என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, April 16, 2012

15 முஸ்லீம் பதிவர்களும்.....கலைஞரின் தந்திரமும்......
 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ் புத்தாண்டு மீண்டும் தைத்திங்களுக்கு மாறிவிடும் என்று சொல்லியிருக்கிறார் கலைஞர். வழக்கமாக ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஆட்சிதான் மாறும். முதல்வர்தான் மாறுவார்கள். ஆனால் இப்போது புத்தாண்டும் மாறிவிடுகிறது. இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது? சரி மாறாதது ஓட்டுப்போட்ட மக்களின் நிலைமைதான். அதுதான் நிதர்சனம்.

                                                    ==================================

தமிழ்புத்தாண்டை சித்திரைக்கு மாற்றியமைத்தார் ஜெ....அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கலைஞர் என்ன செய்திருக்க வேண்டும்.....அந்த சித்திரை புத்தாண்டை கண்டுகொள்ளாமல் விட்டிருக்க வேண்டும்....ஆனால், கலைஞரோ தன் குடும்ப தொலைக்காட்சியான கலைஞர் டி.வி.யில் சிறப்பு நிகழ்சியெல்லாம் போட்டு கல்லா நிரப்பிவிட்டார்கள். ஆனால், மீசையில் ஒட்டாதது போல....விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் என்றும் போட்டுக்கொண்டார்கள். என்னவோ சித்திரையில் மட்டும்தான் விடுமுறை வருவதுபோல....
அதான் மாதத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை விடுமுறைதான் வருகிறது. அப்போதெல்லாம் இப்படி சிறப்பு நிகழ்ச்சி போட்டால் சரி....அதென்ன சித்திரைக்கு மட்டும் விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சி?
எப்படியோ ஜெயலலிதா சொன்னதுபோல் கலைஞர் வியாபார தந்திரம் மிக்கவர்தான்.

இதில் சன் டி.வி.,க்காரர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள்....சித்திரை புத்தாண்டு என்றும் போடாமல், விடுமுறை நாள் என்றும் போடாமல் 19-ஆம் வருட துவக்கம் என்று போட்டுவிட்டார்கள்.

                                             ==========================


நேத்து முகப்புத்தகத்துல ஒரு செய்திய போட்டேன்..... அதாவது அதில் விபச்சாரின்னு ஒரு வார்த்தை வந்திடுச்சு....செய்தியை போட்ட அடுத்த நிமிஷமே நம்ம எதிர்க்குரல் ஆஷிக் பாய் வந்து இந்த வார்த்தை கொஞ்சம் ஆபாசமா இருக்கு, இந்த வார்த்தையை நீக்கிடுங்களேன்னு சொன்னாரு. சரி எதுக்கு வம்புன்னு அதை நீக்கிட்டேன்.....

இப்படித்தான் கொஞ்ச நாளுக்கு முன்னாடி எனக்கு அங்கீகாரம் கொடுத்த விகடன்னு ஒரு பதிவை போட்டுட்டு அதுக்காக அந்த வார விகடன் அட்டைப்படத்தை எடுத்து போட்டேன்...அட்டைப்படம் கவர்ச்சியா இருக்கு....பெண்களை போகப்பொருளாக நினைக்க வேண்டாம். அந்த படத்தை எடுத்துடுங்கன்னு ஆஷிக்பாய்தான் சொன்னாரு

அதுக்கு முன்னாடி ஒரு பதிவுல ஃபிகர்ன்னு எழுதி தொலைச்சிட்டேன். அதுக்கு டீக்கடை சிராஜும் கமெண்ட் போட்டுட்டான். ரெண்டு பேருக்குமே வில்லங்கம் வந்துருச்சு.....
பெண்களை பெண்கள் என்றே கண்ணியமாக சொல்லுங்கள்...அதை விடுத்து ஃபிகர், கிகர்ன்னு எழுதி அவமரியாதை செய்வது தவறுன்னு சொல்லி அந்த வார்த்தையை நீக்கிவிடுமாறு சொன்னார்.... சொன்னது யாரா?ஆமா...அவரேதான்.

அதுக்கு முன்னாடி நம்ம கர்நாடக பிஜேபியினர் சட்டசபையில் ஆபாசப்படம் பார்த்ததைபற்றி கில்மா என்ற வார்த்தையை தலைப்பில் சேர்த்திருந்தேன்... ஆபாசமாக எழுத வேணாம் என்று கண்டனக்குரல் வந்தது. ஆபாசப்படம் பார்த்த அவர்களே நிம்மதியாக இருந்தார்கள். எழுதிய நான் மாட்டிக்கொண்டேன்.....

ஒவ்வொருத்தரும் எப்படி எப்படியோ எழுதிக்கு இருக்கும்போது என்னை தொடர்ந்து கண்காணிச்சுக்கே இருக்காங்க முஸ்லீம் பதிவர்களில் சிலர்.....
நல்லவேளையா நான் முன்னாடி எழுதியிருக்க பதிவை எல்லாம் படித்திருக்க மாட்டார்கள் போல..... அப்படி படிச்சிருந்தா அந்த பதிவுகளில் பாதிக்கு மேல அழிக்க சொல்லிருப்பாங்க...ஆமா..... நிஜம்தான். நான் எழுதிய 400+ பதிவுல ஒரு நூறு நல்ல பதிவு தேறுவதே கஸ்டமா போயிருக்கும்.

இருந்தாலும் எனக்கு ஒரு சந்தோஷம்...... முஸ்லிம் பதிவர்கள் ரொம்பவும் கண்ணியமாகவும், ஆபாசமில்லாமலும், அருவருக்கத்தக்க வகையில் இல்லாமலும் எழுதவேண்டும் என்ற அவர்களின் டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு......

