என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Wednesday, February 08, 2012

45 அமைச்சர்கள் பார்த்த ஆபாச படமும் பறிபோன பதவியும் (படங்கள்+ வீடியோ இணைப்புடன்)......


என்னப்பா போனையே உத்துப்பாத்துக்கு வாறே........

ஒரு போன் நம்பரை தேடிக்கு இருக்கேன்.

அதானே... ஆபாச படம் பார்க்கறியோன்னு நினைச்சேன்.

சே..சே.. நான் என்ன கர்நாடக அமைச்சர்களா?

அவங்க என்ன பார்த்தாங்க?

என்ன இப்படி கேட்டுட்டே.... நேத்து கர்நாடக சட்டசபையில அங்கே கூட்டுறவுத் துறை அமைச்சரா இருக்கற லக்ஷ்மன் சாவாதிங்கறவர் தன்னோட செல்போன்ல ஆபாச படம் பார்த்தாராம்...


அய்யயோ அப்புறம்?

அப்புறம் என்ன...அதை பக்கத்தில இருந்த பெண்கள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீல்ன்னு ஒருத்தரும் எட்டிப்பார்த்தாராம்...

என்ன துறை அமைச்சருன்னே?

பெண்கள் நலத்துறை அமைச்சர்...

விளங்கிரும்....அப்புறம்?

அவங்க ரெண்டுபேரும் பார்த்ததை சுற்றுச் சூழல் துறை மற்றும் துறைமுகத்துறை அமைச்சரா இருக்கற கிருஷ்ணா பாலிமரும் பார்த்துட்டாராம்...

அய்யய்யோ மாட்டிக்கிட்டாங்களா?

அதுதான் இல்லை. அவரும் அதை பார்த்து ரசிச்சாராம். இவங்க பார்த்ததை இன்னொருவரும் பார்த்திருக்காரு

அது யாரு?

அவரு... சட்டசபை நிகழ்சியை நேரடியா ஒளிபரப்பு செய்யற ஒரு தனியார் டி.வி.,சேனல் நிருபர்

அவரும் ரசிச்சாரா?

அதுதான் இல்லை. அவரு உடனே அந்த காட்சிகளை சூம் செஞ்சு எடுத்து ஒளிபரப்பிட்டாரு...

மக்கள் பிரதிநிதிகள் சட்டசபையில் என்ன செஞ்சுக்கு இருக்காங்கன்னு மக்களும் தெரிஞ்சுக்கட்டுமேன்னு ஒரு நல்ல எண்ணத்தில செஞ்சிருப்பாரு...

ஆமா...அதேதான். இப்படி ஆபாச படம் பார்க்கறதுக்குத்தானே மக்கள் இவங்களை தேர்ந்தெடுத்துருக்காங்க....அதுக்குத்தான் அரசாங்கமும் இவங்களுக்கு சம்பளமும் கொடுக்குது போல.

ஆமா.. இது பெரிய பிரச்சினையா போயிருக்குமே?

போகாம......அதுதான் இப்ப இவங்களுக்கு பெரிய ஆப்பா போச்சு....

என்னாச்சு?

கர்நாடகாவை தண்டி இது பெரிய விஷயமா போச்சு...இப்ப அந்த மூணு பேரும் ராஜினாமா செஞ்சிட்டாங்க...

அது சரி....இவங்களுக்கு வெட்கமா இருக்காதா?

வெட்கமாவது? மான ரோஷமாவது? அதையெல்லாம் பாக்கறவங்களுக்கு இப்ப அரசியலில் இடமில்லை.

சரியா சொன்னே....இந்த கருமத்தை எல்லாம் வீட்டுல பார்த்து தொலைய வேண்டியதுதானே?

நல்லவேளையா போச்சு....வீட்டில் பார்த்தால் விளக்குமாறு பிஞ்சு போயிடுமே...

எப்படியோ வாராவாரம் சட்ட சபையில் ஒரே கூத்தாத்தான் இருக்கு...போன வாரம் நம்ம கேப்டன்...இந்த வாரம் இவங்க..

அந்த காணொளியப் பாருங்க...காறி துப்புங்க...


நன்றி: கூகுள் இமேஜ், யூ டியூப்


Post Comment

இதையும் படிக்கலாமே:


45 comments:

 1. இன்னும் என்னன்ன அசிங்கமெல்லாம் பண்ணுவாங்களோ....

  ReplyDelete
  Replies
  1. அசிங்கங்கள் அன்றாடம் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. எப்போதாவது தான் அதில் வெளியில் வருகிறது

   Delete
 2. //கோவி.கண்ணன் said...

