என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Saturday, February 25, 2012

29 ஜெயலலிதாவின் பசுமை புரட்சியும், ஒரு பூச்சியும்.......


நேற்று (24-02-2012)  ஜெயலலிதாவின் 64-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகமெங்கும் 64 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது மூலம் ஒரு பசுமை புரட்சிக்கு வித்திட்டுள்ளார் ஜெயலலிதா என்றால் அது மிகையில்லை. இது வரவேற்கத்தக்க ஒன்று....

பிறந்த நாளன்று வீண் ஆடம்பரங்கள் செய்வதை விட, இதைப்போன்று ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்தால் நன்றாக இருக்கும்.
மரக்கன்றுகள் வைத்ததுடன் வேலை முடிந்து விட்டது என்று போய்விடக்கூடாது எம்.ஜி.ஆரின் ஜெயலலிதாவின் ரத்தத்தின் ரத்தங்கள்.

அவ்வப்போது அந்த மரக்கன்றுகளுக்கு
தண்ணீர்விட்டு பராமரித்துவந்தால்தான் வைத்த கன்றுகளில் ஒரு ஐம்பது சதவீதமாவது வளர்ந்து உபயோகமாயிருக்கும். இல்லாவிட்டால், நட்டுவச்சேன், பட்டுப்போச்சு கதைதான்.

=============

கடந்த இரு நாட்களுக்கு முன்பு என் வீட்டு வாசலில் நின்றிருந்த ஒரு பூச்சி என் கவனத்தை கவர்ந்தது. பார்க்க இரண்டு இலையை ஒன்றுசேர்த்தது போல் இருந்தது. இலைகளுக்கு நடுவில் இருக்கும் காம்புகளைப்போல் அதன் கைகால்கள் இருந்தது ஆச்சர்யமாக இருந்தது.உடனே, என் மொபைல் கேமராவில் படம்பிடித்துக்கொண்டேன். நீங்களும் அதை பாருங்களேன்.

Post Comment

இதையும் படிக்கலாமே:


29 comments:

 1. ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம்

  ReplyDelete
  Replies
  1. இதுக்கு ஏன் இத்தனை ம்ம்

   Delete
 2. நல்ல விஷயம் தான்.

  பூச்சி....ம்.

  ReplyDelete
  Replies
  1. ஆம்....வருகைக்கு நன்றி

   Delete
 3. அண்ணே..நம்ம ஊர்ல இந்த மாதிரி பூச்சி எல்லாம் இருக்கா? பார்க்க ரொம்ப வித்யாசமா இருக்கு...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்... எங்கள் வீட்டு வாசலில்தான் இந்த பூச்சி இருந்தது. பிலாத்தும், சவுக்கத்தும் வந்துகூட போட்டோ எடுத்தார்கள்.

   Delete
 4. இலைப்பூச்சி என சொல்லப்படுகின்ற இந்த பூச்சிகள் Phylliidae என்ற பூச்சிகள் குடும்பத்தையே சேர்ந்தவை. இந்த பூச்சிகள் தங்களை தங்கள் எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள இதுபோல உருவத்தை கொண்டுள்ளன.இவைகள் தெற்காசிய நாடுகளிலும் ஆஸ்திரேலியாவிலும் காணப்படுகிறது என பூச்சியல் நிபுணர்கள் (Entomologists) சொல்கிறார்கள்.இலைப்பூச்சியின் புகைப்படம் அபாரம். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. nadana sapaapathi!
   ungalukku mikka nantri-
   poochiyin vilakkam sonnathukku!

