என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Sunday, May 20, 2012

7 தி.மு.க.,-அண்ணா.தி.மு.க.,இணைப்பிற்கு தடையாக பின்னணியில் நடந்தது என்ன?
ஒரிசா மாநில முன்னாள் முதல்வர் பிஜூ பட்நாயக், 1979-ல் சென்னை வந்து தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் இணைக்க முயற்சி மேற்கொண்டார். இதற்காக என்னையும், எம்.ஜி.ஆரையும் சந்தித்துப் பேச வைத்தார்.

இணைப்பு முயற்சியை வரவேற்ற எம்.ஜி.ஆர்., அதில் ஆர்வமும் காட்டினார். இரு கட்சிகளும் இணைந்த பிறகு, ‘கட்சியின் தலைவராக நான் இருக்கிறேன். முதல்வர் பதவியில் நீங்களே தொடருங்கள். கட்சிக் கொடியில் அண்ணா படம் இருப்பதில் எனக்கு ஆட்சேபணையில்லை என்று நான் சொன்னவற்றை ஏற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர்., ஓரிரு நாளில் எங்கள் கட்சியின் செயற்குழுவைக் கூட்டி தீர்மானம் போடுகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போனார்.

ஆனால் அடுத்த நாள், ‘இணைப்பு பற்றி வரும் செய்திகளை நம்பாதீர்கள்’ என்று சொன்னார் எம்.ஜி.ஆர். என்று சமீபத்தில் கலைஞர் பேசியிருந்தார்.

இரு கட்சிகளும் இணையாமல் போனதற்கான பின்னணி என்ன என்று இணையத்தில் தேடியதில் பண்ரூட்டி ராமச்சந்திரனின் ஒரு பேட்டி கண்ணில் சிக்கியது. அதன் விபரம் இதுதான்.....

1980 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஜனதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த பிஜூ பட்நாயக், தி.மு.க. - அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளை ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்காக சென்னை வந்த அவர், சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் எங்களைச் சந்தித்தார். எம்.ஜி.ஆர்., நாவலர், நான் ஆகிய மூன்று பேரும் அ.தி.மு.க. சார்பிலும் தி.மு.க. சார்பில் கலைஞரும், முரசொலி மாறனும் அந்தப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டோம். இரண்டு கட்சிகளும் ஒன்றாக இணைந்த பிறகு தலைவராக கலைஞரும், முதல்வ-ராக எம்.ஜி.ஆரும் தொடரலாம் என்று அப்போது பேசப்பட்டது. காலையில் இந்தச் சந்திப்பு நடந்து முடிந்த பின்பு, நானும்(பன்ரூட்டி ராமச்சந்திரன்), எம்.ஜி.ஆரும் புறப்பட்டு, தி.நகர் ஆற்காடு தெருவில் உள்ள எம்.ஜி.ஆரின் அலுவலகத்திற்குச் சாப்பிடச் சென்றோம்.

காரில் வரும்போதே, எம்.ஜி.ஆர். மன்றத் தலைவராக இருந்த முசிறிப் பித்தன், தி.மு.க.வினரால் தாக்கப்பட்டதாக எம்.ஜி.ஆருக்குத் தகவல் வந்தது. என்னிடமும் அதைச் சொன்னார். ‘மேல் மட்டத்தில் தலைவர்கள் ஒன்றுசேர்வது எளிது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான சிற்றூர்களில், பல லட்சம் தொண்டர்கள், தி.மு.க.வினரின் அராஜகத்தால் பாதிக்கப்பட்டு, பல தியாகங்களைச் செய்து, அ.தி.மு.க.வை கட்டிக் காத்து வருகிறார்கள். இணைப்-புக்குப் பிறகு அந்தத் தொண்டர்களின் கதி என்னாவது?’ என்று எம்.ஜி.ஆர். அப்போது சிந்தித்தார்.

இந்த நிலையில் இணைப்பு நடந்தால் தொண்டர்கள் சிந்திய ரத்தமும், அனுபவித்த சிறைவாசமும், அவர்கள் சந்தித்துவரும் வழக்குகளும் தன்னை மன்னிக்காது என்பதை உணர்ந்தார் எம்.ஜி.ஆர். ஆகவே ஆற்காடு தெருவில் உள்ள அலுவலகத்திற்கு வந்து சேரும் முன்பாகவே, அ.தி.மு.க.- தி.மு.க. இணைப்பு சாத்தியமல்ல என்ற முடிவுக்கு வந்துவிட்டார் எம்.ஜி.ஆர். அவருடைய கருத்துக்களை நானும் ஆமோதித்தேன்.

இந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் எம்.ஜி.ஆர். என்னிடம் சொன்னார். அதாவது, கலைஞருடன் சேர்ந்து மேகலா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை ஆரம்பித்ததையும், பின்னாளில் படிப்படியாக சில கணக்குகளை எழுதிவிட்டு, தன்னை அந்த நிறுவனத்திலிருந்து அறவே நீக்கிவிட்டார் கலைஞர் என்றும் தெரிவித்தார். எம்.ஜி.ஆர். இதைச் சொன்னதும், ‘ அ.தி.மு.க.வையும் அதே நிலைக்கு கலைஞர் ஆளாக்கி விடக் கூடாது’ என்று நாங்கள் இருவரும் தீர்மானித்தோம்.

அதன்படி இரு கட்சிகளையும் இணைக்கும் முடிவை கைவிட்டுவிட்டோம். என்று அந்த பேட்டியில் பண்ரூட்டியார் கூறியுள்ளார்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


7 comments:

 1. கருனாநிதயின் ராஜதந்திரத்திர்க்கு ஒரு உதாரணம் நீங்கள் சொன்ன செய்தி

  ReplyDelete
 2. எம் ஜி யாரையே ஏமாத்தியவருக்கு நாமெல்லாம் எம்மாத்திரம்

  ReplyDelete
 3. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் படிக்க வேண்டிய பதிவு
  மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு

  ReplyDelete
 4. சகோ.கஸாலி!முதலில் வாஞ்சூரை பின்னூட்டமிடச் சொல்லுங்க.இல்லைன்னா அவரு கடையில போய் இன்னொரு வடை சுடச்சொல்லுங்க.ஒழுங்கா பதிவு போட்டா படிக்கிறவர்கள் வந்து படிச்சுகிட்டுத்தான் போவார்கள்.

  கலைஞர் கருணாநிதி எவ்வளவு பெரிய தில்லாலங்கடி என்பது தமிழ்நாடு அறிந்த விசயம்.ஆனால் இணைப்பு விசயத்தில் நான் எம்.ஜி.ஆரையே குறை சொல்வேன்.அதனை விட பண்ருட்டி கிள்ளி விடுவதில் கில்லாடியென்றே நினைக்கின்றேன்.

  மேலும் ஒரு ஆளும் கட்சிக்கு மாற்றாக ஒரு எதிர்க்கட்சி அவசியம் என்பதால் கலைஞரும் எம்.ஜி.ஆரும் இணைந்திருந்தால் எதிர்க்கட்சியாக டெல்லிக்கு சொம்பு தூக்கும் காங்கிரஸ் தமிழகத்துக்கு மாற்று கட்சியாக வந்திருக்கும்.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.