என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, June 12, 2012

18 நானும் எனது அறிமுகங்களும்-1
கடந்த சில மாதங்களாக எனக்கு ஒரு பழக்கம். பதிவுலகில் இல்லாமல் முகப்புத்தகத்திலும், ட்வீட்டரிலும் சிறப்பாக/கலக்கலாக எழுதும் நண்பர்களின் எழுத்துக்களை படித்துப்பார்த்ததும், அடடா.....இவர்களின் களம் இதுவல்லவே...... வலைப்பதிவில் எழுதினால் இன்னும் நிறைய பேரை சென்றடையுமே என்று நினைத்து அவர்களை தொடர்புகொண்டு வலைப்பதிவை பற்றி எடுத்துசொல்லி அவர்களை பிளாக் எழுத தூண்டுவேன். அவர்களுக்கு என்னால் ஆன உதவிகளையும் செய்வேன்.

அப்படி முகப்புத்தகம் வழியாக என் கண்ணில் பட்டவர்தான் எண்ணங்களுக்குள் நான் பாருக் அவர்கள். அவரை சிறுவயதிலிருந்து நான் அறிவேன். எங்கள் ஊருக்கு பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர். என் உறவினரும் கூட....என்னை விட ஏறக்குறைய ஆறு வயது அதிகம் கொண்டவர் என்னை நண்பர் என்று அழைப்பதே அவரின் பெருந்தன்மைக்கு சான்று.அப்படிப்பட்டவரின் எழுத்து திறமையும், பேச்சுத்திறமையும் எனக்கு அப்பவே தெரியும். மிக அழகாக அதே நேரம் ஆணித்தரமாக வாதிடுவார். அப்படிப்பட்டவரின் எழுத்தை முகப்புத்தகத்தில் எதேச்சையாக வாசிக்க நேர்ந்தது.எழுத்து நடை கலக்கலாக மிக எதார்த்தமாக இருந்தது. உடனே அவருக்கு தொலைபேசினேன்.( ஃபாருக் என்னைவிட வயதில் மூத்தவராக இருந்தாலும் நான் ஒரு உரிமையில் ஒருமையில் தான் அழைப்பேன்).

”பாருக்...நீ ஃபேஸ்புக்கில் எழுதியதை படித்தேன். அருமையா இருக்கு.... நீ ஏன் ஒரு பிளாக் தொடங்கி எழுதக்கூடாது?”

“அது சரியா வராதுப்பா... நான் ஃபேஸ்புலேயே இருந்திடறேன்”

“இல்லே.... உனக்கான களம் இதில்லே... நீ பிளாக்கில் எழுது...இன்னும் ரொம்ப பேர் படிப்பாங்க.... நான் வேனுமானால் உனக்கு பிளாக் துவங்க உதவி செய்றேன்”

“எனக்கு ஏற்கனவே பிளாக் இருக்குப்பா.... ஒரு ஆர்வக்கோளாறுல ஆரம்பிச்சுட்டேன். ஆனால் ஏதும் எழுதல.....இனி அதில என்னத்தை எழுத சொல்றே”

“நீ பேஸ்புக்கில் எழுதியதையே மீள் பதிவு செய்து போடு....அதுவே போதும்” என்று சொல்லி போனை வைத்துவிட்டேன்.

அதன் பின் பேஸ்புக்கில் எழுதியதை எடுத்து பதிவாக போட ஆரம்பித்தார். இடையிடையே லேட்ட்ஸ்ட் அப்டேட்டையும் கொடுத்தார். அவரின் எழுத்துக்களை அடையாளங்கண்ட ஆனந்த விகடன் வலையோசையில்(என் விகடன் திருச்சி பதிப்பில்) அவரின் தளத்தை அறிமுகம் செய்திருந்தார்கள். வாழ்த்துக்கள் ஃபாருக்.....


