என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, February 24, 2012

19 ஸ்டாலினுக்கு எதிராக அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும், ஓங்கும் வீரபாண்டியாரின் கையும்......


டந்த இரு வாரங்களுக்கு முன்பு கூடிய தி.மு.க.,பொதுக்குழுவில், வீரபாண்டி ஆறுமுகம் பேசிய பேச்சு ஸ்டாலின் ஆதரவாளர்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பிஅது நினைவிருக்கலாம்.

தி.மு.க.,வின் தலைவராக கலைஞர் இருக்கும்போது அடுத்த தலைமைக்கு இப்போது என்ன அவசரம்? என்பதுதான் அவர் பேசிய பேச்சின் சாரம்சம். உடனே, வீரபாண்டியார் அழகிரியின் ஆள், ஸ்டாலின் தலைவராவதை இவர் விரும்பவில்லை, ஸ்டாலினுக்கு எதிராக இவர் திரும்பிவிட்டார் என்றெல்லாம் செய்திகள் வந்தது.

இப்போது வீரபாண்டியாரின் கருத்தை வழிமொழிவதுபோல் ஸ்டாலினின் மகன் உதயநிதியே ஒரு கருத்தை உதிர்த்துள்ளார். அதாவது, குமுதம் ரிப்போர்ட்டருக்கு உதயநிதி ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அதற்கான பதிலின் சுருக்கமும் இதோ....

கேள்வி: தி.மு.க.,வின் அடுத்த தலைவர் உங்கள் தந்தை என்கிறார்கள்....உங்கள் கருத்தென்ன?

உதயநிதி: கலைஞர் இருக்கும் வரையில் அவர்தான் தலைவர். அதன்பிறகுதான் இந்தக்கேள்விக்கு பதில் சொல்ல முடியும்.
என்று பதில் சொல்லியுள்ளார் அவர்.

உதய நிதியும், வீரபாண்டியாரும் கூறியது ஒரே கருத்துதானே?....தி.மு.க.,வில் யாரைக்கேட்டாலும் கலைஞரே தலைவராக தொடரவேண்டும், நீடிக்க வேண்டும் என்றுதான் சொல்வார்களே தவிர மாற்றுக்கருத்தை சொல்ல மாட்டார்கள் அல்லது சொல்ல முன்வர மாட்டார்கள். அதைத்தான் இப்போது உதயநிதியும் வீரபாண்டியாரும் சொல்லியுள்ளார்கள். அதற்காக, இவர்களை ஸ்டாலினுக்கு எதிரானவர்கள் என்று சொல்லிவிடலாமா?

வீரபாண்டியார் அப்படி சொல்லியபோது குதித்தவர்கள் இப்போது  ஸ்டாலினுக்கு எதிராக அவரது மகனே திரும்பிவிட்டார் என்று ஏன்  சொல்லவில்லை?
அடப்போங்கப்பா.... உதயநிதிக்கு ஒரு நியாயம்? வீரபாண்டி ஆறுமுகத்துக்கு ஒரு நியாயமா?


Post Comment

இதையும் படிக்கலாமே:


19 comments:

 1. Replies
  1. முதல் வருகைக்கு நன்றி சகோதரி

   Delete
 2. ஏன்பா கசாலி,

  உனக்கு ஏன் இந்த நாரதர் வேலை. அவரு ஏதோ தன் தாத்தா மனம் நோகக்கூடாதென்று சொல்லி இருக்காரு. மனசுக்குள்ள அவங்க அப்பா வரணும்னு தான் இருக்கும். எதைக்கொண்டு போய் எதோட முடிச்சு போட்ற. நீ முன்னாள் திமுக காரன் ஆச்சே. ஏன் இப்ப இப்படி மாறிட்ட????

  ReplyDelete
  Replies
  1. தாத்தா மனம் நோகக்கூடாதுன்னு இவரு சொல்றதை போலதான் தலைவரு மனம் நோகக்கூடாதுன்னு வீரபாண்டியாரு சொன்னாரு...அது தப்புன்னா...இதுவும் தப்புதான். இது சரின்னா அதுவும் சரிதான்.

   Delete
 3. இதுதான் பலகோணங்களில் யோசிப்பதோ?

  ReplyDelete
  Replies
  1. ஒரு செய்தியை பல கோணங்களில் யோசித்தால்தான் நமக்கு ஒரு பதிவு கிடைக்குது

   Delete
 4. நிருபர்: பதிவுலக இளைஞர் அணித்தலைவரும், அரசியல் ராஜகுருவுமான கஸாலி பற்றி..

  உதயநிதி: கி. மு.க. பிரமுகராக இருந்தாலும் அவர் எழுத்தில் நேர்மையுண்டு. எம் கழகத்தில் இணைந்தால் அவருக்கு நல்ல காலம் நிச்சயம். அவர்தான் மனது வைக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. முதலில் சிவாவிடமிருந்து யாராவது நெட் கனெக்சனை கட் பன்னுங்கப்பா...புன்னியமா போகும்.

   Delete
 5. Yov.... Yengal thalaivar 6vadhu muraiyaaga aatchi amaippaar....

  Appothu umma website la vanmuraiyaith thoondividurannu solli arrest pannuvom yenbadhaith theriviththuk kolkiren...

  By

  Velangaathavan,

  Vattach seyalaalar,

  Thi.Mu.Ka(DMK),

  Pollachi.

  ReplyDelete
  Replies
  1. அண்ணே... ஒரு சின்னப்பயல இப்படியா பயமுறுத்துவீங்க....
   ஏன்ணே என் மேல இப்படி ஒரு கொலைவெறி

   Delete
 6. அன்புமணி ராமதாஸ் கருத்து பற்றி உங்க கருத்து என்ன சகோ?

  ReplyDelete
  Replies
  1. அன்புமணி என்ன சொன்னாரென்று சொல்லவேயில்லியே?
   எதைப்பற்றி கருத்து கேட்கறீர்கள்?

   Delete
 7. Replies
  1. அதுசரியா? வீரபாண்டியார், உதயநிதி இவர்களில் யார் சொன்னது சரி என்று சொல்கிறீர்கள்?

   Delete
 8. டீ ரொம்ப டேஸ்டா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா சொல்றீங்க?...வருகைக்கு நன்றி நண்பரே....

   Delete
 9. ராஜாவின் மனைவி ராணியாகலாம்....
  ஆனால் ராணியின் கணவர் எப்போதும் ராஜாவாக முடியாது...
  என்பது போல
  "தலைவர்" உள்ள வரை வேறு யாரும் தலைவரல்ல!
  நல்ல கட்சி
  நல்ல தலைவர்
  நல்ல தொண்டர்
  நல்ல மக்கள்
  அவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.