என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Saturday, June 16, 2012

11 புதுக்கோட்டையில் தோற்று, ஆந்திராவில் ஜெயித்த ஜனநாயகம்......
ஒரு வழியாக புதுக்கோட்டை தேர்தல் முடிவு வந்துவிட்டது. ஆளுங்கட்சி கோடிக்கணக்கில் சிலவு செய்து புதுக்கோட்டை மக்களிடம் நல்லாட்சி சான்றிதழ் பெற்று தன் எம்.எல்.ஏ.,எண்ணிக்கையில் ஒன்றை வரவு வைத்துள்ளது. அதேநேரம் சங்கரன்கோவிலைபோல் ரிசல்டை எதிர்பார்த்து தே.மு.தி.க.,விடம் ஏமாந்துபோயுள்ளது.

வெற்றி நிச்சயம் என்று முடிவு செய்து ஆளுங்கட்சி போட்டியிட்டாலும்கூட, எந்த ஒரு எதிர்கட்சியும் டெபாஸிட் பெறக்கூடாது, குறிப்பாக தே.மு.தி.க., டெபாசிட் இழக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் அமைச்சர்கள் உள்ளிட்ட பரிவாரங்களை இறக்கி, பல கோடிகளை சிலவு செய்தும் நான் ஏற்கனவே பதிவிட்டபடியே 30,500 வாக்குகளை பெற்று விஜயகாந்த் தன் திராணியை நிருபித்துவிட்டார்.

அதேநேரம் ஆந்திர மாநிலத்தில் நடந்த 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் ஒய்.எஸ்.ஆர்.,காங்கிரஸ் 15 சட்டமன்றத்தொகுதிகளிலும், ஒரு நாடாளுமன்றத்தொகுதியிலும் வெற்றிபெற்று ஆளும் காங்கிரசுக்கு தலைவலியாக மாறியுள்ளது. இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சி ஜெயிப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். மற்ற மாநிலங்களில் ஆளுங்கட்சி ஜெயிப்பதும், தோற்பதும் வழக்கமான நிகழ்வுதான்.  நல்லவேளையாக, தமிழ் நாட்டின் கலாச்சாரம் மற்ற மாநிலங்களுக்கு இன்னும் பரவவில்லை. அப்படி பரவியிருந்தால் ஜெகன் மோகன் ரெட்டிக்கு டெபாசிட்டே கிடைத்திருக்காது. மொத்தத்தில் தமிழ் நாட்டில் தோற்ற ஜனநாயகம், ஆந்திராவில் வென்றுள்ளது.

=================அடுத்த உலகம் சுற்றும் வாலிபன் பதவிக்கு மம்தா,முலாயமின் எதிர்ப்பையும் மீறி பிரணாப்பை நிறுத்தியே விட்டது காங்கிரஸ். அப்படி பிரணாப்பை நிறுத்தியதும் மம்தாவை தனிமைப்படுத்திவிட்டு பிரணாப்பிற்கு தன் ஆதரவை தெரிவித்து விட்டார் முலாயம். இதனால், சுதாரித்துக்கொண்ட கலாம் (மம்தா முன்னிறுத்தியும்) பின் வாங்கி விட்டார். இதை எதிர்பார்க்காத மம்தா, முலாயம் ஒரு ஒரு அரசியல்வாதி. அவர்மீது எனக்கு கோபமில்லை என்று முலாயம் மீது தன் கடுப்பை மறைமுகமாக காட்டியுள்ளார். முலாயம் அரசியல்வாதி என்றால் மம்தா சமூகசேவகி போல....

இதற்கிடையில் சோனியா எதை சொன்னாலும் அதை கண்ணாபிண்ணா என்று ஆதரிக்கும் கலைஞர், வழக்கம்போல் இதையும் வழிமொழிந்துள்ளார்.பாவம் கலைஞரை விட நல்ல அடிமை சோனியாவிற்கு கிடைக்காது. அத்துடன் நில்லாமல் கலாம் என்றால் கலகம் என்றும் தன் திருவாய் மலர்ந்துள்ளார். ஒரு வேளை காங்கிரஸ் மம்தாவின் எதிர்ப்பிற்கு பணிந்து கலாமையே வேட்பாளராக அறிவித்திருந்தால் கலாம் என்றால் பலம் என்று வார்த்தை ஜாலம் காட்டியிருப்பாரோ கலைஞர். இதற்கிடையில் ஜெயலலிதா முன்மொழிந்த சங்மா பாடுதான் பரிதாபமாக இருக்கிறது. நிமிடத்துக்கு நிமிடம் மாறும் ஜெயாவின் ஆதரவை நம்பி ஓடிக்கொண்டிருக்கிறார்.

