என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, February 22, 2012

32 மின்வெட்டுக்கு நன்றி-இப்படிக்கு திருடர்கள்....இது இருட்டு+திருட்டு ஸ்பெஷல்......மின்வெட்டு, மின் தடை யாருக்கு லாபமோ இல்லையோ இதோ திருடர்களுக்கு கொள்ளைலாபம். இந்த சம்பவங்களை படியுங்கள் புரியும். இவையெல்லாம் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த திருட்டுக்கள்.

மதுரை வண்டியூரில் அடுத்தடுத்த வீடுகளில் 42 பவுன் கொள்ளை, 

 நரிக்குடி என்ற ஊர் அடகுக்கடையில் 15 பவுன் கொள்ளை.


சென்னை சேலையூர் மாடம்பாக்கத்தில் 15 லட்சம் கொள்ளை. 


காரைக்குடி அருகே வீட்டின் கதவை தட்டி இரு பெண்களிடம் தலா 3 பவுன் கொள்ளை


மணச்சநல்லூரில் 10 பவுன் நகை+ 2லட்சத்து 20 ஆயிரம் பணம் கொள்ளை


காஞ்சிபுரத்தில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை.


அதைவிட கொடுமை இது....
திருவண்ணாமலை தானிப்பாடியில் இரவு 8 மணிக்கு மின் தடை ஏற்பட்டிருந்தது.அதை பயன்படுத்தி 13 வயது பையனை கடத்திசென்றுள்ளனர் மர்ம நபர்கள்.
யார் சொன்னது? மின்வெட்டு இருந்தால் பிழைக்க முடியாது என்று.....
இதோ திருடர்கள் பிழைத்துக்கொண்டுதானே இருக்கிறார்கள். தொடரட்டும் மின்வெட்டு.....வாழட்டும் திருடர்கள்.

இதன் தொடர்புடைய இன்னும் இரு இடுகைகள்.....


Post Comment

இதையும் படிக்கலாமே:


32 comments:

 1. வீட்டுக்கொரு புலி வளர்க்க லோன் தர வேண்டும் அரசாங்கம். அதை உள்ளே பூட்டி விட்டு தைரியமாக நாம் வெளியே செல்லலாம். :)

  ReplyDelete
  Replies
  1. யோவ்.... நீ ரொம்ப ஆபத்தான பேர்வழிய்யா.....

   Delete
 2. ஒரே டிஸ்...மூன்று பேர் சமையல்...

  ReplyDelete
  Replies
  1. ஆம்...ஆனால், வெவ்வேறு கோணங்களில்

   Delete
 3. இந்த வரியை உங்கள் பதிவில் போட ஞாபகப்படுத்த சொன்னீர்கள். சேர்த்து கொள்ளுங்கள் கஸாலி. ஆளும் கட்சியையே ஆட்டுவிக்கும் தைரியம் உங்களைத்தவிர எவருக்கும் இல்லை. என்னமோ செய்ங்க. நான் கெளம்பறேன்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு வில்லங்கம் வேறெங்கும் இல்லை. பக்கத்திலேயே இருக்கு.

   Delete
 4. தமிழக முற்போக்கு தேசிய சமத்துவ முன்னணி கழகம்,
  - நிறுவனர்: ரஹீம் கஸாலி.

  தமிழனுக்கான விடியல் விரைவில்!!!

  ReplyDelete
  Replies
  1. இந்த பேரை ஒருத்தன் சொல்ல ஆரம்பிச்சாலே மூச்சுத்தினறி செத்துப்போயிடுவானே...ஏன் இந்த கொலை வெறி

   Delete
 5. நீங்கள் சேர்க்க மறந்த வரி:

  "இந்தப் புழுக்கத்திலும் அமைச்சர் பன்னீர்செல்வம் எப்படித்தான் முழுக்கை சட்டை போட்டிருக்கிறாரோ??"