  காவடி எடுப்பது அலகு குத்துவது உள்ளிட்டவை மூட நம்பிக்கை என்றாலும் கூட அவ்வாறு செய்பவர்கள் பிறருக்கு என்ன கேடு செய்கிறார்கள் என்று கேட்டுக்கொள்ளும் போது இத்தகைய மூட நம்பிக்கைகளை விமர்சனம் செய்வது வேலையற்ற வேலை என்றே நினைக்கிறேன், உடலை வருத்தும் வழிபாட்டு முறைகள் இல்லாத மதச் சமூகமே இல்லை என்னும் போது இவை சமூகக் குற்றமாக, சீர்கேடாக பார்க்க ஒன்றும் இல்லை என்றே கருதுகிறேன்.//

  SOURCE: http://govikannan.blogspot.com/2012/02/2012.html

  இருக்கிற மூட நம்பிக்கைக்கு எப்படியெல்லாம் சப்பைக்கட்டு கட்டுபவரே!

  பிற சமயங்களின் மீது இட்டுகட்டப்படுபவைகளுக்கு முட்டுக்கொடுத்து தூபம் போட்டு வெறியாட்டம் ஆடுவதில் முன்னிலை வகிப்பது ஏன்? திரும்பிப்பார் !!!  click to watch video

  ////////
  கோவி.கண்ணன் மாரியம்மன் கோயில் காவடி
  ////////

  ReplyDelete
 3. Ennuma evanukankalai entha ooru nambuthu.........?
  :)

  ReplyDelete
  Replies
  1. என்ன செய்றது? நம்புற மாதிரி நடிக்கிறாங்களே

   Delete
 4. Ennuma evanukankalai entha ooru nambuthu.........?
  :)

  ReplyDelete
 5. நிஜமாவே காறித் துப்பணும்னு தான் தோணுது தம்பி... இவங்களைத் தேர்ந்தெடுத்த அப்பாவி ஜனங்க தொகுதிப் பக்கம் அவங்க வந்தா அடிச்சுத் துரத்தணும். அப்படியாவது சரியாவாஙகளான்னு பாப்பம்...

  ReplyDelete
  Replies
  1. அப்படி நடந்தாலும் ஆச்சர்யமில்லை.

   Delete
 6. BJP அமைச்சர்கள்ன்னு தெளிவா தலைப்பு கொடுங்க ...

  ReplyDelete
  Replies
  1. தலைப்பெல்லாம் தேவையில்லை. இப்போது பலான படம் என்றாலே இவர்கள் பெயர்தானே நினைவிற்கு வருகிறது.

   Delete
  2. BJP = Bayangara Jollu Party

   Delete
  3. பலான ஜொள்ளு பார்ட்டின்னு வேனும்னாலும் வச்சிக்கங்க

   Delete
 7. என்ன பண்றது - இதான் நிலைமை - ஒண்ணூம் சொல்றதுக்கில்ல

  ReplyDelete
  Replies
  1. வாழ்க ஜனநாயகம்னு சொல்லுங்க

   Delete
 8. கருமாந்திரம் பிடிச்சவன்...

  ReplyDelete
 9. Replies
  1. நம்ம அப்பவின்னு நினைக்க்றவங்கள் எல்லோரும் அடப்பாவிங்களாத்தான் இருக்காங்க....

   Delete
 10. மூணு நாலு சம்சாரம்
  சில பல சின்னவூடு
  அப்பாலிக்கா செட்டப்புங்க வேற!
  இத்தயே நம்மாளுங்க பொர்த்துகறாங்கபா!
  இது இன்னா
  படம்தானே பாத்தான்...
  இப்போ அல்லாம் இந்த படங்கள ஸ்கூல் கொயந்தகூட பாக்குதுபா ...அக்காங்க்...
  இவன் மாட்டிக்கிட்டான் அவ்ளோதான்
  (நம்மில் எத்தனை பேர் இந்த VIDEOவை CLICK செய்தோம், பார்த்தோம்! தனி மனித ஒழுக்கம் இப்படித்தான் உள்ளது)

  ReplyDelete
  Replies
  1. அண்ணே உங்கள் கூற்றை மறுக்க முடியாது. இன்று பள்ளி மாணவர்கள் கூட பார்க்கிறார்கள் தான். அதே நேரம், ஒரு முக்கியமான பொறுப்பில் இருக்கும் இருக்கும் அமைச்சர்களுக்கு இடம் பொருள் வேண்டாமா? வேறெங்காவது போய் பார்த்து தொலைய வேண்டியதுதானே?
   சட்டசபையில் மக்கள் பிரச்சினையை பேசுவதை தவிர மற்ற எல்லாவற்றையும் செய்வோம் என்று அடம் பிடிப்பது த்வறுதானே

   Delete
 11. இந்த நாதாரி பொழப்புக்கு பேரு தான் அமைச்சரோ!

