என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, July 26, 2012

39 நான் பல்பு வாங்கிய கதை.....


பல்பு வாங்காத பதிவர் பதிவரே இல்லை என்ற புதுமொழி உருவாகிவிடுமோ என்னுமளவிற்கு இப்போது எல்லா பதிவர்களும் பல்பு வாங்கிய கதையை சிலாகித்து எழுதிவருகிறார்கள். சரி நம்ம கிட்டையும்தான் இது மாதிரி பல்பு வாங்கிய கதை நூற்றுக்கணக்கில் இருக்கே...அதுல ஒன்ன எடுத்து விட்டுட்டு பல்பு வாங்கிய பதிவர்கள் ஜோதியில் ஐக்கியமாகிட வேண்டியதுதான்னு முடிவு பண்ணி களத்துல குதிச்சுட்டேன்.


சமீபத்துல நடந்த கதைய சொல்லுறேன். நான் வாங்கிய பல்பு எப்படின்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க....

கடந்த வாரம் நானும் என் நண்பனும் ,என் நண்பனின் குழந்தை பிறப்பு சான்றிதல் வாங்க புதுக்கோட்டை நகராட்சிக்கு போனோம். முதலில் பைக்கில் போவதாகத்தான் முடிவு. திடீரென்று மழை பேஞ்சதால கார்ல போனோம். இதுல இன்னொரு விஷயத்தை சொல்லி ஆகணும்.

நான் இப்ப உபயோக படுத்துவது பி.எஸ்.என்.எல்.- என் நண்பன் பிரிபெய்டு   கார்டு. இதுல இருக்க பலன் என்னன்னா ஏதாவது ஒரு லேன்ட்லைன் நம்பருக்கு நம்ம செல்லுல சார்ஜ் இருக்க வரைக்கும் காச பத்தி கவலைப்படாம மணிக்கணக்குல இலவசமா அரட்டை யடிக்கலாம். அதுனால, நானும் ஒரு கார்டு வாங்கிப்போட்டு அதுல எங்க வீட்டு நம்பர இலவசமா பேச பதிஞ்சு வச்சுருக்கேன்.

என்னைக்காவது அத்தி பூத்தமாதிரி வீட்டைவிட்டு வெளிய போனா...அந்த நம்பரைத்தான் எடுத்துட்டு போவேன். அன்னைக்கும் புதுக்கோட்டைக்கு அந்த நம்பராத்தான் எடுத்துட்டு போனேன். போகும் வழியெல்லாம் ஒரே ரன்னிங் கமெண்டரிதான்.
இப்ப மழை பெய்யுது, புதுக்கோட்டையில போயி இறங்கிட்டோம், இப்ப டீ குடிக்கிறோம், மறுபடி  கார்ல ஏறி நகராட்சிக்கு போறோம்ன்னு விடாம பேசிட்டு வாரேன்.

என் நண்பன்(இது பிரி பெய்டு கார்டு இல்லை. என் நிஜமான ஃபிரண்டு ) கடுப்பாகி
"டே...வைடா..நாயே ...இலவசமா கொடுத்தாலும் கொடுத்தாங்க...இப்படி போட்டு தாளிக்கிறே, உன்னாலதாண்டா கவர்மெண்டுக்கு நட்டம்" ன்னு கத்தினான்.
"ஆமா, டெலிபோன்ல ராசாவால வராத நட்டம், நான் ஒரு மணிநேரம் பேசறதுலதான் வரப்போகுது வேலைய பாரு" ன்னு  அந்த நேரத்திலும் அசராம பாலிடிக்ஸ் பேசினேன்.

அதுக்கப்புறம் அவன் ஒண்ணுமே பேசல..ஒருவேளை என் போனுக்கும் வாயிருந்தா அவன் சொன்னதத்தான் சொல்லிருக்குமோ என்னவோ...
சரி விசயத்துக்கு வருவோம்....ஒரு வழியா நகராட்சியில் எல்லா வேலையும் முடிஞ்சு கிளம்பும் நேரத்தில் மறுபடியும் வீட்டுக்கு போன் போட்டு புதுக்கோட்டையில ஏதாவது வாங்கிட்டு வரவான்னு கேட்டு தொலைஞ்சுட்டேன். அப்பத்தாங்க நமக்கு ஏழரை ஆரம்பிச்சுச்சு.


உடனே என் மனைவி "நம்ம வீட்டு டாய்லட்டுல ரெண்டு நாளா லைட் எரியல....வரும்போது ஒரு இருபது வாட்ஸ் CFL பல்பு ஒன்னு வாங்கிட்டு வாங்க...நல்ல ஒரிஜினல் பல்பா வாங்குங்க....லோக்கல்ல வாங்கி சும்மா சும்மா அடிபட்டு போயிடுது" ன்னு சொன்னாள்.
அப்புறம் என்ன,  நல்ல எலக்ட்ரிக் கடையில கார நிப்பாட்டி 120-ரூபாய்க்கு ஒரு CFL பல்பு வாங்கிட்டு போனேன்.
இதுதாங்க நான் பல்பு வாங்கிய கதை. எப்படிங்க இருக்கு?

டிஸ்கி: இது ஒரு மீள்பதிவு.....ஹி...ஹி...


Post Comment

இதையும் படிக்கலாமே:


39 comments:

  1. ஹி ஹி ஹி.., எல்லாரும் கொலை வெறி பிடிச்சு அலையுறாங்கப்பா ஹி ஹி ஹி!

    ReplyDelete
  2. இது பல்பு வாங்குற பதிவா ? கொடுக்குற பதிவா?