  ReplyDelete
  Replies
  1. என்ன செய்வது முழுக்கை சட்டை போட்டுத்தானே ஆகனும். புழுக்கமா இருக்கு கரண்டு இல்லேன்னு சொல்லிட்டு பட்டனை கழட்டிவிட்டுட்டு திரிஞ்சா மின்வெட்டை காட்டிக்கொடுத்துட்டாருன்னு பதவி பறிபோயிடுமே

   Delete
 6. யோவ்... நான் வெளில திரியறது பிடிக்கல போல....என்னை உள்ளே அனுப்ப திட்டமிட்டதுபோல் தெரியுது

  ReplyDelete
 7. ///! சிவகுமார் !Feb 21, 2012 11:16 PM
  தமிழக முற்போக்கு தேசிய சமத்துவ முன்னணி கழகம்,
  - நிறுவனர்: ரஹீம் கஸாலி.

  தமிழனுக்கான விடியல் விரைவில்!!!////

  இதுல மறுமலர்ச்சின்னு வரலையே?

  தமிழக முற்போக்கு மறுமலர்ச்சி தேசிய பாட்டாளி சமத்துவ திராவிட கழகம்

  இப்ப கரெக்டா? இத வெச்சே ஓட்ட அள்ளிடுவோம்ல... எப்பூடி.....?

  ReplyDelete
  Replies
  1. அண்ணே நம்ம கட்சி பேர்ல இன்னும் காங்கிரஸ் மட்டும் மிஸ்ஸிங். அதையும் சேர்த்துட்டா பேரு ஃபினிசிங் ஆயிடும்

   Delete
 8. தமிழகத்திலும் சரி, மற்ற ஊர்களில் இருக்கும் தமிழர்களிலும் சரி, அம்மா ஆட்சியை எதிர்த்து எழுதும் சக்தி மிகுந்த ஒரே நபர் நம்மாளுதான்.

  ReplyDelete
  Replies
  1. இப்படி ஆளாளுக்கு தூபம் போடுங்க...அப்பத்தானே நம்ம மேலயும் ஒரு நில அபகரிப்பு பொய் கேஸ் பாயும்.

   Delete
 9. தற்போது நடப்பதெல்லாம் சைடு பிச்சர்தாங்க...

  மெயின் பிச்சர் இன்னும் இருக்கு பாருங்க...

  ReplyDelete
  Replies
  1. என்னங்க இது சைடு பிக்சரே இப்படி டெர்ரரா இருந்தா மெயின் பிக்சர் எப்படி இருக்குமோ? நினைச்சாலே பதறுதே

   Delete
 10. Iruttu, Thiruttu, Uruttu, Purattu

  - Tamilnadu ethilum No.1 than Sir.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா....எதுகை மோனையுடன் ஒரு அழகான கருத்து சொல்லிருக்கீங்க....

   Delete
 11. கொடுமை இது...!வாழட்டும் திருடர்கள்..!

  ReplyDelete
 12. தொடரட்டும் மின்வெட்டு.....வாழட்டும் திருடர்கள்.

  ReplyDelete
 13. -
  மேட்டுபாளயத்தில் இரவு நேர மின்வெட்டால் இரண்டு பெண்கள் கற்பழிக்கபட்டார்கள் இது உங்க லிஸ்டில் இல்லையே. அதுக்ககா மேட்டுபாளையம் (கோயம்புத்தூர்)முக்கிய சந்திப்பில் சாலை மறியல் நடத்தினார்களே.

  ReplyDelete
  Replies
  1. இன்னும் என்னன்ன கொடுமையெல்லாம் நடக்க போகுதோ

   Delete
 14. nalla adi!
  saattai adiyaa !
  serupadiyaa neengalae
  mudivu seythu kollungal!

  ReplyDelete
  Replies
  1. அதையும் நீங்களே சொல்லிடுங்களேன்......

   Delete
 15. நிழல் மனிதர்களுக்குக் கொண்டாட்டம்தான்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அய்யா...வருகைக்கு நன்றி

   Delete
 16. ஆமாம் தோழர்..மின் வெட்டின் போது விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.இன்னும் அதிகமாகும் என்றே தோன்றுகிறது.

  ReplyDelete
 17. ஆமா.........இது காமடி பதிவுதானே? நல்ல காமடியா இருக்கு.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.