என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Thursday, August 25, 2011

13 ஜெயலலிதாவால் ஷமீரா ரெட்டி, ஜனனி அய்யருக்கு ஆபத்தா?......அட்டே....எப்படி இருக்கே வாசு? பார்த்து ரொம்ப நாளாச்சு....

எனக்கென்னப்பா.... நல்லாத்தான் இருக்கேன்...

எப்ப வந்தாலும் ஏதாவது செய்தியோட வருவியே....இன்னைக்கு என்ன தகவல் இருக்கு..

இல்லாமலா.....ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து நேத்தோடு 100 நாள் முடிஞ்சுருச்சு....

அப்படியா? அதற்கிடையில 100 நாளாச்சா?....100 நாள்ல எதாவது விசேசம்?

நிறைய இருக்குப்பா....இப்ப ஒவ்வொன்னா சொல்றேன்...

சொல்லுப்பா...சொல்லுப்பா...

நல்லதுன்னு எடுத்துக்கப்போனா.... மதுரையை மீட்க துரிதமா நடவடிக்கை எடுத்தது.

அது அவங்க ஏற்கனவே சொன்னதுதானே?

சொன்னதுதான் ஆனாலும் இவ்வளவு சீக்கிரம் விஸ்வரூபம் எடுக்கும்ன்னு யாரும் எதிர்பார்க்கல...பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி, எஸ்ஸார் கோபின்னு அழகிரியோட தளபதிங்க எல்லாம் இப்ப உள்ளே....

நல்லதுதானே.....பதவியை வச்சுக்கு இவங்க என்னவா ஆடுனாங்க..இப்ப எல்லோருக்கும் ஆப்புப்பா....

ஆமாம்பா....அழகிரியோட தளபதிங்கன்னு இல்லை...அழகிரி வீட்டு வாட்ச்மேனுக்கு ஒன்னுவிட்ட சித்தி மகன், ரெண்டுவிட்ட பெரியப்பா மகன்னு எல்லொரும்தான் ஆடுனாங்க...இப்ப சத்தத்தையே கானோம். வாலெல்லாம் உள்ளே போயிருச்சு...இன்னும் தலைதான் பாக்கி.

தலைன்னா அஜீத்தா?

அய்யோ நான் எதுக்கு அவர சொல்லப்போறேன்...அழகிரிய சொல்றேன்.

அவரை அவ்வளவு ஈஸியா கை வைக்க முடியுமா என்ன?

முடியாதுதான். மத்திய அமைச்சர் பதவிங்கறது முதலைச்சருக்கு இனையான பதவி. அவரை கைது பன்னனும்னா மத்திய அரசு ஒப்புதல் வேணும்.

அவரு மேல என்ன கேசுப்பா இருக்கு.

யாரோ பாண்டியராஜன்னு ஒரு ஆட்டோ டிரைவரை அழகிரி சொல்லித்தான் கொலை பன்னினோம்ன்னு அவரோட தளபதிங்க சொல்றாங்களாம். அப்புறம் தா.கிருஷ்ணன் கொலைகேசு, தினகரன் எரிப்பு கேசுன்னு நிறைய இருக்காம். பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு.

அப்புறம்?

சொல்றேன். மதுரைய தாண்டி சேலம், கோவை, சென்னை, ஈரோடுன்னு முக்கிய உடன்பிறப்புக்கள்லாம் இப்ப உள்ளே போயிட்டாங்க...பதவிய கையில வச்சுக்கு இவங்க ஆடுன ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா? இதுக்கு மக்களிடம் கடுமையான வரவேற்பு. முன்னாடி திமுக, காரங்க மிசா, ஹிந்தி எதிர்ப்புன்னு சிறை நிறப்புனாங்க...இப்ப அடுத்தவன் சொத்தை ஆட்டைய போட்டுட்டு உள்ளே இருக்காங்க...இப்படி பன்னினாத்தான் புத்திவரும்.

சரிதான்ப்பா....இன்னைக்கு கூட முன்னாள் அமைச்சர் கே.என். நேருவை கைது பன்னிட்டாங்களாம்.இருக்கும். அவரு மட்டும் சுதந்திர போராட்டத்தில் கலந்துக்கா உள்ளே போனாரு...அவரும் சொத்தகுவிப்பு வழக்குலதான் கைதாகிருப்பாரு...

இருந்தாலும் திமுக காரங்களை மட்டும் கைது பன்னிட்டு வாரது பழிவாங்கும் நடவடிக்கையா தெரியுதே?

அந்த முனுமுனுப்பும் கேக்கத்தான் செய்யுது. அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சோழவந்தான் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ போன்றவர்கள் மீதும் வழக்கு பதிவாச்சு. அது என்னாச்சுன்னே தெரியல...அப்படியும் இப்படியும்தான் விடுறா விடுறா சூனாப்பானா...

வேறு என்ன விஷேசம்?

அப்புறம் இலவச அரிசி...இதுவும் வரவேற்பை பெற்றிருக்கு

இலவசம்ன்னதும் ஞாபகத்துக்கு வருது. தமிழக மக்களுக்கு யாரும் எந்த உதவியும் இலவசமாக தர வேண்டிய அவசியம் இருக்க கூடாது. அவர்கள் கையேந்தும் நிலை ஏற்பட கூடாது. அந்த நிலையில் என் வாழ்நாளில் காண வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. அதுதான் என் லட்சியம் தமிழக மக்களின் ஆதரவோடு அந்த லட்சியத்தை நிறைவேற்றி தீருவோம்," ன்னு சொல்லியிருக்காரே ஜெயலலிதா.