                                          


Post Comment

இதையும் படிக்கலாமே:


15 comments:

 1. உங்கள் வலைபூவை அழகுபடுத்துங்கள் ( எந்த மென்பொருளும் தேவை இல்லை ) ----- http://www.mytamilpeople.blogspot.in/2009/09/blog-post_29.html

  ReplyDelete
 2. இருந்தாலும் எனக்கு ஒரு சந்தோஷம்...... முஸ்லிம் பதிவர்கள் ரொம்பவும் கண்ணியமாகவும், ஆபாசமில்லாமலும், அருவருக்கத்தக்க வகையில் இல்லாமலும் எழுதவேண்டும் என்ற அவர்களின் டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.....// மாஷா அல்லாஹ்... முஸ்லிம் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள் !!!

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,
  தொலைக்காட்சிகாரர்களின் தொல்லைகள் தாங்கமுடியவில்லை சகோ.ரம்ஜான் & பக்ரீத் நாளன்று அதை சிறப்பாக்காமல் எந்தவொரு நிகழ்ச்சியும் போடாதிருந்தார்கள்.சமீப காலமாக ரம்ஜான் & பக்ரீத்தையும் விட்டுவைக்கவில்லை."ஈத் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்" என்று போட ஆரம்பித்து விட்டார்கள்.முஸ்லிம்களின் ஏகோபித்த ஆட்சேபனையினால் கைவிடப்பட்டாலும் விடுமுறை நாள் கொண்டாட்டம் என்று பெயரை மாற்றி நிகழ்ச்சி நடத்தி தங்களுடைய கல்லாவை நிறப்பிக்கொண்டார்கள்.

  ReplyDelete
 4. கலைஞரின் வியாபார தந்திரம்தான் ஊரரிந்ததே... அப்புறம் முஸ்லிம் பதிவர்கள் மட்டும் கண்ணியமா எழுதினா போதுமா?

  ReplyDelete
  Replies
  1. அப்படியல்ல... மற்ற பதிவர்களும் கண்ணியமாக எழுதினால் நன்றாக இருக்கும்.

   Delete
 5. சலாம் சகோ!

  சிறந்த பதிவு. சிறந்த புரிதல்.

  ReplyDelete
 6. சலாம் சகோ!

  சிறந்த பதிவு. சிறந்த புரிதல்.

  ReplyDelete
 7. கசாலி நானா.....

  ஆமாம்...ஆமாம்.... உன்னால நான் பல தடவ குட்டு பட்டிருக்கேன்....நீ ஏதாவது பதிவு போட்டு அதில ஆபாச வார்த்தை வந்திட்டா போதும்...நான் கூட பதிவ படிச்சு இருக்க மாட்டேன்.... அதுக்கிடையில 5 அல்லது 6 chat விண்டோ ஓபன் ஆகி இருக்கும்... "சலாம் சகோ! ஏன் உங்க friend இப்டி எழுதுறாரு??? நீங்களாவது சொல்லலாம்லன்னு". நான் சொல்லுவேன்,
  நான் இன்னும் படிக்கல, இருங்க பாக்கிறேன்னு சொல்லுவேன்.... ஹா...ஹா...ஹா....

  ஆகையால்..தயவு செய்து இனி தவறான வார்த்தைகள பொதுவில் பகிராத...

  ReplyDelete
 8. //முஸ்லீம் பதிவர்களும்.....கலைஞரின் தந்திரமும்..//

  நல்லா இருக்கய்யா....

  ReplyDelete
 9. அதானே...கலைஞர் டீவில் சித்திரை திங்கள் சிறப்பு நிகழ்ச்சி..போட்டார்களே ஏன் வைகாசி திங்கள், ஆடி திங்கள், கார்த்திகை திங்கள் சிறப்பு நிகழ்ச்சி இல்ல. ஏன்னா....தமிழன்!!!!!!!!!!!!????

  சரி விடுங்க பாஸ்

  எந்த மொழிக்குமே வாய்க்காதா ஒரு சிறப்பு தமிழுக்கே . ஆண்டுக்கு இரண்டு முறை புத்தாண்டு கொண்டாடுவது என்பது சாதாரண விசயமா கலைஞர் தந்திரம் செம சூப்பர்.

  தனி சிறப்பு - அதனால தான் 2011 ல் தமிழ் புத்தாண்டே கொண்டாட பட வில்லை.

  ReplyDelete
 10. முஸ்லீம்கள் மட்டுமல்ல கஸாலி சார். கிட்டதட்ட உங்கள் பதிவுகளை ரசிக்கும் அனைவருமே இப்படி எதிர்பார்க்கிறார்கள். ஒரு சிலர் வெளியில் சொல்ல மாட்டார்கள். நான் உட்பட.. ஒரு சிலர் வெளிப்படையாக சொல்லிவிடுவார்கள்.. இதில் பாகுபாடு ஏதுமில்லை...!!! எனினும் வெளிப்படையாக சொல்லி வார்த்தைகளை நீக்க வைத்த நண்பர்களுக்கு எனது நன்றி பாராட்டுதல்கள்..!!!

  ReplyDelete
 11. பெண்களும் படிப்பார்களே, அப்போது நம்மைபற்றி அவர்கள் மனதில் நிச்சயம் நல்ல அபிப்ராயம் வருமா என்று அனைத்து பதிவர்களும் சிந்திக்க வேண்டும்!

  குட்டுபட்டதையும் அழகாகவே சொல்லீருக்கிறீர்கள் சகோ.கஸாலி!

  ReplyDelete
 12. ம்ம்ம்
  நல்ல பதிவு சகோ

  ReplyDelete
 13. டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு......

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.