என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Monday, August 29, 2011

16 மூன்று பேருக்கும் தூக்கு -இப்ப சந்தோஷமா சோனியாஜி? .....திருமதி சோனியா அவர்களுக்கு,


நலமாக ரொம்ப சந்தோஷமாக இருப்பீர்கள்....ஆனால், இங்குள்ள தமிழுணர்வாளர்கள் யாரும் சந்தோஷத்துடன் இல்லை. காரணம் நீங்கள் அறியாததல்ல.....பேரறிவாளன், சாந்தன், முருகன் இம்மூவருக்கும் தூக்குத்தண்டனை வழங்கப்படுவதன் மூலம் தமிழகமே தகித்துக்கொண்டிருக்கிறது. விடுதலைப்புலிகளின் கோபம் உங்கள் கணவர் ராஜீவின் மீது திரும்புவதற்க்கு என்ன காரணம்?

1987-ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமரான உங்களின் கணவரும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேயும் இலங்கை தமிழர் நலன் கருதி ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டார்கள். அதை அப்போதைய இலங்கை பிரதமர் பிரமதாசாவும், அமைச்சர் லலித் அதுலத் முதலியும் விரும்பவில்லை. ஆனாலும் அந்த ஒப்பந்தம் நிறைவேறுகிறது. ஒப்பந்தம் போட்ட அடுத்த நாள் இந்தியா திரும்பும் ராஜீவை வழியனுப்பும் விழா ஒன்றை ஜெயவர்த்தனே ஏற்பாடு செய்கிறார். அந்த விழாவில் ஜனதா விமுக்தி பெரமுனா என்ற சிங்கள தீவிரவாத அமைப்பை சேர்ந்த விஜிதா ரோதன் என்ற கடற்படை சிப்பாய் ராஜீவை தாக்கும் எண்ணத்துடன் துப்பாக்கியை திருப்பி பிடித்து தாக்க முயல்கிறான். ஆனால், அதிர்ஷ்டவசமாக ராஜிவ் தப்பிக்கிறார்.

அந்த ஒப்பந்தத்தை சிங்களவர்களும் விரும்பவில்லை என்பதற்கு அந்த சம்பவமே சாட்சி.  அதன்பிறகு இலங்கையில் அமைதியை நிலைநாட்ட இந்திய அமைதி(?)படை கொழும்பு சென்றது. . அமைதிப்படை என்ற பெயரில் அவர்கள் நடத்திய அட்டூழியங்கள் கொஞ்சம் நஞ்சமில்லை. அதன் பிறகு இரு ஆண்டுகளில் அமைதிப்படையை ராஜீவ் வாபஸ் வாங்கிக்கொண்டாலும் கூட, அந்த இரு வருடங்களில் தமிழர்கள் இழந்தது அதிகம். பின்னர் அவர்கள் ஆடிய ஆட்டம் தான் புலிகளை ராஜீவிற்கு எதிராக திருப்பியது.
அதன் பிறகே ராஜீவ் படுகொலை என்ற அந்த துன்பியல் சம்பவம் நிகழ்த்தப்பட்டது. நிச்சயம் இந்த படுகொலை உங்கள் குடும்பத்திற்க்கும், நாட்டிற்க்கும் ஈடுசெய்ய முடியாத இழப்புதான் என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் அந்த ஒரு உயிருக்காக நீங்கள் கயவன் ராஜபக்சேயுடன் சேர்ந்து எத்தனை உயிர்களை பழிவாங்கிவிட்டீர்கள். ஒரு இனத்தையே அழித்தொழித்து விட்ட பின்புமா உங்களுக்கு கொலைவெறி அடங்கவில்லை. இன்னும் உங்களின் பசி அடங்கவில்லை...அதனால்தான் இன்னும் மூவரின் உயிரை கேட்கறீர்களா?. உயிரின் எடை எல்லோருக்கும் ஒன்றுதான். ஒரு உயிருக்கு விலையாக லட்சக்கணக்கான உயிர்களா?

பெரோஸ் காந்தி என்ற நபரை மணந்ததால் இந்திரா என்ற பெண்மணியின் பேருக்கு பின்னால்  காந்தி என்ற துணைப்பெயர் வந்தது. அவருக்கு பிறந்ததாலேயே ராஜீவிற்க்கும் அந்த பெயர் ஒட்டிக்கொண்டது. ராஜிவை திருமணம் செய்ததாலேயே உங்களின் பெயருக்கு பின்னாலும் காந்தி என்ற பெயர் ஒட்டிக்கொண்டது. மற்றபடி மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சம்பந்தமில்லைதான். ஆனாலும் காந்தி என்ற பெயரை துணைப்பெயரை நீங்கள் வைத்துக்கொண்டதால் காந்தியிடம் இருந்த கருணையயும், சகிப்புத்தன்மையையும், அகிம்சையையும் உங்களிடம் இருக்கும் என்று எதிர்பார்த்தோம்,அது  எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது இப்போதுதான் விளங்குகிறது.

தண்டனை என்பது, செய்த குற்றத்திற்க்காக அவர்கள் வருந்தி, திருந்த வேண்டும் என்பதற்காகவே இருக்கவேண்டுமே தவிர, அவர்களை தூக்கிலிடுவதன் மூலம் என்ன சாதிக்கப்போகிறீர்கள்....வரலாற்றின் பக்கங்களில் அவப்பெயரை தவிர....