இப்போதைக்கு இலவசம் கொடுப்போம். இனி வரும் காலங்களில் இலவசமே இருக்க கூடாதுன்னு நினைச்சு சொல்லிருப்பாங்க...அதைத்தானே மக்களும் விரும்பறாங்க.அடுத்து கலைஞர் காப்பீடு திட்டம்.

அதைத்தான் தூக்கிட்டாங்களே...

இல்லைப்பா....முன்னாடி சில குறிப்பிட்ட வியாதிகளுக்கு மட்டும்தான் இந்த காப்பீட்டு திட்டத்தில வைத்தியம் பார்க்கலாம்..இப்போ இன்னும் சில வியாதிகளை சேர்த்து பார்த்துக்கலாம்...இதனால இன்னும் நிறைய பேரு பயனடைவாங்க...


நல்ல திட்டம்தானே...இது...

ஆமாப்பா....இப்பக்கூட ஊரு பேரெல்லாம் மாத்தப்போறாங்களாம்...

எதுக்குப்பா...

இப்ப இருக்க ஊர்ல நிறைய ஊருங்க பேருல ஜாதிப்பேரு இருக்காம். அது எல்லாத்தையும் மாத்தி நல்ல தமிழ் பேரா வைக்கப்போறாங்களாம். 


அப்படியே சில்பா செட்டி, ஜனனி அய்யர், சமீரா ரெட்டின்னு ஜாதி பேர்ல நிறைய நடிகைங்க இருக்காங்களே..அவங்களுக்கும் ஆபத்தா?

எதுக்குத்தான் உன்னோட புத்தி இப்படி போகுதோ?

கோவிச்சுக்காத சும்மா ஜோக் அடிச்சேன்ப்பா...சரி தமிழ் புத்தாண்டு மாறிடுச்சாமே

ஆமாப்பா...கடந்த திமுக., ஆட்சியில தமிழ்புத்தாண்டை  வழக்கமா கொண்டாடுற சித்திரை ஒன்னாம் தேதியிலிருந்து பொங்கல் அன்னைக்கு மாத்துனாங்க...இப்ப மறுபடியும் சித்திரை ஒன்னுக்கே மாறிடுச்சு.

அது எப்ப வந்தா நம்மாளுங்களுக்கு என்ன? அவங்க எப்ப தமிழ் புத்தாண்டை கொண்டாடுனாங்க...ஜனவரி ஒன்னாந்தேதியத்தான் கொண்டாடுவாங்க. தமிழ்புத்தாண்டு என்பது நம்ம ஆளுங்களை பொறுத்தவரையில் லீவு கிடைச்சு, டிவி-யில சிறப்பு நிகழ்ச்சி பார்க்கற ஒரு நாளு அவ்வளவுதான்.

சரியா சொன்னேப்பா....அடடே அதுக்குள்ள கொட்டாவி விடுறியே...இன்னும் இருக்கேப்பா...

இன்னும் இருக்கா? சரி சரி சொல்லுப்பா...

பரவாயில்லை. ரொம்ப சொல்லி போரடிக்க விரும்பல...மீதிய நாளைக்கு சொல்றேன். கரக்டா வந்துடு......சரியா?...
Post Comment

இதையும் படிக்கலாமே:


13 comments:

 1. //தமிழ்புத்தாண்டு என்பது நம்ம ஆளுங்களை பொறுத்தவரையில் லீவு கிடைச்சு, டிவி-யில சிறப்பு நிகழ்ச்சி பார்க்கற ஒரு நாளு அவ்வளவுதான்.//வேற என்னத்த பன்றதுங்க. ஜாலியா நண்பர்கள் கூட ஊர் சுத்தலாம்.

  ReplyDelete
 2. //அது எப்ப வந்தா நம்மாளுங்களுக்கு என்ன? அவங்க எப்ப தமிழ் புத்தாண்டை கொண்டாடுனாங்க...ஜனவரி ஒன்னாந்தேதியத்தான் கொண்டாடுவாங்க. //

  இல்லே கஸாலி..சில சமூகங்கள் தவறாது சித்திரை ஒன்றில் குலதெய்வத்தை வழிபட்டு கொண்டாடுகின்றன..சிட்டியில் தான் கொண்டாடுவதில்லை..

  ReplyDelete
 3. என்னமோ ஏதோன்னு பதறி வந்தா நியூஸ் வாசிக்குறாரு...!!!

  ReplyDelete
 4. நல்லதாத்தான் சொல்லிருக்கீங்க!

  ReplyDelete
 5. //அப்படியே சில்பா செட்டி, ஜனனி அய்யர், சமீரா ரெட்டின்னு ஜாதி பேர்ல நிறைய நடிகைங்க இருக்காங்களே..அவங்களுக்கும் ஆபத்தா?//
  HI Hi!! :-)

  ReplyDelete
 6. வணக்கங்களும், வாக்குகளும்..

  ReplyDelete
 7. நல்ல எழுத்து நடை !!!!!

  ReplyDelete
 8. உரையாடல் பதிவு நல்லாயிருக்கு.வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. நாளைக்கும் வருவோம்ல!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.