என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, May 29, 2012

8 ஜனாதிபதி தேர்தலும்.....புதுக்கோட்டை இடைத்தேர்தலும்.....(பொடிமாஸ் 29-05-2012)கடந்த இரு தினங்களாக சென்னையில் பெட்ரோல் தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது.இந்த தட்டுப்பாடு டெங்கு காய்ச்சலைவிட வேகமாக தமிழ்நாடு முழுவதும் பரவும் போல தெரிகிறது. எந்த பெட்ரோல் பங்கில் பார்த்தாலும் ரஜினி படம் வெளியான அன்று தியேட்டரில் கூடும் கூட்டத்தை போல் இருக்கிறது. சில பங்க்களில் போலீசார் நின்று கூட்டத்தை கட்டுப்படுத்துகிறார்கள்.  நமக்கேன் வம்பு என்று சில பங்க்கள் பூட்டிக்கிடக்கிறது.இது இன்னும் எத்தனை நாளுக்கு என்று தெரியவில்லை. அதே நேரம் இது செயற்கையான தட்டுப்பாடா, இல்லை நிஜமாகவே பெட்ரோல் தட்டுப்பாட்டுதானா என்றும் தெரியவில்லை.

எப்படியோ இது மத்திய அரசு கண்ணுக்கு தெரியாமல் இருக்கவேண்டும்...அப்படி தெரிந்தால் இவ்வளவு விலையேற்றத்திற்கு பின்னும் இத்தனை கூட்டம் கூடுவதை பார்த்தால் இன்னும் விலையேற்றினாலும் ஏற்றிவிடுவார்கள்.

===================


அடுத்த உலகம் சுற்றும் வாலிபன் பதவிக்கு அதாங்க ஜனாதிபதி பதவிக்கு காங்கிரஸ் சார்பில் பிரணாப்ஜியே வேட்பாளராக்கப்படுவார் என்று தெரிகிறது. ஏற்கனவே இந்த ரேசில் சுயேட்சையாக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா ஓடிக்கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிக வாக்குகளை வைத்திருக்கும் ஜெயலலிதா இவருக்கு ஆதரவு தெரிவித்து விட்டார். மற்றவர்கள்தான் கொஞ்சம் சுணங்குவதாக தெரிகிறது. இதில் சங்மா கொஞ்சம் புத்திசாலி.... காங்கிரஸின் ஆதரவு தனக்கு வேண்டும் என்பதற்காக சோனியாவை இத்தாலிக்காரர் என்று என்றோ சொன்னதற்காக இன்று மன்னிப்பு கேட்டுள்ளார். சோனியாவை இத்தாலிக்காரர் என்று சொல்லித்தான் சரத்பவாரின் தலைமையில் இவர்கள் வெளியேவந்து தேசியவாத காங்கிரசை ஆரம்பித்தார்கள். நாளடைவில் இந்த கோஷம் நீர்த்துப்போய் சரத்பவாரே காங்கிரசோடு கூட்டணி வைத்துக்கொடு அமைச்சர் பதவியை அனுபவித்து வருகிறார். இந்த லட்சணத்தில் இப்போது சங்மா இப்படி பேசியுள்ளார். பதவிக்காக அரசியல்வாதிகள் எப்படி வேண்டுமானாலும் பல்டியடிப்பார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் இந்த சங்மாஜி

====================

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் 20 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் தே.மு.தி.க.,வேட்பாளர் ஜாஹீர் உசேன் தவிர இன்னும் மூன்று ஜாஹீர் உசேன்கள் சுயேட்சையாக களத்தில் இருக்கிறார்கள். இது தற்செயலாக நடந்ததா? அல்லது பெயர் குழப்பத்தை உண்டுபண்ணி தே.மு.தி.க.,வின் வாக்குகளை பிரிக்க வேறு எந்தக்கட்சியாவது சதி செய்து நிற்கவைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. என்னவோ போங்க....Post Comment

இதையும் படிக்கலாமே:


8 comments:

 1. //இது செயற்கையான தட்டுப்பாடா, இல்லை நிஜமாகவே பெட்ரோல் தட்டுப்பாட்டுதானா என்றும் தெரியவில்லை
  //

  புதிய தலைமுறையில் தெளிவாக சொல்லிவிட்டார்கள் . இது செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று . விலை குறைந்தால் நஷ்டம் வரும் என வியாபாரிகள் கொள்முதல் செய்ய தயன்குகின்றனாறாம் ..

  ReplyDelete
 2. இதுக்கு நடுவுல ஒரு கருணாநிதிய ஜனாதிபதிக்கு நிருத்தனும்னு காமெடி பண்ணுதுங்க

  ReplyDelete
 3. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
  நன்றி

  வலையகம்

  ReplyDelete
 4. பஸ் டிக்கெட் எடுத்துக்கொடுத்தாலும் நான் பரதேசம் போகமாட்டேன்னு ஜனாதிபதி பதவி கௌரவமாகத்தான் இருந்தது.இதை விட்டா ஊர் சுத்தறதுக்கு நல்ல சான்ஸ் கிடைக்காதுன்னு பிரதீபா பாட்டிதான் உலகம் சுத்தும் வாலிபி ஆக்கிட்டாங்க.

  சங்மா தோற்றாலும் சரி!எனது ஆதரவு சங்மாவுக்கே.பிராண ஆப்புக்கு கிடையாது.

  ராஜபாட்டை! நீங்க என்ன புதுசா சரணம் பாடுறீங்க:)

  ReplyDelete
 5. கஸாலி அலசி பதிவு போடுறே

  ReplyDelete
 6. பெயர் குழப்பத்தை உண்டுபண்ணி தே.மு.தி.க.,வின் வாக்குகளை பிரிக்க

  அருமையான பதிவு. நன்றி.

  ReplyDelete
 7. நல்ல கரகர, மொறுமொறு...!

  எனது 100-ஆவது பதிவைப் படித்துவிட்டீர்களா?

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.