எதிரான மாநாடு அல்ல இது என்று சொல்லாததுதான் பாக்கி. அதுசரி, இலங்கை அரசுக்கு எதிரானது அல்ல என்று சொல்வதே ராஜபக்‌ஷேவிற்கு எதிரானது இல்லை என்று தானே அர்த்தம்.

இவர் இப்படி மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருக்கும் நிலையில், கலைஞருக்கு ஏன் சிரமம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு நினைத்ததோ என்னவோ, இப்போது ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதித்து விட்டது. இந்த விஷயத்தில் மத்திய அரசு கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டது என்றே நினைக்கிறேன்.
காரணம், இன்னும் ஒரு நாள் போனால் கலைஞரே ஈழம் என்ற வார்த்தையை நீக்கி வெறும் தமிழர் வாழ்வுரிமை மாநாடு என்று சொல்லிருப்பார்.அவர்தான் ஆரம்பத்திலிருந்தே மாற்றி மாற்றி பேசி வருகிறாரே?.........

இதற்கிடையில், மாநாட்டில் எவ்வளவு பேர் பங்கேற்பார்கள் எத்தனை வாகனம் வரும் என தகவல் தரப்படவில்லை என்ற காரணத்தை கூறி சென்னையில் மாநாட்டை நடத்த தமிழக அரசு தடை போட்டிருக்கிறது. அதே நேரம் தமிழகத்தில் வேறு எங்கும் நடத்த தடையில்லை என்றும் சொல்லியிருக்கிறது. ஆனால், மாநாடு திட்டமிட்டபடி நடக்கும் என்று தி.மு.க.,அறிவித்திருக்கிறது. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.....Post Comment

இதையும் படிக்கலாமே:


21 comments:

 1. Replies
  1. முதல் வருகைக்கு நன்றி

   Delete
 2. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று..... // எதிர்பார்ப்புகலுடன்.........

  ReplyDelete
  Replies
  1. உங்களைப்போலத்தான் நானும் எதிர்பார்க்கிறேன்

   Delete
 3. இவங்க விளையாடறதுக்கு ஈழத்தமிழர்கள் தான் கிடைத்தார்களா?

  இன்று என் தளத்தில் சிறுவாபுரி முருகா சிறப்பெல்லாம் தருவாய்!
  http://thalirssb.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. தங்களின் தொடர் வருகைக்கு நன்றி

   Delete
 4. மொத்தத்தில ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் இருக்க யாரும் உதவப் போறது இல்ல.. அவங்க தான் அவர்களுக்காக போரடிக்கொண்டு இருக்கிறார்கள்.. இங்கு இருப்பவர்கள் அவர்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்...இதை புரிந்து கொள்வது தான் ஈழத்தமிழர்களுக்கு நல்லது...

  ReplyDelete
  Replies
  1. நீ சொவது நூற்றுக்கு நூறு உண்மை.

   Delete
 5. உண்மையான முகத்திரையை இன்னும் கொஞ்சக் காலத்தில் சில பேர் பார்ப்பார்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்.... பார்க்கத்தான் போகிறேன்

   Delete
 6. பொறுத்திருந்து பார்போம்!

  ReplyDelete
 7. அங்கே ராஜபக்சே டில்லியோட சேர்ந்து தமிழரைக் கொத்திக் குதறிக் கொண்டிருக்கிறான்.

  இங்கே தமிழன்னு சொல்லிக் கொண்டு டில்லியை எதிர்த்துக் கேட்க நாதியில்லை !

  இதிலே குத்தாட்டம் வேறே !

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்.... மானாட மயிலாட

   Delete
 8. கலைஞரின் அரசியல் செயல்பாடுகளை அவர் அறிக்கை விடும் விதம்,நிருபர்களுக்கு தரும் பேட்டி,அரசியல் காய் நகர்த்தும் விதம் என்பதன் அடிப்படையில் கவனித்தால் அவர் குழம்புகிறார் என்பதில் சந்தேகமேயில்லை.இதற்கான காரணமாக அவரது தள்ளும் உட்கார்ந்த வயதான காரணமும் கூடவே.கலைஞர் கருணாநிதி வயதின் காரணமாக தடுமாறுகிறார் என்பதை பதிவு மட்டுமல்ல 2G காலகட்டத்தில் கனிமொழி நீரா ராடியுவுடன் போனில் பேசிய Senile என்ற சொல் உறுதிப்படுத்தும்.

  ஒரு நாட்டின் வெளியுறவுக்கொள்கையை ஆளும் அரசின் பலம் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றன.முந்தைய காலகட்டத்தில் ஆண்ட காங்கிரஸ் வலிமையாக இருந்ததால் வட,கிழக்கு இலங்கையில் தலையீடும்,கச்சத்தீவை தாரை வார்த்த நிகழ்வுகள் எல்லாம் தமிழ் மொழி சார்ந்த பிரச்சினையென நோக்காமால் மத்திய அரசே தீர்மானித்தது.

