என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, April 05, 2012

10 ஜெயாவின் பொறுப்பற்ற பதிலும், ஓ.பன்னீர் செல்வத்தின் தத்துவமும்....2011 ஆம் ஆண்டு  தி.மு.க.,ஆட்சி இறுதியில் அதாவது ஜனவரி, பிப்ரவரியில் 800 திருட்டுக்களும்,  இந்த ஆண்டு (2012) ஆம் ஆண்டு இரு மாதத்தில் என் ஆட்சியில் 729 திருட்டுக்களும் நடந்துள்ளது. அதாவது தி.மு.க.,ஆட்சியை விட என் ஆட்சியில் திருட்டு கொஞ்சம் குறைந்துள்ளது.

அதைப்போல் கடந்த ஆண்டு தி.மு.க.,ஆட்சியில் 153 கொலைகள் நடந்துள்ளது. ஆனால், என் ஆட்சியில் அதைவிட குறைவாக 123 கொலைகள் தான் நடந்துள்ளது என்று ஜெயலலிதா தி.மு.க.,ஆட்சியோடு தன் ஆட்சியை ஒப்பிட்டு பேசியுள்ளார்.
இதைசொல்லவா இவரை முதலமைச்சராக தமிழக மக்கள் அமர்த்தினார்கள்?

ஒரு கடையில் ஒருவன் 1000 ரூபாய் திருடிவிட்டான் என்பதற்காக அவனை வேலையிலிருந்து நீக்குகிறார் முதலாளி. அதே வேலைக்கு வேறு ஒருவனை அமர்த்துகிறார். அவனும் 800  ரூபாய் திருடுகிறான். உடனே முதலாளி அவனிடம் ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டதற்கு  முன்பு திருடியவனை விட நான் கம்மியாகத்தானே திருடுகிறேன் என்று சொன்னானாம். அதுப்போல்தான் இருக்கிறது ஜெயலலிதா சொல்வதும்.

===========================

எங்களுக்கென்று தனி சொந்தம் இல்லை. அம்மாவின் சொந்தமே எங்கள் சொந்தம். எங்களுக்கென்று தனி நட்பு இல்லை. அம்மாவின் நட்பே எங்கள் நட்பு. எங்களுக்கென்று தனி சிந்தனை இல்லை. அம்மாவின் சிந்தனையே எங்கள் செயல். எங்களுக்கென்று தனி வழி இல்லை. அம்மாவின் வழியே எங்கள் வழி. அம்மாவுக்கு எங்கள் உடல், பொருள், ஆவி என, அனைத்தையும் தியாகம் செய்தோம் என்று தத்துவ முத்துக்களை உதிர்த்துள்ளார் முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் நிதியமைச்சருமான ஓ.ப்ன்னீர்செல்வம்.

இதை தனியா வேற சொல்லனுமா? அதான் தெரியுமே?
அதுசரி....இப்படி தனித்தனியா பிரிச்சு சொன்னதற்கு பதில் ஒரே வார்த்தையில் சொல்லிட்டுபோயிருக்கலாம் நாங்கள் எல்லாம் ரோபோ அல்லது அடிமை என்று.......


Post Comment

இதையும் படிக்கலாமே:


10 comments:

 1. கஜாலி,

  பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்களை திட்டாதே... அவர்கள் இல்லாவிட்டால் நீ அரசியல் பதிவு எழுதி காலத்தை ஓட்ட முடியாது...
  ஆமாம் சொல்லிபுட்டேன்....

  ReplyDelete
 2. நச்
  நச்
  -னுகீது

  ReplyDelete
 3. படமும், அதை உறுதிப்படுத்தும் ஐயாவின் வாக்கு மூலமும் அருமை!.

  ReplyDelete
 4. //இப்படி தனித்தனியா பிரிச்சு சொன்னதற்கு பதில் ஒரே வார்த்தையில் சொல்லிட்டுபோயிருக்கலாம் நாங்கள் எல்லாம் ரோபோ அல்லது அடிமை என்று.......//
  ஹா ஹா!கலக்கல்

  ReplyDelete
 5. எடுத்துக்காட்டு அருமை.. :)
  இது பற்றிய என் பதிவு
  http://www.vasanth-home.blogspot.in/

  ReplyDelete
 6. athu than unmai.....intha kevalatha mathave mudiyathu.....

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.