என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, February 17, 2012

39 அய்யய்யோ.....எங்க ஊரை தமிழ்நாட்டிலிருந்து தூக்கிட்டாங்க......வரும் ஆனா....வராது- இது வடிவேலுவின் பிரபலமான நகைச்சுவை வசனம். இதை நம்மை சிரிக்க வைக்க வேண்டும் என்றுதான் கூறினார். ஆனால், இந்த வசனத்துடன் இப்போது மின்சாரத்தை ஒப்பிட்டு மக்கள் புளுங்குகிறார்கள். அதைப்போல....எப்ப வருவேன்...எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்னு ஒரு படத்தில் ரஜினிகாந்த் சொல்வார். இந்த வசனமும் இப்போது மின்சாரத்திற்கு பொறுத்தமாக அமைந்துவிட்டது. ஆம்... ரஜினியும் சரி, மின்சாரமும் சரி வரவேண்டிய நேரத்தில் கரக்டாக வருவதேயில்லை.

டே.... என்னவோ உங்க ஊரை தமிழ் நாட்டிலிருந்து தூக்கிட்டாங்கன்னு தலைப்பை வச்சிட்டு இப்படி சினிமாவை பத்தி பேசிட்டு இருக்கியே? இதுக்கும் அதுக்கும் என்னடா சம்பந்தம்னு கேக்கறீங்கதானே?....
இருங்க அந்த கதைக்கு வர்றேன்.

தமிழ்நாட்டுல அரசர்குளம் அரசர்குளம்ன்னு ஒரு ஊரு(என்ன ரெண்டு அரசர்குளமான்னு கேட்கக்கூடாது. ஏன்னா அது ரொம்ப பழைய ஜோக்கு).
தமிழ்நாடு மேப்பில் கூட அது இப்பத்தான் இடம்பிடிச்சிருக்கு. அதுக்குள்ள யார் கண்ணு பட்டுச்சோ தெரியல....எங்க ஊரை தமிழ்நாட்டிலிருந்து தூக்கிட்டாங்களோன்னு ஒரு சந்தேகம் வந்திருச்சு.. அட....சும்மால்லாம் வரலீங்க... கொஞ்ச நாளா எங்க ஊர்ல நடக்குற மின்சார பிரச்சினை அப்படி ஒரு சந்தேகத்தை கிளப்பி விட்டுருச்சு...

அதாவது தமிழ்நாட்டில் சென்னைக்கு மட்டும் ரெண்டுமணி நேரம் மின்வெட்டு, மத்த ஊருக்கெல்லாம் எட்டு மணி நேரம்ன்னு ஜெயலலிதா சொன்னாங்களா? ஒரு முதலமைச்சர் சொல்லிட்டா எல்லாரும் கேக்கனுமா இல்லியா? அதானே முறை? ஆனால், எங்க பகுதி மின்சார வாரியம் மட்டும் அதை கேக்கறதே இல்லேங்க...

காலைல 9 மணிலேர்ந்து 12 மணி வரைக்கும் ஒரு 3 மணி நேரம். அப்புறம் மத்தியானம் 3 மணிலேர்ந்து மாலை 6 மணி வரைக்கும் ஒரு 3 மணி நேரம் அப்புறம் ஆறே முக்கால் மணிலேருந்து ஏழரை மணி வரைக்கும் ஒரு முக்கா மணி நேரம். அப்புறம் அப்புறம் எட்டே கால் மணிலேர்ந்து ஒம்போது மணிவரைக்கும் முக்கா மணி நேரம், அப்புறம் ஒம்போதே முக்கா மணிலேர்ந்து பத்தரை மணி வரைக்கும் ஒரு முக்கா மணி நேரம். அப்புறம் என்ன தலை சுத்துதா இருங்க இன்னும் ஒரே ஒரு கணக்கு மட்டும்தான் போட்டுட்டு போயிடுறேன். ராத்திரி பதினொன்னே கால் மணியிலிருந்து பன்னெண்டு மணி வரைக்கும் ஒரு முக்கா மணி நேரம்...இப்ப நான் சொன்னதை எல்லாம் கூட்டுங்க...மொத்தம் 9 மணி நேரம் ஆச்சா?....இந்த ஒம்போது மணி நேரம் எங்க ஊர்ல கரண்டே இருக்கது இல்லேங்க....சரி கரண்டு இருக்க அந்த கொஞ்ச நேரமாவது கரெக்டா வருதான்னு பார்த்தா அப்பவும் வர்றதில்லேங்க...அதிலயும் அப்ப அப்ப கையவச்சு ஒரு மணி நேரம் குறைச்சுடுறாங்க...இப்ப மொத்தம் 10 மணி நேரம் மின்வெட்டு இருக்கு. ராத்திரி 12 மணிக்கு மேல பொழுது விடியற வரை நம்மல்லாம் தூக்கத்தில் இருப்பதால அந்த நேரத்தில எத்தனை தடவை கரண்டு போகுதுன்னு கணக்கு தெரியல...ஒரு நாளு ராத்திரி மட்டும் கொட்ட கொட்ட விழிச்சு இருந்து கணக்கு பண்ணி பாக்கனும்.