   Delete
  2. இதைப்போலிருக்கும் பூச்சிகளை எங்கள் பகுதியில் விட்டி என்பார்கள். உங்களின் விளக்கத்திற்கும், வருகைக்கும் நன்றி நடனசபாபதி அய்யா

   Delete
 5. சகோ ரஹீம்

  //மரக்கன்றுகள் வைத்ததுடன் வேலை முடிந்து விட்டது என்று போய்விடக்கூடாது எம்.ஜி.ஆரின் ஜெயலலிதாவின் ரத்தத்தின் ரத்தங்கள்.//

  வாய்ப்பே இல்லை எல்லாம் வாடி செத்துப் போகும் அடுத்த பிறந்த நாளுக்கு கன்று உண்ட வேண்டாமா? நல்ல கதையா இருக்கே

  ReplyDelete
  Replies
  1. அப்படியானால், இந்த மரக்கன்றுகளின் ஆயுள்காலம் ஒரு ஆண்டுதானா?
   இக்கன்றுகளை பரமரிக்க பேசாமல் மரம் வளர்ப்பு துறை என்று ஒன்றை ஆரம்பித்து ஒரு மந்திரியை நியமிக்கலாம் ஜெ.,

   Delete
 6. ஓர் முக்கியச் செய்தியை மறந்து விட்டீரே நண்பரே, ஆம் நடப்பட்ட ஒவ்வோர் மரக் கன்றின் விலை என்ன தெரியுமா? ஒவ்வொன்றும் 50 ரூபாய். (கொடுக்கப்பட்ட வேம்பு, புங்கன் உட்பட) அத்தனையும் அரசு கஜானா பணம்.

  ReplyDelete
  Replies
  1. இதிலும் மக்கள் பணம் காலியா?

   Delete
 7. //மரக்கன்றுகள் வைத்ததுடன் வேலை முடிந்து விட்டது என்று போய்விடக்கூடாது எம்.ஜி.ஆரின் ஜெயலலிதாவின் ரத்தத்தின் ரத்தங்கள்.
  //
  இனி அடுத்த பிறந்த நாளுக்குத்தான் தண்ணி

  ReplyDelete
  Replies
  1. அதற்கிடையில் கன்றுகள் பட்டுப்போய் விடுமே?

   Delete
 8. பூச்சியா அது .. இல்லை போல உள்ளது

  ReplyDelete
  Replies
  1. ஆம்...இலைபோல் இருக்கும் அபூர்வ பூச்சி இது

   Delete
 9. Replies
  1. ஸ்...யப்பா...இவன் தொல்லை தாங்க முடியல....

   Delete
 10. கசாலி,

  64 லட்சம் செடிகளில், 1 சதவிகிதம் கன்றுகள் மரமானாலும் 64 ஆயிரம் மரங்கள் கிடைக்கும், இயற்கையின் உதவியுடன். மற்றபடி ரத்தத்தின் ரத்தங்கள் தண்ணீர் ஊத்த மாட்டார்கள். விளம்பரத்திற்க்காகவே இருந்தாலும் மரம் நடுவது நல்ல விஷயம் தான்.

  ReplyDelete
  Replies
  1. ஆம்...உன் கருத்தோடு நான் உடன்படுகிறேன்.

   Delete
 11. நல்ல பதிவிற்கு நன்றி சகோ.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா சொல்றே? தங்கள் வருகைக்கும் நன்றி சகோ

   Delete
 12. //அவ்வப்போது அந்த மரக்கன்றுகளுக்கு
  தண்ணீர்விட்டு பராமரித்துவந்தால்தான் வைத்த கன்றுகளில் ஒரு ஐம்பது சதவீதமாவது வளர்ந்து உபயோகமாயிருக்கும். இல்லாவிட்டால், நட்டுவச்சேன், பட்டுப்போச்சு கதைதான்//

  - சும்மா நச்சுன்னு எழுதியிருக்கீங்க சார். அப்புறம் அந்த பூச்சி அழகு. இயற்கைதான் எவ்வளவு விந்தையானது. அற்புதம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பரே....இறைவனின் படைப்புகளில்தான் எத்தனை விந்தை?

   Delete
 13. இலை பூச்சி சூப்பர் சார் !

  ReplyDelete
  Replies
  1. ஆம்... நண்பரே... தங்களின் வருகைக்கு நன்றி

   Delete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.