என் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.

Friday, August 26, 2011

10 100-நாளில் -1000கோடியில் கைவைத்த ஜெயா....
வா..வாசு.... நேத்து சொன்னமாதிரி வந்துட்டியே
வராம....வந்துதானே ஆகனும். நேத்து சொன்ன விஷயத்துல ஒரு திருத்தம்.

என்ன?

நீபாட்டுக்கு தமிழ்புத்தாண்ட யாருமே கொண்டாடுவதில்லைன்னு சொல்லிட்டே...ஆனால், நம்ம செங்கோவி இருக்காருல்ல....

யாரு....இந்த கிழிஞ்ச டைரிலேருந்து மன்மதலீலை எழுதுவாரே அவரா?
அவரேதான்.... நீ சொன்னதுக்கு மறுப்பு சொல்லிருந்தாரு....

அப்படி என்ன சொன்னாரு?

கிராமத்துல தமிழ்புத்தாண்டை சிறப்பா கொண்டாடுவாங்களாம்...

அப்படியா சொன்னாரு.... நல்ல விஷயம் தானே...கொண்டாடட்டும். நான் ஒன்னும் தப்பா சொல்லலியே நம்ம ஆளுங்க ஆங்கிலத்துக்கு கொடுக்கற மரியாதையை தமிழுக்கு கொடுக்கறதில்லைன்னு ஒரு ஆதங்கத்துலதான் சொன்னேன். இருந்தாலும் அவருட்ட ஒரு சாரி கேட்டுக்கறேன்...

கேக்கறதுதான் கேக்கறே நல்ல அரபு நாட்டு சாரியா கேளு...

கிண்டலு.....சரி விஷயத்துக்கு வாப்பா....இந்த நூறு நாள் ஆட்சில ஜெயலலிதாவ பாராட்டுற மாதிரியே சொல்லிருக்கியே... நீயும் அந்தப்பக்கம் சாஞ்சுட்டியா?
யாருப்பா சொன்னது அப்படி?. நேத்து நான் முழுசா சொல்றதுக்குள்ள உனக்கு கொட்டாவி வந்துடுச்சு. அதான் பாதியில நிறுத்திட்டேன்.

சரி மீதிய இன்னிக்கு சொல்லு.

சொல்றேன்.....ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடனே செஞ்ச விஷயம்....மக்கள் பணத்துல ரு ஆயிரம் கோடியில கை வச்சதுதான்.

என்னது 1000 கோடில கை வச்சுட்டாங்களா...பணத்தை அடிச்சிட்டாங்களா?

இல்லேப்பா ஒனக்கு புரியுற மாதிரி சொல்றேன். கேட்டுக்க....போன ஆட்சியில சட்டமன்றத்தை கோட்டையிலிருந்து 1000 கோடி ரூபாய் சிலவு பன்னி புது கட்டடத்துக்கு மாத்துனாரு கலைஞரு....அது பாண்டிச்சேரி போலீஸ் தொப்பி மாதிரி இருக்கு. ஒழுங்கான பாதுகாப்பு இல்லைன்னு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் மறுபடியும் பழையபடி கோட்டைக்கே மாத்திட்டாங்க....

அதான் தெரிஞ்ச செய்தியாச்சே? அதுக்கென்ன?

அது அப்பவே கொஞ்சம் விமர்சனம் கிளம்புச்சு. இப்ப என்னடான்னா அதை ஹாஸ்பிட்டலா மாத்த போறாங்களாம்.

அப்படியா? பாதுகாப்பு சரியில்லை, கட்டடம் கட்டியதுல ஊழல்ன்னு சொல்லி கமிஷன்லாம் போட்டாங்க....இப்ப பாதுகாப்பு சரியில்லாத கட்டிடத்துல ஹாஸ்பிட்டல்ன்னா எப்படிப்பா?

அதைத்தான் கலைஞரும் கேக்கறாரு...இன்னும் கலைஞரு கேள்விக்கு ஜெயலலிதா பதில் அறிக்கை விடல

ஒருவேளை ஜெயாவுக்கு அறிக்கை எழுதி கொடுக்கறவரு லீவு போல...

ஹா...ஹா....ஹா...அதுக்கப்புறம் சமச்சீர் கல்வி...

அதென்ன சமச்சீர்கல்வி....ஒரு எலவும் விளங்கல?