இப்ப சொல்லுங்க சார்..... தமிழ் நாட்டில் எட்டு மணி நேரம் மின்வெட்டு இருக்கும்ன்னு சொல்லிருக்காங்க..ஆனால், எங்க ஊர்ல மட்டும் 10 மணி நேரத்துக்கும் அதிகமா மின்வெட்டு இருக்கே....இப்ப சொல்லுங்க எட்டு மணி நேரம் கரண்டு போனாத்தானே எங்க ஊரு தமிழ் நாட்டுல இருக்கறதா அர்த்தம். ஆனா, அதைவிட அதிகமா எங்க ஊர்ல போறதால இப்ப நாங்க எந்த மாநிலத்தில் இருக்கோம்? (ஆப்ரிக்கா கண்டத்தில இருக்க உகாண்டாவுல இருக்கீங்கன்னு அங்கே யாருப்பா சத்தம் போடறது? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

இன்னொரு விஷயம்.....எங்க ஊரை மட்டும்தான் தமிழ் நாட்டிலேர்ந்து தூக்கி இருக்காங்களா? இல்ல... இன்னும் நிறைய ஊரையும் இப்படி தூக்கிருக்காங்களான்னு தெரியல... எதற்கு கேக்கறேன்னா...சும்மா துணைக்கு கொஞ்சம் ஊரையும் சேர்த்துக்கலாம்ல...அதான் ஹி...ஹி...
Post Comment

இதையும் படிக்கலாமே:


39 comments:

 1. //விடியற வரை நம்மல்லாம் தூக்கத்தில் இருப்பதால அந்த நேரத்தில எத்தனை தடவை கரண்டு போகுதுன்னு கணக்கு தெரியல.//

  ஹா..ஹா.. ஓ மை காட். பாவம் கஸாலி நீங்க. நல்ல வேலை நாங்கள் சென்னையின் செல்லப்பிள்ளைகள் ஆனதால் தப்பித்தோம். 'ஜெ'க்கு ஜே!!

  ReplyDelete
  Replies
  1. நீங்களாவது நல்லா இருங்கோ

   Delete
 2. உங்க பதிவு தலைப்பை பாத்தா அரசர்குள (சிட்டிசன்) 'அஜீத்' ஆகி கோர்ட்ல வசனம் பேசுவீங்க போல இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. கோர்ட்டே இல்லாமல் வசனம் பேச வச்சிட்டாங்களே?

   Delete
 3. அட போங்க கஸாலி அரசகுளமாவது பரவாயில்லை ஒம்பது மணி நேரம். எங்க ஊரில் பதினோரு மணி நேரம் கரண்டு வருவதில்லை. நாங்க எல்லாம் நல்ல பிள்ளையாக இருக்கும்போது இப்படி எழுதுவது தப்பு ஆத்தாவுக்கு கோபம் வந்தா என்ன நடக்கும் தெரியுமா இருக்கவே இருக்கு நிலமோசடி வழக்கு. என்ன ஆசையா உள்ளேபோவதற்கு.
  கவனம் கவனம் ஆவ்

  ReplyDelete
  Replies
  1. இதுக்கு எங்க ஊர் பரவாயில்லை போல....

   Delete
 4. சையத்...'ராஜகுரு' கஸாலி மேல் கை வைத்தால் தமிழகம் என்னவாகும் என்பது 'அவர்களுக்கு' நன்றாக தெரியும். யாரு கிட்ட...

  ReplyDelete
  Replies
  1. என்னது ராஜகுருவா? எல்லோரும் ஒரு மார்க்கமாத்தான் திரியுறிய...

   Delete
 5. கோவையில் நேற்று காலை 6 முதல் 9, பிற்பகல் 12 முதல் 3, மாலை 6-7, இரவு 8-9,இரவு 10-11, நள்ளிரவு 12-1, பின்னிரவு 2-3, கடைசியாக காலை 5 முதல் மீண்டும் இன்று காலை 9 வரை----- உஸ்... அப்பா.... தூங்காதது.... கண்ணை கட்டுதே....

