என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, May 02, 2012

9 களையிழந்த புதுக்கோட்டை இடைத்தேர்தல்.....
வழக்கமாக இடைத்தேர்தல் நடக்கும் அறிகுறிகள் இல்லாமல் அமைதியாகவே இருக்கிறது புதுக்கோட்டை. ஆளே இல்லாத டீக்கடையில் யாருக்காக டீ ஆற்றுவதற்கு அத்தனை அமைச்சர்களும் அங்கே முகாமிட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் மோசமான சாலைகள் கொண்ட மாவட்ட தலைநகர் புதுக்கோட்டையாகத்தான் இருக்கும். சென்னையிலிருந்து பஸ்சில் பயணிக்கும்போது அசதியில் தூங்கிவிடுவோம். எந்த ஊரில் பஸ் அசைந்து அசைந்து தண்ணீரில் கப்பல் போவது போல் போகிறதோ அப்போதே கண்ணை திறக்காமல் சொல்லிவிடலாம், பஸ் புதுக்கோட்டையை அடைந்துவிட்டது என்று. அது நேற்றுவரை. இன்றோ சாலைகலள் எல்லாம் ஓரளவு தார் முலாம் பூசப்பட்டுக்கொண்டிருக்கிறது. மற்றபடி எந்த அலம்பலும் இல்லை. ஒருவேளை தி.மு.க.,உள்ளிட்ட எதிர்கட்சிகள் வேட்பாளரை அறிவிக்கும்போது நிலமை மாறுமோ என்னவோ.....

=================கடந்த சில மாதங்களாக மக்களை வாட்டி வதைத்த மின்வெட்டு இப்போது சீராக குறைந்துவிட்டது. எல்லாம் காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் புண்ணியத்தால்தான். இது இப்படியே நீடித்தால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் வரும் அக்னி வெயிலை சமாளிப்பது பெரும் கஸ்டமாகிவிடும்.

==================

என் ட்வீட்டரிலிருந்து......

இரண்டு உயிர் தோழிகளை பிரிக்க வேண்டுமா? ரொம்ப சிம்பிள்.ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பிக்கு இருவரையும் திருமணம் செய்து வைத்தாலே போதும்.
----------------

நமக்கு அறிமுகமில்லாத ஒருத்தன் நம் போனை போல் வைத்திருந்தால் ஏதேச்சையாய் நம் போனை தொட்டுப் பார்த்துக்கொள்கிறது நம் கைகள்...

====================

ஒரு ஜோக்.....

வன்முறையை தூண்டற அளவுக்கு அவரு அப்படி என்ன பேசிட்டாரு?

தொகுதிக்கு நல்லது நடக்கனும்னா நம்ம தொகுதிக்கு உடனே இடைத்தேர்தல் வரனுன்னு பேசிட்டாராம்.

====================

புதிய வலைப்பதிவர்......

ஃபாருக் என்ற நண்பர் எண்ணங்களுக்குள் நான் என்ற வலைப்பதிவில் எழுதிவருகிறார். தன் அனுபவங்களை எதார்த்தம் கலந்த நடையில் மிக அழகாக எழுதி வருகிறார். படித்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


9 comments:

 1. இன்றைய சூழலில் பயன்தரத்தக்க கட்டுரை இது...பதிவு நல்லா இருந்தது....எங்க தளத்திற்கும் நீங்க வாங்க...தளத்தில் உறுபினராக ஆகுங்கள்
  www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் நபிகள் நாயகம் அவர்களின் குணநலன் அறிய, நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 TO 15), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி,ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும்,

  //இரண்டு உயிர் தோழிகளை பிரிக்க வேண்டுமா? ரொம்ப சிம்பிள்.ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பிக்கு இருவரையும் திருமணம் செய்து வைத்தாலே போதும்.//

  இது என்ன ஜோக் என்ற பெயரில் தவறான சிந்தனையை வளர்க்கிண்றீர்கள்? என் பெரியம்மாவின் பெண் பிள்ளைகளை ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பிகளுக்கு தான் திருமணம் செய்து கொடுத்ததாம். அல்ஹம்துலில்லாஹ் ரொம்ப நல்லா தான் இருக்காங்க...

  வஸ்ஸலாம்..

  ReplyDelete
 3. கஸாலி,

  ஒனக்கு ஐடியா தெரிஞ்சா சொல்லு , இல்லாட்டி என்கிட்ட கேளு..
  ரெண்டு பொண்ணுகள பிரிக்க என் கல்யாணம் வரை போகணும், வேஸ்ட்...
  ஒரு பொண்ணுட்ட போய், ஒன்னவிட அவ அழகா இருக்கான்னு சொன்னாப் போதும்...
  ஒரு வாரத்தில நட்பு பணால்.....

  இத விட்டுட்டு கல்யாணம் காத்து குத்துன்னு சொல்லிக்கிட்டு....
  ஒனக்கு எத்தன தடவ சொன்னல்லும் புரியாதுடா....

  ReplyDelete
 4. ஐ‌பி‌எல் மாதிரி இடைதேர்தலும் போராடிச்சுருச்சி போலிருக்கு. எங்க ஊரில் கரண்ட் கட் இல்லாத நேரத்தில் எப்போ கரண்ட் போகுமோன்னு திக் திக்குனு இருந்துச்சி. நம்ம நிலைமையை பாருங்க.

  ReplyDelete
 5. சுஜாதா எழுதிய கற்றதும் பெற்றதும் போல நீயும் விரைவில் எழுத ஆரம்பித்துவிடுவாய் என நினைக்கிறேன் .எல்லாம் கலந்து எழுதியது அழகு

  ReplyDelete
 6. joke!
  nallaa irunthathu!
  pala suvaikal!

  ReplyDelete
 7. புதுகோட்டையில இடைதேர்ந்தல் இருந்தும் களையிழந்து இருக்கா...? ஏன் அரசியல்வாதிக திருந்திட்டாங்களா?

  ReplyDelete
 8. hii.. Nice Post

  Thanks for sharing

  For latest stills videos visit ..

  www.ChiCha.in

  www.ChiCha.in

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.