என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, August 27, 2012

32 வெற்றி....வெற்றி...மாபெரும் வெற்றி
தமிழ் வலைப்பதிவுலகில் இல்லை...இல்லை இந்திய மொழிகளில் வேறு எந்த எந்த மொழி பதிவர்களும் இப்படி ஒரு நேர்த்தியுடன், ஒழுங்குடன், கட்டுக்கோப்புடன் ஒரு பதிவர் சந்திப்பு திருவிழாவை நடத்தியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஏறக்குறைய 200 பதிவர்களுக்கு மேல் (இதில் 20-க்கும் மேற்பட்ட பெண் பதிவர்கள்) இந்த திருவிழாவில் சங்கமித்திருந்தார்கள் என்றால் அது மிகையில்லை. இதுதவிர, மக்கள் தொலைக்காட்சி, புதிய தலைமுறை போன்ற சேனல்களும் விகடன் போன்ற பத்திரிகையும் நிகழ்ச்சியை கவரேஜ் செய்து பதிவர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தினார்கள்.

சிராஜ், சி.பி.,யுடன் நான்


புலவர் ராமானுஜம் அய்யா, பால கணேஷ் அய்யா, நண்பர் மதுமதி ஆகியோரின் எண்ணங்களில் விழுந்த சிறிய விதையே இந்தளவிற்கு விருட்சமாக மாறியிருந்தது.


மோகன்குமாரின் அறிமுக உரையுடன் துவங்கிய இந்த விழா பதிவர்களின் அறிமுகங்களை கடந்து என் நன்றியுரையுடன் முடிந்தது.

எதிர்குரல் ஆஷிக்குடன் 


மதியம் ஆயிரத்தில் ஒருவன் மணியின் கைவண்ணத்தில் உருவான அருமையான சைவ உணவு பரிமாறப்பட்டது. அதன் பின்னர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் முன்னிலையில் மூத்த பதிவர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது.

 மூத்த பதிவர்களுக்கு பொன்னாடையை இளம் வளரும் பதிவர்கள் அணிவித்தனர். அவர்களுக்கான நினைவு பரிசை பி.கே.பி வழங்கினார். பின்னர் தென்றால் சசிகலாவின் கவிதை புத்தகத்தை பி.கே.பி.,வெளியிட்டார்.

பி.கே.பி.,யுடன் நானும் மோகன் குமாரும்


அதன் பின், கவியரங்கம் நடைபெற்றது. பதிவுலக கவிஞர்கள் கவிதை பாடினர். இதில் மயிலிறகு மயிலனின் கவிதை அனைவரையும் கவர்ந்து அரங்கினுள் கைதட்டலை அள்ளியது.

சகோதரி ஆமினாவின் மகன் ஷாமுடன் நான் 


இறுதியில் பி.கே.பி.பேச வந்தார். சசிகலாவின் கவிதை நூலிலிருந்து சில கவிதைகளை மேற்கோள் காட்டி பேசிய அவர் பதிவர்களுக்கு சில அருமையான அறிவுரையையும், யோசனையையும் வழங்கினார். நண்பர் மதுமதி நன்றியுரையுடன் விழா இனிதே முடிந்தது.
மதியத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளை ஜெயக்குமாரும்(ஜெய்), பிந்தைய நிகழ்ச்சிகளை சுரேகாவும் தொகுத்து வழங்கினர். இதில் சுரேகா அருமையாக தொகுத்தளித்தார்.

சிராஜ், மோகன் குமார், ஆஷிக், சர்புதீன், நான் 


இந்த பதிவர் திருவிழா மாபெரும் வெற்றி என்றே சொல்லவேண்டும்..... ஏனென்றால் இப்படி ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சி இதுவரை எங்கும் நடந்ததில்லை.


tamil24news on livestream.com. Broadcast Live Free
Post Comment

இதையும் படிக்கலாமே:


32 comments:

 1. அனைத்தையும் நேரலையில் கண்டுகளித்தேன்! வாழ்த்துக்கள்! விழாகுழுவினருக்கு பாராட்டுகள்!!

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் அண்ணா

  ReplyDelete
 3. விழாக் குழுவினருக்கு பாராட்டுக்கள்!

  ReplyDelete
 4. உண்மையில் பதிவுகலகம் கண்ட சாதனைதான் இது...
  நிறையப்பேரின் பதிவுகளின் மூலம் பதிவுவ சந்திப்பினை நேரசியாகப் பார்த்தது போன்ற உணர்வு...
  புகைப்படங்களுடன் கூடிய பதிவு இன்னும் அழகாக இருக்கிறது

  ReplyDelete
 5. மது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?

  http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_27.html

  ReplyDelete
 6. பதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி. நான் பங்கேற்ற முதல் பதிவர் நிகழ்வும் இதுதான்.

