என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, April 23, 2012

4 கலைஞர், ஜெயா வழியில் நடக்கும் கேப்டன்சட்டசபையில் நாக்கை துருத்தக்கூடாது என்று சட்டம் இருக்கா என்று சமீபத்தில்தான் கேட்டார் கேப்டன். இப்போது சட்டசபைக்கு போகவேண்டும் என்று சட்டம் இருக்கிறதா என்று கேட்டுள்ளார். அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், கலைஞர் முதல்வராக இருக்கும் போது ஜெயா வந்தாரா? ஜெயா முதல்வராக இருக்கிற போது கலைஞர் வந்தாரா என்றும் கேட்டிருக்கார்.
கலைஞருக்கு மாற்றாக நானிருப்பேன்.. ஜெயலலிதாவுக்கு மாற்றாக நானிருப்பேன் என்றுதானே நீங்கள் வாக்கு கேட்டீர்கள் கேப்டன். அதனால்தானே உங்களை எதிர்கட்சித்தலைவர் அந்தஸ்திற்கும் மக்கள் உயர்த்தினார்கள். இப்போது பல்டியடித்து கலைஞர் ஜெயா வழியில் நடப்பேன் என்பது எந்த விதத்தில் நியாயாம்?

இன்னொரு முக்கியமான விஷயம்....சட்டசபையில் நாக்கை துருத்தக்கூடாது என்று சட்டம் இருக்கிறதோ இல்லையோ நமக்கு தெரியாது. ஆனால், எம்.எல்.ஏ.,என்றால் சட்டசபைக்கு போகவேண்டும் என்பதுதான் எழுதப்படாத சட்டம். அதற்குத்தான் உங்களை எம்.எல்.ஏ.,வாக்கியுள்ளார்கள் மக்கள். அங்கு போய் பேசத்தான் வேண்டும். அப்படியும் அங்கு உங்கள் கருத்தை பதிய முடியாதவாறு  ஆளுங்கட்சி இடையூறு செய்தால் பேசாமல் ராஜினாமா செய்துவிடுங்களேன். மக்கள் பார்த்துக்கொள்வார்கள் அவர்களை......

==========================

சட்டசபையில் விஜயகாந்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை இடப்பற்றாக்குறை காரணமாக சுருக்கிவிட்டார்களாம். அமைச்சர் ஓ.பி.யிலிருந்து சபாநாயகர் வரை விளக்கம் சொல்லிவிட்டார்கள். இனி இதைப்பற்றி ஜெயலலிதா விளக்கம் சொன்னால்....(ஒரு கற்பனை)...

எதிர்கட்சித்தலைவரின் அறையை சுருக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் எங்களுக்கு இல்லை. இப்போது மின் பற்றாக்குறை காரணமாக அந்த அறையில் ஏ.சி., சில நேரங்களில் வேலை செய்வதில்லை என்று கேள்விப்பட்டேன்.  அறையோ பெரியது. ஆனால், ஏ.சி.யோ ஒரு டன்தான். இந்த சின்ன ஏசியிலிருந்து வரும் குளிர்காற்று அந்த அறையை முழுமையாக குளிரூட்டமுடியவில்லை என்று சொன்னார்கள்.அதனால், ஏசியை மாற்றுவதை விட, அறையை சின்னதாக்கிவிட்டால் ஏசிக்காற்று எல்லா இடங்களிலும் அப்ளையாகி விரைவில் ரூம் குளிர்ந்துவிடும் என்பதால் அறையை சுருக்கிவிட்டோம்...வேறெந்த உள் நோக்கமும் எனக்கு இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


4 comments:

  1. //கலைஞர் முதல்வராக இருக்கும் போது ஜெயா வந்தாரா? ஜெயா முதல்வராக இருக்கிற போது கலைஞர் வந்தாரா//

    டவுட்டு.. என்னானா அப்ப எல்லாம் இது ஒரு மேட்டராவே யாரும் எடுத்துகல ஆனா இப்ப இது தான் மேட்டர் தெரியுதே.....ஒய்?

    ReplyDelete
  2. pochaa.,,?
    kettikaaran poiyi ettu nAalaikku!

    ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.