இது எதற்கு இப்போது என்றால்.....அவர் விகடனில் அறிமுகமானதை தொடர்ந்து
என்று ஒரு பதிவிட்டிருந்தார்.அதில் எனக்கு நன்றி சொல்லியிருந்தார். இதற்கு எதற்கு நன்றி?.... நன்றாக எழுதும் ஒரு ஆளை அடையாள்ம் கண்டு வலைப்பதிவிவிற்கு அழைத்துவந்தேன். அத்துடன் என் வேலை முடிந்துவிட்டது. அதாவது ஃபாருக்கின் எழுத்து என்ற வைரத்தை பட்டைதீட்ட நான் உதவி புரிந்தேன். நான் உதவாவிட்டாலும் வைரம் வைரமே.

அடுத்த அறிமுகம் விரைவில்.....
Post Comment

இதையும் படிக்கலாமே:


18 comments:

 1. அறிமுகங்கள்....
  தொடரட்டும்.

  ReplyDelete
 2. கஸாலி..நீங்க ஒரு ராஜதந்திரி.

  ReplyDelete
 3. உண்மைதான் நண்பரே!

  உங்களது ப்லாகாரில் தான்-
  நான் அவரை கண்டறிந்தேன்!

  உண்மையில் அவரின் எழுத்து நடை அறோமைதான்-
  எதார்த்தமானது!

  உங்களுக்கும்--பாரூக் அவர்களுக்கும்-
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. seeni மிக்க நன்றி .உங்கள் ஆதரவுக்கு

   Delete
 4. நல்ல முயற்சி பாராட்டுக்கள்

  ReplyDelete
 5. உங்களின் நண்பரை நான் பார்த்து அவரின் பளோவராக மாறினேன் அதன் பின் அவரின் முயற்சியை பாராட்டி கருத்துக்கள் இட்டேன் பல முறை என்ன காரணத்தினாலோ அவர் எனது கருத்துக்களை அனுமதிக்கவில்லை மிஸ்டேக்காக அவரி டெலிட் பண்ணிவிட்டார் என்று எண்ணி மீண்டும் கருத்திட்டேன் பல முறை மீண்டும் அவர் அனுமதி அளிக்கவில்லை எனக்கு. எவரையும் பாராட்டி கருத்து எழுதிதான் எனக்கு பழக்கம் அப்படி பட்ட எனக்கு இது மன வருத்தத்தை கொடுத்தால் அவர் பதிவை தொடருவதில்லை

  ReplyDelete
  Replies
  1. avargal unmaigal முதலில் என் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன் உங்களிடம் .உங்கள் கருத்தை நான் இங்கே கண்டவுடன் மனம் வருத்தம் அடைந்துவிட்டது .நான் பதிவுலகில் ஆரம்பநிலையில் இருக்கும்போதே என் பதிவுக்கு வந்து கருத்து சொல்லி இருக்கீங்க .உண்மை என்னவெனில் அப்பொழுது எனக்கு பதில் எப்படி எழுதுவது என்பது தெரியாததால் தான் .நான் எதையும் டெலீட் செய்யவில்லை .ஆரம்பத்தில் நீங்க எழுதிய கருத்து எதுவும் முகப்பில் தெரியவில்லை .எல்லா கருத்துக்களும் நேராக ஈமெயில் தளத்தில் தெரிந்தன .அனால் முகப்பில் தெரியவில்லை .நான் கஸாலியிடம் போன் செய்து கேட்டேன் .அதன்பின்பு கஸாலி செட்டிங் செய்தபின்பு தளத்தில் தெரிந்தது .நான் இங்கே கற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கிறேன் .இப்பொழுது வரும் கருத்துக்களுக்கு பதில் எழுதுகிறேன் .மீண்டும் ஒருமுறை நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க்கிறேன் உங்களிடம் .இனி அவ்வாறு நிகழாது

