என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, February 13, 2012

24 இந்த கொடூரனை உடனடியாக தூக்கிலிடுங்கள் யுவர் ஹானர்......


நேற்று முன்தினம்  நெஞ்சை பதைபதைக்க வைக்கும் ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது.  அதாவது, திருச்சியில் பஸ் டிரைவருக்கும், லாரி டிரைவருக்கும் ஓவர்டேக் செய்வதில் ஏற்பட்ட தகராறு முற்றி  பஸ்சிலிருந்து கீழே இறங்கிய பஸ் டிரைவரை பல பயணிகள் முன்னிலையில் லாரியை ஏற்றி கொன்றிருக்கிறான் கோபமான அந்த லாரி டிரைவர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவத்தை பார்த்து படணிகள் திகிலில் உறைந்து போயிருந்த அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி லாரியுடன் தப்பியிருக்கிறான் அந்த பாதகன்.

உடனே போலிசுக்கு தகவல் பறந்து அடுத்த செக்போஸ்டில் லாரியுடன் அவனை மடக்கியிருக்கிறார்கள். சம்பவ இடத்திலேயே உயிர் போன பஸ் டிரைவருக்கு மனைவியும், பிளஸ் ஒன் படிக்கும் மகளும், எட்டாவது படிக்கும் மகனும் உள்ளனர். அவர்களின் கதி இனி என்னவாகும் என்று தெரியவில்லை. 

கொல்லப்பட்ட பஸ் டிரைவர்


கைது செய்யப்பட்ட லார் டிரைவர் இனி ஜெயிலுக்கு போவான். சில  நாட்கள் கழித்து ஜாமீனில் வெளியே வந்துவிடுவான். அதன் பிறகு வாய்தா...வாய்தா என்று வழக்கு இழுக்கப்பட்டு பல வருடம் கழித்து ஏதாவது ஒரு தீர்ப்பு வரும். இதுதான் நடக்கும்.

கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல், பல பேர் பார்க்கிரார்கள் என்ற லஜ்ஜையும் இல்லாமல் சர்வ சாதாரணமாக இப்படி செய்திருக்கும் லாரி டிரைவருக்கு எவ்வளவு துணிச்சல் இருந்திருக்க வேண்டும். (அப்படியானால்....பலபேர் பார்க்காவிட்டால் எல்லாம் செய்யலாமா என்று கேட்கவேண்டாம்....பல பேர் பார்க்கும்போதே இப்படி செய்தவன் யாரும் இல்லாவிட்டால் இன்னும் என்னன்ன செய்வான்?)

இவனுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும். பல பேர் பார்க்க இப்படி செய்த அந்த கொடுரனுக்கு எதற்கு ஜெயில் விசாரனை எல்லாம்?. எதற்காக இவனை ஜெயிலில் போட்டு அச்சடித்த சோறு, யூனிஃபார்ம் என்று எல்லாம் கொடுத்து அரசாங்க மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கவேண்டும்?.

சாட்சிகள் இல்லாவிட்டால் கூட, வழக்கை இழுக்கலாம். ஆனால், இந்த சம்பவத்திற்கு பலர் சாட்சியாக இருக்கும்போது எந்த விசாரனையும் தேவையில்லை என்றே கருதுகிறேன். ஆயிரக்கணக்கான வழக்குகள் தேங்கியிருக்கும் நிலையில் பத்தோடு பதினொன்றாக இந்த வழக்கையும் சேர்த்து எதற்காக நீதிபதியின் பொன்னான நேரத்தையும் வீணடிக்க வேண்டும்?

இப்படிப்பட்ட கொடூரர்களுக்கு மரண தண்டனைதான் அதிகபட்ச தண்டனையாக இருக்கவேண்டும். அதுவும் வழக்கு வய்தா என்று எதற்கும் வாய்ப்பில்லாமல் உடனே நிறைவேற்றவேண்டும். பலபேர் பார்க்க இப்படிப்பட்ட பாதகத்தை செய்த இவனை பலபேர் பார்க்க பொது இடத்தில் தூக்கில் இடவேண்டும். அதுதான் மற்றவர்களுக்கு ஒரு பாடமாகவும், சட்டத்தின் மேல் பயமாகவும் இருக்கும்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


24 comments:

 1. Replies
  1. தங்களின் முதல்வருகைக்கு நன்றி....அப்படியே பதிவிற்கு சம்பந்தமான பின்னூட்டங்களை இட்டால் இன்னும் மகிழ்வேன்

   Delete
 2. செய்தி தாள்களில் படிக்கும் போதே மனம் பகீர் என்றது...

