என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, August 18, 2011

18 நான் சொன்னது சரியா? தப்பா? நீங்களே சொல்லுங்களேன்....


நேத்து எங்க ஏரியாவுல  இருக்க சலூன் கடைப்பக்கம் போயிருந்தேன். அங்கே போயிப்பார்த்தா அங்கே இருந்த ரெண்டு பேருக்கு கடுமையான  வாக்குவாதம். அதுல ஒருத்தரு தி.மு.க. அபிமானி, இன்னொருத்தரு அண்ணா தி.மு.க.,அபிமானி போல...என்னன்னு பார்த்தா...


உங்க ஆட்சியில கரண்டு போயிட்டே இருந்துச்சு....இப்ப பாரு போறதேயில்லன்னு சொன்னாரு இலை கட்சிக்காரரு...

அதுக்கு உடனே சூரிய கட்சிகாரரு...ஏன் போகல...ஒரு வாரம் காலையில ரெண்டு மணி நேரம் கரண்டு போகுது...ஒரு வாரம் மத்தியானம் ரெண்டு மணி நேரம் கரண்டு போகுதுல்லன்னாரு....


அதுக்கு இலைக்கட்சிகாரரு எங்கேய்யா போகுது ஒரு வாரத்துல ரெண்டு மூனு நாளைக்கு போகுது...சில நாளைக்கு போறதில்லை...தெரியுமா? இதே உங்க ஆட்சியா இருந்தா எப்போதும் போயிட்டே இருக்கும்ன்னாரு....


சூரிய கட்சியும் அவர விடுறதா இல்லை....அப்படி போகலைன்னா அதுக்கு எங்க தலைவரு போட்ட திட்டம்தான் காரணம்....அவரு வெதைச்சாரு...ஜெயலலிதா அதை அறுவடை பன்னுது... எங்க ஆட்சி இருந்தாலும் இப்ப கரண்டு பொயிருக்காது....ன்னு சொன்னாரு...


இப்படியே வாக்குவாதம் முத்துச்சு...அதுல ஒரு ஆளு என் பக்கமா திரும்பி...
தம்பி... நீ வயசுல சின்னவனா தெரியுறே.... நீயே சொல்லு....ன்னு ஆரம்பிச்சாரு....

அண்ணே.... நீங்க பேசிட்டு இருந்தது என் காதுலையும் விழுந்துச்சு. நான் என்ன நினைக்கிறேன்னா....

சும்மா சொல்லுதம்பி....

அண்ணே நான் ஒன்னு சொன்னா நீங்க என்னை தப்பா நினைச்சுக்க கூடாதுன்னு சொன்னேன்.

 தப்பா நினைக்க மாட்டோம் சொல்லு தம்பின்னாங்க ரெண்டு பேரும் ஒத்துமையா....

அண்ணே...ஒரு ஆளுக்கு கல்யாணம் ஆகி ஒரு மூணு நாலு வருஷம் கொழந்தையே இல்லை. அவங்களும் பார்க்காத வைத்தியம் இல்லை...போகாத டாக்டரு இல்லை..அங்கே இங்கே அலஞ்சு திரிஞ்சு...கடைசியில 2அந்தாளு பொண்டாட்டி கர்ப்பம் ஆகிட்டா....இன்னும் கொஞ்ச நாள்ல கொழந்த பொறக்கும்ங்கற  நிலமையில திடீர்னு ரெண்டு பேருக்கும் விவாகரத்து ஆகி அந்த கர்ப்பினி பொண்ணு வேற ஒரு ஆளை கல்யாணம் செஞ்சுக்குபொயிட்டா....அப்புறம் மூனு மாசத்துல அவளுக்கு கொழந்தை பொறக்குது...இப்ப சொல்லுங்க அந்த கொழந்தைக்கு தகப்பன் யாரு? அவளோட மொத புருஷனா? ரெண்டாவது புருஷனா?ன்னு கேட்டேன்....

சண்டைபோட்டுக்கு இருந்த ரெண்டுபேரும் புரிஞ்சமாதிரி பார்த்தாங்க......இருந்தாலும் அந்த இலை பார்ட்டி என்னை நறநறன்னு பல்லை கடிச்சுக்குபார்த்தாரு... நான் அப்படியே எஸ்கேப்பு......

 முந்தைய  என் பதிவை படித்து விட்டீர்களா? 

கலைஞரின் தயவால் கொடியேற்றிய ஜெயலலிதா....
Post Comment

இதையும் படிக்கலாமே:


18 comments:

 1. உண்மைதானே சொன்னீங்க.

  ReplyDelete
 2. போன பதிவுல நான் நம்பல, இந்த பதிவுல நம்பிட்டேன் நீங்க உ.பி என்று. நான் சொல்றது சரி தானா அண்ணே

  ReplyDelete
 3. நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

  ReplyDelete
 4. நாட்டாமைகள் எல்லாம் தீர்ப்பு சொல்லவதில் தோற்றுப் போய்விட்டார்கள்.
  சரியான தீர்ப்பு. உண்மையும் அதுதானே.

  ReplyDelete
 5. நல்லா சொன்னிங்க.

  ReplyDelete
 6. ஹ ஹ ஹா ...அப்படி சொல்லுரீங்களா நீங்க சரி ரைட்டு

  ReplyDelete
 7. உங்களை அவரு அடிக்காம விட்டாரே..அதே பெரிய விஷயம் தான்.

  ReplyDelete
 8. தீர்ப்புல கலக்கிடீங்க நாட்டாம...

  ReplyDelete
 9. எங்க ஊரு நாட்டாமை வாழ்க

  அட நான் உங்களை தான் சொன்னேன்..

  ReplyDelete
 10. அடி வாங்காம எஸ்கேப்பா?

  ReplyDelete
 11. நாட்டமை தீர்ப்பை மாற்றி சொல்லிடியே ....!!!

  ReplyDelete
 12. அண்ணன் இன்னும் கொஞ்சநாள்ல உள்ள் போய்டுவாருன்னு நினைக்கிறேன், எதுக்கும் முன் ஜாமினுக்கு சொல்லிடுங்கண்ணே....!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.