  ReplyDelete
 12. நாதாரிகள் வேறு என்ன சொல்ல

  ReplyDelete
  Replies
  1. ஏதாவது சொல்லித்தான் ஆகனும் நண்பரே.

   Delete
 13. அட நீங்க எல்லாம் தப்ப புரிஞ்சிகிட்டீங்க பெண்களை எப்படி பாலியல் கொடுமைக்கு(?) உள்ளாக்க படுகிறார்கள் என்பதை மிகுந்த () மனவேதனையோடு திரும்ப திரும்ப பார்த்து கொண்டு இருந்தார்கள். அதை பார்த்து அவர்கள் விட்ட கண்ணீர் இருக்கிறதே அப்பப்பா என்ன ஒரு கொடுமை...

  ReplyDelete
  Replies
  1. பெண்கள் நலத்துறை அமைச்சரல்லவா? பெண்களுக்கு நடந்த கொடுமைகளை பார்த்து ரத்தக்கண்ணீர் வடித்திருப்பார் என்று சொல்லுங்க...

   Delete
 14. Replies
  1. மெதுவா துப்புங்கள் சகோ.... கம்ப்யூட்டர் நனைந்து விடப்போகிறது

   Delete
 15. //முக்கியமான பொறுப்பில் இருக்கும் அமைச்சர்களுக்கு இடம் பொருள் வேண்டாமா? வேறெங்காவது போய் பார்த்து தொலைய வேண்டியதுதானே?//
  அப்போ பார்த்தது தவறில்லை
  பார்க்கப்பட்ட இடம்தான் தவறு...அப்படித்தானே சகோதரரே?
  நமது பார்வையின் லட்சணம் இப்படி இருக்கும் போது நாம் எப்படிப்பட்டவரை தேர்வு செய்வோம் சொல்லுங்க?

  ReplyDelete
  Replies
  1. நான் அப்படிப்பட்ட அர்த்தத்தில் இதை சொல்லவில்லை. பார்க்கவேண்டும் என்று முடிவு செய்திருப்பவர்களை நாம் தடுக்க முடியாது. அப்படி பார்க்க முடிவு செய்துவிட்டால் அதற்கான இடம் மக்களின் பிரச்சினையை பேசும் சட்டசபையல்ல என்று தான் சொல்லவந்தேன்.

   Delete
 16. அநாகரீகம் மிகுந்தவர்கள். அசிங்கம் நடக்குது. எந்த ஒரு பொறுப்புணர்வும் இல்லாமல்
  போய்விட்டது.
  வேறு என்ன சொல்ல?

  ReplyDelete
  Replies
  1. பொறுப்பெல்லாம் இவர்களிடம் துளி கூட கிடையாது.

   Delete
 17. ஸலாம் சகோ.ரஹீம் கஸாலி,
  மேட்டர் ஏற்கனவே நியூஸில் படிச்சது என்றாலும்,
  அதை இங்கே நீங்கள் தந்து இருக்கும் பாணியே அலாதியானது..!
  வரிகள் ஒவ்வொன்றும் சவுக்கடி விளாருக்கு பின்னே வீங்கும் தடிப்புகள் போல..!
  அதிலும்....
  ///இந்த கருமத்தை எல்லாம் வீட்டுல பார்த்து தொலைய வேண்டியதுதானே?///
  ///வீட்டில் பார்த்தால் விளக்குமாறு பிஞ்சு போயிடுமே...
  ///
  தடித்த வரிகளில் டாப் இதுதான்..!

  இதே ரோஷம்... ஓட்டு போடுகிற ஒவ்வொருத்தனுக்கும் வந்தால்தான்... நாடு உருப்படும் சகோ..!

  ReplyDelete
  Replies
  1. சலாம் சகோ..... உண்மைதான். தங்களின் வருகைக்கு நன்றி...

   Delete
 18. இவனுங்க நாட்டை எப்படி காப்பாத்துவானுங்க .. இத்தோல மகளிர் நல துறை வேற ...

  ReplyDelete
 19. makkal eppadiyo mandiriyum appadiye

  ReplyDelete
  Replies
  1. அப்படிலாம் சொல்லக்கூடாது... மன்னர் எவ்வழி...மந்திரி அவ்வழி

   Delete
 20. Replies
  1. என்னது? இந்த மாதிரி படம் பார்ப்பது ரைட்டா?

   Delete
 21. பாவம் ஓட்டு போட்ட மக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது

   Delete
 22. நம்ம நாடு விளங்கிடும் !

  ReplyDelete
 23. இவங்கள் எல்லாம் நாட்டுக்காக உளைப்பாங்கள ? விளங்கிடும் இந்தியா

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.