சமச்சீர்கல்வின்னா....முன்னாடி மாநில அரசு பாடதிட்டம், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல்ன்னு நாலு பாடத்திட்டம் இருந்துச்சு. இதையெல்லாம் மாத்தி ஒரே சமச்சீர்கல்வின்னு கலைஞர் அறிவிச்சாரு. இதுக்கு மக்கள்ட்ட நல்ல வரவேற்ப்பு. ஆனா, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் இதை மாற்றி மீண்டும் பழைய கல்வி முறையே இருக்கும்ன்னு சட்டம் போட்டாங்க...

எதுக்கு மாத்தனும்?

கலைஞரு எழுதிய கவிதைலாம் அதுல இருந்துச்சாம்.

அப்புறம்?

உடனே எல்லாத்துக்கும் பச்சைகலரு ஸ்டிக்கரு ஒட்டி மறைச்சுட்டாங்க...அதுக்கப்புறமும் சமச்சீர் கல்விய நடைமுறை படுத்தல....

அப்புறம் என்னாச்சு?

இதை எதிர்த்து சில பொது நல அமைப்புகள் உயர் நீதி மன்றத்துல வழக்கு போட்டு தமிழக அரசு கொண்டுவந்த சட்டதிருத்தத்தை ரத்து செய்து சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பும் வந்துச்சு.

இது ஜெயலலிதாவுக்கு பெரிய குட்டாச்சே....இதுக்கப்புறமாவது அமல் படுத்துனாங்களா?

இந்த குட்டுக்கெல்லாம் அசரும் ஆளா ஜெ...இந்த உயர் நீதிமன்றத்தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு போனாங்க.....அங்கேயும் சமச்சீர் கல்விய பத்து நாளுக்குள் அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு வந்துருச்சு. ஆனால், தீர்ப்பு இப்படித்தான் இருக்கும் என்று ஓரளவுக்கு கனிச்ச ஜெயலலிதா தீர்ப்பு வர்ர சிலமணி நேரத்துக்கு முன்னாடியே அவசர அவ்சரமா சமச்சீர்கல்விய அமல் படுத்தறோம்ன்னு அறிவிச்சாங்க...

கீழே விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலேன்னு சொல்லு. இதை முன்னாடியே செஞ்சிருக்கலாம். குழந்தைங்க படிப்பாவது பாதிக்காம இருந்திருக்கும். 

அப்புறம் மந்திரிசபையை மாத்தினது....

அவங்க மாத்தாம இருந்தாத்தான் செய்தி...மாத்தினா அது வழக்கமான ஒரு நிகழ்வுதான்.

இருந்தாலும் ரெண்டு மாசத்துல ரெண்டுதடவையா மாத்துவாங்க....அதுலையும் ஒரு ஆளுக்கு மந்திரி பதவியே போச்சு...

அட...என்னப்பா நீ போன தடவை இவங்க ஆட்சியில பத்து நாள்ல மூணு பேருக்கு மந்திரிப்பதவி போச்சு தெரியும்ல...

தெரியும்...தெரியும்...இன்னும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,ன்னு எல்லோரையும் பந்தாடிக்கே இருக்காங்க....ஜெ இன்னும் மாறலேன்னு காட்டிட்டே இருக்காங்க...

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை மாற்றுவது வழக்கமான ஒன்னுதான். அவங்க ஆளுங்க இருப்பாங்களோன்னு ஒரு சந்தேகம் ஆட்சியாளருக்கு இருந்துக்கே இருக்கும். ஆமா,நேத்துக்கூட சட்டசபையில மத்திய அரச தாக்கி பேசிருக்காங்க போல...

ஆமாம்.  மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்குவதற்கு, 912 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நிதி உதவி வழங்க வேண்டும் என, மத்திய அரசிடம் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும், இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லைன்னு சொல்லிருக்காங்க...

இவங்கபாட்டுக்கு தேர்தல் அறிக்கையில அத கொடுக்கறோம்...இதக்கொடுக்கறோம்ன்னு சொல்லிட்டு மத்திய அரசு மேல பழியப்போட்டா எப்படிப்பா? மத்திய அரசுட்ட எவ்வளவு நிதி கொடுப்பீங்க...எவ்வளவு இருப்பு இருக்குன்னு கேட்டுக்கா தேர்தல் அறிக்கையில சொன்னாங்க...ஒருவேளை வீட்டுக்கு ஒரு கார் கொடுப்போம்ன்னு சொல்லிருந்தா அதுக்கு மத்திய அரசு என்ன பன்னும்?

