என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, August 22, 2011

15 ஜெயலலிதா எங்களை சீண்டினால்....=விஜயகாந்த் எச்சரிக்கை
கேப்டன் டிவிக்கு சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் கேப்டன் விஜயகாந்த் கொடுக்காத பேட்டி

கேள்வி: தே.மு.தி.க., இன்னும் தார்மீக எதிர்கட்சியாக செயல்படவில்லை என்ற குற்றசாட்டு குறித்து.....?
விஜயகாந்த்: நாங்கள்தான் எதிர்கட்சி என்று இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. அந்த பிரமிப்பிலேயே இருக்கிறேன்.

கேள்வி: அப்படியானால் எப்போதுதான் எதிர்கட்சியாக செயல்படுவீர்கள்?
விஜயகாந்த்: நாங்கள் ஏன் எதிர்கட்சியாக செயல்பட வேண்டும்? நாங்கள் ஆளும்கட்சி கூட்டணியிலல்லவா இருக்கிறோம்.

கேள்வி: அப்படின்னா எதிர்த்து கேள்வியே கேட்க மாட்டீங்கன்னு சொல்லுங்க?

விஜயகாந்த்: நான் எப்போது அப்படி சொன்னேன்? கடந்த தி.மு.க., ஆட்சியில் நாலரை வருசம் கொடநாட்டில் தூங்கிக்கொண்டு இருந்த ஜெயாலலிதா கடைசி ஆறு மாசம்தானே சீனுக்கே வந்தார். அதுபோல கடைசியில்தான் நானும் வருவேன்.


கேள்வி: தி.மு.க,.ஆட்சியில் மட்டும் தினமும் அறிக்கை விட்டபடி இருந்தீர்களே?

விஜயகாந்த்: நல்ல கேள்வி....கடந்த திமுக., ஆட்சியை எதிர்த்து பேசினேன் என்றால் அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அவர்கள் தானே என் மண்டபம் இடிபட காரணமானவர்கள். அதனால் தான் எதிர்த்தேன். ஆனால் இந்த ஆட்சியில் அப்படி ஒன்றும் இதுவரை நடக்கவில்லையே....அப்படி ஜெயலலிதா எங்களை சீண்ட நினைத்தால் அப்போது பாருங்கள் இந்த விஜயகாந்தின் அதிரடியை.


கேள்வி: உள்ளாட்சி தேர்தலில் எத்தனை இடங்களில் உங்கள் கட்சி போட்டியிடுகிறது?

விஜயகாந்த்: தமிழ் நாட்டில் ஏற்கனவே இருந்த மாநகராட்சிகள் 6, கடந்த ஆட்சியில் உருவாக்கப்பட்ட ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகியவைகளை சேர்த்து மொத்தம் 10 மாநகராட்சி மேயர்கள்.அதில்  474 கவுன்சிலர்கள், 148  நகராட்சி சேர்மன்கள், 4361- கவுன்சிலர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் 29 பேர்கள், வார்டு உறுப்பினர்கள் 656 பேர்கள், யூனியன் சேர்மன்கள் 385 பேர்கள், 6570 வார்டு கவுன்சிலர்கள், 561 டவுன் பஞ்சாயத்து சேர்மன்கள், அதில் வார்டு உறுப்பினர்கள் 8825 பேர்கள், கிராம பஞ்சாயத்து பிரசிடெண்ட்கள் 12,618 பேர்கள், அதில் வார்டு உறுப்பினர்கள் 97,458 பேர்கள்....என்ன தலை சுத்துதா, இதுல பாதியாவது எங்க கட்சிக்கு ஒதுக்கனும்...இல்லாவிட்டால் கூட்டணி தலைவர்களை எங்க கட்சி ஆபீஸில் கூட்டி ஜெயலலிதாவை மிரட்டுவேன்.


கேள்வி: அடேங்கப்பா புள்ளி விவரத்துல புலியா இருக்கீங்களே?
விஜயகாந்த்; எதுவுமே தெரியாம திடீர்ன்னு அரசியலுக்கு வர நான் அந்தாளோட மகனா?


கேள்வி: அது யாரு அந்தாளு?

விஜயகாந்த்: அதை நீங்களே கண்டுபிடிச்சுக்கங்க... நான் சொன்னால் என் படப்பெட்டிக்கு ஆபத்து வந்துடும்


கேள்வி: வடிவேலு பற்றி ஒன்னுமே சொல்லமாட்டேன்னு சொல்றீங்களே?
விஜயகாந்த்: அந்தாளு இன்னுமா ஃபீல்டுல இருக்காரு....அவரு இப்ப மதுரை மாட்டுத்தாவனி பஸ்ஸ்டாண்டு பக்கத்துல காய்கறி வியாபாரம் செய்றதா கேள்விப்பட்டேன்.


கேள்வி: உங்க்ளின் பேச்சை பைத்தியக்காரனின் உளறல் என்று வர்ணித்துள்ளரே கலைஞர்?