  ReplyDelete

 7. கஸாலி நீங்கள் தான் பத்திரிக்கையில் என் பெயர் வரும்போதெல்லாம் பார்த்து விட்டு சொல்வீர்கள். உங்களை இன்று தான் நேரில் பார்க்க முடிந்தது மிக மகிழ்ச்சி. விழா பற்றி பதிவில் சுருக்கமாய் அழகாய் சொல்லி உள்ளீர்கள் அருமை

  ReplyDelete
 8. அங்கே கண்ட மகிழ்ச்சி இங்கேயும் தெரிகின்றதே!

  ReplyDelete
 9. சிறப்பான தொகுப்பு! நன்றி!

  இன்று என் தளத்தில்
  நினைவுகள்! கவிதை!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_27.html
  நடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா?
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_3738.html

  ReplyDelete
 10. படம் புடிச்சுப் போடற எல்லோருக்கும் வாழ்த்து சொல்லியிருக்கேன்.உங்கள் நன்றியுரைக்கும் சேர்த்து வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. அகமகிழ்ந்தேன்.. சந்திப்பு என்றென்றும் மனதில்..

  ReplyDelete
 12. தங்களை நேரடியாகச் சந்தித்தபின்
  பதிவினைப் படிப்பதில் ஒரு நெருக்கத்தை உணர்கிறேன்
  அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. கஸாலி...

  சார்ட் அன்ட் சுவீட்.. அழகா சொல்லி இருக்க.... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள் நண்பா

  ReplyDelete
 15. உங்களை சந்தித்தலில் மிக்க மகிழ்ச்சி சார்...

  வாழ்த்துக்கள்... நன்றி... (TM 13)

  ReplyDelete
 16. மிகவும் சந்தோசம்....விழா வெற்றிகரமாக நடந்ததில் மகிழ்ச்சி...

  ReplyDelete
 17. மாஷா அல்லாஹ்... அருமையான சந்திப்பு... ரொம்ப அழகா நேர்த்தியாக விழாவை ஏற்பாடு பண்ணியிருந்தாங்க...

  என் மகன் பக்கத்துல இருக்குறதுனால எங்க அண்ணன் போட்டோல கலர் ஆக இருக்காரு அஹ்ஹூ அஹ்ஹூ

  ReplyDelete
 18. வணக்கம்,கஸாலி சார்!காலையில் கொஞ்ச நேரம்,திருவிழா (அறிமுகம்)பார்க்கக் கிடைத்தது.இன்று,சில நிழற் படங்கள் பார்க்கக் கிடைத்தது!விழா இனிது நிறைவுற்றது மகிழ்ச்சி!ஆமினா சொன்னதும் கரெக்டு தான்,ஹ!ஹ!ஹா!!!!!

  ReplyDelete
 19. அன்பு அண்ணனுக்கு என் வணக்கம்,உங்களை பதிவர் திருவிழாவில் நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி.உங்களை சந்தித்த பல பேரின் மத்தியில் என்னை நீங்கள் மறந்திருக்க வாய்ப்புண்டு. (நீங்க என்னை சின்ன பையனா இருக்கியே? அப்டீனு கேட்டீங்க.)

  ReplyDelete
 20. மிக எளிமையான பதிவை இட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள்யா...நன்றி அனைவருக்கும்

  ReplyDelete
 22. பாராட்டப்பட வேண்டிய நிகழ்ச்சி. பதிவர்களின் ஒற்றுமை எல்லா விசயங்களிலும் இருந்தால் எதனையும் சாதிக்க முடியும்!
  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பணி பாராட்டபட வேண்டியது.

  ReplyDelete
 23. மீண்டும் தூண்டும் நினைவுகளை அருமை ........

  ReplyDelete
 24. தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி சகோ.

  ReplyDelete
 25. இனிய சந்திப்பு
  பதிவர் விழாவில்
  நன்றி

  ReplyDelete
 26. என் வலைப்பூவில்:
  சாதனை பதிவர்கள் (பதிவுலக சாதனையாளர்களின் அறிமுகம்)
  http://vijayandurai.blogspot.com/2012/08/blog-post_28.html

  ReplyDelete
 27. சென்னை பதிவர் சந்திப்பு வெற்றி மகிழ்ச்சியை தருகிறது, அதை இங்கு அழகாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி.

  ReplyDelete
 28. சென்னை பதிவர் சந்திப்பு வெற்றி மகிழ்ச்சியை தருகிறது, அதை இங்கு அழகாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.