என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Tuesday, August 23, 2011

17 மன்மோகன்சிங் பிரதமரா? மந்திரவாதியா?ஊழலை ஒழிக்க என்னிடம் மந்திரக்கோல் இல்லை என்று சமீபத்தில் நம்ம பிரதமர் மன்மோகன் தன் திருவாய் மலர்ந்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இவரது அமைச்சரவை சகா நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எங்களிடம் மந்திரக்கோல் இல்லை என்று சொல்லியிருந்தார்.

மந்திரக்கோல் இருந்தால்தான் எங்களால் ஆட்சிபுரிய முடியும் என்று அடம் பிடிக்கிறார்கள் இவர்கள்.  உங்களிடம் மந்திரக்கோல் இருக்கும் அதை வைத்துக்கொண்டு நாட்டை சுபிட்சமாக ஆக்கிவிடுவீர்கள் என்று நினைத்து மக்கள் உங்களை பதவியில் அமரவைக்கவில்லை. மாறாக மந்திரக்கோலைவிட சக்திமிக்க ஆட்சி, அதிகாரத்தை உங்களிடம் கொடுத்திருக்கிறார்கள்.

முடிந்தவரை ஊழலையும், விலைவாசியையும் கட்டுப்படுத்துவதுதானே ஆட்சியாளர்களுக்கு அழகு.  அதைவிடுத்து எதற்கெடுத்தாலும் மந்திரக்கோல் கேட்கும் நீங்கள் எதற்க்கு பதவியில் அமர்ந்திருக்க வேண்டும்? மந்திரக்கோல் இல்லாமலே இவ்வளவு ஊழல் செய்த உங்கள் சகாக்கள்அப்படியே மந்திரக்கோல்  இருந்தால் மட்டும் என்ன கிழித்துவிடப்போகிறார்கள்?
 நாட்டை சுரண்டி சுவிஸ் பேங்கில் போட்டுவிட்டு ஜாலியாக இருப்பார்கள். இந்த எழவுக்கு எதுக்கு மந்திரக்கோல், ம$@#% கோலெல்லாம்?Post Comment

இதையும் படிக்கலாமே:


17 comments:

 1. பாவம் அவரு ஆக்டிங் மட்டும் தான்,,, என்ன செய்வாரு?

  ReplyDelete
 2. பாவம் அவரு என்ன பண்ணுவாரு..
  ஒரு அடிமை செய்ய முடிந்ததை செய்து கொண்டு இருக்கிறார்.. அவரை பிரதமர் ஆக்கிய பாவத்திற்கு நாம் அனுபவித்து கொண்டு இருக்கிறோம்!!??

  ReplyDelete
 3. //
  முடிந்தவரை ஊழலையும், விலைவாசியையும் கட்டுப்படுத்துவதுதானே ஆட்சியாளர்களுக்கு அழகு. அதைவிடுத்து எதற்கெடுத்தாலும் மந்திரக்கோல் கேட்கும் நீங்கள் எதற்க்கு பதவியில் அமர்ந்திருக்க வேண்டும்?
  //
  சரியான கேள்வி

  ReplyDelete
 4. எனக்கு எதுமே தெரியாதுன்னு சொல்ல ஒரு பிரதமர்

  ReplyDelete
 5. இவரால் என்ன பயன்....??????

  ReplyDelete
 6. ஏங்க அவரு பாட்டுக்கு சும்மா இருக்காரு, ஒன்னு ரெண்டு வார்த்தை சொன்னாலும் அத பிடிச்சுகிட்டு கேள்வி கேட்டீங்கன்னா என்ன பன்ணுவாரு?

  ReplyDelete
 7. அன்பு நண்பர்களே உதவி தேவை


  http://speedsays.blogspot.com/2011/08/blog-post.html

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. [ma]மந்திரமில்ல மாயமில்ல ஊழல் மட்டும் நடக்குது ஜோரா![/ma]

  ReplyDelete
 10. இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது ரப்பர் ஸ்டாம்ப் ???

  ReplyDelete
 11. பேசாமல் பி.சி.சர்க்காரைப் பிரதமராக்கி விடலாம்!

  ReplyDelete
 12. மாறாக மந்திரக்கோலைவிட சக்திமிக்க ஆட்சி, அதிகாரத்தை உங்களிடம் கொடுத்திருக்கிறார்கள்.

  ReplyDelete
 13. இதைத் தானே முன்னாடியும் சொன்னாங்க..இப்பவுமா...இல்லே இது மீள்பதிவா..

  ReplyDelete
 14. ம.மோ!பிரதம மந்திரவாதிதான்!ஆனால் மந்திரக்கோலை இவருக்கு முன்னாடியே பிரணாப் தேடிகிட்டிருக்கிறார்.

  ReplyDelete
 15. //ஜ.ரா.ரமேஷ் பாபு said...

  பாவம் அவரு என்ன பண்ணுவாரு..
  ஒரு அடிமை செய்ய முடிந்ததை செய்து கொண்டு இருக்கிறார்.. அவரை பிரதமர் ஆக்கிய பாவத்திற்கு நாம் அனுபவித்து கொண்டு இருக்கிறோம்!!??//

  யாரு!நாம?சோனியா காந்தி அமெரிக்காவுல இருக்குற தைரியத்தில எதை வேண்டுமானாலும் சொல்லுவீங்களாக்கும்:)

  ReplyDelete
 16. //NAAI-NAKKS said...

  இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது ரப்பர் ஸ்டாம்ப் ???//

  இந்தியாவுல ஜனத்தொகை அதிகமாப் போச்சுல்ல அதான்:)

  ReplyDelete
 17. நல்லா கேட்டீங்க போங்க!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.