விஜயகாந்த்: ஆமாம், நான் பைத்தியக்காரன் தான்....அவர் தலைமையில் என் திருமண்த்தை நடத்திய நான் பைத்தியக்காரந்தான். இந்த பைத்தியக்காரன் தான் நடிகர் சங்க தலைவராக இருக்கும்போது அவருக்கு பாராட்டுவிழா எடுத்து தங்க பேனா கொடுத்தான்.கேள்வி: கலைஞர் தலைமையில்தான் உங்கள் திருமணம் நடந்ததாக சொல்கிறீர்கள்....அப்புறம் எப்படி அவருக்கு எதிராக மாறினீர்கள்?

விஜயகாந்த்: அது கல்யாண மண்டபத்தின் மன்னிக்கவும் காலத்தின் கட்டாயம். என் திருமணத்தை நடத்திவைத்தார் என்பதற்காக நான் அவருக்கு வாலா பிடிக்க முடியும்?
சசிகலா- நடராஜன் கல்யாணம் கூட கலைஞர் தலைமையில்தான் நடந்துச்சு. அதுக்காக நடராஜன் என்ன கலைஞருக்கு ஆதரவாகவா இருக்காரு

கேள்வி: சரிவிடுங்கள்.....உங்களின் அடுத்தப்படம் எப்போது?
விஜயகாந்த்: நான் சமீபத்துல ஒரு இந்தோனேசியா படம் பார்த்தேன். எனக்கு ஏத்த அதிரடி ஆக்‌ஷன் படம்...பர்மா பஜார்ல அந்த படத்தோட டிவிடி வாங்கிவர சொல்லிருக்கேன். அந்த படத்த INSPIRATION-ஆ வச்சு ஒரு படம் இயக்கப்போறேன். படத்தின் பேருகூட முடிவு பன்னிட்டேன்...அது இப்பொத்தைக்கு ரகசியம். இன்னொரு விஷயம் தெரியுமா? அந்த படத்துல என் மகன் பிரபாகரனை வில்லனா அறிமுகப்படுத்துறேன்.

கேள்வி: அப்படின்னா இந்த படமும் காப்பியா?
விஜயகாந்த்(கண்கள் சிவந்தபடி): நான்  INSPIRATION என்று சொல்லும்போது அதை காப்பி என்று கொச்சை படுத்துகிறீர்களே? ஓகே... நீங்க போகலாம்....அப்புறம் எனக்கு கோபம் வந்தால்... உங்களை மகராசன் ஆக்கிடுவேன்.

மகராசனா என்று நிருபர் குழப்பத்தில் விஜயகாந்தை பார்க்க..
அப்போது அங்கிருந்த சுதீஷ் நிருபரின் கையை பிடித்து இழுத்தபடி...

மகராசன்னா என்னன்னு தெரியாதா உங்களுக்கு....மண்டையில நங்கு நங்குன்னு குட்டிடுவேன்னு சொல்றாரு....கிளம்புங்க இங்கிருந்து....

ஓக்கே....இத்துடன் இந்தப்பேட்டி நிறைவடைகிறது.


Post Comment

இதையும் படிக்கலாமே:


15 comments:

 1. விஜயகாந்த்; எதுவுமே தெரியாம திடீர்ன்னு அரசியலுக்கு வர நான் அந்தாளோட மகனா????????

  ReplyDelete
 2. அட்றா சக்கை அட்ட காசம் போங்க!

  ReplyDelete
 3. விஜயகாந்த்: நாங்கள்தான் எதிர்கட்சி என்று இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. அந்த பிரமிப்பிலேயே இருக்கிறேன்.

  :)

  ReplyDelete
 4. அன்பின் கஸாலி - நல்லாவே இருக்கு- ரசிச்சுப் படிச்சேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 5. //கொடநாட்டில் தூங்கிக்கொண்டு இருந்த ஜெயாலலிதா கடைசி ஆறு மாசம்தானே சீனுக்கே வந்தார். அதுபோல கடைசியில்தான் நானும் வருவேன்.//
  அப்படி போடு

  ReplyDelete
 6. நானும் நீங்கதான் கமெண்ட்ஸ் ப்ளாக் பண்ணி வெச்சிருக்கீங்கன்னு நெனச்சிட்டேன்....!

  ReplyDelete
 7. கேப்டன் பாவம்யா...!இப்போ அவரு, எங்கே எப்படி என்ன கண்டிசன்ல இருக்காரோ....?

  ReplyDelete
 8. கொடுக்காத பேட்டி சுவைக்கிறது!

  ReplyDelete
 9. இதுக்கு எதுக்குய்யா நன்றி......

  காலைல என்ன கமெண்ட் போட்டேன்னு மறந்து போச்சே..

  ReplyDelete
 10. மறுவாக்கு பதிவிலும் வாக்களித்து விட்டேன்

  ReplyDelete
 11. உங்க கற்பனைலாவது கேப்டன் பொங்கட்டும்..

  ReplyDelete
 12. கேப்டனை காணவில்லை.கண்டு பிடித்து தருபவர்களுக்கு அவர் நடித்த மொக்கை படம் ஒன்றின் டீ.வீ.டி தரப்படும்;)))))

  ReplyDelete
 13. சூப்பர் சார்......

  ReplyDelete
 14. அடிக்கடி விஜயகாந்தை பத்தி காமெடி பதிவு போட்டுகிட்டே இருங்க. அப்ப தான் அவர் நாம் ஞாபகத்துல இருப்பாரு.

  ReplyDelete
 15. விஜயகாந்த் பாவம் விட்ருங்க பாஸ்

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.