என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, August 05, 2011

22 தி.மு.க-வின் அடுத்த தலைவர் யார்?-கலைஞர் அறிவிப்பு...


தி.மு.க-தலைவர் கலைஞர் தனது குறைசொல்லி மன்னிக்கவும் முரசொலி நாளிதழில் எழுதாத டுபாக்கூர் கவிதை

 நான்தான் அடுத்த
தலைவரென்றான்
இளைய மகன்
இல்லை...இல்லை....
நீங்கள் இருக்கும் வரை
வேறுயாரும்
தலைவரில்லை என்றான்
மூத்தமகன்.
இந்த விளையாட்டில்
என் மகளையும்
சேர்த்துக்கொள்ளுங்கள் என்றார்
என் துணைவி...
மூத்தவனா...இளையவனா
என்று குழம்பி நின்றார்
என் மனைவி....

தியாகத்தில்
இளையவர்தானே
பெரியவர் என்றார்கள்
தொண்டர்கள்.
இளையவர்தான்
தலைவரென்றால்
கட்சி பிளவுபடும் என்று எச்சரித்தது.
தெற்கு.

கழகமே குடும்பமென்றார்
அண்ணா
அதை  சற்றுமாற்றி
குடும்பமே கழகமென்றேன்
நான்.
இப்போது என் குடும்பத்தினர்
கலகம் பார்த்து
வாயிருந்தும் ஊமையாய்....
வார்த்தையிருந்தும் மவுனமாய்...

இருந்தாலும் ஒரேயொரு
ஆறுதல் எனக்கு......
நல்லவேளையாக
மிச்சமிருக்கும்
இரண்டு மகன்களும்
 ஒரு மகளும் 
போட்டிக்கு வரவில்லை....  

எப்படி நம்ம கவிதை.....சொல்லிட்டுப்போங்கள்....ஹி...ஹி..


Post Comment

இதையும் படிக்கலாமே:


22 comments:

 1. நான்கூட காலைஞர் அறிவிச்சுடார்ந்னு நினைச்சேன்.. இருந்தாலும் கவிதை? அருமை..

  ReplyDelete
 2. அட இதுதானா அது ....கலக்கல் தல ....

  ReplyDelete
 3. கலைஞரின் நிலையை ஒரு கவிதை வடிவில் சிறப்பாய் சொல்லீட்டீங்க

  ஆனா

  என்னாத்தை சொல்லுறதுன்னு அவருக்கும் குழப்பம்..

  அவர் என்ன சொல்லுவாரோன்னு உங்களுக்கு குழப்பம்

  இப்ப எனக்கு என்ன சொல்றதுன்னு குழப்பம்

  அட ஆண்டவா காப்பாத்து ...

  ReplyDelete
 4. அவங்க குடும்பத்தில் நிறைய குழப்பம்...

  அதை முடிச்சிட்டு வரட்டும் அப்புறம் பார்க்கலாம் திமுக தலைவர் யாருன்னு...

  ReplyDelete
 5. கலக்கல் தலைவா
  நிகழ்கால அரசியலை வைத்து வெளுத்து வாங்கி இருக்கீங்க ,
  அமர்க்களம்.

  ReplyDelete
 6. அழகிரி,ஸ்டாலின், என்று சொன்னால் ஒட்டாத உதடுகள்,கனிமொழி என்றால் ஒட்டுகிறதே.

  ReplyDelete
 7. கலைஞரை உன்னிப்பாக கவனித்தவர் மட்டுமே இந்தக் கவிதையை எழுத முடியும்..சபாஷ்.

  ReplyDelete
 8. கடைசி பஞ்ச் சூப்பர் பாஸ்..ஏன் மத்த மகன்கள் மட்டும் சும்மா இருக்காங்க....

  ReplyDelete
 9. இதற்க்கு நாளை முரசொலி-இல் பதில் சொல்வார் கலைகர்--வெய்ட் & சி

  ReplyDelete
 10. நல்லவேளையாகமிச்சமிருக்கும்இரண்டு மகன்களும் ஒரு மகளும் போட்டிக்கு வரவில்லை.... ///அவங்க (அடிச்சது) போதும்னு நெனைச்சிருப்பாங்க!

  ReplyDelete
 11. மிக அருமை, டுபாக்கூர் கவிதையல்ல,சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கும் கவிதை

  ReplyDelete
 12. தோ பார்ரா... கவிதை கலக்கல்

  ReplyDelete
 13. கலக்கிட்டீங்க... கலைஞர் படிச்சார்ணா கண்டிப்பா சிறந்த விருது தருவாரு ஒரு வரிக்காக... அது என்னான்னா... கழகமே குடும்பமென்றார்அண்ணாஅதை சற்றுமாற்றிகுடும்பமே கழகமென்றேன்நான்.

  ReplyDelete
 14. Superma keep it up. Write more poems like this.thank u.

  ReplyDelete
 15. கலக்கல் .. பாவம் அவரு

  ReplyDelete
 16. அருமையான கவிதை தலைவா.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.