என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, May 11, 2012

8 ஆல் ஈஸ் வெல் - இது அரசியல்வாதியின் கதை.....


முன்னாள் அமைச்சர் ஜானகிராமின் வீட்டிற்குள் நுழைந்தனர் சி.பி.ஐ.,யினர்

“சார்... நாங்க சி.பி.ஐ., உங்க வீட்டை ரைடு செய்ய வந்திருக்கோம்”

“உங்க கடமையை நீங்க செய்ங்க....ஆல் ஈஸ் வெல்”

“உங்க போனை ஸ்விட்ச் ஆஃப் செஞ்சிடுங்க....கொஞ்ச நேரம் ஒத்துழைப்பு கொடுத்தா போதும்”

“ஓக்கே...ஆல் ஈஸ் வெல்”

வீடு அலசி ஆராயப்பட்டது....ஏதுமே சிக்கவில்லை.

“சாரி சார்....”

“இதுக்கு எதுக்கு சார் சாரி சொல்லிக்கிட்டு....உங்க கடமையை நீங்க செஞ்சீங்க....ஆனா ஒண்ணு சார்.... நான் பதவியில இருந்தபோது பத்துக்காசு வருமானத்துக்கு அதிகமா சேர்க்கல... மக்களுக்கு நல்லதுதான் செஞ்சிருக்கேன். இது என் அரசியல் எதிரிகளோட சதின்னு நினைக்கிறேன். ஆல் ஈஸ் வெல்”

வெளியில் வந்த சிபிஐ அதிகாரி முகிலனுக்கு பொறி தட்டியது. தன் சக அதிகாரியை அழைத்து காதில் கிசுகிசுத்தார்.

===========================

அடுத்த நாள் பேப்பரில்......

முன்னாள் அமைச்சர் ஜானகிராமின் வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்டிருந்த பலகோடிரூபாய் மதிப்புள்ள பணம்,நகைகள், ஏராளமான பத்திரங்கள் சிக்கின.....

சிக்கியது எப்படி?- சிபிஐ. அதிகாரி முகிலன் பேட்டி.......

முன்னாள் அமைச்சர் ஜானகிராமின் வீட்டில்  நாங்கள் சோதனையிட்டபோது ஏதுமே சிக்கவில்லை. இருந்தாலும் அவர் அடிக்கடி ஆல் ஈஸ் வெல் என்று சொன்னது எனக்கு உறுத்தலாகவே பட்டது. உடனே...அவர் வீட்டின் பின்புறம் கிணறு இருக்கிறதா என்று பார்த்தோம். இருந்தது. உடனே அந்த கிணற்றை சோதனையிட்டபோது ஏராளமான பணம், நகைகள் உட்பட பல கோடி ரூபாய் மதிப்புள்ள டாக்குமெண்ட்கள் எல்லாம் பல பாலிதீன் கவர்களில் அடைக்கப்பட்டு கிணற்றுக்குள் போடப்பட்டிருந்தது. அத்தனையும் கைப்பற்றினோம்.....ஆல் ஈஸ் வெல்...

============================
Post Comment

இதையும் படிக்கலாமே:


8 comments:

 1. "ஆள் இஸ் வெல்" னா ஆள் நல்ல இருக்கான்னு தான் அர்த்தம்??? ஒரு டவுட்டு....
  ஹ..ஹா..ஹா..

  ReplyDelete
 2. இவரு பெரிய வார்த்தை சித்தரு.... இப்பைலாம் கெணத்துக்குள்ள ஏதும் போடறதா இருந்தா பாலிதீன் கவரே தேவை இல்ல...
  ஏன்னா கிணத்துல தான் தண்ணியே இருக்கிறது இல்லையே.....

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும்,

  :) :) :)

  ReplyDelete
 4. அதுக்கு இப்படியும் அர்த்தம் கொடுக்குறாங்களா....என்ன கொடும சரவனா....

  ReplyDelete
 5. ஆல் இஸ் வெல் .....

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.