என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, August 13, 2012

46 பதிவர் திருவிழாவும், பதிவர் சந்திப்புகளும்......
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 26-08-2012, ஞாயிறு அன்று நடக்கவிருக்கும் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழாவை எப்படி திறம்பட நடத்தலாம் என்று பிரபல பதிவர்களில் சிலர் வாரந்தோறும் டிஸ்கவரி புக் பேலசில் கூடி ஆலோசித்து வருகிறார்கள். வாரா வாரம் எனக்கும் அழைப்பு வரும். நானும் அங்கே செல்லலாம் என்று நினைப்பேன். ஆனால், ஏதாவது வேலை வந்துகொண்டே இருக்கும். நேற்றுதான் நானும் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியது.

பதிவர் திருவிழாவில் என்னென்ன செய்யலாம், எப்படி சிறப்பாக செய்யலாம் என்றெல்லாம் ஆலோசிக்கப்பட்டது. அதை பற்றி தனியாக மதுமதி பதிவிடுவார். இந்த கூட்டத்தில் புலவர் ராமாநுஜம், உண்மைத்தமிழன், மின்னல்வரிகள் கணேஷ், பட்டிக்காட்டான் பட்டணத்தில் ஜெய், மெட்ராஸ் பவன் சிவக்குமார், கரைசேரா அலை அரசன், திடங்கொண்டு போராடு சீனு, டிஸ்கவரி புக் பேலஸ் அதிபர் வேடியப்பன் ஆகியோருடன் நானும், டீக்கடை சிராஜும் கலந்துகொண்டோம்.
Post Comment

இதையும் படிக்கலாமே:


46 comments:

 1. அந்த இனிய நாளுக்காக காத்திருக்கிறோம் அனைவரும் வருக.

  ReplyDelete
  Replies
  1. உங்களைப்போல் தான் எல்லோரும் காத்திருக்கிறார்கள்

   Delete
 2. விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...
  நன்றி… (த.ம. 3)


  அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

  ReplyDelete
  Replies
  1. அவசியம் வந்திருக்கங்க

   Delete
 3. Replies
  1. நீங்களும் வந்துருங்க தல.....

   Delete
 4. வாழ்த்துக்கள் தோழர்களே!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி தோழி

   Delete
 5. அந்த நாளை இனியதாய் மாற்றிவிடலாம் சார் ....

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக அனைவரின் ஒத்துழைப்புடனும்

   Delete
 6. அறிந்துகொண்டேன்.
  தகவலுக்கு நன்றி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. வாருங்கள் பதிவர்களே..

  ReplyDelete
  Replies
  1. நானும் அழைக்கிறேன் வந்து விடுங்கள்

   Delete
 8. பதிவர்கள் திருவிழா சிறப்புற வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்து மட்டும்தானா? வருகை இல்லியா

   Delete
 9. Replies
  1. வாழ்த்துக்கு நன்றி

   Delete


 10. தகவல் எங்கும் பரவ உதவும் அருமையான பதிவு! நன்றி!

  ReplyDelete
 11. படங்கள் சூப்பர்:)

  ReplyDelete
  Replies
  1. எடுத்த உங்களுக்கும், வேடியப்பனின் சகோதரருக்கும் நன்றி பாஸ்

   Delete
 12. தகவல் அறிந்து கொண்டோம்
  புகைப்படங்க்களுடன் அருமையான
  பதிவினைத் தந்தமைக்கு
  மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அவசியம் வந்துடுங்க சார்

   Delete
 13. Replies
  1. வாக்கிற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி

   Delete
 14. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. விழா சிறப்புற நடக்க வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 16. ரொம்ப ரிஸ்க் எடுக்குறீங்க சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன்.......

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திற்கு நன்றி

   Delete
 17. அடுத்த மாசம் பதிவர் சந்திப்பு வைக்ககூடாதா நானும் வருவேனே.. ம்ம்ம்

  ReplyDelete
  Replies
  1. இடையில் ரம்ஜான் வந்ததால் இதுவே ஒரு வாரம் தள்ளிப்போட்டிருக்குண்ணே

   Delete
 18. நான் வரதுக்கு முன்பே போட்டோ எடுத்தீங்களா

  ReplyDelete
  Replies
  1. ஆமா.... கொஞ்ச நேரத்துக்கு முன்பு எடுத்தது

   Delete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.