தூக்குத்தண்டனை அவசியம்தான், மறுப்பதற்கில்லை. அது குற்றங்களின் தன்மையை பொருத்து மாறுபட வேண்டுமே, நிரபராதிகளை கழுவில் ஏற்றக்கூடாது.

ஏற்கனவே இருபது வருடங்கள் சிறைவாசத்தின் மூலம் நடைபிணங்களாகிவிட்ட அவர்களின் உடல்களை தூக்கிலிட ஏன் துடிக்கிறீர்கள்?
மன்னித்து வெளியில் விட்டால் வரலாறு உங்களை வாழ்த்துமே...

ஒரு உயிரின் இழப்பையும் வேதனையையும்  நீங்கள் அறியாதவர் அல்ல....அப்படியிருந்தும் அதே வேதனையை அந்த மூன்று பேரின் குடும்பத்திற்கும் கொடுக்க ஏன் விரும்புகிறீர்கள்?

உங்கள் குடும்பத்தையாவது அரவணைக்க நாடு இருந்தது. மக்கள் இருந்தார்கள்..ஆனால், அவர்களின் குடும்பத்திற்க்கு?
என் மகனை விடுதலை செய்யுங்கள் என்ற அந்த தாயின் குரல்மட்டும் உங்களுக்கு கேட்க இயலாத உங்களைத்தான் காங்கிரஸ்காரர்கள் அன்னை என்று அழைக்கிறார்கள்...

ஏற்கனவே  நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யும் அதிகாரமோ, சட்டத்தை திருத்தும் அதிகாரமோ உங்களுக்கில்லைதான் ஒத்துக்கொள்கிறோம். ஆனாலும், அந்த தண்டனையை நிறுத்த ஜனாதிபதிக்கு உங்களால் உத்தரவிட முடியும்,  நீங்கள் சொன்னால் ஜனாதிபதி கேட்பார். ஜனாதிபதி சொன்னால் சட்டம் கேட்கும், நீதிமன்றம் கேட்கும். செய்வீர்களா?
 


படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 

100-நாளில் -1000கோடியில் கைவைத்த ஜெயா....Post Comment

இதையும் படிக்கலாமே:


16 comments:

 1. //என் மகனை விடுதலை செய்யுங்கள் என்ற அந்த தாயின் குரல்மட்டும் உங்களுக்கு கேட்க இயலாத உங்களைத்தான் காங்கிரஸ்காரர்கள் அன்னை என்று அழைக்கிறார்கள்...//

  அவர் அன்னையா என்ற கேள்வி, இலங்கையில் லகரங்களில் மனித உயிர்கள் பறி போக காரணமாக இருந்த நாளிலேயே அற்று போய்விட்டது சகோ..

  ReplyDelete
 2. லோக்பால் நிறைவேற எப்படி மக்களின் நிர்பந்தம் காரணமாக இருந்ததோ, அது போல மக்கள் நிர்பந்தம் இருந்தால் மட்டுமே, அந்த மூவரை மரண தண்டனையிலிருந்து மீட்க முடியும் என்பது தான் தற்போதைய நிலையாக இருக்கிறது.

  ReplyDelete
 3. ENNA SOLLI ENNA AAGAPPOTHU?AGAPPOTHU?

  ReplyDelete
 4. அருமை நண்பா..நல்லது நடக்குமா?

  ReplyDelete
 5. நல்லது நடக்க வேண்டுவோம்!

  ReplyDelete
 6. எப்படியாவது அவர்கள் விடுதலை செய்யப்பட்டால் அதுவே நிம்மதி....

  ReplyDelete
 7. மனிதர்கள் கை விட்ட நிலையில் கடவுளிடம் வேண்டுவோம்.

  ReplyDelete
 8. சத்தியமாக சோனியா காந்தி இந்த தூக்கு தண்டனைகளை நிறைவேற்றத்தான் போகிறார்கள். அதில் துளியும் சம்தேகமில்லை. ஏனென்றால் சோனியாவுக்கு துளியும் இறக்கம் இல்லை.

  ReplyDelete
 9. அன்னை என்றால் என்ன பொருள் என்று தெரியாத இத்தாலிச் சனியாளிடம் கருணை மனுவா?

  ReplyDelete
 10. இறைவனை வேண்டுவதை விட வேறு வழியே இல்லை .
  கடவுள் மட்டுமே கல் நெஞ்சக்காரரின் மனதை கரைத்து நமக்கு உதவி செய்ய முடியும் .

  ReplyDelete
 11. நியாயமான கருத்திற்கள்.
  இதயமே இல்லாதவர்களுக்கு உயிரின் துடிப்பு எங்கே புரியப் போகிறது???????

  ReplyDelete
 12. நமது குரல்களும், எழுத்துக்களும், போராட்டங்களும், கதறல்களும் அந்த அம்மாவின் பார்வைக்கு எடுத்து செல்லக்கூடாது என்றுதான் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இருக்கின்றார்கள். விரைவில் காங்கிரஸ் கட்சி என்பதை தமிழர்களின் அகராதியில் இருந்து தூக்கி விடலாம்.

  ReplyDelete
 13. ஹிஸ் நேம் இஸ் நாட் பெரோஸ் காந்தி ஹிஸ் ரியல் நேம் இஸ் பெரோஸ் கான்.

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.