  ReplyDelete
  Replies
  1. கோயம்புத்தூரையும் தூக்கிட்டாங்களா? சரிதான்.

   Delete
 6. அண்ணே ரொம்ப கஷ்டமோ..நல்லவேளை நான் தப்பித்தேன்....ஆனா இந்த கஷ்டத்திலும் பதிவிடும் உங்கள் கடமை உணர்ச்சியை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. உனக்கென்ன ஹாயா மலேசியாவுல உக்காந்துட்ட... நாங்கல்ல மாட்டிக்கு முழிக்கிறோம்

   Delete
 7. கஜாலி நானா,

  சென்னைல எங்க ஏரியாவில இன்று 3 மணிநேரம் கரண்ட் கட். ஆனா சொன்னது என்னவோ 2 மணி நேரம்னு.கவலைப் படாத போகப் போக தமிழ்நாடே மேப்ல இருக்காது.

  ReplyDelete
  Replies
  1. ஒருவேளை அப்படியே தமிழ் நாட்டை பெயர்த்து எடுத்து உகாண்டாவோடு சேர்த்துடுவாங்களோ

   Delete
 8. Replies
  1. இதென்ன விளம்பரம். ராஸ்கல் பிச்சுப்புடுவேன் பிச்சு

   Delete
 9. உங்க கணக்குப்படி எல்லாம் பார்த்தா தமிழ்நாட்டு மேப்பில சென்னை தவிர வேறு எந்த ஊரும் இருக்காது. டைம் தான் மாறுது, மத்தபடி ஆப்பு எல்லாம் same தான்.

  ReplyDelete
  Replies
  1. நாமெல்லாம் பேசாமா சென்னைக்கு இடம் பெயர்ந்துடுவோமா?

   Delete
 10. நீங்கள் சொல்கிறீர்கள்.
  மற்றவர்கள் சொல்லவில்லை.
  எல்லா ஊர்களிலும் மின்சாரம் எப்போது வரும் என்று தெரியாது. மின்னலைப் போல் வரும் போகும். அவ்வளவு தான்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அதுதான் உண்மை வருகைக்கு நன்றி அய்யா

   Delete
 11. Replies
  1. இன்னும் கொஞ்ச நாள்ல எல்லோரும் இப்படித்தான் கேட்கப்போறாங்க

   Delete
 12. உங்க ஊருக்கு பக்கத்தில அறந்தாங்கின்னு ஒரு ஊரு இருக்குல்ல..அதுக்கு நேரா தெக்கு திசையில (12 கி.மீ தூரம்) வீரமங்களம் அப்பிடின்னு ஒரு ஊரு. அதுதான் சகோதரரே நான் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் மண். (நெருங்கி வந்துட்டோம்ல..). இதை விட அதிகமான மின்வெட்டையே நாங்களும் சமாளிக்கிறோம். (ரெண்டாவது தடவையும் நெருங்கி வந்துட்டோம்ல.. ) நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். ரொம்ப நெருக்கிட்டோம். விரைவில் சந்திப்போம் நண்பரே

   Delete
 13. எல்லா ஊர்களிலும் மின்சாரம் எப்போது வரும் என்று தெரியாது.

  ReplyDelete
  Replies
  1. உங்க ஊரிலும் அப்படித்தானா? அய்யோ.அய்யோ

   Delete
 14. எல்லா ஊரிலும் இப்படித் தான் இருக்கு!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்...வந்திருக்கும் பின்னூட்டங்களை பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது

   Delete
 15. தலைவா எங்க ஊரிலும் இதே கதிதான். இதே டைமிங்தான். என்ன விடியற்காலை மூன்று மணிவரை கட் செய்கிறார்கள். எங்க ஊரையும் மேப்ல இருந்து தூக்கிட்டாங்க....

  ReplyDelete
  Replies
  1. வாங்க சேர்ந்து முறையிடுவோம்

   Delete
 16. Oru distric'iye tamilnattil erunthu thukitanga!
  Covai makkal'ana nangal pakkathu state kerala'udan enaiyalam enru erukirom!

  ReplyDelete
 17. Good Post

  Please Read This Also

  http://abiappa.blogspot.in/2012/02/blog-post.html

  ReplyDelete
 18. இன்னும் பாருங்க எத்தனை ஊர் காணாமல் போக போகுதுன்னு...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நண்பரே... அதுதான் நிஜம்

   Delete
 19. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  ReplyDelete
 20. கரென்ட் இல்லாததையும் நல்லா கலாய்க்கிறீங்க!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.