==================Post Comment

இதையும் படிக்கலாமே:


11 comments:

 1. கஸாலி,

  நம்ம நாட்டுக்கு ஜனாதிபதியே தேவை இல்லை என்பது என் கருத்து... நீங்க என்ன நினைக்கிறீங்க நண்பர்களே????? எதுக்கு இந்த உப்புக்கு சப்பாணி பதவி?? அவருக்கு பாதுகாப்பு, வெளிநாட்டு பயணம்னு செலவுகள் வேறு.. கடுப்பா இருக்கு

  ReplyDelete
 2. பேசாம ஒரு அமைச்சருக்கு ஜனாதிபதி செய்யும் வேலைகளை கூடுதல் இலாக்காவா கொடுத்திடலாம். அல்லது ஒரு அமைச்சர அதிகம் ஆக்கிக்கலாம்...

  ReplyDelete
 3. தமிழ்நாட்டு மக்கள் தேர்தல் விஷயத்தில் சுயநலவாதிகளா மாறி ரொம்ப நாள் ஆச்சு. அதனால் மீண்டும் என் கருத்தை அழுத்தமாக வலியுறுத்துகிறேன்... தமிழகத்திற்கு இடைத் தேர்தலே தேவை இல்லை. இது தான் கடந்த 15 வருத இடைத்தேர்தல் வரலாறு சொல்வது...ஏன் அமைச்சர்களின் நேரங்கள், அதிகாரிகளின் நேரங்கள், போலீஸின் நேரம், குறிப்பாக மக்களின் நேரத்தை வேஸ்ட் பண்ணனும்??????? ஒரே ஒரு நன்மைதான்.... ரோடு போடுவார்கள், சிலப்பல வேலைகள் தொகுதியில் நடைபெறும் அவ்வளவு தான்.

  ReplyDelete
 4. //மொத்தத்தில் தமிழ் நாட்டில் தோற்ற ஜனநாயகம், ஆந்திராவில் வென்றுள்ளது.

  //

  ஆனால் ஊழல்வாதிகள் வெல்வது என்கேயுன் தொடரத்தான் செய்கின்றது

  ReplyDelete
 5. மன்னாரு மன்னாரு...
  வுங்க அப்பன் பேர சொன்னாரு...

  #யோவ்... போயி புள்ள குட்டிங்களப் படிக்க வையுய்யா!!!

  ReplyDelete
 6. கஸாலி நீ அரசியல் சாணக்கியன் பா

  ReplyDelete
 7. பிரதமர் மன்மோகன் இஸ்லாத்தை ஏற்றார்-நேரடி பேட்டி

  பரப்பான செய்தி
  WWW.TVPMUSLIM.BLOGSPOT.COM

  ReplyDelete
 8. "கலாமுக்கு பெற்றோர் வைத்த பெயரை இப்படியா கருணாநிதி களங்கப்படுத்துவது?"

  சென்னை: அப்துல் கலாம் என்பது அவராக வைத்துக் கொண்ட பெயர் அல்ல. அவரது பெற்றோர், பெரியோர் வைத்த பெயர். அதை கருணாநிதி களங்கப்படுத்தியிருப்பது கண்டனத்துக்குரிய ஒன்று என்று கீழ் பவானி விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

  கலாம் என்றால் கலகம் என்று கருணாநிதி கூறியதற்கு கீழ் பவானி பாசன விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் நல்லசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

  அப்துல் கலாம் என்ற பெயர் தனக்குத்தானே வைத்துக் கொண்ட பெயர் அல்ல. ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்தபோது அவரது பெற்றோரும், பெரியோர்களும் வைத்த பெயர்.

  அவர் முன்னாள் ஜனாதிபதி, மனித மாதிரியாக (ரோல் மாடல்) வாழ்ந்து வருபவர், எளிமைக்கு வலிமை சேர்த்தவர், பன்னாட்டு அளவில் நன்மதிப்பு பெற்றவர், பலராலும் மதிக்கப்படுபவர். இப்படிப்பட்டவரை கலாம் என்றால் கலகம் என்ற பொருளில் கூறுவதா!

  தமிழ்நாட்டில் உள்ள திராவிடக் கட்சிகளின் பெயர் பொதுவாக கழகம் என்றே முடிகிறது. அப்படி என்றால் கழகம் என்பதற்கு என்ன பொருள்?