அதானே.... நீ சொல்றது சரிதான்.

சரி விடுப்பா.....இந்த நூறு நாள் ஆட்சிய பத்தி விஜயகாந்த் எதுவும் சொன்னாரா?

சொல்லிருக்காருப்பா...

ஆட்சிய விமர்சனம் பன்ன இப்ப என்ன அவசரம்? குழந்தை பிறந்தவுடனேயா நடக்குது. கொஞ்ச நாள் போகட்டும்ன்னு சொல்லிருக்காரு...
அதான..அவரு அப்படி சொல்லாட்டித்தான் ஆச்சர்யம். கொஞ்ச நாள்ன்னா?

கொஞ்ச நாள்ன்னா அவரு அகராதியில உள்ளாட்சி தேர்தலுக்கு அப்புறம்ன்னு அர்த்தம்.

அப்படியா அர்த்தம்.பொழைக்க தெரிஞ்சவருதான் கேப்டன்...ஆமா, பதிவர்கள் எல்லாம் இந்த ஆட்சியில அதிகமா பேசறதே இல்லை போல...போன ஆட்சியில கலைஞரை கிழிகிழின்னு கிழிச்சாங்க....இப்ப ரொம்ப அடக்கி வாசிக்கறதா தெரியுதே...

அடக்கி வாசிக்கறாங்களா? ஆட்டோ பயமான்னு தெரியல...ஒருவேளை நூறு நாள் ஆகட்டும்ன்னு காத்திருந்திருக்கலாம்.  பார்க்கலாம் இனிமே எப்படின்னு...சரிப்பா... நான் கிளம்பறேன். 


Post Comment

இதையும் படிக்கலாமே:


10 comments:

 1. விஜயகாந்த் அடுத்த தேர்தல் வியுகம் அமைச்சிகிட்டு இருக்காரு...

  எவ்வளவு வாங்கலான்னு...

  பிழைக்க தெரிந்த மனிதர்...

  ReplyDelete
 2. நல்லாவே சொல்லீருக்கீங்க! நம்ம பிளாக்லயும் இதபத்தி சொல்லியிருக்கேன்! ஒருமுறை வாங்களேன்!

  ReplyDelete
 3. //கேக்கறதுதான் கேக்கறே நல்ல அரபு நாட்டு சாரியா கேளு...//

  நண்பன்கிட்ட சாரி கேட்கறதே தப்பு..அதுல அரபுச் சாரி வெறயா? பிச்சுப்புடுவேன் பிச்சு!

  ReplyDelete
 4. //யாரு....இந்த கிழிஞ்ச டைரிலேருந்து மன்மதலீலை எழுதுவாரே அவரா?//

  செங்கோவிக்கு இப்படித்தான் ஊருக்குள்ள அடையாளம் இருக்கு போல..

  ReplyDelete
 5. ஆட்டோகாரங்க தூரமா இருந்தா வரமாட்டாங்க உங்க வீடு எப்பிடி ... புலவர் சா இராமாநுசம் நம்ம வலைப் பக்கம் வரலாமே

  ReplyDelete
 6. அரசியல் பதிவு சூப்பர்.

  ReplyDelete
 7. அன்பான தமிழ் வலைப் பதிவர்களுக்கு வணக்கம்.

  "தேன்கூடு" தமிழ் வலைப் பதிவு திரட்டி சில நண்பர்களின் உதவியுடன் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது.

  தங்கள் புதிய பதிவுகள் உடனுக்குடன் "தேன்கூடு" திரட்டியின் முகப்பில் தெரிய இங்கே சொடுக்கவும்

  ReplyDelete
 8. //பதிவர்கள் எல்லாம் இந்த ஆட்சியில அதிகமா பேசறதே இல்லை போல...போன ஆட்சியில கலைஞரை கிழிகிழின்னு கிழிச்சாங்க....இப்ப ரொம்ப அடக்கி வாசிக்கறதா தெரியுதே...//

  இதுக்கு என்ன அர்த்தம்.. ஒண்ணு மேடம் ஆட்சி நல்லா நடக்குது..இல்லன்னா திட்டி பதிவு எழுதி அதிகாலை அரஸ்ட் ஆக பயம்..!!

  ReplyDelete

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.