என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, May 16, 2012

2 அ.ராசாவும், விஜயகாந்தும், வழக்கு எண்ணும்...... பொடிமாஸ்(16-05-2012)
நீ.....ண்ட இடைவெளிக்கு பிறகு அல்லது இழுபறிக்கு பிறகு அ.ராசா வெளியே வருகிறார். கடந்த பதினைந்து மாதங்களாக திகாரில் இருந்தவர் முதன்முறையாக ஜாமீன் பெற்றுள்ளார். தான் குற்றமற்றவன் என்று நிருபனமாகும் வரை ஜெயிலிலேயே இருப்பேன் என்றவர் தன் பிடிவாதத்தை மாற்றி ஜாமீன் கேட்டுப்பெற்றிருக்கிறார். அவர் ஜாமீன் பெற்றதில் மகிழ்ச்சி என்று சொல்லியிருக்கிறார் கலைஞர். இத்தனை நாள் ராசாவையையே மறந்திருந்த கலைஞர் இதையாவது சொன்னாரே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

=======================புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தே.மு.தி.க.,சார்பில் அந்தக்கட்சியின் மாவட்ட செயலாளர் ஜாகீரை நிறுத்தி ஜனநாயகத்தை வாழவைத்துள்ளார் கேப்டன். (இவர்தான் வேட்பாளராகக்கூடும் என்று ஏற்கனவே கணித்திருந்தேன்). தி.மு.க., கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் இவருக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் போட்டி சற்று கடுமையாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். புதுக்கோட்டை வாக்களர்களும் சற்று சந்தோசப்பட்டுக்கொள்ளலாம் யானைப்பசிக்கு சோளப்பொறியாவது கிடைக்கும் என்று....

================


விஜயகாந்த் நடித்த சிவப்பு மல்லி உள்பட 4 படங்களுக்கு நான் உதவி டைரக்டராக இருந்தேன். அவருக்கு வசனம் சொல்லிக் கொடுத்தவன் நான். எனவே விஜயகாந்த் நன்றி மறக்கக்கூடாது என்று கூறியுள்ளார் மேதை ராமராஜன்.

இதை எதற்கு இப்ப சொல்கிறார் என்றுதான் என் மரமண்டைக்கு புரியவில்லை. வசனம் சொல்லிக்கொடுப்பது உதவி இயக்குனர்களின் வேலை. அந்த அடிப்படையில்தான் விஜயகாந்திற்கும் ராமராஜன் சொல்லிக்கொடுத்திருப்பார். அதற்காக ராமராஜன் எங்கிருக்கிறாரோ அங்குதான் விஜயகாந்தும் இருக்கவேண்டுமா என்ன?
அப்படியானால்... ராமராஜனுக்கு தொழில் கற்றுக்கொடுத்த குரு இயக்குனர் ராம.நாராயணன் தி.மு.க.,வில் அல்லவா இருக்கிறார். அதற்காக ராமராஜன் தி.மு.க.,விற்கு போய்விடுவாரா?

=====================


முற்றிலும் புது முகங்கள் நடித்து வெளிவந்திருக்கும் வழக்கு எண் 18/9 படம் பார்த்தேன். பேருக்குத்தான் அவர்கள் புதுமுகம். ஆனால், நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். ஐட்டம் சாங், பஞ்ச் டயலாக், அதிரடி சண்டை என்ற வழக்கமான தமிழ்சினிமாவிலிருந்து மாறி பாலாஜி சக்திவேல் இயக்கியிருக்கும் மற்றொரு நல்ல சினிமா இந்த வழக்கு எண்.

 முதல்பாதியில் கந்துவட்டி கொடுமை, விளைநிலங்கள் மனைநிலங்களாக மாறிவரும் நிலை, வட நாட்டு முறுக்கு கம்பேனியில் நடக்கும் அவலம் என்று சமூகத்திற்கு மெசேஜ் கொடுக்கிறார் இயக்குனர். அடுத்த பாதியில் அதிகம் செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் விடலை பசங்களின் தறிகெட்ட நிலை, அவர்களை நம்பும் மாணவிகளின் நிலை என்று பெற்றோர்களுக்கும் எச்சரிக்கை மணி அடிக்கிறார். மொத்தத்தில் இந்த வழக்கை வாய்தா வாங்காமல் உடனே பார்க்கலாம்.Post Comment

இதையும் படிக்கலாமே:


2 comments:

  1. //நீ.....ண்ட இடைவெளிக்கு பிறகு அல்லது இழுபறிக்கு பிறகு அ.ராசா வெளியே வருகிறார்.//

    வெள்ளுடை வேந்தே வருக...!!! [போடோ பாத்ததும் மனதில் தோன்றியது.

    :) :) :)

    ReplyDelete
  2. கனிமொழிக்கு குடுத்த வரவேற்ப்பு போல குடுப்பார்களா ? பாவம் அவர தான் தமிழ்நாட்டுக்குள் வர கூடாதுன்னு சொல்லிடான்களே

    ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.