  ``பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின்'' என்ற திருக்குறளின்படி பார்த்தால், கழகத்திற்குள் (சூதாடும் இடம்) காலை வைத்துவிட்டால் பழமையால் வழி வழிவந்த பாரம்பரிய செல்வமும், பண்பாடும் கெட்டுப் போகும் என்று பொருளாகும்.

  கழகம் என்பது சூதாடும் இடத்தைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளது. திமுக தலைவரும், வாழும் வள்ளுவர் என்று அழைக்கப்படுபவருமான கருணாநிதி இதை ஏற்றுக் கொள்வாரா?


  அப்துல்கலாமிற்கும் கலகத்திற்கும் என்ன தொடர்பு? அவர் வன்முறையை விரும்புபவரா? குற்றப்பின்னணி உள்ளவரா?

  ஜனாதிபதி வேட்பாளராக ஏ.பி.ஜே.அப்துல்கலாமை ஏற்று ஆதரிப்பதும், எதிர்ப்பதும் கருணாநிதியின் முடிவு. இது அவரது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்கு உட்பட்டது. அல்லது அவரது கட்சியின் முடிவாகவும் இருக்கலாம்.

  பெற்றோரால் வைக்கப்பட்ட பெயரைக் கொண்டு அப்துல்கலாமை விமர்சிப்பதும், பெயருக்கு களங்கம் கற்பிப்பதும் நியாயமாகப்படவில்லை. இதிலுமா சொல் விளையாட்டு? என்று கண்டித்துள்ளார் நல்லசாமி.


  கலாம் என்றால் கலகமா... கருணாநிதிக்கு முஸ்லீம்கள் கடும் கண்டனம்

  சென்னை: கலாம் என்றால் கலகம் என்று தவறான அர்த்தத்தைக் கூறி இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை திமுக தலைவர் கருணாநிதி புண்படுத்தி விட்டார் என்று இஸ்லாமிய அமைப்பும், பிற அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

  சென்னையில் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில் கலாம் என்றால் கலகம் என்று தமிழில் பொருள் உண்டு என்று கருத்து தெரிவித்திருந்தார். இது அனைவரையும் அதிர வைத்துள்ளது. கருணாநிதியின் இந்தப் பேச்சுக்கு இதுவரை அப்துல் கலாம் கருத்து தெரிவிக்கவில்லை. அமைதியாக இருக்கிறார். அதேசமயம், இஸ்லாமியர்களிடையே இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

  இதுகுறித்து திராவிட முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் இக்பால், கருணாநிதிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

  கடந்த 15-ந்தேதி தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியிடம் வருங்கால குடியரசு தலைவர் சம்பந்தமாக ஊடகங்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் இஸ்லாமியர்களின் மனதை ஈட்டியால் குத்தி கிழித்தவண்ணம் உள்ளது.

  ஊடகங்கள் அப்துல்கலாமை சம்பந்தப்படுத்தி கேட்டதற்கு, கலாம் என்றால் `கலகம்'தான் என்று கருணாநிதி கூறியுள்ளார். இந்த வார்த்தையை எந்த அகராதியில் இருந்து அறிந்து சொன்னார் என்று தெரியவில்லை. ஒரு வார்த்தையின் பொருள் தெரியாமல் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் விதமாக பதில் கூறியுள்ளார்.

  அரபி மொழியில் கலாம் என்றால் திருகுரானை குறிப்பிடுவார்கள். அப்துல் கலாம் என்றால் அப்துல் இறைசேவகன். கலாம் இறை வார்த்தை. இதற்கு இறை போதகர் என்ற பொருளாகும்.

  இவ்வளவு புனிதமான வார்த்தையை கொச்சைப்படுத்த வேண்டும் என்று எத்தனை ஆண்டுகள் தவம் இருந்தாரோ என்று தெரியவில்லை.

  இதற்கு உடனே மறுப்பு தெரிவிக்க வேண்டும். இதை திராவிட முஸ்லீம் முன்னேற்றக்கழகம் வன்மையாக கண்டிக்கிறது. தவறும் பட்சத்தில் இஸ்லாமியர்களை ஒன்று திரட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதியை கண்டித்து வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைமை ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

  SOURCE : THAT’S TAMIL.

  ReplyDelete
 9. 'வாழும் வள்ளுவர் என்று அழைக்கப்படும்' ? உண்மையாகவா? யார் அப்படி அழைக்கிறார்கள்?

  ReplyDelete
 10. தமிழ் மணம் பதிவுப் பட்டையை நடுவில் தெரியும் படி எப்படி இணைத்தீர்கள் ?? தெரிந்தால் அறியத் தாருங்கள் ...

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.