   Delete
  2. சகோதாரா நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எழுதிய பதிவு மனதை என் மனதை தொட்டது. அதனால்தான் நான் உடனே உங்கள் ப்லோவராக சேர்ந்து கருத்து தெரிவித்தேன் எனக்கு பதிவு பிடித்து இருந்தால் மட்டும் கருத்து தெரிவிப்பேன் அதுவும் நேரம் கிடைத்தால் மட்டும் இல்லை என்றால் மிக நன்றாக இருக்கிறது என்று ஒரு வரியில் சொல்லிக் விட்டு போய்விடுவேன். ஆனால் உங்கள் பதிவை படித்த பின் நேரம் இல்லை என்றாலும் நீங்கள் கடின உழைப்பால் முன்னேறி வருவதை அறிந்தது அதற்கென நேரம் ஒதுக்கி கருத்து இட்டேன் மற்றவர்களிம் கருத்துகள் வந்தது ஆனால் என் கருத்து வர வில்லை ஏதாவது டெக்னிக்கல் காரணம் இருக்குமென நினைத்து மீண்டும் இரு முறை வந்து கருத்து தெரிவிததேன் அதுவும் வாரமல் போனதால் ஒருவேளை உங்களுக்கு எனதுதளத்தின் மூலம் வருவது பிடிக்க வில்லையோ என்று கருதிவிலகி வீடேன்.
   உங்கள் விளக்கத்தை ப்ரிந்து கொண்டேன். அதற்க்காக நீங்கள் மன்னித்து கொள்ளவும் என்ற பெரிய வார்த்தைகளை யூஸ் பண்ண வேண்டாம் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

   Delete
 6. நல்ல முயற்சி பாராட்டுக்கள்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. தொடருங்கள்..

  ReplyDelete
 8. சிறந்ததொரு அறிமுகத்தை வலையுலகிற்கு தந்தமைக்கு மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
 9. ஏம்பா கஸாலி இதுக்கும் ஒரு பதிவா .மிக்க நன்றி .உண்மையில் மிக நெகிழ்வான தருணத்தில் இருக்கிறேன் நான் இப்பொழுது .அதற்க்கு காரணம் நீதான்.பேஸ்புக்கில் எனக்கு கிடைத்த ஆதரவைவிட இங்கே கிடைத்தது அதிகம் .காரணம் நீ .ஆனந்தவிகடன் புத்தகத்தை பதினாறு வயதில் இருந்து இன்றுவரை வாங்கி படித்துவருகிறேன் .அதில் கருத்துபகுதியில் நமது கடிதம் வராதா என நினைத்தநாட்க்கள் அதிகம் .இன்று எனது பதிவுகள் அதில் அரங்கேற காரணம் நீதான் .நான் நினைத்துபார்க்கத இடத்தில் இருந்தெல்லாம் எனக்கு வாழ்த்து சொன்னார்கள் .நீ சொன்னதுபோல இன்று இங்கே பரவலாக அறியப்பட்டு இருக்கிறேன் .உன் உதவி இல்லையெனில் இன்னும்கூட பேஸ்புக்கில் எழுதி அந்த எழுத்துக்களை மீண்டும் படிக்க முடியாமல் போயிருக்கும்

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள பிரதர் :-)

  ReplyDelete
 11. ம்...நல்ல நண்பர்கள்....வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. தன் பதிவுகள் எல்லோராலும் வாசிக்கப்படவேண்டும்,வாசிக்கப் பட்டவர்களால் தான் பாராட்டப்படவேண்டும், தனக்கென பதிவுலகில் தனி அடையாளம் வேண்டும்
  இதுதான் எழுதும் எல்லோருமே எதிர்பார்க்கும் விஷயம்...........

  தனது பதிவை பாராட்டியவனே சுயமாய் பதிவெழுத வரும்போது அந்த முயற்சியை அவ்வளவாய் ரசிப்பதில்லை சராசரி மனது............

  எனக்குத் தெரிந்து
  நீ விதிவிலக்கு......

  பறத்தல் என்கிற விஷயம் தொடர்ந்து நடைபெறுவதால் மட்டும் இலக்குகளை அடைந்துவிட முடியாது........... திசைகள் முக்கியம்.....

  நீ சிறகுகளுக்கு திசை சொல்லிக் கொடுக்கிறாய்..........

  நல்ல விஷயம்.......... தொடரட்டும்.............

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.