என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, May 07, 2012

22 தேன்மொழி.........எந்தன் தேன்மொழி
ந்தக்கூட்டத்தில் ரவியுடன் நடந்துபோய்க்கொண்டிருந்த சிவா அவளைப்பார்த்ததும் அதிர்ந்துபோய் நின்றான்.

“ரவி....அவளைப்பாரேன்.....தேன்மொழி மாதிரி இல்லே?”

“என்ன தேன்மொழியா?...அவ செத்துத்தான் நாலு வருஷமாச்சே?...இன்னும் தேன்மொழி,கயல்விழின்னு சொல்லிக்கிட்டு”

”இல்லே ரவி...அவ என் தேன்மொழியேதான்”

“சிவா...உனக்கு யாரைப்பார்த்தாலும் தேன்மொழியாட்டமே தெரியுது உனக்கு.... நாலு வருஷத்துக்கு முன்னாடி ஊட்டி மலையுச்சிலேர்ந்து தேன்மொழி  விழுந்ததை கண்ணால பார்த்தவன் நீ. அப்புறம் எங்கேருந்து வருவா உன் தேன்மொழி.....எல்லாம் உன் மனப்பிராந்தி. முதல்ல உன்னை ஒரு நல்ல டாக்டருகிட்ட கூட்டிட்டு போகனும்”

“நீ அவளை பார்க்காமலே சொல்லாதே....பார்த்துட்டு சொல்லு”

ரவி வேண்டாவெறுப்பாய் பார்த்தான். பார்த்தவன் அதிர்ந்தான்.

“நிஜம்தான்....தேன்மொழி மாதிரிதான் இருக்கா?”

”நான் சொன்னேன் நீதான் நம்பல....இப்ப என்ன சொல்றே”

”அதுக்காக...இவ எப்படி உன் தேன்மொழியா இருக்க முடியும்?. செத்துப்போனவ எப்படி உயிரோட வரமுடியும்?.உலகத்துல ஒரே ஆளு மாதிரி ஒம்போது பேரு இருப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். நம்ம கமல் தசாவதாரத்துல நடிச்சிருப்பாரே....அதுபோல தேன்மொழி சாயல்ல இவ இருக்கலாம் இல்லியா?”

“இல்லே... நான் அவளைப்பார்த்து கேட்கப்போறேன்”

“டே....உனக்கு பைத்தியம் முத்திப்போச்சுடா......”

ரவியின் பதிலுக்கு காத்திராமல் அவளை நோக்கி சிவா முன்னேறினான்..

“நீ... நீ.... நீங்க தேன்மொழிதானே?”

சிவாவை பார்த்த அவள் அதிர்ந்து, பின் சுதாரித்தவளாய்.....

“தேன்மொழி....எந்த தேன்மொழி?...”

“கோயமுத்தூர் அனாதை இல்லத்தில் வளர்ந்த தேன்மோழி”

”ஆள் மாத்தி கேக்குறீங்கன்னு நினைக்கிறேன்...என் பேரு ராகினி”


அப்போது ரவி குறுக்கிட்டு.....

“சாரி.....மேடம்....இவனோட காதலி பேரு தேன்மொழி.... நாலு வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாங்க.... நீங்க பார்க்க தேன்மொழி மாதிரியே இருப்பதால இப்படி கேட்டுட்டான்....தப்பா நினைச்சுக்காதீங்க”

“இட்ஸ் ஓகே...பரவாயில்லை”

‘நாந்தான் சொன்னேன்ல சிவா....அவ தேன்மொழி இல்லேன்னு... நீதான் கேக்காம இப்ப பல்பு வாங்கிட்டு நிக்கற”

“சாரி ரவி....அவளை பார்த்ததும் புத்தி தடுமாறிடுச்சு”

===========================

”ஏண்டி... நீதான் தேன்மொழின்னு உண்மையை சொல்லிருக்கலாமே?”

“சொல்லனும்ன்னு தோணல”

“இத்தனை வருஷத்துக்கு பின்னாடியும் அவரு உன்னை மறக்க்காம இருக்காரு.....அவர்கிட்ட போயி உண்மைய மறைச்சுட்டியே?”

“அதனால்தான் சொல்லல”

“புரியல?”