  ஆனால் மாநிலங்கள் சார்ந்த மத்திய அரசாட்சி முறையில் மாநிலங்களின் அழுத்தங்களையும் சார்ந்தே இயங்க வேண்டியுள்ளது என்பதனை தி.மு.க மத்திய அரசில் பெற்றுக்கொண்ட பதவிகளையும்,ஐ.நா மனித உரிமை அறிக்கையில் இலங்கைக்கு எதிரான வாக்கு என்பதில் தி.மு.கவின் அழுத்தமும் இருந்தது என்பதிலிருந்து மத்திய அரசு மாநில அரசுகளை சார்ந்தே இயங்குகிறது என்பதனை புரிந்து கொள்ள முடியும்.

  இலங்கையில் போரை நடத்துவதற்கு இந்தியாவின் இணக்கமும் இருந்தது என்பது பொதுவான இந்திய வெளியுறவுக்கொள்கையாக இருந்த போதும் மாநில அரசை சார்ந்து இயங்க வேண்டிய கட்டாய நிலையிலும் ப,சிதம்பரம்,பிரணாப்,மேனன் போன்றவர்களின் கலைஞர் கருணாநிதியோடு கலந்துரையாடல்களையும் மீறி தமிழக அரசின் போர் குறித்த நிலைப்பாடு மத்திய அரசின் நிலைப்பாடே மாநில அரசின் நிலைப்பாடும் என்பதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

  எனவே மழையில் ந்னைந்த தொடர் வரிசையை விட உலகத்தமிழர்களிடையே பிரபலமாகிப் போன மூன்று மணி நேர உண்ணாவிரத்ம் போன்றவை அரசியல் பாடங்களில் கற்றுக்கொண்ட மக்கள் ஏமாற்று வித்தையென்பதை முந்தைய பத்திரிகைகள் காலம் போல் அல்லாமல் இணைய தொடர்புகள் வெளிச்சத்துககு கொண்டு வந்து விட்டது கலைஞருக்கான சோக வரலாறு.

  தன் கட்சி சார்ந்த சுயநலத்துக்காகவே டெசோவை கையில் எடுக்கிறார் என்பது வெள்ளிடைமலையாக இருந்தாலும் கூட தமிழகம் சார்ந்த அழுத்தங்கள் இலங்கை அரசியலை தீர்மானிப்பதில் ஒன்றாக இருக்கிறது என்பதும் உண்மையென்ற விதத்தில் டெசோ இலங்கையின் தன்னிச்சையான அரசியல் செயல்பாடுகளைக் கட்டுப்ப்டுத்த முயலும் ஆனால் இயலாத எதிர் விமர்சனங்களடங்கிய சிறு புள்ளி மட்டுமே.

  இன்றைய செய்தியாக ஈழம் என்ற என்ற சொல்லை டெசோவில் சொல்லக்கூடாது என்று அறிந்ததும் மனதில் தோன்றியது மத்திய அரசு யார் ஈழம் என்ற சொல்லை சொல்லக்கூடாது என்று கட்டுப்படுத்த.தமிழர்கள் வாழ்ந்த வடக்கு,கிழக்கு நிலங்கள் பண்டைய காலம் தொட்டு தமிழ் இலக்கியமாக பதிவாகிப் போன சொல் என்று தோன்றியது.இதனை கலைஞரும் சிலப்பதிகாரத்தையும்,பூம்புகார் பற்றியும் குறிப்பிட்டு ஈழம் என்ற சொல் தமிழ் இலக்கியத்தின் பூர்வீக சொல் என்று குறிப்பிட்டுள்ளார்.

  இந்தி எதிர்ப்பு போராட்டம் தி.மு.கவின் குறிப்பாக கருணாநியின் எழுச்சியான காலகட்டமாகவும் ஈழப்போரின் முள்ளிவாய்க்கால் தி.மு.கவின் வீழ்ச்சிக்கான காலகட்டமாகவும் தமிழக வரலாறு பதிவு செய்து கொள்ளும்.

  ReplyDelete
  Replies
  1. இந்த நீண்ட நெடிய பின்னூட்டத்திற்கு பதில் போட்டாலே அது ஒரு பதிவாகிடும் என்பதால் வருகைக்கு நன்றி கூறி முடித்துக்கொள்கிறேன்

   Delete
 9. ஜெயலலிதா செய்யும் குளறுபடிகளே தி.மு.க மீண்டும் உயிர் பெறுவதற்கான சந்தர்ப்பத்தையும் தரும் என்பதை இவ்வளவு நாட்கள் உறங்கிக் கொண்டிருந்த மாதிரி இருந்து விட்டு இறுதி நேரத்தில் மத்திய அரசோடு சேர்ந்து கும்மியடிப்பது ஜெயலலிதாவும் பச்சோந்தி அரசியலே நடத்துகிறார் என்பதை சொல்லாமல் சொல்கிறது.

  எதிர்கால தமிழகத்திற்கு தேவை மாற்று அரசியல்.

  ReplyDelete
  Replies
  1. எல்லா ஏற்பாடுகளையும் செய்ய விட்டுவிட்டு கடைசியில் கிடிக்கிப்பிடி போட்டிருக்கிறார் ஜெ....இது பச்சோந்தி அரசியல்தான். ஆனால் அரசியலில் இதற்கு பேரு ராஜதந்திரம்.
   எதிர்கால தமிழனுக்கு தேவை மாற்று அரசியல் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அந்த மாற்று அரசியலை கொடுக்கப்போகும் தலைவர் யார் என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி

   Delete
  2. இருக்கவே இருக்காரு நம்ம நாக்கு துருத்தி

   Delete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.