என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, February 21, 2012

20 சங்கரன்கோவில் இடைத்தேர்தல்- மோதும் குமார்கள், முந்தும் செல்வி......ஜெயிக்கப்போவது யாரு?சங்கரன்கோவில்..... இன்னும் சில நாட்களில் பனிப்பொழிவை விட பணப்பொழிவு அதிகமாகிவிடும் ஒரு தொகுதியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.வாக்களர்களெல்லாம் திடீர் குபேரனாகிவிடுவார்கள்.
அடடா... நம்ம தொகுதிக்கும் இடைத்தேர்தல் வராதா என்று மற்ற தொகுதிவாசிகள் ஏங்கும் அளவிற்கு நிலமை இருக்கும்.
 ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் தத்தம் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.

அண்ணா தி.மு.க.,சார்பில் முத்துசெல்வியும்
தி.மு.க.,சார்பில் ஜவஹர் சூர்யக்குமார்
ம.தி.மு.க.,சார்பில் சதன் திருமலைக்குமார்
தே.மு.தி.க.,சார்பில் முத்துக்குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இதில் சதன் திருமலைக்குமார் ஏற்கனவே 1996-இல் ராஜபாளையம் தொகுதியிலும், 2001-இல் சங்கரன்கோவில் தொகுதியிலும் ம.தி.மு.க.,சார்பில் போட்டியிட்டுதோல்வியடைந்தவர். 2006-இல் வாசுதேவநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று 2011 வரை ச.ம.உ.,வாக இருந்தவர்.
எனவே தொகுதி முழுவதும் நல்ல அறிமுகம் இருக்கிறது.
அதைப்போல் இது வைகோவின் சொந்ததொகுதியும் கூட... அவருக்கு தனிப்பட்ட முறையில் செல்வாக்கு இருந்தாலும் அந்த செல்வாக்கு ஜெயிக்கும் அளவிற்கு இல்லை என்பதே நிஜம்.

அடுத்ததாக, ஆளுங்கட்சியின் வேட்பாளர் முத்துசெல்வி...இவர் தற்போதைய சங்கரன்கோவில் நகராட்சி தலைவரும் இவரே....அத்துடன் இந்த தொகுதியில் கடந்த நான்கு முறையும் அண்ணா.தி.மு.க.,வே வெற்றிபெற்றுள்ளது. ஜெயலலிதாவே 1996-இல் பர்கூரில் தோற்றபோதும் இங்கு கருப்புசாமி வெற்றியடந்திருந்தார். அத்துடன் ஆளுங்கட்சி வேறு.....

கடந்த 1991-ஆம் ஆண்டிற்கு பின் நடந்த அத்தனை இடைத்தேர்தல்களிலும் ஆளுங்கட்சியே வெற்றிபெற்று வருவது அல்லது வெற்றியை விலைகொடுத்து வாங்குவது வரலாறு. பேருந்து கட்டண உயர்வு, பால் விலையேற்றம், மின் தடை போன்ற காரணங்கள் ஆளுங்கட்சிக்கு பாதகமாக இருந்தாலும், அண்ணா.தி.மு.க.,வின் தாராளமான பணப்புழக்கம் அந்தக்குறைகளை மறைத்துவிடும் என்றே தெரிகிறது.

அத்துடன் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வரும்முன்பே  அரசு வழங்கும் இலவச  விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்ற விலையில்லா  பொருட்களின் வினியோகங்கள்  நடைபெற்று முடிந்துவிட்டது. இது போதாதா அண்ணா.தி.மு.க.,வெற்றிபெற?......

தி.மு.க., தே.மு.தி.க.,போன்ற கட்சிகளின் வேட்பாளர்கள் புதிய முகங்களாக இருப்பதால் கரையேறுவது சிரமம் என்றே நினைக்கிறேன். 

ஆளுங்கட்சியே இடைத்தேர்தல்களில் வெற்றிபெறும் என்ற கடந்த கால வரலாறு இங்கும் நடக்கும் என்றே நினைக்கிறேன். இரண்டாம் இடத்திற்கு மதி.மு.க.,வும், தி.மு.க.,வும் முட்டினாலும் நூலளவு வித்தியாசத்தில் ம.தி.மு.க.,வே வரும் என்பது என் கணிப்பு.

இது முதல்கட்ட என் கணிப்புதான். களம் சூடுபிடிக்கையில்  அப்போதைய நிலவரங்களை அவ்வப்போது பார்ப்போம்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


20 comments:

 1. எதிர்கட்சிகள் எல்லாமே போட்டி போடுவதற்கு பதில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி இருக்கலாம்...

  ReplyDelete
  Replies
  1. பொது வேட்பாளரை எந்தக்கட்சியில் தேர்ந்தெடுப்பது என்பதுதான் பிரச்சினையே

   Delete
 2. களள ஆய்வு அருமை.

  //எதிர்கட்சிகள் எல்லாமே போட்டி போடுவதற்கு பதில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி இருக்கலாம்..//

  நீங்களே இதை கலைஞருக்கு மெயில் அனுப்பி சொல்லிடுங்க, ஸாரி ஒரு கடிதம் போட்டு சொல்லிடுங்க அதிரடி ஹாஜா. :)

  ReplyDelete
 3. கசாலி,

  என்னோட கணிப்பு...
  அதிமுக - முதல் இடம்
  திமுக - இரண்டாவது இடம்
  மதிமுக - மூன்றாவது இடம்
  தேமுதிக - நாலாவது இடம்

  ReplyDelete
  Replies
  1. கடைசி நேர பிரச்சார வியூகங்கள் எப்படி என்பதை பொறுத்துதான் இது அமையும்

   Delete
 4. இன்னொரு கணிப்பு....

  இந்த இடைதேர்த்தாலே ஒரு வெட்டி வேல. பேசாம ஆளும் கட்சிக்கு அந்த தொகுதிய கொடுத்துட்டு, அவங்களையே ஒரு MLA வ தேர்ந்து எடுத்துக்கொள்ள சொல்லலாம்.
  நீ என்னா நினைக்கிற????

  ReplyDelete
  Replies
  1. இது நல்லாத்தான் இருக்கு....

   Delete
 5. Replies
  1. இப்ப எதுக்கு இந்த விளம்பரம்?

   Delete
 6. யார் ஜெய்தாலும் கடைசியில் தோர்ப்பது நாமதான் ..

  ReplyDelete
  Replies
  1. அடடா...அருமையான வாசகம் இது.

   Delete
 7. Replies
  1. பார்க்கிரேன் நண்பா////

   Delete
 8. என்னமா எழுதறிங்க. நமக்கு அரசியல் பதிவு வரமாட்டேங்குது. ஏதோ உங்கள மாதிரி ஆள்களால நாலு விஷயம் தெரிஞ்சிக்கிடறேன். நல்லாருக்கு சார் பதிவு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...எனக்கும் உங்களைப்போல் கவிதை எழுத வராது.

   Delete
 9. வணக்கம் சகோ ! இன்றைய வலைச்சரத்தில் தங்களது இடுகையை அறிமுகப்படுத்தியுள்ளேன்.நேரமிருக்கும் போது வந்து வாசிக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன்
  மனம் கவர்ந்த பதிவுகள்

  நன்றி
  சம்பத்குமார்

  ReplyDelete
  Replies
  1. அறிமுகத்திற்கு நன்றி நண்பரே.....போய் பார்க்கிறேன்.

   Delete
 10. arasiyal arasal!
  nallaa irukku!
  kala aayvai ethir paarkkiren!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி....கள ஆய்வு விரைவில் வரும்

   Delete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.