“அதாவது நான் இவருக்குக்காக ஊட்டில காத்திருக்கும்போது நாலு பசங்க வந்து என்ன தூக்கிட்டு போயி நாசம் செஞ்சுட்டு, ஒரு புரோக்கர்கிட்ட தள்ளிவிட்டுட்டு போயிட்டாங்க....பிடிச்சோ பிடிக்காமலோ இப்ப விபச்சாரம்க்கற நரகத்துல மாட்டிக்கிட்டு, எதெதெல்லாம் பாவம்ன்னு நினைச்சேனோ அதையெல்லாம் இப்ப செஞ்சுக்கு இருக்கேன். எச்சில் பட்ட உடம்பையும், பாவத்துக்கு பழகின மனசையும் அவருக்கு கொடுக்க விரும்பல அதான் நாந்தான் தேன்மொழின்னு சொல்லாம மறைச்சிட்டேன்”

“ தேனு.... நீ இந்த தொழில்தான் பண்றேன்னு அவருக்கு தெரியாதே?”

“அதுக்காக நல்ல மனுஷன ஏமாத்த சொல்றியா?....ஏற்கனவே வண்டி வண்டியா பாவத்தை சுமக்கிறேன்...இதில ஏன் இன்னொரு பாவத்தை சேர்க்கனும்?”

“ஆமா.. நீ செத்துப்போயிட்டத அவரு சொன்னாரே?”

“அதான் எனக்கும் புரியல... சரிதான் செத்தவ செத்தவளாவே இருந்துட்டு போறேன்”

============================

பின் குறிப்பு: தேன்மொழி சிவாவிற்காக காத்திருந்தபோது நான்கு இளைஞர்களால் கடத்தப்பட்டாள். அவளின் உடைகள் அடங்கிய பேக் அந்த இடத்திலேயே இருந்தது. அதைப்பார்த்த ஒரு பைத்தியக்காரப்பெண் அந்த பேக்கை பிரித்து அதிலிருந்த தேன்மொழியின் உடையை எடுத்து அணிந்து பார்த்துக்கொண்டிருந்தபோது கால் இடறி பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டாள்.அதை அப்போதுதான் வந்த சிவா பார்த்துவிட்டு, விழுந்தவள் தேன்மொழி என்று தவறாக நினைத்துவிட்டான். இது இருவருமே அறியாத ரகசியம். ஆனால், இந்த கதைக்கு தேவையான கிளைக்கதையும் கூட......

*********************************************  Post Comment

இதையும் படிக்கலாமே:


22 comments:

 1. கதை நல்லா இருக்கு சகோ

  ReplyDelete
 2. //எதையோ சொல்லனும்னு வந்துட்டீங்க... சொல்லவந்ததை நாகரீகமா சொல்லிட்டு போங்க பாஸ்...//

  கதை நல்லா இருக்கு :-)

  ReplyDelete
 3. ..............:))))))
  கதை நல்லா இருக்கு பாஸ்...

  ReplyDelete
 4. கிளைக்கதை வந்துதான் மேலே எழுதிய கதையை காப்பாத்துது .நல்லாவே எழுதி எழுதி இருக்கே .அடுத்த ஜெயமோகன் ஆக வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. சிறுகதை நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 6. ஒரு சஸ்பென்ஸ் பட இயக்குனர் உதயமாகுகிறார்...

  ReplyDelete
 7. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  நன்றி

  வலையகம்

  ReplyDelete
 8. சாகடிக்கப்படக்கூடாத பேரழகான உள்ளம் ..!

  முடிவை வேறு மாதிரியும் எழுதியிருக்கலாம் ..!

  ReplyDelete
 9. கதை நல்லா இருக்கு .

  ReplyDelete
 10. கதை வாசித்தேன்..நன்றாக இருந்தது.தொடர்ந்து எழுதுங்கள்..

  பின்குறிப்பு:
  கதை நன்றாக புரிவதால் பின் குறிப்பு தேவையில்லையென நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அப்படியல்ல....இறந்தவள் எப்படி பிழைத்தாள் என்ற கேள்வி வரும் அதான் இந்த விலக்கம்.

   Delete
 11. கதை...சிறு கதையாக இருப்பினும் சொல்ல வந்த கருத்து பிடிச்சிருக்கு

  ReplyDelete
 12. கதை அருமை.... கலக்குங்க கசாலி..
  பின் குறிப்புன்னு போடாமா, அதை சொல்லி.. பாவம் இதை ரவி அறியமாட்டான் என்று கூறி இருக்கலாம்....

  ReplyDelete
 13. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  www.ChiCha.in

  www.ChiCha.in

  ReplyDelete
 14. paaraattukal!

  nalla kathai!

  ReplyDelete
 15. நல்லாயிருக்கு கதை...தொடர்ந்து எழுதுங்க...!

  ReplyDelete
 16. நல்ல கதை ! தொடருங்கள் நண்பரே !

  ReplyDelete
 17. திருப்பங்களுடன் கூடிய கதை... நல்லாயிருக்கு நண்பரே..!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.