என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, June 20, 2012

16 இவர்தான் அண்ணா- ஒரு முன்னோட்டம்....

காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாத்துரை....... இப்படிச்சொன்னால் இந்தத் தலைமுறையினருக்கு தெரியாது. அறிஞர் அண்ணா. இப்படி சொன்னால்தான் தெரியும். காஞ்சிபுரத்தில் 1909-ஆம் ஆண்டு சாதரண குடும்பத்தில் பிறந்து 1969-ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக மறைந்தவர். அண்ணாவின் மறைவையொட்டி நடந்த இறுதி ஊர்வலத்தில் தமிழகத்தின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல். இந்த நிகழ்வு கின்னஸ் சாதனையாக பதியப்பட்டு இன்றுவரை யாராலும் மன்னிக்கவும் எந்த மரணத்தாலும் முறியடிக்கப்படவில்லை.

அண்ணா ஆரம்பித்த தி.மு.க.,விலிருந்து அண்ணாவையே சந்தித்திராத விஜயகாந்த் ஆரம்பித்த தே.மு.தி.க.,வரை அத்தனை திராவிடக்கட்சிகளும் அண்ணாவின் பெயரை சொல்லாமல், அண்ணாவின் படத்தை போடாமல் கட்சியே நடத்த முடியாது என்று சொல்லும் அளவிற்கு தமிழ்நாட்டில் அண்ணாவின் ஆளுமையும் செல்வாக்கும் மிகப்பெரியது. சரி எதற்கு இந்த விளக்கமெல்லாம் என்று நினைக்கிறீர்களா? சொல்றேன்......

சமீபத்தில் நண்பர் செங்கோவி இந்தியா வந்திருந்தபோது, அடிக்கடி தொலைபேசி வாயிலாக தொடர்புகொள்வார். அப்படி ஒருதடவை பேசிக்கொண்டிருந்தபோது அறிஞர் அண்ணா அவர்களைப்பற்றி பேச்சுவந்தது.பேச்சுவாக்கில் அண்ணாவின் வரலாறை எழுதுங்களேன் தொகுத்து தாருங்களேன் என்று வேண்டுகோள் விடுத்தார். நானும் ஏதோ ஒரு நம்பிக்கையில் சரியென்று சொல்லிவிட்டேன். இதற்கு முன்பு ஜெயலலிதாவின் அரசியல் வரலாறை எழுதும்படி சொன்னார்.ஜெயலலிதாவின் அரசியல் வரலாறை தொகுப்பது அப்படி ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை.

காரணம், என் சமகாலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் என்பதால் என் நினைவில் இருந்த விஷயங்களையும், இணையத்தில் கிடைத்த விஷயங்களையும் சேர்த்து நேர்த்தியாக மூன்று பாகங்களாக தொகுத்தளித்தேன். அதன்பின் எம்.ஜி.ஆரின் வரலாறை தொகுக்கும்படி சொன்னார். நானும் அப்படியே இரு பகுதிகளாக 15 பாகங்களாக தொகுத்து பதிவிட்டேன்.

ஆனால், அண்ணா விஷயம் அப்படியில்லை. நிறைய தேடவேண்டி இருக்கிறது. ஒரு முன்னோட்டமாக இந்த விஷயத்தை எழுதிவிட்டு வரும் வாரங்களில் அண்ணாவை பற்றி இன்னும் விளக்கமாக பதிவுவரும்(இறைவன் நாடினால்....). கடந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பதிவிற்கு நீங்கள் வழங்கிய அதே அபரிதமான ஆதரவை அண்னாவிற்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


16 comments:

 1. /* கடந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பதிவிற்கு நீங்கள் வழங்கிய அதே அபரிதமான ஆதரவை அண்னாவிற்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன் */ வழங்கிட்டா போச்சு... உங்களுக்கு இல்லாத ஆதரவா கஸாலி நானா......

  ReplyDelete
 2. நல்லமுயற்சி. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. அண்ணா முடிச்சதும்... என்னோட வரலாற தொடரா எழுது....

  ReplyDelete
 4. நான் இன்னும் வளரலையோ கஸாலி.நல்லா எழுதுறே

  ReplyDelete
 5. அண்ணாவின் முழு பெயர் சொன்ன ஒரே ஆள் நீங்கதான் போல!

  ReplyDelete
 6. எனாக்க்கு அண்ணாவைப் பற்றி பெரிதாக தெரியாது....:( முயற்சி செய்து எனக்கு தெரிய அரும் தகவல்களை சொல்கிறேன்...:)

  ReplyDelete
 7. எனக்கு இருக்கும் நீண்ட நாள் சந்தேகம், அவரை 'அறிஞர்' என்று ஏன் சொல்கிறார்கள் என்பது. உங்கள் தொடர் அதை தீர்த்து வைக்கும் என்று நம்புகிறேன்

  ReplyDelete
 8. பந்து!யேல் பல்கலைக்கழகத்தில் கௌரவ பட்டம் வாங்கியதாலும்,கரகரத்த குரலில் தமிழில் மட்டுமே பேசும் உடன்பிறப்புகளுக்கு மத்தியில் ஆங்கில வசனங்களையும் இடைச்செருகல் செய்யும் புது பேச்சு டெக்னிக்கை கொண்டு வந்ததால் அறிஞர் அண்ணா என்று பெயர் வந்திருக்கலாம்.பேருதான் பேராசிரியர்!அன்பழகன் ஆங்கிலம் பேசி யாராவது கேட்டிருக்கீங்களா?

  ReplyDelete
 9. நானும் அறிஞர் அண்ணாவின் வரலாற்றை சில வருடங்களுக்கு முன் இந்த http://www.arignaranna.info தளத்தில் படித்தேன். பதிவர் ஜாலி ஜம்பரின் வலைப்பூ வழியாக இந்த தளத்தை அடைந்தேன்.

  அண்ணா அவர்களின் சீரிய வரலாறினை படித்து வியந்தேன். ஏன் அண்ணா அவர்களை 'தென்னாட்டு பெர்னாட்ஷா' என்று அழைக்கப் படுகிறார் என்பதை அதன் மூலம் அறிந்தேன்.

  அந்த அறிஞர் பெருமகனை இன்றைய இளைய தலைமுறையினர் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். - அபு முஜாஹித்

  ReplyDelete
 10. திரு ராஜா நடராஜன் அவர்கள் கவனத்திற்கு:

  திரு அன்பழகன் அவர்கள் தமிழ் பேராசிரியர். English Professor அல்ல. எனவே அவர் ஆங்கிலத்தில் பேச வேண்டிய அவசியம், தமிழ் பாடங்கள் நடத்தும்போது ஏற்பட்டு இருக்காது! ஆனால் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ஆங்கிலத்தில் பேசி இருக்கிறார் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 11. அட, ஆரம்பிச்சாச்சா?....சூப்பர்!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.