    ReplyDelete
    Replies
    1. நான் வாங்கி, உங்களுக்கு கொடுக்கற பதிவு

      Delete
  3. நான் சவூதியிலிருந்து வீட்டுக்கு போகும் போது சிறந்த பல்பாக வாங்கிட்டு போனேன் இரண்டு வருடம் ஆச்சு நல்லா ஏரியுது

    ReplyDelete
    Replies
    1. எரியட்டும்.....பிரகாசமா எரியட்டும்

      Delete
  4. கடைசி வரையில் இது படிப்பவர்களுக்கு
    பல்ப் கொடுக்கிற்
    பதிவு எனக் கண்டுபிடிக்கவே முடியவைல்லை
    சுவாரஸ்யமான பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அய்யாவின் வருகைக்கு நன்றி...

      Delete
  5. கர்.... த்து.....

    #இந்தப் பொழப்புக்கு காங்கிரஸ்ல சேந்து கட்சி வளர்க்கலாம்!!!

    :-)

    ReplyDelete
  6. ஆரம்பிக்கும் போதே நினைச்சேன்! இது குண்டு பல்பு இல்லேன்னு! நல்லாதான் மொக்கை போடறீங்க!

    ReplyDelete
    Replies
    1. ஹி...ஹி...வருகைக்கு நன்றி

      Delete
  7. முடிவில் மீள்பதிவு என்று சொல்லி, நல்லா கொடுத்தீங்க பல்பு எங்களுக்கு...

    நன்றி... (த.ம. 6)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி தனா

      Delete
  8. ஹீ.ஹீ .........டாய்லெட்டுல விளக்கேற்றி வைத்த மகாராசா நீங்கதாங்க....

    ReplyDelete
    Replies
    1. எங்கேண்ணே விளக்கு ஏத்தறது கரண்டு இல்லாத நேரத்தில...

      Delete
  9. கர்.... த்து.....

    #இந்தப் பொழப்புக்கு காங்கிரஸ்ல சேந்து கட்சி வளர்க்கலாம்!!!

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு பேசாம தற்கொலை பன்னிக்கலாம்

      Delete
  10. கடைசி வரைக்கும் கஸாலி பல்பு வாங்கினதைப் பார்க்க ஆவலா வந்த எனக்கு பல்பு கொடுத்த கஸாலிக்கு நல்ல கமெண்ட் சொல்லி.., ஹா.... ஹா... அசத்திட்டீங்க மிஸ்டர் வௌங்காதவன்.

    ReplyDelete
    Replies
    1. கோபமிருக்கலாம்.... அதற்காக இப்படியா திட்டுவது....அவ்வ்வ்வ்

      Delete
  11. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

    உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
    http://www.valaiyakam.com/page.php?page=votetools

    நன்றி

    வலையகம்
    http://www.valaiyakam.com/

    ReplyDelete
  12. நம்பி வந்தேன் இல்ல என்ன சொல்லனும்...

    ReplyDelete
    Replies
    1. ஒண்ணும் சொல்ல வேணாம்....வருகைக்கு நன்றி..

      Delete
  13. அந்த நண்பன் நான் தான்... ஹி..ஹி..ஹி

    ReplyDelete
  14. அடியாத்தி செம பல்புதான் வாங்கியிருக்கிறீங்க...மீள் பதிவுதானே இன்னும் எரியனுமே

    ReplyDelete
    Replies
    1. அது எங்கே எரியுது? அப்பவே ப்யூஸ் போச்சு

      Delete
  15. Replies
    1. ஆமாம்....இதுவும்தான்

      Delete
  16. நாங்கதானா கெடைச்சோம்? இன்னும் ரத்தம் வர்லதான் பாக்கி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க.... ரொம்ப நாளா ஆளையே கானோமே....எங்கே போயிருந்தீங்க...

      Delete
  17. நல்ல பதிவு..... வாழ்த்துக்கள் அண்ணா .....

    ReplyDelete
    Replies
    1. முதன் முதலில் வருகை தருவதற்கு நன்றி

      Delete
  18. நீங்க மொபைல் மாத்தி எடுத்துட்டு போய்டீங்க துட்டு பிச்சிகிட்டு போயிருக்கும்னு நெனச்சேன்.

    ஆனா யாருமே எனக்கு மொதல்லயே தெரியும்னு சொல்லி இன்னொரு பல்பு வாங்கல.....

    ReplyDelete
    Replies
    1. ஹா...ஹா... இது கூட நல்லாருக்கே.... வருகைக்கு நன்றி

      Delete
  19. படத்தை பார்த்ததும் ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது. இருந்தாலும் நம்பி படிச்சேன்.

    ReplyDelete
    Replies
    1. ஓரளவு யூகிப்பதற்காகத்தான் அந்த படமே

      Delete
  20. பல்பு அற்புதமான பில்டப்.வெகு சுவராசியமாக ஆரம்பித்து கடைசியில் பொசுக் என்று முடித்து விட்டீர்கள்.
    இருந்தாலும் கடைசி வரி வரை ஆர்வத்துடன் படிக்க முடிந்தது.
    தங்களுக்கு வந்த பின்னுாட்டத்தில் காங்கிரஸில் சோ்ந்து கட்சி வளா்க்கலாம் என்பதற்கு தாங்கள் சொன்ன பதிலும் அவர் சொன்ன ஆலோசனையும் அருமை.
    ஆனால் அனைவரும் 2014 ஐ மறந்து விடாதீர்கள்.
    வாழ்க வளமுடன்
    snr.DEVADASS

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி

      Delete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.