  உண்மையில் இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. இந்த செய்தியை படித்ததும் மனம் வேதனைக்குள்ளானது உண்மை. நிச்சயம் இவனைபோன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

   Delete
 3. என்னா தைரியம்யா...மரண தண்டனை சரியானதே..அதுவும் உடனே கொடுக்கப்படவேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. என் கருத்தை ஒத்துக்கொண்டு பின்னூட்டமிட்டுள்ள உங்களுக்கு நன்றி

   Delete
 4. மரணதண்டனை கொடுத்தாலும் கருணை மனு அது இதுன்னு அவன் கடைசி காலம் வரைக்கும் வாழ்ந்து விடுவான்...

  ReplyDelete
 5. sure.. he can get immediate punishment. his name is not dayanithi maran, or jayalalitha.. who can drag case to years... he a lorry driver who dont have money to drag case .. so he will punished soon..

  ReplyDelete
  Replies
  1. உங்களின் நியாயம் புரிகிறது. அதே நேரம் ஜெயா, தயா மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அவர்கள் மறுக்கும்போது எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தண்டித்து விட முடியாது....அப்படி மறுக்கும்போது விசாரனை,வாய்தா என்று அவசியமாகிறது.சம்பந்தப்பட்டவர்கள் ஒத்துக்கொண்டால் பிரச்சினையில்லை.....ஆனால், இந்த லாரி ட்ரைவர் பலபேர் சாட்சியுடம் இப்படி ஒரு மாபாதகத்தை செய்திருக்கிறான். நிச்சயம் இது தண்டிக்க வேண்டிய ஒன்று

   Delete
 6. தண்டனைகளை இன்னும் கடுமையாக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தண்டனைகள் கடுமையானால் குறையும். ஆனால், நம் அரசியல்வாதிகள் அதற்கு ஒத்துக்கொள்ள வேண்டுமே....

   Delete
 7. கொலைக்கு கொலையே பதில். அவனை மன்னிப்பதென்றால், இறந்தவரின் குடும்பத்தாருக்கே அந்த உரிமை உள்ளது. ஜனாதிபதிக்கோ அல்லது நீதிபதிக்கோ அல்ல. ஆனால் வழக்கு நேர்மையாக விசாரிக்கப்படவேண்டும். ஆனால் இந்த விஷயத்தை பொறுத்தவரை, பெரிதாக வெல்லாம் எதுவும் தேவை இல்லை. பலர் முன்னிலையில் பகிரங்கமாக, சைக்கோ தனத்துடன் செய்யப்பட்டது. சோ, இவனை எவ்வளவு சீக்கிரம் தூக்குகிறோமோ அவ்வளவு நல்லது.

  ReplyDelete
 8. அதுதான் சரியானது.

  ReplyDelete
 9. Replies
  1. கடுப்பேத்துறானுங்க யுவர் ஹானர்

   Delete
 10. ஆத்திரம் அறிவை மறைத்து விட்டது,
  குடி போதை யில் சுயநினைவு இன்றி நடந்து விட்டது,
  கோபமூட்டும் வார்த்தைகளை டிரைவர் பேசினார்,
  சாலை விதிகள் பின்பற்றப்பட வில்லை,
  பாவம் இந்த லாரி டிரைவரின் பொண்டாட்டி புள்ளை குட்டிகள்....
  ---போன்ற ஆயிரம் பொய்ககாரணத்தை எதிர்தரப்பு வக்கீல் சொன்னாலும்...

  ////இந்த கொடூரனை உடனடியாக தூக்கிலிடுங்கள் யுவர் ஹானர்......////

  எஸ் யுவர் ஆனர்........!

  ReplyDelete
  Replies
  1. ஆக.... நீங்கள் என்ன் சொல்ல வருகிறீர்கள் யுவர் ஹானர்?

   Delete
 11. வழக்கு வாய்தாலாம் வேண்டாம் என் கவுண்டரில் போட்டு தள்ள வேண்டியதுதான்

  ReplyDelete
 12. அந்த கொடியவனுக்கு தகுந்த தண்டனை உடனடியாக தரப்படவேண்டும்

  ReplyDelete
 13. பல மூதேவிங்க தமிழ்நாட்ல சுத்திகிட்டு இருக்கு... தூக்கு தண்டனையா? என்கவுண்டரா? அய்யய்யோ மனித உரிமை மீறல், மயிறு, மட்டை என்று தூக்கிப்பிடித்துக்கொண்டு வந்து விடுவார்கள்.. அவர்களைப் பொறுத்தவரை நாமெல்லாம் மந்தைகளாம்... (ஆனால் எப்போது அந்த அறிவு ஜீவிகள், மேலே உள்ள விஷயத்துக்கு நேரடி பதில் சொல்வதே இல்லை, வேறு ஏதேதோ கற்பனை செய்து புதிது புதிதாக எழுதுவார்க்...)

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.